பல்கர் இட்லி & சிக்கன் சால்னா - Bulgur Idly & Chicken Salna Gravy - Bulgur Indian Recipe / Idly Varieties - Side dish for Idly and Dosa


பல்கர் என்பது கோதுமை ரவை..அப்படி என்றால்,பல்கருக்கும் கோதுமை ரவைக்கும்(Cracked Wheat) என்ன வித்தியாசம் என்று யோசிக்கின்றிங்களா

கோதுமையினை ரவையாக அப்படியே உடைத்தால் அது  கோதுமை ரவை…ஆனால் கோதுமையினை, வேகவைத்து பின்னர் சிறிது நேரம் அதனை காயவைத்து பின், ரவையாக உடைத்தால் அது தான் பல்கர்..(அதாவது புழுங்கல் அரிசிக்கும் பச்சரிக்கும் இருக்கும் வித்தியாசம் போல)


கோதுமை ரவை போல் இல்லாமல், பல்கர் வேக மிகவும் குறைந்த அளவு நேரமே எடுக்கும். பல்கரில் அதிக அளவு நார்சத்து- Dietary Fiber, Maganese இருக்கின்றது…இதில் குறைந்த அளவு கொழுப்பு சத்து இருப்பதால்…. அனவைருக்கும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.


பல்கரில் , பிரவுன் ரைஸியை (Brown Rice) விட அதிக அளவு நார்சத்து இருக்கின்றது, கலோரியும் குறைவாக இருக்கின்றது..


ஊறவைக்க தேவைப்படும் நேரம் : 2 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள் (மாவு புளித்தபிறகு)
தேவையான பொருட்கள் :
         பல்கர் – 3 கப்
·         உளுத்தம்பருப்பு – 1 கப்
·         வெந்தயம் – 1 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
·         உளுத்தம்பருப்பு + வெந்தயம் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவைத்து கொண்டு மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும்.

·         அரைத்த மாவு + பல்கர் + உப்பு + தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொண்டு 4 – 5 மணி நேரம் புளிக்கவிடவும்.

·         மாவு புளித்தவுடன், இட்லி தட்டில் ஊற்றி இட்லிகளை வேகவிடவும்.

·         சுவையான சத்தான பல்கர் இட்லி ரெடி. சட்னி, சாம்பார், க்ரேவிகளுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

கவனிக்க :
பல்கர் நிறைய தண்ணீர் இழுத்து கொள்ளும் என்பதால் தண்ணீரின் அளவில் கவனம் தேவை…இட்லிக்கு கரைக்கும் பொழுது பார்த்து சேர்க்கவும்.

Grinderயில் மாவு அரைத்து செய்தால் 4 கப் பல்கருக்கு 1 கப் உளுத்தம்பருப்பு என்று சேர்த்து கொள்ளவும்.

சிக்கன் சல்னா

திருமதி. ஆசியா உமரின் குறிப்பில் இருந்து சிறிது மாறுதலுடன் நான் செய்த சிக்கன் சல்னா..இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு சூப்பர்ப் காம்பினேஷன்…நீங்களும் செய்து பார்த்து கருத்தினை தெரிவிக்கவும்….

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         சிக்கன் – 1/4 கிலோ

இஞ்சி பூண்டு பேஸ்ட் :
·         பூண்டு – 6 பல்
·         இஞ்சி – சிறிய துண்டு
·         பட்டை, கிராம்பு, ஏலக்காய் - 1

நறுக்கி கொள்ள :
·         வெங்காயம் – 1
·         தக்காளி – 2
·         பச்சைமிளகாய் – 1
·         புதினா, கொத்தமல்லி – 1 கைபிடி

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மிளகாய் தூள் – 1 தே. கரண்டி
·         தனியா தூள் – 1 தே.கரண்டி
·         சீரகக்தூள் – 1 தே.கரண்டி
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

மைய அரைத்து கொள்ள :
·         தேங்காய் – 2 துண்டு
·         முந்திரி பருப்பு – 5

முதலில் தாளிக்க :
·         எண்ணெய் – சிறிதளவு
·         சோம்புதூள் – 1 தே.கரண்டி
·         கருவேப்பில்லை – 5 இலைசெய்முறை :

·        வெங்காயம், தக்களி வெட்டி கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து கொள்ளவும்.

·         கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்புதூள் + கருவேப்பில்லை தாளித்த பிறகு, வெங்காயம் +இஞ்சிபூண்டு பேஸ்ட் + தக்காளி, பச்சைமிளகாய் +  புதினா , கொத்தமல்லி என்று ஒன்றின்பின் ஒன்றாக போட்டு வதக்கி கொள்ளவும்.

·         இத்துடன் சிக்கன் + தூள் வகைகள் + தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.

·         நன்றாக கொதிவந்தவுடன், தேங்காய் விழுதினை சேர்த்து மேலும் நன்றாக வேகவிடவும்.

·         சுவையான எளிதில் செய்ய கூடிய சல்னா ரெடி. 

ஒட்ஸ் மசாலா சுண்டல் - Oats Masala Sundal


நாம் நிறைய விதமான சுண்டல் சாப்பிட்டு இருப்போம்….கொண்டைக்கடலை சுண்டல், வேர்க்கடலை சுண்டல், பட்டாணி சுண்டல், கடலைப்பருப்பு சுண்டல் என்று பல வகையில் சாப்பிட்டு இருப்போம்…
அதே மாதிரி இந்த சுண்டலும் சத்தானது….நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         ஒட்ஸ் – 1 கப்
·         உப்பு – சிறிதளவு
தாளித்து சேர்க்க :
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         கடுகு, உளுத்தம்பருப்பு – தாளிக்க
·         சீரகம்தூள் – 1/2 தே.கரண்டி
·         தேங்காய் துறுவல் – 1 தே.கரண்டி

செய்முறை :
·         ஒட்ஸினை வறுத்து நன்றாக பொடித்து கொள்ளவும். தாளித்து சேர்க்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கொள்ளவும். பொடித்த ஒட்ஸ் + தாளித்த பொருட்கள் + உப்பு + தேங்காய் துறுவல் சேர்த்து கலந்து கொள்ளவும்.


·         இத்துடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.


·         இந்த மாவினை சிறிய சிறிய அளவில் அதாவது ஊறவைத்த கொண்டைக்கடலை அளவில் உருட்டி கொள்ளவும்.


·         உருட்டி வைத்துள்ள ஒட்ஸ் சுண்டலினை இட்லி தட்டில் வைத்து 10 நிமிடங்கள் வேகவிடவும்.


·         சுவையான சத்தான மாலை நேர ஸ்நாக் ரெடி…


கவனிக்க:
ஒட்ஸினை மிக்ஸியில் பொடித்து அதனை நன்றாக சலித்து கொள்ளவும். நன்றாக பொடித்த  மாவில் பிசைந்தால் உருண்டைகள் உருட்ட எளிதில் வரும்.

மீதம் இருக்கும் சலித்த கொரகொரமாவினை இட்லி / தோசைக்கு பயன்படுத்து கொள்ளவும்.

இந்த உருண்டைகளை உருட்ட 10  நிமிடங்கள் ஆகும். விரும்பினால் இத்துடன் தேங்காய் துறுவலுக்கு பதிலாக தண்ணீர் அளவினை குறைத்து தேங்காய் பால் சேர்த்து கொள்ளலாம்.

டோஃபு பிங்கர்ஸ் - Tofu Fingers


டோஃபு பிங்கர்ஸினை மாலை நேர ஸ்நாகாக சாப்பிடலாம்…அனைவருக்கும் மிகவும் நல்ல சத்தான ஸ்நாக்…

ஊறவைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         டோஃபு – 1 Packet
·         எலுமிச்சை சாறு – 2 மேஜை கரண்டி
·         எண்ணெய் – 2 மேஜை கரண்டி

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·         தனியா தூள் – 1/2 தே.கரண்டி
·         மிளகாய் தூள் - 1/2 தே.கரண்டி
·         சீரகதூள் - 1/2 தே.கரண்டி
·         சோம்பு தூள் - 1/2 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
டோஃபுவினை நீளமான துண்டுகளாக வெட்டி கொண்டு அதில் தூள் வகைகள் + எண்ணெய் + எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

நாண் – ஸ்டிக் பனில் ஊறவைத்த டோஃபுவினை அப்படியே அதில் சேர்த்து ஒன்றின்மீது ஒன்று படாமல் வறுத்து எடுக்கவும்.

சுவையான சத்தான டோஃபு பிங்கர்ஸ் ரெடி. இதனை சாஸுடன் சாப்பிட நல்லா இருக்கும்.

குறிப்பு :
இதனை ஊறவைக்கும் பொழுதே எண்ணெய் சேர்ப்பதால் தனியாக எண்ணெய் சேர்க்க தேவையில்லை.

ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு டோஃபுவினை திருப்பிவிடவும்.

டோஃபுவினை எவ்வளவு நேரம் மசாலா கலந்து ஊறவைக்கின்றோம் அவ்வளவு சுவையாக இருக்கும்.

25 வகையான சத்தான டயட் தோசை / அடை - 25 Varieties of Healthy Diet Dosai / Adai

என்னுடைய ப்ளாகில் நான் இதுவரை சமைத்த தோசை / அடை வகையினை ஒரு தொகுப்பாக பதிவு போட்டு இருக்கின்றேன்….இதில் 25 வகையான சத்தான தோசை / அடை இருக்கின்றது….நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்….

1. பார்லி மாவு தோசை – Barley Flour Dosai – எளிதில் செய்ய கூடிய தோசை….பார்லிமாவு + தண்ணீர் + உப்பு சேர்த்து 5 நிமிடங்களில் தோசை சுடலாம்…சுவையான சத்தான தோசை…காரசட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.2. கோதுமை ரவா பூசணிக்காய் அடை – Wheat Rava Pumpkin Adai – பூசணிக்காயில் அதிக அளவு நார்சத்து மற்றும் குறைந்த அளவு calories இருக்கின்றது…இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் உடலில் இருக்கும் சக்கரை அளவு குறைக்கப்படுகின்றது…அதுவும் கோதுமை ரவையுடன் சேர்த்து செய்தால் கூடுதல் நன்மை கண்டிப்பாக இருக்கும்….

3. பெசரட் –Pesaruttu – பெசரட் என்பது பச்சைபயிறில் செய்ய கூடிய அடை…ஆந்திரா மாநிலத்தில் இந்த அடை மிகவும் பிரபலம்… பச்சைபயிறினை சாப்பிடுவது உடலிற்கு நல்லது…நிறைய விட்டமின்ஸ் இதில் இருக்கின்றது…

4. கொள்ளு கார அடை – Kollu Kara Adai – உடல் எடையினை குறைக்க விரும்புவோர் வாரத்திற்கு 2 – 3 தடவையாவது கொள்ளினை உணவில் சேர்த்து கொண்டால் நிச்சயம் உடல் எடை குறைய வாய்ப்பு இருக்கின்றது…அதிலும் இது மாதிரி அடைகளாக சாப்பிடும் பொழுது சூப்பராக சுவையாக இருக்கும்…ட்ரை செய்து பாருங்க…

5. ஒட்ஸ் தவலை அடை – Oats Thavalai Adai – ஒட்ஸுடன் பலவகை பருப்புகளையும் சேர்த்து செய்வதால் சத்துகள் அதிகல் உள்ள அடை…

6. பார்லி கொள்ளு அடை – Barley Diet Adai – பார்லியினை சாப்பிடுவதால் உடலில் உள்ள அளவிற்கு மிஞ்சிய கொழுப்புகளினை குறைக்கின்றது…கண்டிப்பாக கொல்ஸ்டிரால் அதிகம் உள்ளவர்கள் இதனை சாப்பிடுவது நல்லது…..இந்த கொள்ளுவினை பொருத்தவரை அது “உணவே மருந்து, மருந்தே உணவு” என்று பொருந்தும்…

7. சென்னா பாலக் தோசை – Chana Palak Dosai – பாலக் கீரையில் அதிக அளவு விட்டமின்ஸ் மற்றும் மின்ரல்ஸ் இருக்கின்றது…சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண்டிப்பாக தினமும் ஒரு கீரையினை உணவில் சேர்த்து கொள்வது அவசியம்.
இதில் கொண்டைக்கடலை சேர்த்து கொள்வதால் கூடுதலாக புரோட்டின் கிடைக்கின்றது.

8. பிளைன் ஒட்ஸ் தோசை – Plain Oats Dosaiஎளிதில் செய்ய கூடிய தோசை…இட்லி மாவு இல்லாத சமயத்தில் எளிதில் செய்து விடலாம்…சத்துகள் நிரம்பிய சத்தான தோசை…

9. வெள்ளை பட்டாணி தோசை – White Peas Dosai – வெள்ளை பட்டாணி என்றவுடன் எல்லோருக்கும் பீச் சுண்டல் தான் ஞாபகம் வரும்..இந்த பட்டாணியில் முக்கியமாக Soluble Fiber இருப்பதால் கண்டிப்பாக 2 வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிடுவது மிகவும் நல்லது.

10. பார்லி கோதுமைரவை தோசை – Barley WheatRava Dosai – பார்லியினை கோதுமைரவையுடன் சேர்த்து செய்ய கூடிய தோசை…இதில் அதிகளவு தயிரினை சேர்க்காமல் செய்து இருக்கின்றேன்…தயிரினை அப்படியே சாப்பிடுவது தான் நல்லது..எவ்வளவு வேண்டுமானலும் அப்படியே சாப்பிடலாம்…ஆனால் சமையலில் அதிகம் சேர்க்காமல் இருப்பது நல்லது.

11. ஒட்ஸ் அடை – Oats Adai – ஒட்ஸ் என்றவுடன் டயட்டில் இருப்பவர்கள் சாப்பிடுவது என்று நினைத்துவிடாமல் ஒருமுறை இந்த ஒட்ஸ் அடையினையும் ட்ரை செய்து பாருங்க…அப்பறம் என்ன டயடிங்க தானாக வரும்…அவ்வளவு சூப்பராக இருக்கும் இந்த அடை…

12. பிளைன் பச்சைபயிறு தோசை – Plain MoongDal Dosai – பச்சைப்பயிறினை ஊறவைத்து அரைத்து உடனே செய்ய கூடிய தோசை…பச்சைப்பயிறினை சாப்பிடுவது உடலிற்கு நல்லது…இதற்கு காரசட்னி மிகவும் பொருத்தமாக இருக்கும்.

13. ஒட்ஸ் சுரைக்காய் தோசை – Oats Surakkai Dosai – சுரைக்காயினை அதிகளவு நார்சத்து இருக்கின்றது..…இந்த காயில் உள்ள தண்ணீரினை குடித்தால் Ulcer குணம் அடையும்…இந்த தோசையினை Ulcer உள்ளவர்கள் காலை நேர சிற்றுண்டியாக சாப்பிடுவது மிகவும் நல்லது.

14. பார்லி பருப்பு அடை – Barley Paruppu Adai – பார்லியினை அனைத்து விதமான பருப்புகளுடன் செய்த அடை…வெருமனே அடையாக சாப்பிடாமல் பார்லியுடன் இதனுடன் சேர்ப்பதால் கூடுதல் நார்சத்து கிடைக்கின்றது….

15. 16 பின்ஸ் தக்காளி அடை – 16 Beans Tomato Adai – இந்த அடையில் 16 வகையான பீன்ஸ் இருக்கின்றது….பிண்டோ பீன்ஸ்,கொண்டைக்கடலை, ராஜ்மா,கருப்பு கண் கொண்டைக்கடலை, பெரிய லீமாபீன்ஸ், குட்டி லீமா பீன்ஸ்,பார்லி, கொள்ளு, பிங்க் பீன்ஸ்,சிவப்பு பீன்ஸ், முழு பச்சைபட்டாணி, வெள்ளை பட்டாணி, உடைத்த பச்சை பட்டணி, சின்ன சிவப்பு பட்டாணி, சோயா பீன்ஸ் என்று 16 வகையான பீன்ஸ் வகைகள் சேர்த்து செய்யும் சத்தான அடை…

16. அழகர் கோவில் தோசை – Azhagar Kovil Dosai – அழகர் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் சத்துகள் நிரம்பிய தோசை இது…கருப்பு உளுத்தம்பருப்பில் இந்த தோசையினை செய்கின்றனர்…

17. ஒட்ஸ் ஆனியன் இட்லிப்பொடி தோசை – Oats Onion Idly Podi Dosai – இந்த தோசையில் வெங்காயம் + இட்லிபொடி சேர்ப்பதால் சட்னி எதுவும் தேவையில்லை…சிம்பிளான தோசை மாலை நேர ஸ்நாகாக எளிதில் ரெடி…

18. கொண்டைக்கடலை தோசை – Chana Dosai – இதில் PolyUnsaturated Fat இருக்கின்றது….வளரும் குழந்தைகளுக்கு கொண்டைக்கடலை மிகவும் நல்லது….நார்சத்துகள் நிரம்பிய தோசை…

19. கேழ்வரகு பார்லி அடை – Ragi Barley Adai – கேழ்வரகு மாவில் முருங்கைகீரை சேர்த்து அடை செய்வாங்க மிகவும் அருமையாக இருக்கும்…கீரையினை சேர்ப்பதால் நார்சத்து கிடைக்கின்றது…கீரை கிடைக்காத சமயத்தில் இப்படி எதாவது ஒரு தானியத்தினை சேர்த்து கொள்வது நல்லது….

20. அவகோடா பிரவுன் ரைஸ் தோசை - Avocoda Brown Rice Dosai – அவகோடாவில் வாழைப்பதில் இருக்கும் Potassium அளவினை விட அதிகம் இருக்கின்றது..அவகோடா உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பினை குறைத்து நல்ல கொழுப்பினை உயர்த்துகின்றது….

21. கார்ன்மீல் தோசை – CornMeal Dosai – கார்ன்மீலில் நிறைய சத்துகள் இருக்கின்றது….எப்பொழுதும் கடைசியில் இருக்கும் இட்லிமாவில் ரவையினை சேர்த்து செய்யமால இப்படி மாறுதலாக கார்ன்மீலினை இட்லிமாவுடன் சேர்த்து செய்த சத்தான தோசை….

22. பார்லி பிரவுன் ரைஸ் தோசை – Barley Brown Rice Dosai – பிரவுன் ரைஸினை சாப்பிடுவது மிகவும் நல்லது…நெல்லின் மேல் உமி நீக்கிவருவது தான் பிரவுன் ரைஸ்..இதனை கைக்குத்தல் அரிசி என்று சொல்லாம்….இந்த அரிசியினை சாப்பிடுவதால் கொலஸ்டிராலினை குறைக்க உதவுகின்றது…

23. ஒட்ஸ் கோதுமைமாவு தோசை – Oats Wheatflour Dosai – கோதுமைமாவும் ஒன்றும்பாதியுமாக பொடித்த ஒட்ஸினை சேர்த்து செய்யும் தோசை…ஒட்ஸினை நன்றாக பொடிக்காமல் இப்படி சேர்ப்பதால் மிகவும் crunchyஆக இருக்கும் சத்தான தோசை

24. கினோவா தோசை- Quinao Dosai – கினோவாவில் அதிக அளவு மினரல்ஸ்,புரோட்டின் மற்றும் நார்சத்து இருக்கின்றது…ஒரு நாளைக்கு தேவையான புரோட்டின் இதில் 1/2 கப்பில் இருக்கின்றது….இதனை திணை என்று தமிழில் குறிப்பிடுவாங்க…

25. பார்லி தோசை – Barley Dosai – பார்லியினை ஊறவைத்து இட்லி/தோசைக்கு அரைப்பது போல அரைத்துபின் அதனை புளிக்க வைத்து செய்யும் தோசை இது….மாவு நன்றாக புளித்தால் தோசை மெல்லியதாக நன்றாக வரும்….தயவு செய்து யாரும் இதனை காப்பி அடித்த மற்ற Blog அல்லது webயிலோ போட வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.......

பரங்கிப்பேட்டை சிக்கன் பிரியாணி - Parankipettai Chicken Biryaniபொதுவாக அனைவருமே ஒரே மாதிரி செய்முறையில் தான் பிரியாணி செய்வோம்…ஆனால் ஒன்றிரண்டு பொருட்களின் அளவினை கூட்டி ஒவ்வொரு பிரியாணியிலும் அதனுடைய சுவையில் வித்தியாசம் காணுகிறேன்…திருமதி.ஆசியா அவர்கள் செய்த இந்த பரங்கிப்பேட்டை பிரியாணி மிகவும் அருமையாக இருந்தது….

அதே மாதிரி தான் இந்த பிரியாணியிலும்…இதனுடைய ஸ்பெஷலிடியே இதில் சேர்க்கப்படும் மசாலா தான்….வெள்ளை மிளகு,சீரகம்,சோம்பு,கசகசா மற்றும் பட்டை,கிராம்பு,ஏலக்காய் சேர்த்து பொடித்து கொள்வது தான்…

இதில் வெள்ளை மிளகுறிக்கு பதிலாக வெள்ளைமிளகு தூள் கூட உபயோகிக்கலாம்…ஆனால் அது எல்லாம் இல்லை என்றாலும் கவலை இல்லை…கருப்பு மிளகினையும் பயன்படுத்து கொள்ளுங்க…ஆனால் வெள்ளை மிளகு useசெய்தால் டேஸ்ட் இன்னும் கூடுதலாக இருக்கும்.

அதே மாதிரி இந்த பிரியாணிக்கு இஞ்சியின் அளவினை விட பூண்டு அதிகமாக இருக்க வேண்டும்….

இந்த பிரியாணி மிகவும் சுவையாகவும் மனமாகவும் இருக்கும்…நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 – 40 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         சிக்கன் – 1/4 கிலோ
·         பஸ்மதி அரிசி – 2 கப்

அரிந்து கொள்ள :
·         வெங்காய்ம் – 2
·         தக்காளி – 2
·         கொத்தமல்லி, கருவேப்பில்லை – 1 கைபிடி
·         பச்சை மிளகாய் – 1

சிக்கனுடன் சேர்த்து ஊறவைக்க :
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
·         தனியா தூள் – 1/2 தே.கரண்டி
   தயிர் - 1 கப்
·         உப்பு – தேவையான அளவு

இஞ்சிப்பூண்டு பேஸ்ட் :
·         பூண்டு – 5 – 6 பெரிய பல்
·         இஞ்சி – 1 துண்டு

மைய அரைத்து கொள்ள :
·         மிளகு – 1 தே.கரண்டி
·         கசகசா – 1 தே.கரண்டி
·         சீரகம் – 1 தே.கரண்டி
·         சோம்பு – 2 தே.கரண்டி
·         பட்டை – 1
·         ஏலக்காய் – 3
·         கிராம்பு – 3

முதலில் தாளிக்க :
·         எண்ணெய் ,நெய் – தேவையான அளவு
·         பட்டை, பிரியாணி இலை,கிராம்பு,ஏலக்காய் – தாளிக்க

செய்முறை :
·         மைய அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

·         சிக்கனை சுத்தம் செய்து ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களில் ஊறவைத்து கொள்ளவும். இஞ்சி பூண்டு பேஸ்டினை அரைத்து வைக்கவும்.

·         வெங்காயம் + தக்காளியினை நீட்டாக அரிந்து கொள்ளவும். கொத்தமல்லி, புதினாவினை வெட்டி வைகக்வும்.

·         பாத்திரத்தில் எண்ணெய் + 1 மேஜை கரண்டி நெய் ஊற்றி முதலில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்த பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

·         வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, புதினா கொத்தமல்லி என்று ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி கொள்ளவும்.

·         பிறகு அரைத்து வைத்து இருக்கும் மசாலாவினை இதில் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

·         இத்துடன் ஊறவைத்துள்ள சிக்கனை சேர்த்து கிளறி வேகவிடவும்.

·         சிக்கன் 3/4 வெந்தவுடன் அரிசியினை போட்டு தேவையான அளவு தண்ணீர்  உப்பு சேர்த்து வேகவிடவும்.

·         பிரியாணி ரெடியானதும் அதன் மீது 1 மேஜை கரண்டி நெய் + எலுமிச்சை சாறு பிழிந்து கிளறிவிடவும். சுவையான பிரியாணி ரெடி…இதனை சிக்கன் கிரேவி, முட்டை, தயிர் பச்சடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


குறிப்பு :
விரும்பினால் அரிசியினை அப்படியே இதில் சேர்த்து வேகவைக்காமல் 3/4 பதம் வேகவைத்து பிறகு இதில் சேர்த்து தம் முறையில் சமைக்கலாம்.

மசாலா பொடியினை Dry Roast செய்து பொடித்து வைத்து கொண்டால் விரும்பிய பொழுது சிக்கன், மட்டன் க்ரேவிகள் செய்யும் பொழுது கூட செய்யலாம்.

1 கப் அரிசிக்கு 1 மேஜை கரண்டி நெய் சேர்த்து கொண்டால் போதும்…..

கண்டிப்பாக இஞ்சியின் அளவினைவிட பூண்டு அதிகம் சேர்த்து கொள்ளவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...