பார்லி பிஸிபேளாபாத் - Barley Bisibelebath


பார்லியினை சாப்பிடுவது உடலிற்கு மிகவும் நல்லது…இதில் நிறைய நார்சத்து இருக்கின்றது…

உடல் எடை குறைக்க விரும்புவோர், சக்கரை அதிகம் இருப்பவர்கள் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளவது மிகவும் நல்லது.

பார்லி தண்ணீரை மட்டும் அருந்தாமல் வேகவைத்த பார்லியினையும் கூடவே சாப்பிடுவது மிகவும் சிறந்தது…

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 – 40 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         பார்லி – 1 கப்
         துவரம் பருப்பு – ¾ கப்
         உப்பு – தேவையான அளவு

சேர்க்க வேண்டிய காய்கள் :
  •          சௌசௌ, கத்திரிக்காய், நூல்கோல், குடைமிளகாய், முள்ளாங்கி – சிறிதளவு
  •          வெங்காயம் – 1
  •          தக்காளி – 1
வறுத்து அரைத்து கொள்ள வேண்டியவை :

        காய்ந்தமிளகாய் – 5

         தனியா – 1 மேஜை கரண்டி
         பட்டை , கிராம்பு – 1
         கடலைப்பருப்பு – 1 மேஜை கரண்டி
         வேர்க்கடலை – 1 மேஜை கரண்டி
         தேங்காய் துறுவல் – 2 தே.கரெண்டி
         பெருங்காயம் – சிறிதளவு

கரைத்து கொள்ள :
         புளி – நெல்லிக்காய் அளவு
         தண்ணீர் – 2 கப்

முதலில் தாளிக்க :
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         கடுகு,வெந்தயம் – தாளிக்க
·         காய்ந்த மிளகாய் – 2
·         கருவேப்பில்லை – 5 இலை

செய்முறை :
·         பார்லி + துவரம் பருப்பு + 1 தே.கரண்டி உப்பு + 4  கப் தண்ணீர் சேர்த்து பிரஸர் குக்கரில் போட்டு வேகவைத்து கொள்ளவும்.

·         காய்களை ஒரே அளவாக நறுக்கி வைக்கவும். புளியினை தண்ணீரில் கரைத்து எடுத்து கொள்ளவும்.

·         வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து அரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + வெந்தயம் தாளித்து கருவேப்பில்லை + வெங்காயம் + தக்காளி போட்டு வதக்கவும்.

·         இத்துடன் காய்களை சேர்த்து 3 -4 நிமிடங்கள் வதக்கிய பிறகு புளி தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் வேகவிடவும்.

·         பிறகு அரைத்த விழுது + சிறிது தண்ணீர் + தேவையான அளவு உப்பு சேர்த்து மேலும் 5 -6 நிமிடங்கள் வேகவிடவும்.

·         அதன்பின், வேகவைத்துள்ள பார்லியினை இத்துடன் சேர்த்து கலக்கி சிறிது நேரம் கிளறவும்.விரும்பினால் கடைசியில் 1 தே.கரண்டி நெய் சேர்த்து கொள்ளவும்.

·         சுவையான சத்தான பார்லி பிஸிபேளா பாத் ரெடி. இத்துடன் வறுவல், சிப்ஸ், அப்பளம் போன்றவை சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

கவனிக்க :
பார்லி வேக சிறிது நேரம் எடுக்கும்.அதனால் பிரஸர் குக்கரில் போட்டு 6 – 7 விசில் வரும் வரை வேகவிடவும்.
அவரவர் விருப்பதிற்கு ஏற்றாற் போல காய்களை சேர்த்து கொள்ளலாம்….

24 comments:

healthdurbar com said...

this is very interesting...thanks for sharing this healthy recipe

அமுதா கிருஷ்ணா said...

ட்ரை செய்யணும்.

Chitra said...

Barley வைத்து இப்படியெல்லாம் செய்யலாம் என்று கண்டு பிடித்ததெற்கே உங்களுக்கு பாராட்டு விழா நடத்தணும் .... :-)

Unknown said...

படிக்க சுவையாக இருக்கிறது, இன்று முயன்று பார்க்கிறேன், பார்லியை இப்படியும் உபயோகப்படுத்த முடியும் என்று தெரிந்ததில் சந்தோஷம் உங்களின் பல உணவு முறைகள் எனக்கு மிகுந்த உதவியாக இருக்கிறது.
நன்றி

Kurinji said...

Healthy n innovative dish....

Pongal Feast Event

Kurinji

Unknown said...

Hey,

Mihavum arumai...Superb...Happy new year to you dear!!:)

Dr.Sameena@

http://www.myeasytocookrecipes.blogspot.com/

Priya Suresh said...

Barley BBB superaa irruku, thanks for sharing..

ஸாதிகா said...

பார்லியிலும் பிசிபேளாபாத் செய்து அசத்தி விட்டீர்கள்.

Jayanthy Kumaran said...

sounds delicious geetha..
Tasty appetite

Aruna Manikandan said...

looks healthy and delicious !!!
Thx. for sharing dear :)

Akila said...

wow thats really fantalicious dear....

Event: Dish Name Starts with E
Learning-to-cook
Regards,
Akila

ஆயிஷா said...

பார்லியிலும் பிசிபேளாபாத் சூப்பர்.

தமிழ் உலகம் said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

Krishnaveni said...

barley recipes ellaam romba attakaasama irukku geetha, keep possting

Kanchana Radhakrishnan said...

looks healthy.

GEETHA ACHAL said...

நன்றி healthdurbar...

நன்றி அமுதா...

நன்றி சித்ரா...நாங்க 2 வருடங்களாக healthyயாக சாப்பிட்டு கொண்டு இருப்பதால் இப்படி எல்லாம் செய்து சாப்பிடுகிறோ...அவ்வளவு தான்...

நன்றி தவநெறி அண்ணா...வீட்டில் அனைவரும் நலமா..,கண்டிப்பாக செய்து பார்த்து விட்டு சொல்லுங்க...நன்றி...

GEETHA ACHAL said...

நன்றி குறிஞ்சி...

நன்றி சமீனா...

நன்றி ப்ரியா...

நன்றி ஸாதிகா அக்கா..

நன்றி ஜெய்...

நன்றி அருணா...

GEETHA ACHAL said...

நன்றி அகிலா..

நன்றி ஆயிஷா...

Unknown said...

I hsve heard abt rice bisibela bath..but barley is something very unique dear.....very innovative and ecxellent dish......

Asiya Omar said...

அருமையாக இருக்கு.

Jaleela Kamal said...

-- http://samaiyalattakaasam.blogspot.com/2010/12/blog-post_29.html - நட்பு வட்ட அவார்டு கொடுத்துள்ளேன் வந்து பெற்று கொள்ளுஙக்ள்

உங்களுக்கும் உஙக்ள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்


பிஸி பேலா பாத் நல்ல இருக்கு.

Pushpa said...

Very healthy and yummy dish Geetha,about the tamarind I pressure cooked it whole and then blended it in a blender with the dal...

vanathy said...

very healthy. I will try this very soon.

GEETHA ACHAL said...

விருதுக்கு நன்றி ஜலிலா அக்கா...

நன்றி புஷ்பா..

நன்றி வானதி...

Related Posts Plugin for WordPress, Blogger...