அவல் இட்லி & கடலைப்பருப்பு சட்னி - Aval Idly & Kadalai paruppu Chutney / Chanadal Chutney - Side dish for Idly & Dosaiஅவல் இட்லி மிகவும் சத்தான காலை நேர சிற்றுண்டி…நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

இந்த அவல் இட்லியிற்கு, புதிதாக அரைத்த புளிக்காத இட்லி மாவு ( அதாவது இட்லி அரிசி + உளுந்து ஊறவைத்து அரைத்து எடுத்தது…) தான் நன்றாக இருக்கும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         புளிக்காத இட்லி மாவு – 2 கப்
·         அவல் – 1 கப்
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
·         இட்லிக்கு அரைத்த மாவினை நன்றாக கலந்து பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும். அவலினை மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

·         பொடித்த அவல் + புளிக்காத இட்லி மாவு + உப்பு சேர்த்து நன்றாக கலந்து 4 – 5 மணி நேரம் புளிக்கவிடவும்.

·         மாவு புளித்தவுடன், இட்லிகளாக சுடவும். சுவையான இட்லி ரெடி.

கவனிக்க :
மீதம் இருக்கும் இட்லி மாவோ அல்லது புளித்த இட்லி மாவிலோ அவலினை கலந்து செய்தால் அவ்வளவு நன்றாக இருக்கவில்லை.

அதே மாதிரி அவலினை தயிருடன் சேர்த்து செய்து பார்த்தேன்…அதுவும் நன்றாக வரவில்லை…

கடலைப்பருப்பு சட்னி

இந்த சட்னி எளிதில் செய்ய கூடியது…இது எங்க தாத்தாவுடைய favorite சட்னி….தாத்தா இருக்கும் வரை அம்மா இதனை வாரத்திற்கு ஒரு முறையாவது செய்து விடுவாங்க…

இந்த சட்னியினை சாப்பிடும் பொழுது எல்லாம் எங்க தாத்தா ஞாபகம் கண்டிப்பாக வராமல் இருக்காது….

சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         கடலைப்பருப்பு – 1/4 கப்
·         காய்ந்த மிளகாய் – 3
·         தேங்காய் – 1 துண்டு
·         புளி – சிறிய கொட்டைப்பாக்கு அளவு
·         உப்பு – தேவையான அளவு

கடைசியில் தாளிக்க :
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பில்லை – தாளிக்க

செய்முறை :
·         கடலைப்பருப்பினை கடாயில் போட்டு வெறுமனே வறுத்து கொள்ளவும். காய்ந்த மிளகாயினையும் வறுத்து கொள்ளவும்.

·         வறுத்த பொருட்கள் + தேங்காய் + புளி + உப்பு + சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

·         தாளிக்க கொடுத்துள்ள பொருட்களினை தாளித்து சட்னியில் சேர்க்கவும். சுவையான சட்னி ரெடி. இதனை இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு :
அம்மா எப்பொழுதும் இதனை தேங்காய் சேர்க்காமல் தான் அரைப்பாங்க…எனக்கு தேங்காய் சேர்த்து அரைத்த சட்னி பிடிக்கும் என்பதால் இதனை இப்படி தான் அரைப்பது…

32 comments:

Chitra said...

அவள் இட்லிக்கு நிறைய experiment நடந்து இருக்குது .... உங்கள் kitchen , லேப் மாதிரி இருக்கும் போல.... சூப்பர், மா! பாராட்டுக்கள்!

சாருஸ்ரீராஜ் said...

அவல் இட்லி +கடலை பருப்பு சட்னி ரெண்டுமே சூப்பரா இருக்கு

Padhu Sankar said...

Aval idly sounds interesting .I will try today and let u know

Pushpa said...

Yummy idli and kara chutney,my fav.

Reva said...

Asathalaa irukku... What a lovely tasty combo... my all time favourite...
Reva

Lifewithspices said...

Will def try this idlies r looking so soft..

Priya Suresh said...

Spongy idly and paruppu chutney, paathathum pasikuthu...

Akila said...

lovely idli's dear....

Unknown said...

cute post and lovely variation of idli....chutney miga arumai.try pannitu solren

Anonymous said...

நீங்க testபன்னி சரியா வந்த பிறகு எங்களுக்கு சொல்லறது நல்லா இருக்கு.
இட்லியும் சட்னியும் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு.

apsara-illam said...

ஹாய் கீதா...,இட்லிக்கும் சட்னிக்கும் போதே அருமையாக இருக்கு...
கடலைபருப்பு சட்னியில் நாங்கள் புளி இல்லாமல் அரைத்ததுண்டு.இது வித்தியாசமாக இருக்கு...
வாழ்த்துக்கள்.

அன்புடன்,
அப்சரா.

enrenrum16 said...

அட...இட்லி நல்ல வெள்ள வெளேர்னு ஸாஃப்டா இருக்கு.... ச்சும்மா இட்லியில பூந்து விளையாடறீங்களே.... கண்டிப்பா இந்த இட்லியும் சட்னியும் ட்ரை பண்றேன். நன்றி.

Pavithra Elangovan said...

Geetha i used to add 1/4 cup of aval when i grind for idli batter , but powder aval and adding is new to me .. sounds interesting and the idli looks so good too. Sure i will try this tomm and kadalai chutney looks too good , sure ur words abt ur grandpa will come in my memory whenever i make this..

தெய்வசுகந்தி said...

கடலைப்பருப்பு சட்னி எனக்கும் பிடித்த சட்னி. அவல் இட்லி புதுசா இருக்கு, செஞ்சு பாத்திரலாம்.

அப்பாதுரை said...

கடலைப்பருப்பு சட்னி சுலபமாக இருக்கும் போலிருக்கிறதே, செய்து பார்க்கிறேன்.

Mahi said...

//உங்கள் kitchen , லேப் மாதிரி இருக்கும் போல.... சூப்பர், மா!//:) :) சித்ரா,அப்ப அவங்க வீட்டுல சோதனை எலி யாரா இருக்கும்னு நினைக்கறீங்க?!

இட்லி சூப்பரா இருக்கு கீதா! நான் இட்லிக்கு அரைக்கும்போதே அவலை சேர்த்து அரைச்சு புளிக்கவைப்பேன். சட்னியும் நல்லா இருக்கு!

R.Gopi said...

அவல் இட்லி - கடலை பருப்பு சட்னி..

ஆஹா... சூப்பர் காம்பினேஷனா இருக்கே...

நலம் நலமறிய ஆவல்... தொடர்பு கொண்டு வெகு நாட்களாகிறதே...

எங்களின் முதல் முயற்சியான இந்த குறும்படத்தை பார்த்து உங்களின் மேலான கருத்தை சொல்லுங்களேன் கீதா...

”சித்தம்” குறும்படத்தை இங்கே கண்டு ரசியுங்கள்...

பார்ட் - 1
http://www.youtube.com/watch?v=VyVNcRKKGt4&feature=mfu_in_order&list=UL

பார்ட் - 2
http://www.youtube.com/watch?v=0fkLqLhdmGw

தோழமையுடன்

ஆர்.கோபி, துபாய்
www.jokkiri.blogspot.com / www.edakumadaku.blogspot.com

லாரன்ஸ் பிரபாகர்
www.padukali.blogspot.com

Asiya Omar said...

அருமை கீதா,புதுமையை எப்பவும் படைச்சு அசத்துறீங்கப்பா.பருப்பு துவையல் செயவதுண்டு,சட்னி நல்லாயிருக்கு.

Asiya Omar said...

அருமை கீதா,புதுமையை எப்பவும் படைச்சு அசத்துறீங்கப்பா.பருப்பு துவையல் செயவதுண்டு,சட்னி நல்லாயிருக்கு.

Shanavi said...

What a coincident, This time I've ground my idli batter with a cup of aval to get that extra softness..I could c ur idli soooooo soft and it's like khushboo idli..First time here..Loved ur blog..Everythin is awesome..Glad following u ..Do visit my page when u find time..
http://jellybelly-shanavi.blogspot.com

GEETHA ACHAL said...

நன்றி சித்ரா...ஆமாம் சித்ரா எப்பொழுதுமே வீட்டில் செய்து பார்த்துவிட்டு நல்லா வந்தா தான் ப்ளாகில் போடுவேம்...நன்றி

நன்றி சாரு அக்கா..

நன்றி பத்மா...

நன்றி புஷ்பா..

GEETHA ACHAL said...

நன்றி ரேவதி...

நன்றி கல்பனா...கண்டிப்பாக செய்து பாருங்க..

நன்றி ப்ரியா..,

நன்றி அகிலா...

நன்றி சவிதா....கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க..

GEETHA ACHAL said...

//நீங்க testபன்னி சரியா வந்த பிறகு எங்களுக்கு சொல்லறது நல்லா இருக்கு.//நன்றி மகா...


நன்றி அப்சரா...புளி சேர்த்து அரைத்து பாருங்க...கூடுதல் சுவையுடன் இருக்கும்...

நன்றி என்றென்றும்...கண்டிப்பாக செய்து பாருங்க...

நன்றி பவித்ரா...ஆமாம் பவி...எங்க தாத்தா தான் எங்களுடன் இப்பொழுதும் இருப்பதாக நினைத்து கொள்கிறேன்...

GEETHA ACHAL said...

நன்றி தெய்வசுகந்தி...

நன்றி அப்பாதுரை...

நன்றி மகி....
////உங்கள் kitchen , லேப் மாதிரி இருக்கும் போல.... சூப்பர், மா!//:) :) சித்ரா,அப்ப அவங்க வீட்டுல சோதனை எலி யாரா இருக்கும்னு நினைக்கறீங்க?!
//மகி...கண்டுபிடித்துவிட்டிங்களே...நன்றி....

நன்றி கோபி அண்ணா...உங்களுடைய குறும்படம் மிகவும் அருமை...இன்னும் பல படைப்புகள் படைக்க வாழ்த்துகள்...

GEETHA ACHAL said...

நன்றி ஆசியா அக்கா...

ஸாதிகா said...

கடலைப்பருப்பில் சட்னி பார்க்க ரம்யமாக உள்ளது.

ஹுஸைனம்மா said...

இட்லிக்கு அரைக்கும்போது அவல் சேர்த்து அரைப்பதைப் படித்திருக்கிறேன். இதுவும் கிட்டத்தட்ட அதுபோலத்தானே? அவல் சேர்த்தால் நல்லா ஸாஃப்டா இருக்குமில்லையா கீதா? சத்துக்கள் எப்படி கீதா?

Kanchana Radhakrishnan said...

அவல் இட்லி புதுசா இருக்கு, செய்து பாத்திரலாம்.

GEETHA ACHAL said...

நன்றி ஸாதிகா அக்கா..

நன்றி ஹுஸைனம்மா...ஆமாம் அவல் சேர்த்தால் கண்டிப்பாக சாப்டாக இருக்கும்...இதனை சாப்பிடுவதும் நல்லது தான்..அரிசிக்கு பதிலாக சேர்த்து கொள்ளலாம்...அடுத்த அவல் குறிப்பில் கண்டிப்பாக சத்துகளை பற்றி எழுதிகிறேன்...

நன்றி கஞ்சனா...

KrithisKitchen said...

Aval idli, paruppu chutney combo sooper...

http://krithiskitchen.blogspot.com

Laxmipriya said...

I add KadalaiParuppu in many chutneys. But have nt tried only with kadalaiParuppu. Will try and let u know.
By the way, I appreciate your efforts for writing in Tamil.

sasi said...

Hai geetha, I tried your aval idly today. It came out very well... In home all r enjoying including my kid... Thanks for your recipe..

Related Posts Plugin for WordPress, Blogger...