இன்ஸ்டண்ட் ஒட்ஸ் கார்ன்மீல் இட்லி & கலவை சட்னி - Instant Oats Cornmeal Idly & Mixed Chutney - Indian Oats Recipe / Idly Varieties - Side Dish for Idly and Dosai


காலை நேரத்தில் எளிதில் செய்ய கூடிய இட்லி…..இட்லி மாவு வீட்டில் இருந்தால் எப்பொழுதுமே காலை நேரத்தில் tensionஆக தேவையில்லை…அதுக்காக எப்பொழுதுமே இட்லி மாவினை அரைத்து வைத்து கொள்வதும் கஷ்டம் தான்…

இந்த இட்லி கண்டிப்பாக செய்வது மிகவும் சுலபம்…சத்தானதும் கூட…….மாவினை கலந்து உடனே இட்லி ஊற்றலாம்….சூப்பராக இருக்கும்….

திருமதி.ப்ரியா இந்த இட்லியினை பற்றி பதிவு போட்டு இருந்தாங்க…நான் எப்பொழுதுமே அதிகம் தயிர் சேர்த்து கொள்வது இல்லை…ஆனால் அவங்க சொன்னது போல தயிர் அளவினை கூட்டி செய்து பார்த்தேன்…அருமையாக இருந்தது….நன்றி…….. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்….

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 – 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்:
         ஒட்ஸ் – 1 கப்
·         கார்ன்மீல் – 1 கப்
·         தயிர் – 2 கப்
·         உப்பு – தேவையான அளவு

தாளித்து சேர்க்க :
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         கடுகு,சீரகம், உளுத்தம்பருப்பு – தாளிக்க

செய்முறை :
·         ஒட்ஸினை பொடித்து கொள்ளவும். தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கொள்ளவும்.

·         ஒட்ஸ் + கார்ன்மீல் + தயிர் + உப்பு + தாளித்த பொருட்கள் + சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பத்ததிற்கு கெட்டியாக கரைத்து கொள்ளவும்.

·         மாவினை உடனே இட்லி தட்டி ஊற்றி இட்லிகளை வேகவைக்கவும்.

·         சுவையான சத்தான இட்லி ரெடி…சட்னியுடன் சாப்பிட அருமையாக இருந்தது…

கவனிக்க :
கொடுத்துள்ள அளவின்படி 8 இட்லிகள் வரும்.

தயிர் அளவினை 1 கப் ஆக குறைந்து கொண்டு இத்துடன் சிறிது சோடா மாவு சேர்த்து கலந்து இட்லிகளினை சுடலாம்…

அல்லது தயிரின் அளவினை குறைத்து மாவினை அரை மணி நேரம் ஊறவைத்து இட்லிகளினை சுட்டால் நன்றாக இருக்கும்.

தயிரில் அதிக அளவு Sugars- Carbohydrates இருப்பதால் அதனை அதிகம் சேர்த்து கொள்வது இல்லை….

கலவை சட்னி

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         வெங்காயம் – 1 பெரியது
·         தக்காளி – 1
·         பச்சைமிளகாய் – 1
·         புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
·         கொத்தமல்லி – சிறிதளவு
·         உப்பு – தேவையான அளவு

கடைசியில் தாளிக்க :
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         கடுகு, உளுத்தம்பருப்பு – தாளிக்க

செய்முறை :
·         வெங்காயம் + தக்காளியினை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

·         கடாயில் வெங்காயம் + தக்காளி + பச்சைமிளகாய் சேர்த்து 3 – 4 நிமிடங்கள் வதக்கி கொள்ளவும்.

·         வதக்கிய பொருட்கள் + புளி + உப்பு சேர்த்து மைய அரைத்து கொள்ளவும். கடைசியில் கொத்தமல்லி சேர்த்து 2 – 3 முறை pulseயில் அரைக்கவும்.

·         தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சட்னியில் சேர்க்கவும். சுவையான எளிதில் செய்ய கூடிய சட்னி ரெடி….

25 comments:

சாருஸ்ரீராஜ் said...

superana healthy idli geethu.

Menaga Sathia said...

super spongy idly!!

Priya Suresh said...

Thanks for trying this instant idli Geetha..happy u guys loved it..

Shama Nagarajan said...

healthy idli

Unknown said...

Healthy breafast,luks very soft and delicious...

Akila said...

very yummy dish dear...

Dish Name Starts with F
Learning-to-cook
Regards,
Akila

Chitra said...

Thank you for an easy and simple recipe.

Chitra said...

About the benefits of Yogurt. (thayir)

http://www.askdrsears.com/html/4/t045700.asp

சிந்தையின் சிதறல்கள் said...

நன்றி தகவலுக்கு

Unknown said...

very healthy and easy too.thanks for sharing

Geetha6 said...

thanks

Anonymous said...

நேரமில்லாத போது இந்த சத்தான instant இட்லி கை கொடுக்கும்.

Shanavi said...

healthy idli n chutney, u making me hungry now

தெய்வசுகந்தி said...

healthy idly.எனக்கு எல்லாத்திலயும் தயிர் சேத்துக்க பிடிக்கும். so Try பண்ணி பார்க்கிறேன்.

arthi said...

healthy and tasty idlis..

ஸாதிகா said...

வித்தியாசமான சத்தான இட்லி

சசிகுமார் said...

அருமை அக்கா

Pushpa said...

Looks healthy and yummy...

Asiya Omar said...

புதுசாக இருக்கு.கார்ன் மீன் இதுவரை வாங்கியது இல்லை.அருமை.

GEETHA ACHAL said...

நன்றி சாரு அக்கா..

நன்றி மேனகா..

நன்றி ப்ரியா..

நன்றி ஷாமா..

நன்றி ப்ரேமா..

GEETHA ACHAL said...

நன்றி அகிலா..

நன்றி சித்ரா...ஆமாம சித்ரா தயிரினை அப்படியே சாப்பிடுவேன்..ஆனால் சமையலில் அதிகம் சேர்ப்பது இல்லை...அதனை தான் குறிப்பிட்டு இருந்தேன்...

நன்றி நேசமுடன் ஹாசிம்...

நன்றி சவிதா..

நன்றி கீதா..

GEETHA ACHAL said...

நன்றி மகா..

நன்றி ஷானவி..

நன்றி தெய்வசுகந்தி...கண்டிப்பாக செய்து பாருங்க..

நன்றி ஆர்த்தி..

நன்றி ஸாதிகா அக்கா..

GEETHA ACHAL said...

நன்றி சசி..

நன்றி புஷ்பா..

நன்றி ஆசியா அக்கா..

vanathy said...

geetha, very healthy & looking delicious too.

cheena (சீனா) said...

அன்பின் கீதா ஆசல் - சமையல் குறிப்புகள் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Related Posts Plugin for WordPress, Blogger...