ரிக்கோடா சீஸ் மில்க் ஸ்வீட் - Ricotta Cheese Milk Sweetஎளிதில் செய்ய கூடிய ஸ்வீட்…அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்…நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 12 -  15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         ரிக்கோடா சீஸ் – 1 பெரிய கப் (12 - 16 oz சேர்த்து கொள்ளலாம்)
·         கண்டன்ஸ்டு மில்க் / Sweetened Condensed Milk – 1 டின் (15 oz)
·         நெய் – 2 மேஜை கரண்டி
·         ஏலக்காய் – 2 பொடித்தது
·         முந்திரி,பிஸ்தா – 2 மேஜை கரண்டி பொடித்தது (விரும்பினால்)

செய்முறை :
·         ரிக்கோடா சீஸ் + கண்டன்ஸ்டு மில்க் + நெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.


·         கடாயில் கலந்த கலவையினை ஊற்றி வேகவிடவும்.


·         5 நிமிடங்கள் , அடிக்கடி நன்றாக கிளறிவிட்டு ஏலக்காய் பொடியினை தூவி கிளறவும்.


·         மேலும் 5 நிமிடங்கள் தண்ணீர் வற்றி கெட்டியான பதம் வரும் வரை அடிக்கடி கிளறிவிடவும்.


·         கெட்டியாகியவுடன், ஒரு தட்டில் நெய் தடவி அதில் இதனை கொட்டி சமப்படுத்தி அதன் மீது முந்திரி,பிஸ்தாவினை தூவி விரும்பிய வடிவத்தில் கட் செய்து அரை மணி நேரம் ஆறவிடவும்.


·         சுவையான எளிதில் செய்ய கூடிய ஸ்வீட் ரெடி…

கவனிக்க:
இதனை மைக்ரோவேவிலும் செய்யலாம்…இதே மாதிரி பாத்திரத்தில் உள்ள கலவையினை  அடிக்கடி 2 நிமிடத்திற்கு ஒரு முறை வெளியில் எடுத்து கிளறிவிட்டு திரும்பவும் வேகவிட வேண்டும்.

கண்டன்ஸ்டு மில்கிற்கு பதிலாக சக்கரை 1 கப் + பட்டர்/நெய் – 1/2 கப் சேர்த்து கொள்ளலாம்.

ஏலக்காயினை பொடிக்கும் பொழுது 2 தே.கரண்டி சக்கரையினை சேர்த்து கொண்டு பொடித்தால் எளிதில் அரைப்படும்.

23 comments:

Anisha Yunus said...

ஒரு டின் கன்டன்ஸ்டு மில்க் வச்சிட்டு என்ன செய்யறதுன்னு யோசிச்சிட்டிருந்தேன். ரிக்கோட்டா சீஸ்தேன் இல்ல. வாங்கி வந்து செஞ்சு சொல்றேங்கக்கா.

Unknown said...

super recipe geetha......will try and tell u soon

Mahi said...

நல்லாஇருக்கு கீதா! இந்த ஸ்வீட் ஒரு ப்ரெண்ட் வீட்டுல சாப்ட்டிருக்கேன்.:)

Cool Lassi(e) said...

Geetha,
These cheese squares look fabulous with the sprinkling of pista and cashew..

Kanchana Radhakrishnan said...

super recipe Geetha.

Chitra said...

Picture perfect and awesome!
I will try this recipe for sure.
Thank you.

ஸாதிகா said...

கடையில் வாங்கியது போலவே அழகாக செய்து இருக்கீங்க கீதா.

Asiya Omar said...

பார்க்க அழகாக இருக்கு.செய்து பார்க்கனும் கீதா.

GEETHA ACHAL said...

நன்றி அன்னு...கண்டிப்பாக செய்து பாருங்க...ரொம்ப நன்றாக் இருக்கும்...ரொம்ப ஈஸியாக எளிதில் செய்ய கூடியதாக இருக்கும்...டேஸ்டும் சூப்பர்..

நன்றி சவிதா..

நன்றி மகி...

நன்றி கூல்...

GEETHA ACHAL said...

நன்றி கஞ்சனா..

நன்றி சித்ரா..கண்டிப்பாக செய்து பாருங்க...நல்லா இருக்கும்.....

நன்றி ஸாதிகா அக்கா...

நன்றி ஆசியா அக்கா...

Priya Suresh said...

Ippave rendu yeduthu saapidanam pola irruku..marvellous sweets!

திருப்பூர் சரவனக்குமார் said...

அருமை சாப்பிட தூண்டுகிறது....

Reva said...

Wow..... superb easy recipe.... kandippaa try panrein...
Reva

apsara-illam said...

ஆஹா.... நானே சரியான ஸ்வீட் பைத்தியம் கீதா.... எனக்கு இந்த ஸ்வீட்டின் அசத்தலான ஃபோட்டோ போட்டு விட்டு ஆவலை தூண்டிட்டீங்க போங்க....
ரிக்கோட்டா சீஸ் இதுவரை வாங்கியது இல்லை.ஆனால் வாங்கி செய்துடுவோமுல்ல...
மிகவும் நல்ல குறிப்பை கொடுத்து அசத்தியிருக்கும் உங்களுக்கு எனது பாராட்டுக்களும்,வாழ்த்க்துக்களும் கீதா...

அன்புடன்,
அப்சரா.

Raks said...

Looks superb,sounds simple too!

Nithu said...

Such a lovely sweet. Sure want to try.

Pushpa said...

Delicious ricotta sweet.

Sensible Vegetarian said...

Supera errukku.

ஸாதிகா said...

கடையில் வாங்கியதைப்போல் அழகாக செய்து இருக்கீங்க

GEETHA ACHAL said...

நன்றி ப்ரியா..

நன்றி சரவணக்குமார்...

நன்றி ரேவதி..

நன்றி அப்சரா...கண்டிப்பாக செய்து பாருங்க...நல்லா இருக்கும்...

GEETHA ACHAL said...

நன்றி ராஜி..

நன்றி நிது...கண்டிப்பாக செய்து பாருங்க..

நன்றி புஷ்பா..

நன்றி சதானா...

Jaleela Kamal said...

ரொம்ப ஈசியாக இருக்கு, பார்க்கவும் அருமையாக இருக்கு கீதா ஆச்சல்

Anonymous said...

Idhu dhaan kalakand endru sweet shop-la irukko ?

Related Posts Plugin for WordPress, Blogger...