பல்கர் பொங்கல் & கடலைமாவு சாம்பார் - Bulgur Pongal & Besan Flour Sambar / Kadalai Mavu Sambar


பல்கர் சாப்பிடுவது உடலிற்கு மிகவும் நல்லது…
சக்கரை அதிகம் உள்ளவர்கள் இதனை அடிக்கடி சாப்பிடுவதால் சக்கரை அளவு குறையும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         பல்கர் – 1 கப்
·         பாசிப்பருப்பு – 1/2 கப்
·         உப்பு – தேவையான அளவு
கடைசியில் தாளித்து சேர்க்க :
·         நெய் – 1 மேஜை கரண்டி
·         சீரகம் – 1/2 தே.கரண்டி
·         மிளகு – 10
·         கருவேப்பில்லை – 5 இலை
·         முந்திரி பருப்பு – சிறிதளவு
·         பச்சைமிளகாய் – 2
·         இஞ்சி – சிறிய துண்டு

செய்முறை :
·         பாசிப்பருப்பினை நன்றாக வேகவைத்து கொள்ளவும்.

·         பாசிப்பருப்பு நன்றாக வெந்தவுடன், அதில் பல்கரினை சேர்க்கவும்.

·         இத்துடன் தேவையான அளவு தண்ணீர் + உப்பு சேர்த்து நன்றாக வேகவைத்து கொள்ளவும்.

·         கடைசியில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து பொங்கலில் சேர்த்து கிளறவும்.

·         சுவையான சத்தான பல்கர் பொங்கல் ரெடி. இத்துடன் சாம்பார், சட்னி சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

கடலைமாவு சாம்பார்


சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         கடலைமாவு – 2 மேஜை கரண்டி
·         மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு
·         வெங்காயம் – 1
·         தக்காளி – 1

முதலில் தாளிக்க :
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         கடுகு, சீரகம் – தாளிக்க
·         உடைத்த உளுத்தம்பருப்பு – 1 தே.கரண்டி
·         வெந்தயம் – 1/4 தே.கரண்டி
·         காய்ந்த மிளகாய் – 1

கடைசியில் சேர்க்க :
·         கொத்தமல்லி – சிறிதளவு
·         பெருங்காயம் – ¼ தே.கரண்டி

செய்முறை :
·         கடலைமாவினை 2 – 3 கப் தண்ணீர் + உப்பு + மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.

·         வெங்காயம் + தக்காளியினை நறுக்கி கொள்ளவும்.

·         கடாயில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து பின் வெங்காயம் + தக்காளி ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

·         இத்துடன் கரைத்து வைத்து இருக்கின்ற கடலைமாவினை 8 - 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

·         கடைசியில் கொத்தமல்லி + பெருங்காயம் சேர்த்து கலக்கவும். சுவையான எளிதில் செய்ய கூடிய சாம்பார் ரெடி. இதனை இட்லி, தோசை, பொங்கல், சாப்பாத்தி போன்றவையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

கவனிக்க :
1 மேஜை கரண்டி கடலை மாவிற்கு 1 கப் தண்ணீர் சேர்த்து கொள்ளவும். கொஞ்சம் கெட்டியாக ( Thick)ஆக விரும்பினால் தண்ணீரின் அளவினை குறைந்து கொள்ளவும்.

கடலைமாவு கரைசலினை கடாயில் சேர்க்கும் பொழுது கட்டிப்படாமல் இருக்க நன்றாக கிளறிவிடவும்.

14 comments:

Priya Suresh said...

Super healthy bulghur pongal and absolutely inviting besan flour chutney,yummy dishes..

Porkodi (பொற்கொடி) said...

Innum bulgar unga kittendhu thappikaliya? :D looks super healthy Geetha!!

Menaga Sathia said...

பொங்கல்+சாம்பார் பார்க்கவே சாப்பிடத் தோனுது.சூப்பர்ர்!!

Unknown said...

miga arumai geetha.....kadalai mavu sambar is a must try one....

Chitra said...

First one is totally new.

கடலை மாவு சாம்பார் கேள்வி பட்டு இருக்கிறேன். செய்ததில்லை.

vanathy said...

looking delicious, Geetha. Very inviting photos!

ஆனந்தி.. said...

கடலை மாவு சாம்பார் குறிப்புக்கு மிக்க நன்றி..

Jaleela Kamal said...

கடலைமாவு சாம்பார் செய்ததில்ல்
பல்கர் பொங்க்ல அடிக்கடி செய்து இருக்கேன்.
நல்ல காம்பினேஷன்

ஸாதிகா said...

நான் சாப்பிட்டதில்லை.ஒரு முறை அவசியம் செய்து விடுகின்றேன்.

GEETHA ACHAL said...

நன்றி ப்ரியா..

நன்றி பொற்கொடி...என்ன செய்ய நாங்க இதனை விட்டாலும் அது எங்களை விட மாட்டுது...

நன்றி மேனகா..

நன்றி சவிதா..

நன்றி சித்ரா...

GEETHA ACHAL said...

நன்றி வானதி..

நன்றி ஆனந்தி...

நன்றி ஜலிலா அக்கா...

தெய்வசுகந்தி said...

healthy recipe

அமுதா கிருஷ்ணா said...

இந்த சாம்பாரை பாம்பே சாம்பார் என்பார்கள் தேனியில்.

GEETHA ACHAL said...

நன்றி தெய்வசுகந்தி..

நன்றி அமுதா...

Related Posts Plugin for WordPress, Blogger...