25 வகையான சத்தான டயட் தோசை / அடை - 25 Varieties of Healthy Diet Dosai / Adai

என்னுடைய ப்ளாகில் நான் இதுவரை சமைத்த தோசை / அடை வகையினை ஒரு தொகுப்பாக பதிவு போட்டு இருக்கின்றேன்….இதில் 25 வகையான சத்தான தோசை / அடை இருக்கின்றது….நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்….

1. பார்லி மாவு தோசை – Barley Flour Dosai – எளிதில் செய்ய கூடிய தோசை….பார்லிமாவு + தண்ணீர் + உப்பு சேர்த்து 5 நிமிடங்களில் தோசை சுடலாம்…சுவையான சத்தான தோசை…காரசட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.2. கோதுமை ரவா பூசணிக்காய் அடை – Wheat Rava Pumpkin Adai – பூசணிக்காயில் அதிக அளவு நார்சத்து மற்றும் குறைந்த அளவு calories இருக்கின்றது…இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் உடலில் இருக்கும் சக்கரை அளவு குறைக்கப்படுகின்றது…அதுவும் கோதுமை ரவையுடன் சேர்த்து செய்தால் கூடுதல் நன்மை கண்டிப்பாக இருக்கும்….

3. பெசரட் –Pesaruttu – பெசரட் என்பது பச்சைபயிறில் செய்ய கூடிய அடை…ஆந்திரா மாநிலத்தில் இந்த அடை மிகவும் பிரபலம்… பச்சைபயிறினை சாப்பிடுவது உடலிற்கு நல்லது…நிறைய விட்டமின்ஸ் இதில் இருக்கின்றது…

4. கொள்ளு கார அடை – Kollu Kara Adai – உடல் எடையினை குறைக்க விரும்புவோர் வாரத்திற்கு 2 – 3 தடவையாவது கொள்ளினை உணவில் சேர்த்து கொண்டால் நிச்சயம் உடல் எடை குறைய வாய்ப்பு இருக்கின்றது…அதிலும் இது மாதிரி அடைகளாக சாப்பிடும் பொழுது சூப்பராக சுவையாக இருக்கும்…ட்ரை செய்து பாருங்க…

5. ஒட்ஸ் தவலை அடை – Oats Thavalai Adai – ஒட்ஸுடன் பலவகை பருப்புகளையும் சேர்த்து செய்வதால் சத்துகள் அதிகல் உள்ள அடை…

6. பார்லி கொள்ளு அடை – Barley Diet Adai – பார்லியினை சாப்பிடுவதால் உடலில் உள்ள அளவிற்கு மிஞ்சிய கொழுப்புகளினை குறைக்கின்றது…கண்டிப்பாக கொல்ஸ்டிரால் அதிகம் உள்ளவர்கள் இதனை சாப்பிடுவது நல்லது…..இந்த கொள்ளுவினை பொருத்தவரை அது “உணவே மருந்து, மருந்தே உணவு” என்று பொருந்தும்…

7. சென்னா பாலக் தோசை – Chana Palak Dosai – பாலக் கீரையில் அதிக அளவு விட்டமின்ஸ் மற்றும் மின்ரல்ஸ் இருக்கின்றது…சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண்டிப்பாக தினமும் ஒரு கீரையினை உணவில் சேர்த்து கொள்வது அவசியம்.
இதில் கொண்டைக்கடலை சேர்த்து கொள்வதால் கூடுதலாக புரோட்டின் கிடைக்கின்றது.

8. பிளைன் ஒட்ஸ் தோசை – Plain Oats Dosaiஎளிதில் செய்ய கூடிய தோசை…இட்லி மாவு இல்லாத சமயத்தில் எளிதில் செய்து விடலாம்…சத்துகள் நிரம்பிய சத்தான தோசை…

9. வெள்ளை பட்டாணி தோசை – White Peas Dosai – வெள்ளை பட்டாணி என்றவுடன் எல்லோருக்கும் பீச் சுண்டல் தான் ஞாபகம் வரும்..இந்த பட்டாணியில் முக்கியமாக Soluble Fiber இருப்பதால் கண்டிப்பாக 2 வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிடுவது மிகவும் நல்லது.

10. பார்லி கோதுமைரவை தோசை – Barley WheatRava Dosai – பார்லியினை கோதுமைரவையுடன் சேர்த்து செய்ய கூடிய தோசை…இதில் அதிகளவு தயிரினை சேர்க்காமல் செய்து இருக்கின்றேன்…தயிரினை அப்படியே சாப்பிடுவது தான் நல்லது..எவ்வளவு வேண்டுமானலும் அப்படியே சாப்பிடலாம்…ஆனால் சமையலில் அதிகம் சேர்க்காமல் இருப்பது நல்லது.

11. ஒட்ஸ் அடை – Oats Adai – ஒட்ஸ் என்றவுடன் டயட்டில் இருப்பவர்கள் சாப்பிடுவது என்று நினைத்துவிடாமல் ஒருமுறை இந்த ஒட்ஸ் அடையினையும் ட்ரை செய்து பாருங்க…அப்பறம் என்ன டயடிங்க தானாக வரும்…அவ்வளவு சூப்பராக இருக்கும் இந்த அடை…

12. பிளைன் பச்சைபயிறு தோசை – Plain MoongDal Dosai – பச்சைப்பயிறினை ஊறவைத்து அரைத்து உடனே செய்ய கூடிய தோசை…பச்சைப்பயிறினை சாப்பிடுவது உடலிற்கு நல்லது…இதற்கு காரசட்னி மிகவும் பொருத்தமாக இருக்கும்.

13. ஒட்ஸ் சுரைக்காய் தோசை – Oats Surakkai Dosai – சுரைக்காயினை அதிகளவு நார்சத்து இருக்கின்றது..…இந்த காயில் உள்ள தண்ணீரினை குடித்தால் Ulcer குணம் அடையும்…இந்த தோசையினை Ulcer உள்ளவர்கள் காலை நேர சிற்றுண்டியாக சாப்பிடுவது மிகவும் நல்லது.

14. பார்லி பருப்பு அடை – Barley Paruppu Adai – பார்லியினை அனைத்து விதமான பருப்புகளுடன் செய்த அடை…வெருமனே அடையாக சாப்பிடாமல் பார்லியுடன் இதனுடன் சேர்ப்பதால் கூடுதல் நார்சத்து கிடைக்கின்றது….

15. 16 பின்ஸ் தக்காளி அடை – 16 Beans Tomato Adai – இந்த அடையில் 16 வகையான பீன்ஸ் இருக்கின்றது….பிண்டோ பீன்ஸ்,கொண்டைக்கடலை, ராஜ்மா,கருப்பு கண் கொண்டைக்கடலை, பெரிய லீமாபீன்ஸ், குட்டி லீமா பீன்ஸ்,பார்லி, கொள்ளு, பிங்க் பீன்ஸ்,சிவப்பு பீன்ஸ், முழு பச்சைபட்டாணி, வெள்ளை பட்டாணி, உடைத்த பச்சை பட்டணி, சின்ன சிவப்பு பட்டாணி, சோயா பீன்ஸ் என்று 16 வகையான பீன்ஸ் வகைகள் சேர்த்து செய்யும் சத்தான அடை…

16. அழகர் கோவில் தோசை – Azhagar Kovil Dosai – அழகர் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் சத்துகள் நிரம்பிய தோசை இது…கருப்பு உளுத்தம்பருப்பில் இந்த தோசையினை செய்கின்றனர்…

17. ஒட்ஸ் ஆனியன் இட்லிப்பொடி தோசை – Oats Onion Idly Podi Dosai – இந்த தோசையில் வெங்காயம் + இட்லிபொடி சேர்ப்பதால் சட்னி எதுவும் தேவையில்லை…சிம்பிளான தோசை மாலை நேர ஸ்நாகாக எளிதில் ரெடி…

18. கொண்டைக்கடலை தோசை – Chana Dosai – இதில் PolyUnsaturated Fat இருக்கின்றது….வளரும் குழந்தைகளுக்கு கொண்டைக்கடலை மிகவும் நல்லது….நார்சத்துகள் நிரம்பிய தோசை…

19. கேழ்வரகு பார்லி அடை – Ragi Barley Adai – கேழ்வரகு மாவில் முருங்கைகீரை சேர்த்து அடை செய்வாங்க மிகவும் அருமையாக இருக்கும்…கீரையினை சேர்ப்பதால் நார்சத்து கிடைக்கின்றது…கீரை கிடைக்காத சமயத்தில் இப்படி எதாவது ஒரு தானியத்தினை சேர்த்து கொள்வது நல்லது….

20. அவகோடா பிரவுன் ரைஸ் தோசை - Avocoda Brown Rice Dosai – அவகோடாவில் வாழைப்பதில் இருக்கும் Potassium அளவினை விட அதிகம் இருக்கின்றது..அவகோடா உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பினை குறைத்து நல்ல கொழுப்பினை உயர்த்துகின்றது….

21. கார்ன்மீல் தோசை – CornMeal Dosai – கார்ன்மீலில் நிறைய சத்துகள் இருக்கின்றது….எப்பொழுதும் கடைசியில் இருக்கும் இட்லிமாவில் ரவையினை சேர்த்து செய்யமால இப்படி மாறுதலாக கார்ன்மீலினை இட்லிமாவுடன் சேர்த்து செய்த சத்தான தோசை….

22. பார்லி பிரவுன் ரைஸ் தோசை – Barley Brown Rice Dosai – பிரவுன் ரைஸினை சாப்பிடுவது மிகவும் நல்லது…நெல்லின் மேல் உமி நீக்கிவருவது தான் பிரவுன் ரைஸ்..இதனை கைக்குத்தல் அரிசி என்று சொல்லாம்….இந்த அரிசியினை சாப்பிடுவதால் கொலஸ்டிராலினை குறைக்க உதவுகின்றது…

23. ஒட்ஸ் கோதுமைமாவு தோசை – Oats Wheatflour Dosai – கோதுமைமாவும் ஒன்றும்பாதியுமாக பொடித்த ஒட்ஸினை சேர்த்து செய்யும் தோசை…ஒட்ஸினை நன்றாக பொடிக்காமல் இப்படி சேர்ப்பதால் மிகவும் crunchyஆக இருக்கும் சத்தான தோசை

24. கினோவா தோசை- Quinao Dosai – கினோவாவில் அதிக அளவு மினரல்ஸ்,புரோட்டின் மற்றும் நார்சத்து இருக்கின்றது…ஒரு நாளைக்கு தேவையான புரோட்டின் இதில் 1/2 கப்பில் இருக்கின்றது….இதனை திணை என்று தமிழில் குறிப்பிடுவாங்க…

25. பார்லி தோசை – Barley Dosai – பார்லியினை ஊறவைத்து இட்லி/தோசைக்கு அரைப்பது போல அரைத்துபின் அதனை புளிக்க வைத்து செய்யும் தோசை இது….மாவு நன்றாக புளித்தால் தோசை மெல்லியதாக நன்றாக வரும்….தயவு செய்து யாரும் இதனை காப்பி அடித்த மற்ற Blog அல்லது webயிலோ போட வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.......

45 comments:

vanathy said...

சூப்பர் ஐடியா, கீதா. எல்லாமே ஹெல்தியான தோசைகள்.

Lifewithspices said...

Dosa cafe arambikkalaam neenga ..asathal ideas..

பொன் மாலை பொழுது said...

அம்மா தாயே......மவுசை உருட்ட உருட்ட வித விதமாக தோசைகள் வருகிறதே! இதனை வகை தோசைகளையும் செய்து விட்டு அவைகளை போட்டோ வேறு எடுத்து போட்டு "சிறப்பு தோசை வாரம்" கொண்ட்டாடியுள்ளீர்கள் இனிமேல் சமையலுக்கென்று பொதுவாக இல்லாமல், இட்லி,தோசை ,பொங்கல், அல்வா என விருதுகள் பிரித்துதரப்படவேண்டும்.

பொன் மாலை பொழுது said...

தோசை அரசி - விருது தயாராகிறது. :)))

Chitra said...

Dosai Rani!!!!!!

Unknown said...

Very very useful post. Thanks for sharing.

Reva said...

Ithanai dosai vagai irukkunu ennakku ipathaan thaeriyum... arumaiyaana dosaigal... super post...
Reva

Padhu Sankar said...

Nice varieties of healthy dosa .

Jaleela Kamal said...

ellaam nalla irukku

சாருஸ்ரீராஜ் said...

சூப்பரா இருக்கு கீதா எல்லா தோசை வகைகளும் . நான் இப்போ டய்ட்ல இருக்கேன் டிரை பண்ணி பார்கிறேன்.

அமுதா கிருஷ்ணா said...

சான்சே இல்லைப்பா..அருமையான தோசைகள்.

தெய்வசுகந்தி said...

கலக்கல் கீதா!! அப்படியே ஒரு PDF ஆ மாத்தி போடலாமே?

Shama Nagarajan said...

arumaiyo arumai..keep rocking

Kurinji said...

Very nice idea and mouthwatering dosais...

kurinjikathambam

ஹுஸைனம்மா said...

உங்களின் ஓட்ஸ்/கோதுமை ரவை ரெஸிப்பிகளின் ரசிகை நான். நன்றி கீதா, எல்லாவற்றையும் ஒரே இடத்தில் தொகுத்து போட்டதற்கு.

உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்கவேண்டும். உணவுகளின் சத்துகளைக் குறித்து விரிவாக ஆய்ந்து எழுதுபவர் என்பதாலும், அதிக ஓட்ஸ் ரெஸிப்பிகள் தந்தவர் என்பதாலும் இதைக் கேட்க நீங்கள்தான் சரியான ஆள்.

http://www.aathi-thamira.com/2011/02/blog-post.html
இந்தப் பதிவில், ஒரு டாக்டர் ஓட்ஸ் என்பது மனிதர் சாப்பிடவேண்டிய உணவே அல்ல என்று சொன்னதாக பதிவர் எழுதியுள்ளார். இதுகுறித்து உங்கள் கருத்தையும், விளக்கத்தையும் தாருங்களேன். ஓட்ஸை நல்ல தானிய/நார்ச்சத்து உணவு என்று நினைத்துக் கொண்டிருக்கும் எனக்கு இது அதிர்ச்சியாக உள்ளது.

Asiya Omar said...

வெரைட்டி தோசைகள் ஒரே இடத்தில் பார்க்கவே அமர்க்களமாக இருக்கு.பாராட்டுக்கள்.

GEETHA ACHAL said...

நன்றி வானதி...கண்டிப்பாக செய்து பாருங்க..

நன்றி கல்பனா...ஆரம்பித்துவிட்டால் போச்சு...நீங்க வரிங்களா...

நன்றி மாணிக்கம் அண்ணா...வீட்டில் சொல்லி செய்து சாப்பிட்டு பாருங்க...எல்லாமே நல்லா இருக்கும்...உங்கள் விருதுக்கு மிகவும் நன்றி அண்னா...

GEETHA ACHAL said...

நன்றி சித்ரா..

நன்றி திவ்யா...

நன்றி ரேவதி..

நன்றி பத்மா..

நன்றி ஜலிலா அக்கா...

GEETHA ACHAL said...

நன்றி சாரு அக்கா...டயட்டில் இருக்கின்றிங்களா...கண்டிப்பாக செய்து பாருங்க...

நன்றி அமுதா...

நன்றி தெய்வசுகந்தி...நல்ல ஐடியா...

நன்றி ஷாமா...

நன்றி குறிஞ்சி..

GEETHA ACHAL said...

நன்றி ஹுஸைனம்மா...கண்டிப்பாக செய்து பாருங்க...

//http://www.aathi-thamira.com/2011/02/blog-post.html
இந்தப் பதிவில், ஒரு டாக்டர் ஓட்ஸ் என்பது மனிதர் சாப்பிடவேண்டிய உணவே அல்ல என்று சொன்னதாக பதிவர் எழுதியுள்ளார். இதுகுறித்து உங்கள் கருத்தையும், விளக்கத்தையும் தாருங்களேன். //அந்த டாக்டர் ஏன் அப்படி சொன்னார் என்று தெரியவில்லை...ஆனால் ரொம்ப காலமாக ஒட்ஸினை குதிரைக்களுக்கு மட்டுமே சாப்பிட கூடியது என்று சில நாட்டினர் நினைத்து கொண்டு இருந்தனர்...

இங்கிலாந்தில் உள்ள குதிரைகளுக்கு இன்னமும் ஒட்ஸ் வழங்கப்படுக்கின்றது..அதற்காக அது நாம் சாப்பிட கூடியது கிடையாது என்று அர்த்தம் இல்ல...

அப்படி பார்த்தல் நிறைய நாடுகளில் முக்கிய உணவாக ஒட்ஸ் இடம் பெற்று இருக்கின்றது...

சுமார் 1 கப் ஒட்ஸில் பார்லி, ராகியினை விட மூன்று மடங்கு கலோரிஸ் அதிகம் என்பதால் சொல்லி இருக்ககூடும்...

கூடவே நம்மூரில் கிடைக்கும் பார்லி, ராகி, கோதுமை, சோளம் போன்றவைற்றினை சாப்பிடலாமே ...எதற்காக Costlyயான ஒட்ஸ் என்பதால் கூட சொல்லி இருக்கலாம்...

அதே போல் பார்லி, ராகியினை ஒட்ஸுடும் compare செய்யும் பொழுது ஒட்ஸில் இவற்றைவிட அதிக அளவு Carbohydrate இருக்கும்..

ஒட்ஸில் பார்லி, ராகி போன்றே Soluble Fiber இருக்கின்றது....ஒட்ஸினை தனியாக சாப்பிடாமல் இத்துடன் எதாவது ஒரு வெஜ்ஜீஸ் அல்லது பழத்துடன் சாப்பிடால் கூடுதல் நன்மை...

GEETHA ACHAL said...

நன்றி ஆசியா அக்கா..

Akila said...

hi geetha,

nice collection of dosa's.... i bookmarked the page...

loved all varieties...

Dish Name Starts with F
Learning-to-cook
Regards,
Akila

Unknown said...

kaana kankodi vendum.ungal dosai varieties paarthu asanchutten...super geetha

Geetha6 said...

waaavvvvvv!!!!!

Priya Suresh said...

Lovely collections, superaa dosas recipes completely healthy and delicious..

Mahes said...

A very useful post, Thanks! I am bookmarking it.

Raks said...

Great collections! Thanks for compiling at one post Geetha,so useful!

GEETHA ACHAL said...

நன்றி அகிலா..

நன்றி சவிதா...

நன்றி கீதா..

நன்றி ப்ரியா..

நன்றி மகேஷ்

நன்றி ராஜி...

ஹுஸைனம்மா said...

கீதா, விளக்கமான பதிலுக்கு ரொம்ப நன்றி. எனக்காக மெனக்கெட்டு விவரங்கள் தந்திருக்கீங்க. எனக்கும் அந்த டாக்டரின் கமெண்ட் அதிர்ச்சியா இருந்துது. அதான் கேட்டேன். நன்றிப்பா.

Kanchana Radhakrishnan said...

கலக்கல் கீதா

Anonymous said...

Why not try contacting publishers like vikatan/snegidhi to publish your dosa under 30 types of dosa?You would get many visitors to your blog for other recipes too.

Unknown said...

nice dosais..thank you very much geetha achaal mam for this easy to prepare recipes...

Sensible Vegetarian said...

Supera erukku, Dosai Dictionary.

GEETHA ACHAL said...

நன்றி ஹுஸைனம்மா...

நன்றி கஞ்சனா..

நன்றி அனானி..அந்த பத்திரிக்கையில் இருந்து முன்பே எனக்கு அழைப்பு வந்தது...நான் தான் அதற்கு பிறகு அவர்களை தொடர்பு கொள்ளவில்லை...


நன்றி சௌந்தரா..

நன்றி sensible...

Mahi said...

இந்த பேஜை புக்மார்க் பண்ணிக்க வேண்டியதுதான். ரெசிப்பிகளுக்கும்,மீண்டும் தொகுத்துதந்ததுக்கும் நன்றி கீதா!

கவிநயா said...

அசத்தல்! மிக்க நன்றி கீதா.

Anbuselvi said...

Excellent!

Unknown said...

Naakkil Echil Uruthe...

xxx said...

en paiyan sariyaga sapida mattan
romba weak aa irrukan enna saivathu
eathavathu suggestion erruka

priya said...

its really awesome sister:)thank u for different dosa........

priya said...

super sis.....

shari said...

Wow! Kondaikaalai dosai migavum arumaiyaga vanthathu. En mamiyaruku migavum pidithu irunthathu. Nanri geetha. Paruppu adai eppadi seivathu endru korinal nanraga irukum.

kirthi said...

ennaku appam mekavum pidikum neingal appam panum muraiyai solli tharuingalan plz .marum veg stew solli thangala

Unknown said...

Can you say how to do rava dosa easily.......

Unknown said...

super dosa .....healthy dosa

Related Posts Plugin for WordPress, Blogger...