டயட் சில்லி காளிப்ளவர் - Diet Chilli Cauliflower


சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         காளிப்ளவர் – 1
·         சில்லி சாஸ் – 2 தே.கரண்டி
·         இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி
·         லெமன் ஜூஸ் – 2 தே.கரண்டி
·         எண்ணெய் – 2 மேஜை கரண்டி

சேர்க்க வேண்டிய தூள் வகைகள்:
·         கடலைமாவு – 1/4 கப்
·         பொடித்த ஒட்ஸ் மாவு – 1/4 கப்
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
காளிப்ளவரினை பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

இத்துடன் சில்லி சாஸ் + இஞ்சி பூண்டு விழுது + எலுமிச்சை சாறு + தூள் வகைகள் + எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து 5 – 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

நாண்-ஸ்டிக் பனில், ஊற வைத்துள்ள காளிப்ளவரினை போட்டு அதிக தீயில் 2 நிமிடங்கள் வேகவிடவும். (தட்டு போட்டு மூட தேவையில்லை…)

பிறகு தீயினை குறைத்து கொள்ளவும். ஒருபக்கம் நன்றாக் சிவக்க ஆரம்பித்தவுடன், காளிப்ளவரினை கிளறிவிட்டு மேலும் சிறிது நேரம் வேகவிடவும்.

சுவையான எளிதில் செய்ய கூடிய சில்லி காளிப்ளவர் ரெடி.

கவனிக்க :
எலுமிச்சை சாறுக்கு பதிலாக தயிர் சேர்த்து கொள்ளலாம்.

காளிப்ளவரினை ஒரே அளவிலான துண்டுகளாக வெட்டினால் நன்றாக வெந்து இருக்கும். காய் வேகும் பொழுது தட்டு போட்டு மூடினால் காளிப்ளவர் ரொம்ப க்ரிஸ்பியாக இருக்காது…அதனால் தட்டு போட்டு மூட வேண்டாம்…

காளிப்ளவருடன் முதலிலேயே எண்ணெய் சேர்ப்பதால் எண்ணெய் அடிக்கடி சேர்க்க தேவையில்லை.

ஒட்ஸ் சேர்க்க விரும்பினால் சேர்க்கவும். இல்லையெனில், ஒட்ஸிற்கு பதிலாக கடலைமாவினை கூடுதலாக சேர்த்து கொள்ளவும்.

இதே மாதிரி அவனிலும் செய்யலாம். அவனில் செய்வது என்றால், 400Fயில் 20 – 30 நிமிடங்கள் வேகவைக்கவும். சுவையாக க்ரிஸ்பியாக இருக்கும்.

13 comments:

Priya Suresh said...

Such a delicious and tempting chilli cauliflower, very inviting..

அஸ்மா said...

எண்ணெய் குறைவான டயட் ரெசிபி, அருமை கீதாச்சல்!

Reva said...

romba supera irukku...
Reva

தெய்வசுகந்தி said...

அருமையான ரெசிபி கீதா!!

Raks said...

A must try,do post more recipes like this geetha :)

Kanchana Radhakrishnan said...

super Geetha.

Kurinji said...

superb recipe...
kurinji kathambam
Event : Healthy Recipe Hunt - Aval/Poha/Riceflakes

kurinjikudil

Unknown said...

very healthy and apt for choestrol people

Mahi said...

நல்லா இருக்கு கீதா!

Asiya Omar said...

டயட் காளிப்ளவர் அருமை கீதா,ஹெல்தி ரெசிபி என்றால் உங்க ப்ளாக் தான்.

சசிகுமார் said...

எப்பவும் போல நல்ல டிப்ஸ்

ஆயிஷா said...

ரெசிபி அருமை.

Thenammai Lakshmanan said...

இதை மைக்ரோவேவிலும் செய்யலாம் என நினைக்கிறேன் கீதா..

Related Posts Plugin for WordPress, Blogger...