பல்கர் இட்லி & சிக்கன் சால்னா - Bulgur Idly & Chicken Salna Gravy - Bulgur Indian Recipe / Idly Varieties - Side dish for Idly and Dosa


பல்கர் என்பது கோதுமை ரவை..அப்படி என்றால்,பல்கருக்கும் கோதுமை ரவைக்கும்(Cracked Wheat) என்ன வித்தியாசம் என்று யோசிக்கின்றிங்களா

கோதுமையினை ரவையாக அப்படியே உடைத்தால் அது  கோதுமை ரவை…ஆனால் கோதுமையினை, வேகவைத்து பின்னர் சிறிது நேரம் அதனை காயவைத்து பின், ரவையாக உடைத்தால் அது தான் பல்கர்..(அதாவது புழுங்கல் அரிசிக்கும் பச்சரிக்கும் இருக்கும் வித்தியாசம் போல)


கோதுமை ரவை போல் இல்லாமல், பல்கர் வேக மிகவும் குறைந்த அளவு நேரமே எடுக்கும். பல்கரில் அதிக அளவு நார்சத்து- Dietary Fiber, Maganese இருக்கின்றது…இதில் குறைந்த அளவு கொழுப்பு சத்து இருப்பதால்…. அனவைருக்கும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.


பல்கரில் , பிரவுன் ரைஸியை (Brown Rice) விட அதிக அளவு நார்சத்து இருக்கின்றது, கலோரியும் குறைவாக இருக்கின்றது..


ஊறவைக்க தேவைப்படும் நேரம் : 2 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள் (மாவு புளித்தபிறகு)
தேவையான பொருட்கள் :
         பல்கர் – 3 கப்
·         உளுத்தம்பருப்பு – 1 கப்
·         வெந்தயம் – 1 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
·         உளுத்தம்பருப்பு + வெந்தயம் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவைத்து கொண்டு மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும்.

·         அரைத்த மாவு + பல்கர் + உப்பு + தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொண்டு 4 – 5 மணி நேரம் புளிக்கவிடவும்.

·         மாவு புளித்தவுடன், இட்லி தட்டில் ஊற்றி இட்லிகளை வேகவிடவும்.

·         சுவையான சத்தான பல்கர் இட்லி ரெடி. சட்னி, சாம்பார், க்ரேவிகளுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

கவனிக்க :
பல்கர் நிறைய தண்ணீர் இழுத்து கொள்ளும் என்பதால் தண்ணீரின் அளவில் கவனம் தேவை…இட்லிக்கு கரைக்கும் பொழுது பார்த்து சேர்க்கவும்.

Grinderயில் மாவு அரைத்து செய்தால் 4 கப் பல்கருக்கு 1 கப் உளுத்தம்பருப்பு என்று சேர்த்து கொள்ளவும்.

சிக்கன் சல்னா

திருமதி. ஆசியா உமரின் குறிப்பில் இருந்து சிறிது மாறுதலுடன் நான் செய்த சிக்கன் சல்னா..இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு சூப்பர்ப் காம்பினேஷன்…நீங்களும் செய்து பார்த்து கருத்தினை தெரிவிக்கவும்….

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         சிக்கன் – 1/4 கிலோ

இஞ்சி பூண்டு பேஸ்ட் :
·         பூண்டு – 6 பல்
·         இஞ்சி – சிறிய துண்டு
·         பட்டை, கிராம்பு, ஏலக்காய் - 1

நறுக்கி கொள்ள :
·         வெங்காயம் – 1
·         தக்காளி – 2
·         பச்சைமிளகாய் – 1
·         புதினா, கொத்தமல்லி – 1 கைபிடி

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மிளகாய் தூள் – 1 தே. கரண்டி
·         தனியா தூள் – 1 தே.கரண்டி
·         சீரகக்தூள் – 1 தே.கரண்டி
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

மைய அரைத்து கொள்ள :
·         தேங்காய் – 2 துண்டு
·         முந்திரி பருப்பு – 5

முதலில் தாளிக்க :
·         எண்ணெய் – சிறிதளவு
·         சோம்புதூள் – 1 தே.கரண்டி
·         கருவேப்பில்லை – 5 இலைசெய்முறை :

·        வெங்காயம், தக்களி வெட்டி கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து கொள்ளவும்.

·         கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்புதூள் + கருவேப்பில்லை தாளித்த பிறகு, வெங்காயம் +இஞ்சிபூண்டு பேஸ்ட் + தக்காளி, பச்சைமிளகாய் +  புதினா , கொத்தமல்லி என்று ஒன்றின்பின் ஒன்றாக போட்டு வதக்கி கொள்ளவும்.

·         இத்துடன் சிக்கன் + தூள் வகைகள் + தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.

·         நன்றாக கொதிவந்தவுடன், தேங்காய் விழுதினை சேர்த்து மேலும் நன்றாக வேகவிடவும்.

·         சுவையான எளிதில் செய்ய கூடிய சல்னா ரெடி. 

34 comments:

அன்புடன் நான் said...

இட்லில இப்படியும் ஒரு வகையிருக்கா?
வார்த்துட வேண்டுயதுதான்....

செய்முறை குறிப்புக்கு நன்றிங்க.

Jayanthy Kumaran said...

Irresistable combo...am craving now..:P
Tasty appetite

Chitra said...

Paarkavea superaa irukku , chicken salna vil veg pottu try panren :)

சாருஸ்ரீராஜ் said...

பல்கர் இட்லி சூப்பர்.

Unknown said...

ரொம்ப நாளைக்கப்புறம் வந்தேன் இட்லிய போட்டுட்டீங்க

அதால நேயர் விருப்பம் ...

மசாலா இல்லாமல் மற்றும் எண்ணெய் அதிகம் இல்லாமல் ஒரு வெஜிடபுள் புலாவ் (மாதிரி) மெனு போடுங்க‌

Pranavam Ravikumar said...

I take iddali, will have with Chutney, since I am a veggies.. :-))

Shama Nagarajan said...

too good..u are an idli specialist

தெய்வசுகந்தி said...

நல்லா இருக்குது கீதா!!

Chitra said...

Kushboo idly மாதிரி - puffy ஆக இருக்குது. :-)

Priya Suresh said...

Bulgur idli nalla kummunu irruku, salnovoda simply delicious and tempting..

Angel said...

thanks for sharing .idlis parka superaaa irukku

GEETHA ACHAL said...

நன்றி கருணாகரசு...கண்டிப்பாக செய்து பாருங்க...

நன்றி ஜெய்...

நன்றி சித்ரா...கண்டிப்பாக வெஜ்ஜில் செய்து பாருங்க...

நன்றி சாரு அக்கா..

நன்றி நட்புடன் ஜமால் அண்ணா...கண்டிப்பாக சீக்கிரமாக வெஜிடபுள் புலாவ் குறிப்பினை பதிவு போடுகிறேன்...

GEETHA ACHAL said...

நன்றி ரவிக்குமார்...

நன்றி ஷாமா..

நன்றி தெய்வசுகந்தி...


நன்றி சித்ரா..

நன்றி ப்ரியா...

நன்றி ஏஞ்சலின்...

Menaga Sathia said...

both recipes looks inviting...

Asiya Omar said...

கீதா ஆச்சல் மிக்க நன்றி.இட்லி அருமை.நான் சால்னா சிம்பிளாக செய்து இருந்தேன்,நீங்க நிறைய மசாலா போட்டு செய்து அசத்திட்டீங்க.உங்க டயட் சமையல் புத்தக வெளியீடு எப்போ?முயற்சி செய்ங்க.

Unknown said...

Hatts off to ur creativity geetha,pls pass the plate...

Unknown said...

looks perfect n tempting..
i love chalna......

Priya dharshini said...

Nice and healthy idlies,geetha..

Krishnaveni said...

looks superb, thanks for sharing

Anonymous said...

hello geetha mam ur recipes are awesome.hav a look at our blog on child health http://drcmaheshkumar.blogspot.com

Anonymous said...

நன்கு புரியுமாறு விளக்கம், அருமை.

seofashion said...

first time hearing abt this ,nice n healthy food

Kurinji said...

Wow healthy and innovative recipe Geetha...Keep rocking...

Many thanks Geetha ,for participating in my HRH event. Please collect the participation award.

HRH - Rickeflakes Event Roundup!!!

Pushpa said...

Delicious combination Geetha....

GEETHA ACHAL said...

நன்றி மேனகா..

நன்றி ஆசியா அக்கா..

நன்றி ப்ரேமா..

நன்றி ஷீனா...

நன்றி ப்ரியா...

GEETHA ACHAL said...

நன்றி கிருஷ்ணவேனி..

நன்றி அனானி..

நன்றி புலி..

நன்றி குறிஞ்சி...

apsara-illam said...

ஹாய் கீதா...,நலமா..?
மிகவும் சத்தான இட்லியா செய்து அசத்துறீங்க போங்க...
இந்த உடைத்த கோதுமையை கொண்டு நான் தோசை செய்வதுண்டு.
இட்லியும் டிஃப்ரண்ட்டாக இருக்கு.அதிலும் ஒவ்வ்ரு ப்ருளுக்கும் உள்ள சிறப்புதன்மைகளை விரிவாக எடுத்துரைப்பது உங்கள் சிறப்பாக உள்ளது.அதை நான் மிகவும் பாராட்டுகிறேன்.
வாழ்த்துக்கள் கீதா...

அன்புடன்,
அப்சரா.

GEETHA ACHAL said...

நன்றி அப்சரா...கண்டிப்பாக செய்து பாருங்க...

Thenu said...

Hi Geetha,

I tried your diet dosas, it came out well.I liked them too.
Today I planned to try this idli.But I have a doubt. Whether this Bulgur available in shops or we have to prepare at home as u said?

Thanks in advance, Keep posting more diet recipes.

Thenu said...

Hi Geetha

I tried your channa palak & barley diet dosas. They came out very well.My family members also liked it.

Today I peeped into ur blog to get some diet recipe for idli,Finally I found this Bulgar Idli, I have doubt in this recipe.

Whether this Bulgur available in shops / we have to prepare only at home as u said?

I am eagerly witing to make this idli.

Thanks in advance.

porselvi said...

help me dear sister how to make normal idle please please

Ani said...

Hi Geetha,

Do we need to soak the Bulgur in water and grind it as like idli rice?

I tried making this idlis but failed!
I simply added dry bulgur to urid dhal flour...

What was the mistake hidden there?

GEETHA ACHAL said...

நன்றி ani...

இதில் பல்கரிலினை முதலில் ஊற வைக்க அல்லது அரைக்க தேவையில்லை...

இது ரவை மாதிரி தான் இருக்கும். அதனால் ஊளுத்தம்பருப்பினை மட்டும் அரைத்து கொள்ளவும்.

ஊளுத்தமாவுடன் இந்த பல்கர் + தேவையான அளவு தண்ணீர் + உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும்.

சுமார் 1 கப் ஊறவைத்து அரைத்த உளுத்தம்பருப்பு + 3 கப் பல்கர + 1 தே.கரண்டி உப்பு + 2 1/2 - 3 கப் அளவு தண்ணீர் சேர்த்து கொண்டால் சரியாக இருக்கும்.

நீங்கள் தண்ணீரின் அளவில் தவறு செய்து இருக்கலாம். தண்ணீர் குறைவாக இருந்தால் பல்கர் நன்றாக ஊறாமல் நன்றாக இட்லி வந்து இருக்காது.

அதே மாதிரி தண்ணீர் அதிகமாக இருந்தால் இட்லி நன்றாக உப்பி வராமால் இருக்கலாம்.

1 - 2 முறை செய்து பார்த்தால் அந்த அளவு கரக்டாக நமக்கு தெரிந்துவிடும். எந்த வித ரவை, கோதுமை ரவை, கார்ன்மீல் போன்றவையிலும் இதே முறை செய்யலாம்..

ஒரு வேளை தண்ணீர் குறைவாக ஊற்றி இருந்தீங்கனா, தண்ணீர் சிறிது சேர்த்து மேலும் 1 மணி நேரம் ஊறவைத்து செய்து பாருங்க...

Ani said...

Thanks for ur reply Geetha..
i ll try once again..

Related Posts Plugin for WordPress, Blogger...