சிக்கன் பெப்பர் வறுவல் - Chicken Pepper Fry


சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்

தேவையான பொருட்கள் :
·         சிக்கன் – 1/2 கிலோ
·         வெங்காயம் – 2 பெரியது
·         இஞ்சி – 1 பெரிய துண்டு
·         பூண்டு – 10 பல்

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1 தே.கரண்டி
·         தனியா தூள் – 2 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·         மிளகு தூள் – 2 தே.கரண்டி
·         உப்பு தேவையான அளவு

முதலில் தாளிக்க :
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         பட்டை, கிராம்பு,ஏலக்காய் – 1
·         சோம்பு – 1 தே.கரண்டி
·         கருவேப்பில்லை – 5 இலை

கடைசியில் சேர்க்க :
·         மிளகுதூள் – 1 தே.கரண்டி
·         எலுமிச்சை சாறு – 1 தே.கரண்டி
·         கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை :
·         சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும். சிக்கனுடன் சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.

·         வெங்காயத்தினை பெரிய துண்டுகளாக வெட்டி கொண்டு கடாயில் போட்டு வதக்கி சிறிது நேரம் ஆறவைத்து மிக்ஸியில் போட்டு ஒன்றும் பாதியுமாக அரைத்து கொள்ளவும். இஞ்சி + பூண்டினை நன்றாக நசுக்கி வைக்கவும்.

·         கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.

·         அத்துடன் அரைத்த வெங்காயம் + நசுக்கிய இஞ்சு,பூண்டினை சேர்த்து 2 - 3 நிமிடங்கள் வதக்கவும்.

·         அதனுடன் ஊறவைத்துள்ள சிக்கனை சேர்த்து கிளறி தட்டு போட்டு மூடி வேகவிடவும். 3 – 4 நிமிட்த்திற்கு ஒருமுறை கிளறிவிடவும்.


·         சிக்கன் வெந்ததும் கடைசியில் சேர்க்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து கிளறி மேலும் 2 – 3 நிமிடங்கள் வேகவிடவும். சுவையான சிக்கன் பெப்பர் வறுவல்  ரெடி.இதனை சாதம், குழம்பு, கலந்த சாதம், சாப்பாத்திரசம் போன்றவையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

கவனிக்க :
மிளகுதூளினை Freshஆக பொடித்து கொள்ளவும்

கிரேவியாக விரும்பினால் வெங்காயத்தின் அளவினை கூட்டி கொள்ளவும்.

அதே போல, கிரேவிக்கு தண்ணீர் ஊற்றுவதற்கு பதிலாக சிக்கன் ஸ்டாக் சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்

25 comments:

எல் கே said...

present

Chitra said...

Mouth-watering recipe. :-)

Pushpa said...

Delicious chicken fry Geetha,Ennudaiya fav,chapathi oda,chicken mela yelumicham pazham juiceyum vengayam serthu sapita romba santhosam ennaku.

Kurinji said...

parkave romba temptinga erukuthuga.
entha vaarame seithu parkanum.

Jayanthy Kumaran said...

Om gosh..Loved the colorful shots...must have tasted divine..
Tasty appetite

சசிகுமார் said...

Thank you

ஸாதிகா said...

வாவ்..தொக்கு போல் பார்க்கவே சுவை சுண்டி இழுக்கின்றதே.

Asiya Omar said...

அருமை.

Arjunan said...

Hi,
thanks for sharing, nice dish i will try these items once i married because i love to cook/eat.one doubt till date i didn't eat egg at all, but i like to eat.if i take the white part of the boiled egg i getting stomach pain definitely, if there any solution/suggestion to avoid this.Thanks

Priya Suresh said...

Omg, am hungry now, mouthwatering here..

தெய்வசுகந்தி said...

super!

Unknown said...

romba nalla irukku geetha...u made me ur follower by ur chicken

Magia da Inês said...

♥♥ Olá, amiga!
♥ As receitas são maravilhosas!!!Com todos esses ingredientes deliciosos.♥♥
Seu blog está muito bonito. ♥
♥ Beijinhos.
Brasil♥♥

vanathy said...

super & mouth watering recipe. Will try this very soon.

Kanchana Radhakrishnan said...

present Geetha.

Soumya said...

wow...super delicious and very tempting....loved your presenation...

Mahi said...

நல்லாஇருக்கு கீதா!

vandana rajesh said...

yummy looking chicken..beautiful.

Akila said...

so lovely and inviting dear...

Dish Name Starts with C: - Main Dishes & Cakes
Dish Name Starts with C: - Snacks & Sweets
Dish Name Starts with C: - SideDishes & Beverages

Event: Dish Name Starts with D

Regards,
Akila.

Pavithra Elangovan said...

Mouthwatering dish ..geetha profile photo arummayaga irukirathu.

GEETHA ACHAL said...

நன்றி கார்த்திக்...

நன்றி சித்ரா...

நன்றி புஷ்பா,,,

நன்றி குறிஞ்சி...கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க...

நன்றி ஜெயந்தி...

நன்றி சசி...

நன்றி ஸாதிகா அக்கா...

GEETHA ACHAL said...

நன்றி ஆசியா அக்கா...நன்றி அர்ஜூனன்...//one doubt till date i didn't eat egg at all, but i like to eat.if i take the white part of the boiled egg i getting stomach pain definitely, if there any solution/suggestion to avoid this.//ஏன் அப்படி ஆகின்றது என்று தெரியவில்லை...ஒரு வேலை இதுவரை சாப்பிட்டது இல்லை...இப்பொழுது சாப்பிடுகிறோம் என்ற நினைப்பில் கூட நீங்களா நினைத்து கொள்கின்றிங்களா என்று தெரியவில்லை...அல்லது டாக்டரிம் கேட்டு கொள்ளுங்கள்...நல்லது...

GEETHA ACHAL said...

நன்றி ப்ரியா...

நன்றி தெய்வசுகந்தி...

நன்றி சவிதா...

நன்றி வானதி...

நன்றி கஞ்சனா....

நன்றி சௌமியா...

நன்றி மகி...

நன்றி வந்தனா...

நன்றி அகிலா...

GEETHA ACHAL said...

நன்றி பவித்ரா...

Krishnaveni said...

tempting plate, looks yumm, beautiful click with that half lemon, great

Related Posts Plugin for WordPress, Blogger...