சோயா கட்லட் - Soya Chunks Cutlets


வித்தியசமான சத்தான கட்லட்…நீங்கள் செய்து பார்த்து உங்களுடைய கருத்தினை தெரிவிக்கவும்….
சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         சோயா – 1 பக்கட் (சுமார் 20 – 25 உருண்டைகள்)
         வெங்காயம் – 1
         பச்சைமிளகாய் – 2
·         இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி
·         கொத்தமல்லி, கருவேப்பில்லை – சிறிதளவு
·         எண்ணெய் - சிறிதளவு
சேர்க்க வேண்டிய தூள் வகைகள்:
·         மஞ்சள் தூள் – ¼ தே.கரண்டி
·         தனியா தூள் – ½ தே.கரண்டி
·         மிளகாய் தூள் – ¼ தே.கரண்டி
·         கரம்மசாலா – ¼ தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு
செய்முறை :
·         சோயா உருண்டைகளை கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேகவைத்து கொண்டு சிறிது நேரம் ஆறவைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
          
·         வெங்காயம் + பச்சைமிளகாயினை பொடியாக நறுக்கி கொள்ளவும். இதனை 2 நிமிடங்கள் கடாயில் போட்டு வதக்கி வைக்கவும்.

·         அரைத்த சோயா உருண்டைகள் + வதக்கிய பொருட்கள் + இஞ்சிபூண்டு விழுது + கொத்தமல்லி,கருவேப்பில்லை + தூள் வகைகள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

·         விரும்பிய வடிவத்தில் கட்லட் செய்து கொள்ளவும். நாண்-ஸ்டிக் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கட்லடினை போட்டு வேகவிடவும்.

·         ஒருபக்கம் நன்றாக வெந்தபிறகு திருப்பிபோட்டு மேலும் 2 -3 நிமிடங்கள் வேகவிடவும்.

·         சுவையான சத்தான சோயா கட்லட் ரெடி. இதனை சாதம், கலந்த சாதம், ரசம் , சாம்பார் போன்றவையுடன் சேர்த்து சாப்பிட் சுவையாக இருக்கும்.

25 comments:

புவனேஸ்வரி ராமநாதன் said...

கட்லட் மிக அருமை.

Unknown said...

Healthy cutlet,very unique recipe...Thanks for sharing.

எல் கே said...

try pannitu solren

Kurinji said...

புதுமையா இருக்குதுங்க, பார்த்ததுமே சாப்டனும் போல இருக்குது .......
குறிஞ்சிகுடில்

Saravanakumar said...

கட்லட் அருமை செய்து பார்க்கப்போகிறேன்....

தினேஷ்குமார் said...

முயற்சி செய்து பார்கிறேன் நானும் சமையல் செய்திருக்கேன் வந்து பாருங்க சகோ

Pavithra Elangovan said...

Geetha supera irukku .. I too make this i add very finely chopped mushroom with this as well.

ஆயிஷா said...

புதுமையா இருக்கு.கட்லட் அருமை

Akila said...

Mouth watering recipe dear....

Event: Dish Name Starts with E
Learning-to-cook
Regards,
Akila

Chitra said...

Not a big fan of soya..... But the cutlets look good.

குறையொன்றுமில்லை. said...

ooyaavil ithuvarai katlet seythu paarththathilai. ippa try panren.

Unknown said...

Geetha vukku maru peyar, Healthy woman......Very delicious and healthy cutlet....I have tried ur kfc chicken.it came out really good.thanks for sharing ,if time permits,have a look..

Priya dharshini said...

Yummy recipe,geetha....Happy new year to you...

Anonymous said...

சோயா எனக்கு ரொம்ப பிடிக்கும் செய்து பார்க்கிறேன்

Jayanthy Kumaran said...

wow, irresistable n healthy Geetha..:)
Tasty appetite

dharshini said...

healthy and tasty cutlets geetha...

Priya Suresh said...

Super delicious cutlets, makes me drool..

Angel said...

healthy recipe,idharku bread crumbs serka vendaama geetha.

GEETHA ACHAL said...

நன்றி புவனா..

நன்றி ப்ரேமலதா...

நன்றி கார்த்திக்...

நன்றி குறிஞ்சி...

நன்றி tms...

நன்றி பவித்ரா...மஷ்ரூம் சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்...அடுத்த முறை செய்து பார்க்கிறேன்...

GEETHA ACHAL said...

நன்றி தினேஷ்...

நன்றி ஆயிஷா..

நன்றி அகிலா..

நன்றி சித்ரா..

நன்றி லஷ்மி அம்மா..

GEETHA ACHAL said...

நன்றி சவிதா...KFC சிக்கனை செய்து பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி...

நன்றி ப்ரியா..

நன்றி மகாவிஜய்...

நன்றி ஜெய்...

நன்றி ஏஞ்சலின்...-ப்ரெட் க்ரம்ஸ் சேர்க்க வேண்டியதில்லை...மிகவும் தளர்வாக இருந்தால் விரும்பினால் சேர்த்து கொள்ளுங்க...

சாருஸ்ரீராஜ் said...

நல்லா இருக்கு கீதா செய்து பார்கிறேன்.

Anonymous said...

ஹாய் கீதா...,நலமா...?
உங்களுடைய இந்த குறிப்பு மிகவும் வித்தியாசமாகவும்,பார்க்கவே அழகாகவும் இருக்கு.நான் சோயா வாங்கி என்ன வித்தியாசமாக செய்யலாமுன்னு யோசித்தேன்.இந்த முறையில் நிச்சயம் செய்து பார்த்துட்டு சொல்கிறேன்.

அன்புடன்,அப்சரா.

GEETHA ACHAL said...

நன்றி அப்சரா...நாங்கள் அனைவரும் நலம்...நீங்க எப்படி இருக்கின்றிங்க..

கண்டிப்பாக இந்த செய்முறையில் செய்து பாருங்க...வித்திய்சமாக இருக்கும்...நன்றி

Aparna said...

Geetha, same ingredients, quantity method-la proceed pannen. Cutlet seiya time illaadhadhal puttu maadhiri finish pannen ...super taste !Thankyou !

Related Posts Plugin for WordPress, Blogger...