அழகர் கோவில் தோசை - Azhagar Kovil Dosai


நிறைய பேர் அழகர் கோவில் தோசையினை பற்றி சொல்லி கேட்டு இருக்கின்றேன்…அதனால் அழகர் கோவில் தோசையினை செய்ய வேண்டும் என்று தோன்றவே நெட்டில் தேடி பார்த்தேன்….ஆனால் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி எழுதி இருக்காங்க…

கடைசியில் ஒரு வழியாக கண்டுபிடிச்சு தோசையும் செய்தாச்சு….இதில் உளுத்தம்பருப்பினை தோலுடன் தான் சேர்க்க வேண்டும்.

அதே மாதிரி தோசை என்று சொன்னாலும் கூட இது தோசை மாதிரி கிடையாது…அதிக அளவு எண்ணெயில் பொரிக்க வேண்டும்…அதற்கென்று வடை மாதிரி நிறைய எண்ணெய் தேவையில்லை…

இந்த தோசை கோவிலில் பிரசதமாக கொடுக்கப்படும்…

ஊறவைக்க தேவைப்படும் நேரம் : 2 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         கருப்பு உளுத்தம்பருப்பு – 1 கப்
·         இட்லி அரிசி – ¼ கப்
அரைத்து சேர்க்க வேண்டியவை :
·         மிளகு – 2 மேஜை கரண்டி
·         சீரகம் – 2 மேஜை கரண்டி
·         கருவேப்பில்லை – 10 – 15 இலை
·         இஞ்சி – 2 மேஜை கரண்டி (நறுக்கியது)
·         பெருங்காயம் – சிறிதளவு
·         உப்பு – தேவையான அளவு
பொரிப்பதற்கு :
·         எண்ணெய் / நெய் – தேவையான அளவு

செய்முறை :
·         உளுத்தம்பருப்பு + அரிசியினை குறைந்தது 1 மணி நேரம் ஊறவைக்கவும். அரிசியினை கழுவி துணியில் பரப்பி கொஞ்சம் நேரம் தண்ணீர் வடிய காயவைக்கவும்.

·         காயவைத்த அரிசியினை மிக்ஸியில் போட்டு ரவை மாதிரி அரைத்து கொள்ளவும்,

·         உளுத்தம்பருப்பினை மைய அரைத்து கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களையும் தனியாக மைய அரைத்து எடுக்கவும்.

·         அரைத்த உளுத்தம்பருப்பு + அரிசி + அரைத்த பொருட்கள் சேர்த்து கலந்து கொண்டு 1 – 2 மணி நேரம் புளிக்கவிடவும்.

·         கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அடைகளை ஊற்றவும்.

·         ஒரு பக்கம் நன்றாக மொருமொருப்பாக ஆனவுடன் திருப்பி போட்டு மேலும் சிறிது நேரம் வேகவிடவும்.

·         சுவையான சத்தான தோசை ரெடி.

கவனிக்க :
·         இந்த தோசையினை எண்ணெய்/ நெய் அதிகம் சேர்த்து பொரிப்பாங்க….அதிகம் சேர்க்க விரும்பாததால் நான் சிறிதளவு தான் சேர்த்தேன்…

·         எண்ணெய் ½ கப் + நெய் ½ கப் என்று கலந்து கொண்டால் நெயில் செய்த மாதிரியே இருக்கும்.

·         அதிக நேரம் மாவினை புளிக்க வைக்க வேண்டாம்.

·         எண்ணெயில் பொரித்தால் குறைந்தது 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

39 comments:

Unknown said...

Miga arumayana,sathana dosai......

பொன் மாலை பொழுது said...

கொஞ்ச நாளைக்கு முன்பு கூட நம் பதிவர்களில் யாரோ எழுதியிருந்தார்கள்.நினைவில்லை.
தங்களின் செய்முறையும் எளிதுதான். நல்ல படைப்பு. நன்றி பகிர்ந்தமைக்கு,

Mahi said...

எனக்கு இது ரொம்ப புது ரெசிப்பி கீதா! தோசை நல்லா இருக்கு!

Chitra said...

மொறு மொறுன்னு சூப்பரா இருக்குதே...

Krishnaveni said...

very nice dosai, thanks for sharing

vanathy said...

I read about this in arusuvai. But did not try this dosai. Looks very yummy.

எல் கே said...

செய்துய் பாப்ர்போம்

GEETHA ACHAL said...

நன்றி சவிதா...

நன்றி மாணிக்கம் அண்ணா....நான் அந்த பதிவினை மிஸ் செய்து விட்டேன் போல....கண்டிப்பாக செய்து பாருங்க...நன்றி...

நன்றி மகி...

நன்றி சித்ரா..

நன்றி கிருஷ்ணவேனி...

GEETHA ACHAL said...

நன்றி வானதி...அருசுவை பழைய தளதில் இதனை பற்றி எழுதி இருந்தாங்க...தேடி பார்த்தேன்...இப்பொழுது கிடைக்கவில்லை....

நன்றி கார்த்திக்...கண்டிப்பாக செய்து பாருங்க...

Unknown said...

Healthy Recipe geetha,luks delicious...

Malini's Signature said...

நல்ல குறிப்புக்கு வாழ்த்துகள்...

ஸாதிகா said...

முழு கருப்பு உளுந்து சேர்த்து செய்து இருக்கும் இது வித்தியாசமான தோசைதான்.

சசிகுமார் said...

வித்தியாசமான பதிவு

Asiya Omar said...

சூப்பர்.அருமையாக வந்திருக்கு,மணமும் ருசியும் இங்கு வரை இருக்கு.

Aruna Manikandan said...

Healthy delicious dosa dear :)

Jaleela Kamal said...

முழு கருப்பு உளுந்து சுண்டல் சூபப்ரா இருக்கும்.
தோசை சாதா உளுந்தில் செய்தாலே சுவை அருமையாக இருக்கும்.
அதுவும் முழு கருப்பு உளுந்து சூப்பராக இருக்கும்

புவனேஸ்வரி ராமநாதன் said...

பெயரே சூப்பரா இருக்கே.

Kurinji said...

சத்தான தோசை !

குறிஞ்சி குடில்

ManPreet Kaur said...

nice blog..
Please visit my blog..

Lyrics Mantra
Ghost Matter
Download Free Music
Music Bol

Priya Suresh said...

Thats a delicious dosa, heard load about it,havent tried yet at home, romba nandri Geetha,intha recipeaa post pannathuku..

ஆயிஷா said...

தோசை மொறு மொறுன்னு இருக்குதே..

குறையொன்றுமில்லை. said...

ஆமா, நானும் அறுசுவைல இதைப்பத்தி பாத்திருக்கேன். உங்க செய்முறையும் படங்களும் நன்னா இருக்கு.

ADHI VENKAT said...

இந்த தோசை பற்றி இப்போது தான் கேள்விப்படறேன். இரண்டு மணிநேரத்தில் புளித்து விடுமா? பகிர்வுக்கு நன்றி.

GEETHA ACHAL said...

நன்றி ப்ரேமா..

நன்றி ஹர்ஷினி அம்மா..

நன்றி ஸாதிகா அக்கா..

நன்றி சசி..

நன்றி ஆசியா அக்கா..

GEETHA ACHAL said...

நன்றி அருணா..

நன்றி ஜலிலா அக்கா..

நன்றி புவனா...

நன்றி குறிஞ்சி...

GEETHA ACHAL said...

நன்றி ப்ரியா...கண்டிப்பாக செய்து பாருங்க...

நன்றி ஆயிஷா..

நன்றி லஷ்மி அம்மா...ஆமாம் பழைய தளத்தில் இதனை பற்றி எழுதி இருந்தாங்க...இப்பொழுது தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை...அதனை நீக்கிவிட்டாங்க என்று நினைக்குறேன்...

நன்றி கோவை2தில்லி...மாவு 2 மணி நேரத்தில் புளித்துவிடாது...

ஆனால் 2 மணி நேரம் என்று சொல்வது உடைத்த அரிசி ரவை உறுவதற்காக...அந்த டைம் ஊறினால் போதும்...

அதற்கு மேல் இருந்தால் புளிக்க ஆரம்பித்துவிடும்...சுவையில் வித்தியசம காணப்படும்.

Priya said...

இதுவரை நான் செய்ததில்லை.. புது ரெசிபி எனக்கு இது! ரொம்ப சத்தான தோசையா இருக்கே.. செய்து பார்க்கணும்!

Anonymous said...

தோசை நல்ல இருக்கு கீதா
இந்த தோசை இப்போ தான் தெரியும்

Malar Gandhi said...

Such a healthy one' I make them quite often too:)

அன்புடன் நான் said...

இது எனக்கு புதுமையா இருக்குங்க.... செய்ய சொல்லி சாப்பிடனும்...

உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.

Menaga Sathia said...

நானும் இந்த ரெசிபியை தேடி அலுத்துவிட்டேன்....சூப்பராயிருக்கு செய்து பார்க்கனும்..

Jayadev Das said...

ரெசிபி குடுத்ததுக்கு நன்றி, செய்து பார்க்கிறோம்! [கோவிலில் இதை ஆடை என்றுதான் சொல்வார்கள், தோசை என்று ஒரு போதும் சொல்ல மாட்டார்கள்].

Geetha6 said...

அருமை

Pushpa said...

More urad dal and less rice,sounds interesting,dosa looks very yummy...

Pushpa said...

More urad dal and less rice,sounds interesting,dosa looks very yummy...

Jayanthy Kumaran said...

healthy n traditional recipe..thanks Geetha for sharing..
Tasty appetite

குறை ஒன்றும் இல்லை !!! said...

என்னங்க டயட் எல்லாம் நல்லபடியா முடுஞ்சுதா? :)

GEETHA ACHAL said...

நன்றி ப்ரியா...

நன்றி மகாவிஜய்...

நன்றி மலர் காந்தி...

நன்றி கருணாகரசு...கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க...

நன்றி மேனகா...செய்து பாருங்க...

நன்றி ஜெய்தேவ்....

நன்றி கீதா...

GEETHA ACHAL said...

நன்றி புஷ்பா..

நன்றி ஜெய்..

நன்றி ராஜ் அண்ணா...எப்படி இருக்கின்றிங்க...வீட்டில் அனைவரும் எப்படி இருக்காங்க...குட்டிஸ் நலமா...

Related Posts Plugin for WordPress, Blogger...