மைக்ரோவேவ் திரட்டிப்பால் - Microwave Thirattipaal & Snow


இந்த ஸ்வீட் செய்வது மிகவும் ஈஸி….நீங்கள் கட்டாயம் செய்து பார்த்துவிட்டு எப்படி இருக்கின்றது என்று சொல்லுங்க….


இங்கே இந்த வாரம் மட்டும் இரண்டு முறை பெரிய Snow வந்துவிட்டது….நேற்று ஸ்நோவில் அக்‌ஷதா குட்டி எங்க விட்டு backyardயில் விளையாடிய பொழுது எடுத்த சில க்ளிக்…

அவள் செய்த Snow Angel….

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         கண்டன்ஸ்டு மில்க் – 1 டின்
·         நெய் – 2 மேஜை கரண்டி
·         தயிர் – 2 மேஜை கரண்டி
·         ஏலக்காய் – 2 பொடித்தது

செய்முறை :
·         மைக்ரோவேவ் சேப் பவுலில் , கண்டன்ஸ்டு மில்க் + நெய் + தயிர் + ஏலக்காய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

·         மைக்ரோவேவில் 1 நிமிடம் வைக்கவும். திரும்பவும் வெளியில் எடுத்து கலந்து 2 நிமிடங்கள் வைக்கவும்.

·         திரும்பவும் பவுலினை வெளியில் எடுத்து கலந்து மேலும் 2 – 3 நிமிடங்கள் அடிக்கடி கிளறிவிட்டு மைக்ரோவேவில் வைக்கவும்.

·         வெள்ளை கலர் கொஞ்சமாக பழுப்பு நிறம் மாறி தண்ணீர் எல்லாம் வற்றியவுடன், திரட்டிப்பால் ரெடி. இதனை சிறிது நேரம் ஆறவிடவும். சுவையான எளிதில் செய்ய கூடிய திரட்டிப்பால் ரெடி.

கவனிக்க :
·         கண்டிப்பாக பெரிய பவுலில் இதனை செய்யவும். இல்லையெனில் அடிக்கடி பொங்கும் வாய்ப்பு இருக்கின்றது.

·         இனிப்பு அதிகம் விரும்பாதவர்கள் மேலும் 2 மேஜை கரண்டி தயிரினை சேர்த்து கொள்ளவும்.

·         அவரவர் மைக்ரோவேவினை பொருத்து நேரம் மாறுப்படும். அதனால் அடிக்கடி திறந்து கிளறிவிட்டுவது நல்லது.

31 comments:

S.Menaga said...

சூப்பராயிருக்கு..அப்படியே எடுத்து சாப்பிடனும்போல் இருக்கு,படங்களும் சூப்பர்!!

savitha ramesh said...

miga arumai,naanum ippadi than seyven dear

எல் கே said...

எவ்வளவு பனி

Lakshmi said...

சூப்பர் டேஸ்ட். நானும் இப்படித்தான் பண்ணுவேன். நாலு நாழி அடுப்பில் வைத்துக் கிளர வேண்டாம்.

Chitra said...

I usually do with it Ricotta cheese. I will try this one too...

புவனேஸ்வரி ராமநாதன் said...

ஆஹா.. சூப்பரா செய்திருக்கீங்க.

San said...

Wonderful thirattipal,wish i could taste it now.I do it the same way sometimes i try milk powder .Snow is ridiculous .

Pavithra said...

Geetha..this is my fav one and in MW kalakureenga...thanks for sharing.

Reva said...

a very easy recipe ...nicely done...looks delicious...
Reva

மகி said...

திரட்டிப்பால் கேள்விப்பட்டிருக்கேன்..இதுவரை செய்தது இல்லை..ஈஸி மெதடா இருக்கு!

ஸ்னோ-வைப் பார்க்கையில் போன வின்டர் நினைவு வருது எனக்கு! உங்க ஏஞ்சல்,அவங்க செய்த ஸ்னோ ஏஞ்சல் இரண்டுமே அழகா இருக்கு கீதா!

குட்டிகோஸ் பற்றி சொன்னதுக்கு நன்றி!

vanathy said...

Geetha, super recipe.

THOPPITHOPPI said...

இங்க இந்த குளிரையே தாங்க முடியல

எப்புடி

Anonymous said...

PAPA NALLA VILAIYADURA..
GAS STOVE LA PANNA MUDIYATHA???????

Priya said...

Am an addict to this dessert..soo tempting..

angelin said...

YUMMY RECIPE .THANKS FOR SHARING.

Vijisveg Kitchen said...

கீதா பொங்கல் வாழ்த்துக்கள்.

நான் இதே முறையில் அடிக்கடி செய்து குடுப்பேன்.எங்க வீட்டில் கண்டென்ஸ்ட் மில்க் ஸ்டாக் இருந்து கொண்டே இருக்கும். இதில் விதவிதமா ஸ்வீட்ஸ் செய்யலாம்.
அவசர ஸ்விட் & அசத்தல் ஸ்விட் என்று எனக்கு ஒரே பேரும் கிடைத்திருக்கு. எஙக வீட்டில் எல்லோருக்கும் பிடித்த இனிப்பு.

Krishnaveni said...

lovely dessert, cute photos

Mano Saminathan said...

நானும் இது போலத்தான் செய்வேன். நல்ல சமையல் குறிப்பு. புகைப்பட விள‌க்கங்கள் அருமை!

Jaleela Kamal said...

திரட்டிபால் நானும் இப்படி தான் செய்வேன்.

இனிய பொங்க்ல் வாழ்த்துக்கள்

ஸ்னோவா ,கொஞ்சம் குளிரடித்தாலே வெளியே போக முடியல
ஸ்னோ ரொம்ப குளிராதா

ஸாதிகா said...

அக்‌ஷதா நிக்கறதைப்பார்த்தால் எனக்கே பற்கள் நடுங்குகிறதே.பால்கோவா சூப்பர்ப்

GEETHA ACHAL said...

நன்றி மேனகா..

நன்றி சவிதா..

நன்றி கார்த்திக்...ஆமாம் நிறைய ஸ்நேவ்,,,

நன்றி லஷ்மி அம்மா...

GEETHA ACHAL said...

நன்றி சித்ரா...இந்த முறையில் செய்து பாருங்க...ரொம்ப சிம்பிள்..

நன்றி புவனா..

நன்றி san...

நன்றி பவித்ரா..

நன்றி ரேவா..

GEETHA ACHAL said...

நன்றி மகி...கண்டிப்பாக செய்து பாருங்க,,,,ரொம்ப சிம்பிளான ஸ்வீட் நிமிடத்தில் ரெடி.

ஆமாம் மகி அக்‌ஷ்தா குட்டிக்கு ரொம்பவும் பிடித்து இருந்தது...என்ன தான் வருடவருடம் பார்த்தாலும் எப்பொழுதும் மகிழ்ச்சி தான்...

நன்றி வானதி..

நன்றி தொப்பி...

நன்றி மகாவிஜய்...

GEETHA ACHAL said...

நன்றி மகா...ஸ்டாவில் செய்தால் நேரம் எடுக்கும்...நான் ஸ்டிக் கடாயில் செய்யுங்க...நல்லா இருக்கும்..

நன்றி பரியா..

நன்றி ஏஞ்சலின்..

நன்றி விஜி...ஆமாம் விஜி இது எல்லொருக்கும் மிகவும் பிடித்த ஸ்வீட்...

நன்றி கிருஷ்ணவேனி..

GEETHA ACHAL said...

நன்றி மனோ ஆன்டி

நன்றி ஜலிலா அக்கா...ஆமாம் அக்கா இங்கே ரொம்ப குளிர்...இந்தாலும் அப்படியே இருந்து பழகி போச்சு...ஊருக்கு போனால் தான் கஷ்டம்...

நன்றி ஸாதிகா அக்கா..ஆமாம் இங்கே இப்பொழுது பயங்கர குளிர்...

asiya omar said...

அருமையான ரெசிப்பி.
ஸ்நோவில் எனக்கும் விளையாட ஆசை தான்,ஆனால் இங்குள்ள குளிருக்கே ஹீட்டர் இல்லாமல் முடியலை,பார்க்க பஞ்சு மாதிரி எத்தனை அழகு.

தெய்வசுகந்தி said...

ஈசி ரெசிபி! we miss snow. பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

GEETHA ACHAL said...

நன்றி ஆசியா அக்கா...

நன்றி தெய்வசுகந்தி...

sasi said...

thirattu paal was awesome!!!!!!!!

sasi said...

thirattu paal was awesome!!!!!!!!!

Anonymous said...

super
devi

Related Posts Plugin for WordPress, Blogger...