கோதுமை ரவை இட்லிமாவு கொழுக்கட்டை - Cracked Wheat Idly Mavu kozhukattai


எப்பொழுதும் இட்லி மாவு மீந்துவிட்டால் அதில் ஊத்தாப்பம் , தோசை என்று எதாவது செய்வதுண்டு….இந்த முறையும் அதே மாதிரி தான் ரவையினை வறுத்து கொட்டி தோசை சுடலாம் என்று நினைத்தேன்…ஆனால் ஒரு மாறுதலுக்காக, கோதுமை ரவையினை வறுத்து கொட்டி உருண்டைகாளாக பிடித்து வேகவைத்தேன்…மிகவும் அருமையான சத்தான காலை சிற்றுண்டி இனிதாக முடிந்தது…

அடுத்த முறை இதில் காய்கள் சேர்த்து செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கின்றேன்… நீங்களும் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க…

சமைக்க தேவைப்படும் நேரம் : 15 – 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  • இட்லி மாவு – 1 கப்
  • கோதுமை ரவை – 1 கப்
  • உப்பு – சிறிதளவு

தாளித்து சேர்க்க :
  • எண்ணெய் – 1 தே.கரண்டி
  • கடுகு – தாளிக்க
  • காய்ந்தமிளகாய் – 2
  • கருவேப்பில்லை – சிறிதளவு
  • உளுத்தம்பருப்பு – 1 தே.கரண்டி
செய்முறை :
கோதுமை ரவையினை வறுத்து கொள்ளவும். தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து வைக்கவும்.

இட்லி மாவு + வறுத்த ரவை + தாளித்த பொருட்கள் + உப்பு சேர்த்து நன்றாக கெட்டியாக கலந்து கொள்ளவும். இதனை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

உருண்டைகளாக பிடித்து தட்டில் அடுக்கி வைக்கவும்.

இட்லி வேகவைப்பது போல வேகவைத்து கொள்ளவும்.

சுவையான சத்தான கொழுக்கட்டை ரெடி….விரும்பினால் இத்துடன் சட்னி சேர்த்து சாப்பிடலாம்.

கவனிக்க :
மாவு பிசையும் பொழுது தண்ணீர் சேர்க்க வேண்டாம்…ஏற்கனவே இட்லி மாவில் இருக்கும் தண்ணீரே போதுமானது…

விரும்பினால் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து கொள்ளலாம்….இதே மாதிரி சாதரண ரவையிலும் செய்யலாம்…

வேகவைத்த கொழுக்கட்டைகளை உதிர்த்தால் தீடீர் உப்புமா ரெடி…சூப்பராக இருக்கும்…

அதே மாதிரி இப்படி உருண்டைகளை வேகவைக்கும் பொழுது மினி இட்லி தட்டில் அடுக்கி வேகவைத்தால் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்…இது எங்க அம்மாவுடைய டிப்ஸ்…

28 comments:

LK said...

இது வித்யாசமா இருக்கே ??

Kurinji said...

wow, easy n healthy recipe Geetha!

ஸாதிகா said...

அட..இப்படி கூட கொழுக்கட்டையை பண்ணலாமா?

S.Menaga said...

nice idea n healthy recipe....

Priya said...

உங்கள் தளத்திற்கு இப்போதுதான் வருகிறேன். நல்ல குறிப்புகளுடன் விளக்கங்களுடன் நன்றாக உள்ளது. தொடரட்டும் உங்கள் பணி.

எனக்கு ஒரு குறை உள்ளது, எங்கயாவது நல்ல குறிப்புகளை காண நேர்ந்தால் copy செய்து save செய்து கொள்வேன், ஏனென்றால் நன் தேடும் போது எந்த பக்கம் என மறந்து போவதும், நெட் அப்போது வேலை செய்யாமல் இம்சை பண்ணுவதும் நடக்கும். ரைட் கிளிக் option மட்டும் செய்தால் போதுமே?


உங்களுடைய எழுத்தும், எண்ணமும் பிறருக்கு செல்ல வேண்டும், பகிரும் போது தான் எதுவுமே முழுமை அடையும்,

உங்களுடைய குறிப்புகைளை அவர்கள் எடுத்து அவர்கள் தளத்தில் பதிவு செய்யும் போது, உங்களுடைய நண்பர்கள் பார்க்க நேர்ந்தால் அவர்களுக்கு தெரியும் இது காபி செய்ய பட்டது என்று.

எதற்காக குறிப்பு போடுகிறிர்கள் மற்றவர்களுக்கு உபயோக படும் என்று தானே? அதை ஏன் இப்படி அரைகுறையாக செய்ய வேண்டும்.

நான் கஷ்டப்பட்டு type செய்து போட்டதை அவர்கள் ஈஸி ஆ காபி செய்து பேர் வாங்குகிறார்கள் என்று தோணலாம், இது உண்மை தான் இல்லை என்று சொல்லவில்லை.

அவர்கள் இதில் மற்றம் செய்து போட்டால் என்ன பண்ணுவிர்கள்?

இதற்கு www.copyscape.com
சென்று உங்கள் முகவரியை கொடுத்தால் யார் யார் காபி செய்கிறார்கள் என்று தெரியும்


இதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்
இதை வெளி இடுவதும்,நிராகரிப்பதும் உங்கள் விருப்பம்..


பிரியா

Geetha6 said...

different variety!

Porkodi (பொற்கொடி) said...

எப்போவாவது பண்ணா தான் வித்தியாசம்.. வித்தியாசமே வழக்கமா இருந்தா நான் என்ன வித்தியாசமா சொல்ல.. :) தேங்க்ஸ்கிவிங் ஃபோட்டோஸ் சூப்பரோ சூப்பர், எனக்கு தெரிந்து அசைவம் சாப்பிடுவோர் பலரும் அந்த முழு டர்கியை பார்த்தால் பயந்து தான் இருக்கிறார்கள்!!

Pavithra said...

Supera irukku geetha.. different and healthy too.

Mahi said...

நல்ல ஐடியா கீதா!

Chitra said...

new one. Thank you for the recipe. :-)

Krishnaveni said...

healthy recipe, looks so good

சசிகுமார் said...

NICE

RAKS KITCHEN said...

Nalla recipe,and the tips to keep in miniidili plate is a great idea,thanks to ur amma :)

Priya said...

Wat a healthy,new and delicious guilt free snacks, love it..

vanathy said...

super recipe.

கவிநயா said...

நல்ல ஐடியா. சுலபமாவும் இருக்கே. நன்றி கீதா.

Vijisveg Kitchen said...

கீதா சூப்பரான் ஹெல்தி புதுவிதமான் ரெசிப்பி. நான் அவசியம் செய்துபார்க்கிறேன்.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

அட வித்யாசமான கொழுக்கட்டை கீதா,, ம்ம்ம் பார்க்கவே அழகா இருக்கு

asiya omar said...

கொழுக்கட்டை சூப்பர்.

GEETHA ACHAL said...

நன்றி கார்த்திக்...செய்து பாருங்க..

நன்றி குறிஞ்சி...

நன்றி ஸாதிகா அக்கா...ஆமாம் அக்கா முதல் தடவையாக இப்படி செய்தேன்..அருமையாக வந்தது...நீங்களும் செய்து பாருங்க...

நன்றி மேனகா...

நன்றி ப்ரியா...

GEETHA ACHAL said...

தங்களுடைய அன்பான கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரியா...

ஆமாம் நிறைய பேர் என்னுடைய குறிப்புகளை அவங்க குறிப்புகள் மாதிரி அவங்க ப்ளாகில் எழுதி கொள்கின்றாங்க...ப்ளாகில் மட்டும் அல்ல பிரபல நாளிதழ், தளங்கள் போன்றவையில் என்னுடைய குறிப்பிளை நான் பார்க்கிறேன்...

என்னுடைய குறிப்புகள் அதனால் Copy paste வசதியினை நீக்கிவிட்டேன்..

உங்களுக்கு எதாவது குறிப்புகள் பிடித்து இருந்தால்...நீங்க...உங்களுகாக wordpadயில் படித்தினை எழுதி வைத்து கொள்ளுங்க...இதனால் எந்த பிரச்சனையும் வராது...

உங்க அன்பு தோழி....

GEETHA ACHAL said...

நன்றி கீதா...

நன்றி பொற்கொடி...தினம் தினம் வித்தியசமாக செய்து ஒரே கலக்குறிங்க என்று சொல்லுங்க....

நன்றி பவித்ரா...

நன்றி மகி...

நன்றி சித்ரா...

GEETHA ACHAL said...

நன்றி கிருஷ்ணவேனி...

நன்றி சசி...

நன்றி ராஜி...ஆமாம் ராஜி மினி இட்லி தட்டில் செய்வதால் மிகவும் சுலபமாக இருக்கு..நீங்களும் செய்து பாருங்க..

நன்றி ப்ரியா..

GEETHA ACHAL said...

நன்றி வானதி...

நன்றி கவிநயா...

நன்றி விஜி...கண்டிப்பாக செய்து பாருங்க...

நன்றி தேன் அக்கா..

Jaleela Kamal said...

நல்ல ஐடியா

Jaleela Kamal said...

நாங்க கொழுக்கட்டைக்குன்னு மாவு தனியா வறுத்து வைப்போம்,
அது கிடைக்காத போது,
அரிசி ஊறவைத்து அரைத்து அத்துடன் ரெடிமேட் , அரிசிமாவு அல்லது ரவை கலந்து கறி தக்குட்டி, அவித்த கொழுக்கட்டிஅ செய்வோம்

GEETHA ACHAL said...

நன்றி ஜலிலா அக்கா...ஆமாம் நாங்களும் கொழுக்கட்டைக்கு தனியாக மாவு அரைத்து வைத்து கொள்வோம்...ஆனா இது இட்லிமாவில் செய்தது...

நீங்களும் இந்த முறையில் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க...

healthdurbar com said...

this one looks very different

Related Posts Plugin for WordPress, Blogger...