பரங்கிப்பேட்டை சிக்கன் பிரியாணி - Parankipettai Chicken Biryaniபொதுவாக அனைவருமே ஒரே மாதிரி செய்முறையில் தான் பிரியாணி செய்வோம்…ஆனால் ஒன்றிரண்டு பொருட்களின் அளவினை கூட்டி ஒவ்வொரு பிரியாணியிலும் அதனுடைய சுவையில் வித்தியாசம் காணுகிறேன்…திருமதி.ஆசியா அவர்கள் செய்த இந்த பரங்கிப்பேட்டை பிரியாணி மிகவும் அருமையாக இருந்தது….

அதே மாதிரி தான் இந்த பிரியாணியிலும்…இதனுடைய ஸ்பெஷலிடியே இதில் சேர்க்கப்படும் மசாலா தான்….வெள்ளை மிளகு,சீரகம்,சோம்பு,கசகசா மற்றும் பட்டை,கிராம்பு,ஏலக்காய் சேர்த்து பொடித்து கொள்வது தான்…

இதில் வெள்ளை மிளகுறிக்கு பதிலாக வெள்ளைமிளகு தூள் கூட உபயோகிக்கலாம்…ஆனால் அது எல்லாம் இல்லை என்றாலும் கவலை இல்லை…கருப்பு மிளகினையும் பயன்படுத்து கொள்ளுங்க…ஆனால் வெள்ளை மிளகு useசெய்தால் டேஸ்ட் இன்னும் கூடுதலாக இருக்கும்.

அதே மாதிரி இந்த பிரியாணிக்கு இஞ்சியின் அளவினை விட பூண்டு அதிகமாக இருக்க வேண்டும்….

இந்த பிரியாணி மிகவும் சுவையாகவும் மனமாகவும் இருக்கும்…நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 – 40 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         சிக்கன் – 1/4 கிலோ
·         பஸ்மதி அரிசி – 2 கப்

அரிந்து கொள்ள :
·         வெங்காய்ம் – 2
·         தக்காளி – 2
·         கொத்தமல்லி, கருவேப்பில்லை – 1 கைபிடி
·         பச்சை மிளகாய் – 1

சிக்கனுடன் சேர்த்து ஊறவைக்க :
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
·         தனியா தூள் – 1/2 தே.கரண்டி
   தயிர் - 1 கப்
·         உப்பு – தேவையான அளவு

இஞ்சிப்பூண்டு பேஸ்ட் :
·         பூண்டு – 5 – 6 பெரிய பல்
·         இஞ்சி – 1 துண்டு

மைய அரைத்து கொள்ள :
·         மிளகு – 1 தே.கரண்டி
·         கசகசா – 1 தே.கரண்டி
·         சீரகம் – 1 தே.கரண்டி
·         சோம்பு – 2 தே.கரண்டி
·         பட்டை – 1
·         ஏலக்காய் – 3
·         கிராம்பு – 3

முதலில் தாளிக்க :
·         எண்ணெய் ,நெய் – தேவையான அளவு
·         பட்டை, பிரியாணி இலை,கிராம்பு,ஏலக்காய் – தாளிக்க

செய்முறை :
·         மைய அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

·         சிக்கனை சுத்தம் செய்து ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களில் ஊறவைத்து கொள்ளவும். இஞ்சி பூண்டு பேஸ்டினை அரைத்து வைக்கவும்.

·         வெங்காயம் + தக்காளியினை நீட்டாக அரிந்து கொள்ளவும். கொத்தமல்லி, புதினாவினை வெட்டி வைகக்வும்.

·         பாத்திரத்தில் எண்ணெய் + 1 மேஜை கரண்டி நெய் ஊற்றி முதலில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்த பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

·         வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, புதினா கொத்தமல்லி என்று ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி கொள்ளவும்.

·         பிறகு அரைத்து வைத்து இருக்கும் மசாலாவினை இதில் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

·         இத்துடன் ஊறவைத்துள்ள சிக்கனை சேர்த்து கிளறி வேகவிடவும்.

·         சிக்கன் 3/4 வெந்தவுடன் அரிசியினை போட்டு தேவையான அளவு தண்ணீர்  உப்பு சேர்த்து வேகவிடவும்.

·         பிரியாணி ரெடியானதும் அதன் மீது 1 மேஜை கரண்டி நெய் + எலுமிச்சை சாறு பிழிந்து கிளறிவிடவும். சுவையான பிரியாணி ரெடி…இதனை சிக்கன் கிரேவி, முட்டை, தயிர் பச்சடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


குறிப்பு :
விரும்பினால் அரிசியினை அப்படியே இதில் சேர்த்து வேகவைக்காமல் 3/4 பதம் வேகவைத்து பிறகு இதில் சேர்த்து தம் முறையில் சமைக்கலாம்.

மசாலா பொடியினை Dry Roast செய்து பொடித்து வைத்து கொண்டால் விரும்பிய பொழுது சிக்கன், மட்டன் க்ரேவிகள் செய்யும் பொழுது கூட செய்யலாம்.

1 கப் அரிசிக்கு 1 மேஜை கரண்டி நெய் சேர்த்து கொண்டால் போதும்…..

கண்டிப்பாக இஞ்சியின் அளவினைவிட பூண்டு அதிகம் சேர்த்து கொள்ளவும்.

27 comments:

Reva said...

super akka... ithai kandippa seirein... ungalukkum aasiya akkavukum nanriii....
Rreva

Pavithra said...

Paarkave miga arumaiyaga irukiradhu Geetha.. inda murai intha recipe sethu parkeren..love that masala mixtures...sure will let u know..annal chicken illamalthaan seiya muduyum...viraivaga solgiren.

Chitra said...

ஆசியா ரெசிபி பார்த்து செய்து பார்த்தேன்... நல்லா வந்துச்சு... உங்கள் செய்முறையும் ட்ரை பண்றேன்.

S.Menaga said...

ஆசியாக்கா குறிப்பை பார்க்கும்போதே செய்யனும்னு நினைத்தேன்,இப்போ உங்க ரெசிபியை பார்க்கும் போதே விரைவில் செய்துடுறேன்...

Kurinji said...

Paarkkum poothe sundi ilukkuthu....pakkathu veeda iruntha nalla irukkuma geetha...

Malar Gandhi said...

Wow, sounds so delicious. I have no idea where Parangipettai located at...but love this new twist' of using white peppercorns-poppy seeds and all. Gonna try this for sure' am a biriyani addict:):)

Shanavi said...

Bookmarked sis, Sure try when I buy chicken next time

athira said...

Super Briyani...

GEETHA ACHAL said...

நன்றி ரேவதி...கண்டிப்பாக செய்து பாருங்க...அருமையாக இருக்கு...

GEETHA ACHAL said...

நன்றி பவித்ரா...கண்டிப்பாக வெஜ்ஜீஸ் சேர்த்து செய்து பாருங்க...சூப்பராக இருக்கும்...

GEETHA ACHAL said...

நன்றி சித்ரா...நீங்களும் செய்து பார்த்தீங்களா...ரொம்ப சூப்பராக இருக்கும்....எனக்கும் மிகவும் பிடித்து இருந்தது...

நன்றி மேனகா...கண்டிப்பாக செய்து பாருங்க...

GEETHA ACHAL said...

நன்றி குறிஞ்சி...வாங்க எங்க வீட்டிற்கு...செய்து கொடுகிறேன்...

நன்றி மலர்...கண்டிப்பாக செய்து பாருங்க...சூப்பராக இருக்கும்...

நன்றி ஷானாவி...கண்டிப்பாக செய்து பாருங்க....

Priya said...

Wow briyani attakasama irruku...paathathume pasikuthu..

Premalatha Aravindhan said...

I love all kind of briyani,this is really wonderful version.Luks delicious.

savitha ramesh said...

romba nalla irukku geetha.....will try it soon

Sangeetha Nambi said...

Same as my mom's method. Yummy :)

சசிகுமார் said...

தலப்பாக்கட்டு பிரியாணி, ஆம்பூர் பிரியாணி இது ரெண்டு ஏற்க்கனவே தெரியும் இப்பொழுது மூன்றாவதாக பரங்கிபேட்டை பிரியாணி நன்றி அக்கா பிரிண்ட் எடுத்தாச்சு.

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

Looks good... But sorry I am a veggie! :(

ஜெய்லானி said...

எங்க ஊர் பிரியாணியை கண்ணுலகாட்டி ஜொள் விட வச்சிடீங்களே :-))

ஸாதிகா said...

அவசியம் செய்து பார்க்கவேண்டும் கீதாஆச்சல்

asiya omar said...

ஆஹா அசத்தலாக செய்து காட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.
உங்க முறையும் அருமை.பிரியாணி என்றாலே கெஸ்ட் வந்தால் தான் செய்வது வழக்கம்,எனவே ஒரு கிலோ அளவு அல்லது கூடவே செய்வதால் அதையே படம் எடுத்து போட்டு விடுவேன்.நீங்க கொஞ்சம் அளவு கொடுத்து செய்து காட்டியது சூப்பர்.

Anonymous said...

superb presentation geetha

GEETHA ACHAL said...

நன்றி ப்ரியா..

நன்றி ப்ரேமா..

நன்ரி சவிதா...

நன்றி சங்கீதா..

நன்றி சசி..கண்டிப்பாக செய்து பார்த்து சொல்லுங்க..

GEETHA ACHAL said...

நன்றி ரவி..

நன்றி ஜெய்லானி....இது உங்க ஊர் பிரியாணியா...சூப்பராக இருந்தது...

நன்றி ஸாதிகா...கண்டிப்பாக செய்து பாருங்க..

நன்றி ஆசியா அக்கா...இந்த பிரியானி ரொம்ப சூப்பராக இருந்தது...உங்களுக்கு நன்றி..இன்னும் நிறைய பிரியாணி வகைகள் சொல்லி தாங்க...

Smilzz said...

Salam aleikum sister

Its neat and clear procedure, but this is the first time i'm gonna make briyani.So I'm having a doubt regarding adding water! How much water I need to add for both chckn and the rice? Please do reply.

Thanks & Regards

GEETHA ACHAL said...

நன்றி smilz...

சிக்கனில் தண்ணீர் சேர்க்க தேவையில்லை...சிக்கனில் இருந்தே நிறைய தண்ணீர் வெளியில் வரும்...அதனால்....

பிரஸர் குக்கரில் செய்வது என்றால் 1 கப் அரிசிக்கு 1& 1/2 கப் தண்ணீர் சேர்த்தால் போதும்.

அதுவே மைக்ரேவேவில் என்றால் 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் வைக்கவும்.

Rice Cooker என்றால் 1 கப் அரிசிக்கு 1 & 3/4 கப் வைத்தால் சரியாக இருக்கும்.

Bharathy said...

Nanum senchu parthuvittu solkirene :)

Related Posts Plugin for WordPress, Blogger...