பூண்டு சட்னி & மஞ்சள் கார்ன்மீல் இட்லி - Garlic Chutney & Yellow Corn Meal Idly - Side Dish for Idly & Dosai


சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         பூண்டு – 20 பல் தோல் நீக்கியது
·         தக்காளி – 1
·         புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
·         காய்ந்த மிளகாய் – 5 – 6
·         உப்பு – தேவையான அளவு

கடைசியில் தாளித்து சேர்க்க :
·         நல்லெண்ணெய் – தேவையான அளவு
·         கடுகு, உளுத்தம்பருப்பு – தாளிக்க
·         கருவேப்பில்லை – 5 இலை
·         பெருங்காயம் – 1/4 தே.கரண்டி

செய்முறை :
·         தக்காளியினை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். கடாயில் 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்தமிளகாயினை வறுத்து எடுத்து கொள்ளவும்.

·         பிறகு தக்காளியினை நன்றாக வதக்கி தனியாக வைக்கவும். கடைசியில் பூண்டினை போட்டு வதக்கி எடுக்கவும்.

·         வதக்கிய பொருட்களை சிறிது நேரம் ஆறவைத்து அத்துடன் புளி + உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும்.

·         தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்த பின் அரைத்த விழுதினை அதில் சேர்த்து 1 நிமிடம் வைக்கவும். சுவையான பூண்டு சட்னி ரெடி.

கவனிக்க :
தக்காளியினை விரும்பாதவர்கள் தக்காளியினை நீக்கி புளியினை அதிகம் சேர்த்து கொள்ளவும்.

நல்லெண்ணெய் சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

இந்த சட்னி 2 – 3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். எண்ணெய் கூடுதலாக சேர்த்தால் குறைந்தது 1 வாரம் வரை நன்றாக இருக்கும்.

மஞ்சள் கார்ன்மீல் இட்லி
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         மஞ்சள் கார்ன்மீல் – 3 கப்
·         உளுத்தம்பருப்பு – 1 கப்
·         வெந்தயம் – 1 தே.கரண்டி

செய்முறை :
·         கார்ன்மீல் + உளுத்தம்பருப்பு +வெந்தயம் தனிதனியாக 2 மணிநேரம் ஊறவைத்து கொள்ளவும்.

·         மிக்ஸியில் போட்டு ஊறவைத்த பொருட்களை இட்லிக்கு அரைப்பது போல அரைத்து எடுக்கவும்.

·         இத்துடன் உப்பு சேர்த்து மாவினை நன்றாக கலக்கி சுமார் 6 – 8 மணி நேரம் புளிக்கவிடவும்.

·         மாவு புளித்தவுடன் இட்லி சுடவும். சுவையான சத்தான மஞ்சள் கார்ன்மீல் இட்லி ரெடி.

கவனிக்க :
கார்ன்மீல் ரவை போல இருந்தால் அரைக்க தேவையில்லை…ஆனால் பெரிய சைஸில் இருந்தால் 1 நிமிடம் அரைத்து கொள்ளவும்.

28 comments:

ஸ்வர்ணரேக்கா said...

பூண்டு சட்னி சூப்பர் கீதா..

Unknown said...

Wounderful combo,idli luks very soft...

ஜெய்லானி said...

அவசரத்துக்கு செய்யும் சட்னி இது ஆனாலும் சூப்பர் டேஸ்ட் :-)

Kurinji said...

Superb healthy combination....

குறிஞ்சி குடில்

THOPPITHOPPI said...

சமையல் டிக்ஷனரியே இங்கத்தான் இருக்கு போல!
அருமை

Priya Suresh said...

Idlyum, chutneyum pakkura pothey pasikuthu..superaa irruku Geetha..

சாருஸ்ரீராஜ் said...

இட்லி சட்னி பார்கும் போதே சாப்புட தோணுது.

GEETHA ACHAL said...

நன்றி ஸ்வர்ணா..

நன்றி ப்ரேமலதா...

நன்றி ஜெய்லானி...ஆமாம் அவசரத்திற்கு அரைத்து கொள்ளலாம்...பூண்டு தோல் நீக்கி ப்ரிட்ஜில் வைத்து விட்டால்...வேலை சீக்கிரம் ஆகிவிடும்....

நன்றி toppi

GEETHA ACHAL said...

நன்றி ப்ரியா..

நன்றி சாரு அக்கா....

Raks said...

Awesome combo Geetha,love it,we too make a similar chutney with garlic and tomato alone...

Anonymous said...

healthy and tasty combination

ஆயிஷா said...

சட்னி சூப்பர்

Akila said...

wow... my mouth is watering here....
Learning-to-cook
Event: Dish Name Starts with E
Regards,

Unknown said...

Attagasamana combo..my mom used to do this chutney.super a irukku

Pushpa said...

Supera irruku Geetha,super combination..

Kanchana Radhakrishnan said...

super Geetha.

Aruna Manikandan said...

superb....
looks healthy and delicious!!!!!!!
Thx. for sharing :)

Jayanthy Kumaran said...

sounds yummy n delicious...:)
Tasty appetite

mothu said...

I made it but color is not that red why? I think you used more than 1 tomato or what?
taste is so good. Family member like it.

Krishnaveni said...

excellent combo, looks great

GEETHA ACHAL said...

நன்றி ராஜி...

நன்றி மகாவிஜய்..

நன்றி ஆயிஷா...

நன்றி அகிலா..

நன்றி சவிதா..

GEETHA ACHAL said...

நன்றி புஷ்பா..

நன்றி கஞ்சனா..

நன்றி அருணா..

நன்றி ஜெய்..

GEETHA ACHAL said...

நன்றி சுமா...கலர் வருவதற்கு காய்ந்த மிளகாய் தான் காரணம்...

படத்தில் பார்க்கும் அளவும் நான் கொடுத்துள்ள அளவிற்கு இரண்டு பங்கு..அதனால் குழப்பம் வேண்டாம்....

காய்ந்த மிளகாயினை விரும்பினால் அதிகம் சேர்த்து பாருங்க..தக்காளியினை அதிகம் சேர்த்தால் சுவையில் மாறுப்படும்...

நன்றி கிருஷ்ணவேனி....

Mahi said...

கீதா, வெற்றிகரமா கார்ன் மீல்-ஐ கண்டுபுடிச்சு வாங்கிவந்து இட்லி செய்துட்டேன்.பூண்டு சட்னியுடன் அருமையாக இருந்தது. நன்றி! :)

Unknown said...

சட்னி அருமை . . .

வனிதா said...

சட்னி அருமை

GEETHA ACHAL said...

நன்றி வாணி..

நன்றி வனிதா..

Jaypon , Canada said...

படிக்கவே சுவையா இருக்கு . கண்டிப்பா செய்யறேன். கார்ன்மீல் இட்லி அருமையான முயற்சி :-)

Related Posts Plugin for WordPress, Blogger...