கசகசா சிக்கன் - kasa kasa Chicken / Poppy Seeds Chickenகசகசாவில் நார்சத்து, புரோட்டின் போன்றவை அதிகம் இருக்கின்றது. இத்துடன் கல்சியம், இரும்பு சத்து, Phosphorous, Magnesium மற்றும் Potassium அதிக அளவில் இருக்கின்றது.

இதனை சாப்பிடுவதால் எளிதில் ஜீரணம் செய்ய உதவுகின்றது.

இதில் நல்ல கொழுப்பு சத்து இருக்கின்றது…கர்பிணி பெண்கள் & குழந்தை பெற்ற பெண்கள் இதனை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.

சமைக்க தேவைப்படும் நேரம்: 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்:
         சிக்கன் – 1/2 கிலோ
·         வெங்காயம் – 1 பெரியது
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி

அரைத்து கொள்ள :
·         பூண்டு – 6 பல்
·         இஞ்சி – சிறிய துண்டு
·         பட்டை,கிராம்பு,ஏலக்காய் – 1
·         சோம்பு – 1 தே.கரண்டி

வறுத்து அரைத்து கொள்ள :
·         கசகசா – 3 மேஜை கரண்டி
·         முந்திரி – 5
·         தேங்காய் துறுவல் – 2 தே.கரண்டி

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·         தனியா தூள் – 1 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
·         அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மைய அரைத்து கொள்ளவும். வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து தனியாக மைய அரைத்து கொள்ளவும். வெங்காயத்தினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

·         கடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்த பொருட்கள் (இஞ்சு பூண்டு விழுது) சேர்த்து வதக்கி கொள்ளவும்.


·         இத்துடன் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

·         வதக்கிய பொருட்களுடன் தூள் வகைகள் + 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.


·         கொதிக்க ஆரம்பித்தவுடன், வறுத்து அரைத்த விழுதினை சேர்த்து கிளறி 3 – 4 நிமிடங்கள் வேகவிடவும்.


·         பிறகு சிக்கனை இதில் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு 10 நிமிடங்கள் வேகவிடவும்.


·         சிறிது கிரேவியாக விரும்பினால் கூடுதலாக 1 கப் தண்ணீர் சேர்த்து கொள்ளவும். சுவையான எளிதில் செய்ய கூடிய க்ரேவி ரெடி.


கவனிக்க :
கசகசா மிக்ஸியில் போட்டு அரைப்பதற்கு முன், சிறிது நேரம் 2 – 3 மேஜை கரண்டி சூடான தண்ணீரில் ஊறவிடவும். அப்பொழுது தான் எளிதில் அரைப்படும்.

கசகசா இல்லை என்றால் முந்திரி பருப்பினை சேர்த்து கொள்ளவும். ஆனால் சுவையில் வேறுபடும்…கலோரிஸும் அதிகரிக்கும்…

14 comments:

ஸாதிகா said...

பார்த்ததும் உடனே செய்து பார்த்துவிடத்தோன்றுகிறது கீதாஆச்சல்

எல் கே said...

:)

Anonymous said...

இன்னக்கி எல்லாரும் சிக்கன் மட்டன் எல்லாம் போட்டு அசத்துரீங்க..

கசகசாவோடு பயன்களை சொன்னது super

asiya omar said...

நல்லாயிருக்கு கீதா ஆச்சல்.

Akila said...

yummy dish dear... love it...

DNSW: E Roundup
Dish Name Starts with F
Learning-to-cook
Regards,
Akila

apsara-illam said...

ஹாய் கீதா...,கசகசாவை ஊரில் இருக்கும் போது பயன்படுத்துவதோடு சரி இங்கே... மூச்....
சிக்கன்,மட்டனுக்கெல்லாம் கசகசா அரைத்து சேர்த்தாலே ஒரு வித ருசிதான்... அதிலும் நீங்க வறுத்து வேறு அரைக்க சொல்லியிருக்கீங்க... இன்னும் நல்ல மணமாக இருக்கும்...
அதை தவிர்த்து கசகசாவின் பயனை சொல்லியிருப்பது சிறப்பு...
வாழ்த்துக்கள் கீதா...

அன்புடன்,
அப்சரா.

Priya said...

Slurp, superaa irruku intha chicken dish..i do prepare chicken gravies with poppy seeds,urs is quite different from mine..

Shanavi said...

Drooling here Geetha Mam, Next time am gonna make this..

savitha ramesh said...

creamy chicken and too gud for kids also

vanathy said...

நல்லா இருக்கு ரெசிப்பி. செய்து பார்க்க வேணும்.

Krishnaveni said...

once i prepared chicken with poppy seeds, tasted great, yours looks super yummy

Chitra said...

NAlla irukku geetha but try panna thaan mudiyathu :( iam a veggie :)

GEETHA ACHAL said...

நன்றி ஸாதிகா அக்கா..

நன்றி கார்த்திக்..

நன்றி மகா...

நன்றி ஆசியா அக்கா..

நன்றி அகிலா

GEETHA ACHAL said...

நன்றி அப்சரா...

நன்றி ப்ரியா...

நன்றி சானவி...

நன்றி சவிதா...

Related Posts Plugin for WordPress, Blogger...