பாகற்காய் பிட்லே - Bittergourd Gravy


பாகற்காய் என்றாலே கசப்பு என்பதால் பெரும்பாலும் யாரும் அதனை விரும்பி சாப்பிடுவதில்லை…ஒரு முறை இந்த பாகற்காய் பிட்லே செய்து சாப்பிட்டு சொல்லுங்க…அப்பறம் வாரம் ஒரு தடவையாவது பாகற்காய் கண்டிப்பாக மெனுவில் இடம்பெறும்….

திருமதி.பவித்ரா அவர்களின் குறிப்பினை பார்த்து செய்த பாகற்காய் பிட்லே….பிட்லே என்பது கடலைப்பருப்பினை வைத்து செய்யப்படும் குழம்பு வகை…..மிகவும் சுவையாக இருந்தது…நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         பாகற்காய் – 1/4 கிலோ
·         புளி – நெல்லிக்காய் அளவு

வேகவைத்து கொள்ள வேண்டிய பருப்பு வகைகள் :
·         கடலைப்பருப்பு – 1/2 கப்
·         துவரம்பருப்பு – 1/4 கப்

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·         தனியா தூள் – 1 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

முதலில் தாளிக்க :
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         கடுகு – தாளிக்க
·         கருவேப்பில்லை – 5 இலை
·         பூண்டு – 4 பல் நசுக்கியது

கடைசியில் சேர்க்க :
கொத்தமல்லி இலை – சிறிதளவு

செய்முறை :
·         பாகற்காயினை நறுக்கி கொள்ளவும். கடலைப்பருப்பு + துவரம்பருப்பு சேர்த்து குக்கரில் 2 – 3 விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும்.

·         கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து பாகற்காயினை போட்டு 3 – 4 நிமிடங்கள் வதக்கவும்.

·         புளியினை 2 கப் தண்ணிரில் கரைத்து கொள்ளவும். புளி தண்ணீர் + தூள் வகைகள் கலந்து பாகற்காயில் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.

·         சிறிது நேரம் கொதிக்கவிட்ட பிறகு, வேகவைத்துள்ள பருப்பினை இதில் சேர்த்து மேலும் 4 -5 நிமிடங்கள் வேகவிடவும்.

·         கடைசியில் கொத்தமல்லி தூவி பரிமாறவும். இதனை சாதம், தயிர், தோசை, சாப்பாத்தி போன்றவையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

கவனிக்க :
விரும்பினால் 1 தே.கரண்டி சக்கரை அல்லது வெல்லம் சிறிதளவு சேர்த்து கொள்ளலாம்.

ஒரு துண்டு தேங்காயினை அரைத்து குழம்பில் சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

40 comments:

Asiya Omar said...

பார்க்கவே சூப்பராக இருக்கு.

Unknown said...

Arumai geetha,viraivil seydhu paarkiren.....

Chitra said...

Mouth-watering recipe and photo. Super!

Krishnaveni said...

healthy veggie, looks yumm

Pavithra Elangovan said...

Bitterguard is my fav veggie .. And pitle is my very one ..looks so so delicious and I am too much tempted before going to sleep.

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமையா செய்து இருக்கீங்க. பார்க்கவே சூப்பரா இருக்கு.

kousalya raj said...

ஐ எனக்கு ரொம்ப பிடித்த டிஷ்...தேங்க்ஸ் தோழி

Chitra said...

I make in a different way. this looks simple & nice. will try this method soon :)

Aruna Manikandan said...

looks delicious :)

சசிகுமார் said...

Thanks

Padhu Sankar said...

Looks so inviting

ஹுஸைனம்மா said...

பிட்லை எப்படி செய்யணும்னு தெரியாம இருந்துது. இனி கண்டிப்பாச் செய்வேன் கீதா. பாகற்காய் எனக்குப் பிடிச்ச காய்.

இதில் புளியுன் சுவை குழம்பில் தெரியுமளவு போடவேண்டுமா அல்லது தெரியாதபடி சேர்க்கவேண்டுமா கீதா? நான் வெல்லம் சேர்க்க விரும்புவதில்லை.

Kurinji said...

my fav Geetha and looks so tempting...
Kurinji

Jaleela Kamal said...

rompa nalla irukku

Shama Nagarajan said...

delicious gravy

Nithu Bala said...

Delicious Pitlai..

Akila said...

pavakkai pitlai looks so spicy and yummy...

Learning-to-cook
Event: Dish Name Starts with D

Regards,
Akila

Vijiskitchencreations said...

கீதா லவ்லி ரெசிப்பிப்பா. எங்க வீட்டில் எல்லோருக்கும் பிடித்த கறி.
அம்மா நான் நாங்க எல்லாரும் அடிக்டி பாவக்காய் பிட்லா செய்வோம்.
நான் பிட்லா பொடி செய்து ப்ரிட்ஜில் வைத்து கொள்வேன்.எப்ப வேனும் என்று தோன்றும் போது அதை கொஞ்சம் தண்னிர் விட்டு பேஸ்ட் போல் குழைத்து போட்டு செய்வேன்.
உங்க ஸ்டைலிலும் செய்வதுண்டு.

எம் அப்துல் காதர் said...

ஆஹா அருமையா இருக்கு!! எங்க தாங்ஸ் இதை நிறைய விரும்பி சாப்பிடுவாங்க. நான் அதை பார்த்துக்கிட்டே இருப்பேன். :)))

மனோ சாமிநாதன் said...

அருமையான சமையல் குறிப்பு கீதா! சில பேர் இதை துவரம்பருப்பிலும் செய்வார்கள்!!

Unknown said...

Hmm jooraga irkirathey

Mahi said...

சூப்பரா இருக்கு கீதா! நானும் இந்த பிட்லை செய்யணும்னு நினைச்சுட்டே இருக்கேன்,பாகற்காய்தான் கிடைக்க மாட்டேனுது.

Unknown said...

Geetha, u r tagged......chk my blog for details.....

Pushpa said...

Yummy and healthy dish.

Kanchana Radhakrishnan said...

சூப்பராக இருக்கு.

Kitchen Boffin said...

looks delicious... super yummy recipe...

Kitchen Boffin said...

romba nalla irukke... looks awesome... u got a nice space here.. following you...

Kitchen Boffin said...

romba nalla irukke... looks awesome... u got a nice space here.. following you...

பவித்ரா said...

கீதா, இந்த பவித்ரா நானா??? நானாக இருந்தால் நான் செல்வி தான், திருமதி இல்லை அவ்வ்வ்வ்வ்வ்;(((, நான் அறுசுவையில் இந்த ரெசிப்பி கொடுத்தேன், அதான் ஒரு சந்தேகம் கீதா:))

பவித்ரா said...

கீதா, அந்த பவித்ரா நானா??? நான் அறுசுவையில் இந்த குறிப்பு கொடுத்தேன் அதான் கேட்டேன். நான் என்றால் நான் திருமதி இல்லை, செல்வி தான் அவ்வ்வ்வ்வ்;((((

Geetha6 said...

super!!

Priya dharshini said...

pavakai pittlai en fav....super ah eruku

அப்பாவி தங்கமணி said...

wow...nice recipe...easy too it seems...thanks for sharing

Reva said...

Romba nallaa irukku..... inimael naan ungal paguthiyin theevira visiri aagivitaen...
Reva.
www.kaarasaaram.com

GEETHA ACHAL said...

நன்றி ஆசியா அக்கா....நன்றி சவிதா...நன்றி சித்ரா...நன்றி கிருஷ்ணவேனி...நன்றி பவித்ரா...நன்றி புவனா...நன்றி கௌசல்யா...நன்றி சித்ரா...கண்டிப்பாக செய்து பாருங்க...

GEETHA ACHAL said...

நன்றி அருணா...நன்றி சசி...நன்றி பது...

நன்றி ஹுஸைனம்மா...கண்டிப்பாக செய்து பாருங்க...

//இதில் புளியுன் சுவை குழம்பில் தெரியுமளவு போடவேண்டுமா அல்லது தெரியாதபடி சேர்க்கவேண்டுமா கீதா? நான் வெல்லம் சேர்க்க விரும்புவதில்லை//இதில் புளியின் சுவை அவ்வளவாக தெரியாது...அதனால் அளவாக சேர்த்தால் போதும்...வெல்லம் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை....நன்றி

GEETHA ACHAL said...

நன்றி குறிஞ்சி...நன்றி ஜலிலா அக்கா....நன்றி ஷாமா....நன்றி நிது...நன்றி அகிலா...

GEETHA ACHAL said...

நன்றி விஜி...பிட்லா பொடியினை பற்றி சீக்கிரம் ஒரு பதிவு போடுங்க...மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...நன்றி

நன்றி அப்துல்...கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க...

நன்றி மனோ ஆன்டி...

நன்றி சர்மிளா...

நன்றி மகி...கண்டிப்பாக பாக்ற்காய் கிடைக்கும் பொழுது செய்து பாருங்க...

GEETHA ACHAL said...

நன்றி சவிதா..

நன்றி புஷ்பா..

நன்றி கஞ்சனா..

நன்றி கிச்சன் boffin...

நன்றி பவித்ரா...ஆமாம் நீங்களே தான்...சாரி பவி..நீங்கள் திருமதி என்று நினைத்து கொண்டேன்...சரி மாற்றிவிடுகிறேன்...நன்றி...

GEETHA ACHAL said...

நன்றி கீதா...

நன்றி ப்ரியா...

நன்றி தங்கமணி...

நன்றி ரேவா...

Related Posts Plugin for WordPress, Blogger...