பார்லி சப்பாத்தி - Barley Chapathiஎளிதில் செய்ய கூடிய சத்தான பார்லி சப்பாத்தி…நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  • பார்லி மாவு – 1 கப்
  • கோதுமை மாவு – 2 கப்
  • உப்பு – சிறிதளவு

 செய்முறை :
         பார்லி மாவு + கோதுமை மாவு + உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். இத்துடன் தேவையான அளவு சூடான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.


·         இதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.


·         பிறகு சப்பத்தியினை உருட்டி கொள்ளவும்.


·         கல்லினை காயவைத்து சப்பாத்திகளை சுடவும்.


·         சுவையான சத்தான பார்லி சப்பாத்தி ரெடி.

குறிப்பு :
பார்லி சப்பாத்தி மிகவும் softஆக இருக்கும். விரும்பினால மாவு பிசைந்த பிறகு  மணி நேரம் ஊறவைத்த பிறகு சப்பாத்திகள் செய்யலாம்.

கோதுமை மாவு அரைக்கும் பொழுது பார்லியினை சேர்த்து அரைத்து வைத்து கொண்டால் ரொம்ப usefulஆக இருக்கும்.

இங்கு பார்லி மாவு என்று தனியாக இந்தியன் கடைகளில் கிடைக்கும்.

இந்த சப்பாத்தியினை சூடாக சாப்பிடும் பொழுது மிகவும் நன்றாக இருக்கும். 2 – 3 மணி நேரம் கழித்து சாப்பிட வேண்டும் என்றால், இதனை சுட்டவுடன் பாத்திரத்தில் போட்டு தட்டு போட்டு முடிவிட்டால் Softஆக இருக்கும்.

ஆயில்-ப்ரீ பிரவுன் ரைஸ் தட்டை – Oil – Free Brown Rice Thattai – Using Oven


எளிதில் செய்ய கூடிய சத்தான மாலைநேர ஸ்நாக்….

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         வேகவைத்த பிரவுன் ரைஸ்(Leftover Brown Rice) – 2 கப்
·         உப்பு – தேவையான அளவு

தாளித்து சேர்க்க :
·         கடுகு, சீரகம் , உளுத்தம்பருப்பு, பெருங்காயம்

செய்முறை :
·         வேகவைத்த பிரவுன் ரைஸினை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக    அரைத்து கொள்ளவும்.

·         தாளித்து சேர்க்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் இல்லாமல் அப்படியே வறுத்து கொள்ளவும்.

·         அரைத்த ரைஸ் + வறுத்து வைத்துள்ள பொருட்கள் + உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். ( கலந்து வைத்துள்ள கலவை சிறிது தண்ணியாக இருந்தால் சிறிதளவு அரிசி மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்.)

·         இதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.


·         அவனை 400Fயில் முற்சூடு செய்து கொள்ளவும். நாண்-ஸ்டிக் பானில் அல்லது நாண்-ஸ்டிக் அலுமினியம் foilயினை tray மீது வைத்து, உருட்டிய உருண்டைகளை தண்ணீர் தொட்டி சிறிய தட்டைகளாக தட்டி வைக்கவும்.


·         அவனில் 10 நிமிடங்கள் வேகவிட்டு பிறகு , அதனை வெளியில் எடுத்து திருப்பிவிட்டு திரும்பவும் அவனில் வேகவிடவும்.


·         கடைசியில் 3 – 4 நிமிடங்கள் Broil Modeயில் வேகவிட்டு தட்டைகளை எடுக்கவும்.

·         சுவையான சத்தான தட்டை ரெடி.

குறிப்பு :

·         அவனில் செய்யாமல் இதனை எண்ணெயிலும் பொரித்து எடுக்கலாம். சூப்பராக இருக்கும்.

·         கலந்த கலவை சிறிது தண்ணியாக இருந்தால் அரிசி மாவு சேர்த்து கொள்ளவும்.

·         விரும்பினால் தாளிக்க 1 தே.கரண்டி எண்ணெய் சேர்த்து கொள்ளவும்.

·         Non-Stick Aluminium Foil உபயோகித்தால் எண்ணெய் தேவையே இல்லை.

My sweetie.....Akshata Birthday......இன்று அக்‌ஷ்தா குட்டிக்கு 4வது பிறந்தநாள்…எல்லொரிடமும் அவளுக்கு பிறந்தநாள் வருகின்றது….அவளுக்கு இப்பொழுது நான்கு வயது ஆகப்போகின்றது என்று சொல்வதில் மிகவும் சந்தோசம்..

ஒரு மாதத்திற்கு முன்னமே என்ன என்ன எல்லாம் அவளுக்கு வேண்டும் என்று ஒரு பெரிய லிஸ்டே போட்டாள்….குழந்தைகளுக்குகே விருப்பமான பலூன் தான் முதல் இடம்…அதுவும் அவளுடைய favorite கலரான ப்ளூ கலரில் தான் வேண்டும் என்றாள்…(இரண்டு வாரத்திற்கு முன்னாடி அவளுக்கு க்ரீன் தான் ரொம்ப பிடிக்கும்….)..அதனால் அவளுக்கு பிடித்த கலரில் பலூன் வாங்கி வீட்டினை decorate செய்தேன்..


அப்பறம் குழந்தகளை பெரிதும் கவரும் Dora & Deigo…அவளுக்காக பெரிய சைஸில் வாங்கி சுவற்றில் ஒட்டினோம்…எல்லாமே டோரா மயம் தான்….


கேக்கும் கூட டோரா கேக் தான் வேண்டும் என்று ஆசைப்பட்டாள்…முன்பு எல்லாம் எங்க விருப்பம் தான்..இப்ப வளர்ந்துவிட்டதால் அவளே என்ன வேண்டும் என்று சொல்கின்றாள்…

Dora Table cloth, Dora Cutouts, Dora Balloons என்று ஒரே டோராவாக காட்சி அளித்தது……அப்பறம் pinataவும் டோரா தான்…அவளுக்கு பிடித்தமான சாக்கிலேட்ஸ் போட்டு  வைத்தோம்…ரொம்ப சந்தோசமாக இருந்தாள்…எல்லாமே ஒரே நாளில் செய்யாமல் கேக்கினை மட்டும் இன்று வெட்டினோம்…மற்றதை எல்லாம் Sunday செய்தோம்…


அவள் March 28th , 5 PMயிற்கு பிறந்தாள் என்பதால் காரக்டாக அந்த நேரம் கேக் வெட்டினோம்…..அப்பறம் நண்பர்கள் அனைவருக்கும் கேக் கொடுத்தோம்…ரொம்ப நல்லா போச்சு….நீங்க கேக் எடுத்து கொள்ளுங்க…

பிறந்தநாள் கொண்டாட்டம்.....It'zzzzzzzzzzzzzzzzz Party Time...எல்லொரும் ஸ்வீட் எடுத்து கொள்ளுங்க…என்னடா ஆவுனா ஸ்வீட் எடுத்துக்க சொல்கின்றாங்க என்று நினைக்கின்றிங்களா…

இன்று அக்‌ஷ்தாவிற்கு 4வது பிறந்தநாள்…அத்துடன் இன்னொரு பிறந்தநாளையும் கொண்டாட வேண்டும்..அதாங்க என்னுடைய சமையல் அறையிற்கும் (ப்ளாக்) இன்று 2வது பிறந்தநாள்..

என்னுடைய வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்….

காரமெல் கஸ்டர்ட் - Caramel Custard


சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         பால் – 2 கப்
·         சக்கரை – 1 கப்
·         முட்டை – 3
·         வெனிலா எஸன்ஸ் – 1/4 தே.கரண்டி

காரமெல் செய்ய :
·         சக்கரை – 1/4 கப்

செய்முறை :
·         முட்டையினை உடைத்து சிறிது பால் சேர்த்து நன்றாக நுரை வரும் வரை அடித்து கொள்ளவும். இத்துடன் சக்கரை + பால் + வெனிலா எஸன்ஸ் எல்லாம் சேர்த்து கலக்கவும்.

·         கலந்து வைத்து கலவையினை வடிகட்டி கொள்ளவும்.

·         காரமெல் செய்ய கடாயில் சக்கரையினை போட்டு வறுக்கவும். (கவனிக்க : சக்கரையில் தண்ணீர் சேர்க்காமல் வறுக்கவும். ) கலர் மாறி வரும் பொழுது கரமெல் ரெடி. ( காரமெல் செய்ய இங்கே சென்று பார்க்கவும்.)

·         கஸ்டர்ட் செய்யும் பாத்திரத்தில், காரமெலினை ஊற்றவும்.


·         காரமெல் மீது கலந்து வைத்துள்ள கலவையினை ஊற்றவும்.


·         இதனை இட்லி வேகவைப்பது போல ஆவியில் 20 - 25 நிமிடங்கள் வேகவிடவும்.·         சுவையான எளிதில் செய்ய கூடிய காரமெல் கஸ்டர்ட் ரெடி.     பரிமாறும் பொழுது காரமெல் பகுதி மேலே வருமாறு வைக்கவும்.


கவனிக்க:
காரமெல் செய்யும் பொழுது தண்ணீர் சேர்க்க வேண்டாம்…அப்படியே விரும்பினால் 2 – 3 தே.கரண்டி சேர்த்து கொள்ளுங்கள்…இல்லை என்றால் கரமெல் நன்றாக வராது…அதற்கு பதில் சக்கரை பாகு தான் வரும்..

வெனிலா எஸன்ஸிற்கு பதிலாக 2 – 3 ஏலக்காய் பொடித்து சேர்த்து கொள்ளலாம்.

இந்த கஸ்டர்டினை எந்த பாத்திரத்திலும் செய்யலாம்..

பார்லி க்ரிட்ஸ் இட்லி - Barley Grits Idly - Barley Indian Recipe / Idly Varietiesகாலை நேரத்தில் எளிதில் செய்ய கூடிய சத்தான இட்லி…

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         பார்லி மாவு – 2 கப்
·         க்ரிட்ஸ் – 1 கப்
·         தயிர் – 2 கப்
·         உப்பு – தேவையான அளவு

தாளித்து சேர்க்க :
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு – தாளிக்க
·         கருவேப்பில்லை – 5 இலை
·         பெருங்காயம் – சிறிதளவு
·         காய்ந்தமிளகாய் – 2

செய்முறை :
·         தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கொள்ளவும்.

·         பார்லி மாவு + க்ரிட்ஸ் + தயிர் + தாளித்த பொருட்கள் எல்லாம் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும்.

·         இந்த மாவினை 10 நிமிடங்கள் ஊறவிட்டு, இட்லி தட்டில் ஊற்றவும்.


·         இட்லிகளினை வேகவிடவும்.


·         சுவையான சத்தான இட்லி ரெடி. இதனை சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.


கவனிக்க:
விரும்பினால் க்ரிட்ஸினை மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக பொடித்து சேர்த்து கொண்டால் 10 நிமிடங்கள் கூட ஊறவைக்க தேவையில்லை..உடனே இட்லிகள் செய்யலாம்.

தயிர் சேர்க்கவிரும்பம் இல்லை என்றால், இத்துடன் 2 கப் இட்லி மாவு சேர்த்து செய்து சாப்பிடலாம்.

க்ரிட்ஸுற்கு பதிலாக கோதுமை ரவை அல்லது ரவையினை பயன்படுத்தலாம்.முட்டை தொக்கு - Muttai Thokku / Egg Thokkuசமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         வேகவைத்த முட்டை – 3
·         வெங்காயம் – 2 பெரியது
·         தக்காளி – 2
·         பூண்டு – 10 பல்

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
·         தனியா தூள் – 1/2 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

முதலில் தாளிக்க :
·         எண்ணெய் – சிறிதளவு
·         கடுகு – தாளிக்க
·         சோம்பு தூள் – 1 தே.கரண்டி
·         கருவேப்பில்லை – 5 இலை

கடைசியில் சேர்க்க :
·         மிளகுதூள் – 1 தே.கரண்டி (விரும்பினால் )
·         கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :
·         வெங்காயம் + தக்காளியினை பொடியாக நறுக்கி கொள்ளவும். பூண்டினை நசுக்கி வைக்கவும்.

·         கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து பூண்டினை சேர்த்து வதக்கவும்.

·         பூண்டு வதங்கிவுடன் வெங்காயம் + தக்காளி ஒன்றின்பின் ஒன்றாக போட்டு 2 – 3 நிமிடங்கள் நன்றாக வதக்கி கொள்ளவும்.

·         இத்துடன் தூள் வகைகள் + வேகவைத்த முட்டை , தூள் வசனை போகும் வரை சேர்த்து வேகவிடவும்.

·         கடைசியில் மிளகு + கொத்தமல்லி தூவி மேலும் 1 நிமிடம் கிளறிவேகவிடவும். சுவையான எளிதில் செய்ய கூடிய தொக்கு ரெடி.


கவனிக்க:
முட்டையில் மசாலா நன்றாக சேர முட்டையில் 2 – 3 இடத்தில் கீறிவிடவும். முட்டை உடைந்துவிடாமல் கீறிவிடவும்.

விரும்பினால் இத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து க்ரேவியாக செய்தால் இட்லி, தோசை, சாப்பாத்தி, சாதம் போன்றவைக்கு சூப்பராக இருக்கும்.

முட்டை நிறைய வேகவைத்து தோல் நீக்கி ப்ரிஜில் வைத்து கொண்டால் 2 – 3 நாட்கள் வரை பயன்படுத்தலாம். வேலையும் மிச்சம்.

பார்லி அவகோடா க்ரிஸ்ப் - Barley Avocado Crispsதக்காளி, மிளகாயினை பற்றி கருத்து தெரிவித்தற்கு அனைவருக்கும் மிகவும் நன்றி… தக்காளி + மிளகாயின் தனி தனி குணங்கள் தெரிந்து கொண்டேன்..

என்னுடைய கேள்வியே இந்த இரண்டும் சேரும் combinationயில் எதாவது பிரச்சனை ஏற்படும்…தெரிந்தவர்கள் கண்டிப்பாக தெளிவுபடுத்தவும்…

இந்த பார்லி க்ரிஸ்ப் சத்தான மாலை நேர ஸ்நாக்….இதனை 1 வாரம் வரை வைத்து சாப்பிடலாம்…நீங்கள் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         பார்லிமாவு – 1 கப்
·         அவகோடா – 1
·         சீரகதூள் – 1 தே.கரண்டி
·         மிளகுதூள் – 1/2 தே.கரண்டி
·         உப்பு – 1/2 தே.கரண்டி

செய்முறை :
·         பார்லி மாவு + அவகோடா + தூள் வகைகள் எல்லாம் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். ( தண்ணீர் சேர்க்க தேவையில்லை)


·         பிசைந்த மாவினை சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.


·         அவனினை 400Fயில் முற்சூடு செய்யவும். உருட்டிய உருண்டைகளை ஒவ்வொன்றாக தட்டி அவனில் வைக்கும் ட்ரேயில் அடுக்கி கொள்ளவும்.


·         அவனில் 400Fயில் 10 நிமிடங்கள் பேக் செய்யவும். பிறகு ட்ரேயினை வெளியில் எடுத்து  ஒவ்வொன்றாக திருப்பிவிட்டு மேலும் 6 – 8 நிமிடங்கள் வேகவிடவும்.


·         சுவையான சத்தான க்ரிஸ்ப்ஸ் ரெடி.

கவனிக்க :
·         மாவு பிசையும் பொழுது கண்டிப்பாக தண்ணீர் சேர்க்க தேவையில்லை.

·         அதே மாதிரி இந்த க்ரிஸ்புக்கு எண்ணெயும் சேர்க்க வேண்டாம்.

·         பார்லி மாவுக்கு பதிலாக ஒட்ஸில் செய்து பாருங்கள்…அதுவும் நன்றாக இருக்கும்.

·         அவன் இல்லாதவர்கள் இதனை சப்பாத்தி மாதிரி செய்து சாப்பிடலாம்…

தக்காளி , மிளகாயின் விதைகளை சாப்பிடலாமா…எங்க வீட்டில் அம்மா எப்பொழுதுமே தக்காளி, பச்சைமிளகாயினை விதைகள் நீக்கியே சமைப்பாங்க…கேட்டால் அது சக்கரையின் அளவினை அதிகம் செய்யும் என்று சொல்லிவிடுவாங்க….

ஒ.கே…தக்காளியின் விதைகளை சாப்பிட்டால் வயிற்றில் கல் வரும் என்று சொல்வதால் அதனை சாப்பிடாமல் இருப்பது நல்லது தான்…ஆனால் ஏன் இந்த மிளகாயிற்கு இப்படி சொல்ல வேண்டும்…

எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு டவுட்…தக்காளி + பச்சைமிளகாயின் விதைகளினை சாப்பிட கூடாதா…உடம்பிற்கு நல்லது இல்லையா…அதுவும் சக்கரை அதிகம் உள்ளவர்கள் அதனை சாப்பிடவே கூடாது என்று எல்லாம் சொல்கின்றாங்க…அது உண்மையா…


ஆனால் நெட்டில் தேடி பார்த்தால் தக்காளியினை சாப்பிடாலாம் என்று போட்டு இருக்கின்றது…ஆனால் அதில் அதனுடைய விதைகளை பற்றி ஒன்னுமே சொல்லவில்லை…

அதே மாதிரி மிளகாயும் சக்கரையினை அளவினை குறைக்கவே உதவுக்கின்றது….அதனையும் குடைமிளகாயினை( Capsicum) குறிப்பிட்டு இருக்காங்க…மற்றத்தினை பற்றி ஒன்றும் தெளிவாக போடவில்லை…


இந்த விதைகள் சாப்பிடுவதால் Insulin Resistance ஏற்படுமா..

எப்பொழுதும் புளி + தக்காளி + மிளகாய்தூள் சேர்த்து செய்யும் சமையலினை சாப்பிடும் பொழுது உடலில் உள்ள சக்கரையின் அளவினை அதிகம்படுத்துமா..இந்த காம்பினேஷனில் எதாவது இருக்கின்றதா..

ஆனால் அதே புளி + தக்காளி சேர்த்து வெரும் ரசம் சாப்பிட்டால் கூட ஒன்றுமே ஆகமாட்டுதே…இதற்கும் Insulin resistanceயிற்கும் , உடலில் இருக்கும் சக்கரையின் அளவிற்க்கும் சம்மந்தம் இல்லையா

தக்காளி + மிளக்காய்தூள் சேர்த்து செய்யும் எந்த ஒரு சமையலிலும் ஏன் இப்படி ஆகின்றது…எங்க வீட்டில் அம்மா எப்பொழுதுமே உப்பு , எண்ணெய் எல்லாமே மிக மிக குறைவாக தான் சேர்ப்பாங்க…அப்படியே பழகிவிட்டது…

ஆனால் மிளகாய்தூள் சேர்க்காமல் நம்மூர் சமையல் செய்யமுடியாது என்று சொல்றாங்க…உண்மை தானே…ஆனால் எந்த காம்பினேஷனில் தவறு இருக்கு என்று தெரியவில்லை…

கண்டிப்பாக தெரிந்தவர்கள் யாரவது பதில் சொல்லுங்க…

சிக்கன் ஸ்டாக் பிரியாணி - Chicken Stock Biryaniஎப்பொழுதும் செய்யும் பிரியாணியில், வேகவைக்கும் பொழுது தண்ணீர்க்கும் பதிலாக சிக்கன் ஸ்டாக் சேர்த்து செய்து பாருங்க…பிரியாணியின் சுவை அதிகமாக இருக்கும்…

நீங்களும் செய்து பார்த்து உங்க கருத்தினை தெரிவிக்கவும்…

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 – 40 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         பாஸ்மதி அரிசி – 2 கப்
·         சிக்கன் ஸ்டாக் – 3 கப்
·         எலுமிச்சை சாறு – 1 மேஜை கரண்டி
·         நெய் – 1 மேஜை கரண்டி
·         உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

அரிந்து கொள்ள :
·         வெங்காயம் – 2
·         தக்காளி – 2
·         பச்சைமிளகாய் – 2
·         புதினா, கொத்தமல்லி - சிறிதளவு

சிக்கனுடன் ஊறவைத்து கொள்ள :
·         சிக்கன் – 1/4 கிலோ
·         தயிர் – 1 கப்
·         மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·         மஞ்சள் தூள் – 1 தே.கரண்டி
·         இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி
·         உப்பு – 1 தே.கரண்டி

முதலில் தாளிக்க :
·         பட்டை, கிராம்பு, ஏலக்காய்
·         சோம்பு தூள் – 1 தே.கரண்டி
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி

செய்முறை :
·         சிக்கனை சுத்தம் செய்து ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

·         அரிசியினை 10 நிமிடங்கள் ஊறவிடவும். வெங்காயம், தக்காளியினை நீளமாகவும், பச்சைமிளகாயினை இரண்டாக கீறிவைக்கவும். புதினா + கொத்தமல்லியினை பொடியாக நறுக்கவும்.

·         கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு சேர்த்து தாளித்த பின் வெங்காயம் போட்டு வதக்கவும்.


·         வெங்காயம் வதங்கியவுடன், தக்காளி சேர்த்து வதக்கவும்.


·         இத்துடன் ஊறவைத்துள்ள சிக்கன் சேர்த்து வேகவிடவும்.


·         5 நிமிடம் கழித்து புதினா + கொத்தமல்லி + பச்சைமிளகாய் சேர்த்து வேகவிடவும்.

·         பிறகு அரிசியினை சேர்த்து கிளறி 2  - 3 நிமிடங்கள் வேகவிடவும்.

·         மைக்ரேவேவில் வைக்கும் பாத்திரத்தில் இதனை கொட்டி அத்துடன் சிக்கன் ஸ்டாக் + உப்பு சேர்த்து கிளறவும்.

·         மைக்ரேவேவில் 15 நிமிடங்கள் தட்டு போட்டு மூடி வேகவிடவும்.

·         சுவையான எளிதில் செய்ய கூடிய பிரியாணி ரெடி.

கவனிக்க:
இதில் சிக்கன் ஸ்டாக சேர்த்து செய்வதால் கூடுதல் சுவையுடன் இருக்கும். சோடியம் குறைவான ஸ்டாக் பயன்படுத்தவும். நல்லது…

வெஜ் பிரியாணிக்கும் இதே மாதிரி சிக்கன் ஸ்டாகிற்கு பதிலாக வெஜ் ஸ்டாக் பயன்படுத்தினால் பிரியாணி நிமிடங்கள் காலியாகிவிடும்…

இதே மாதிரி தாளித்து பிரஸர்குக்கரில் செய்யலாம்…நான் எப்பொழுதுமே எல்லாமே கிளறி மைக்ரேவேவில் வைத்து சமைத்துவிடுவேன். விரும்பினால் இதனை மைக்ரேவேவிலும் செய்யலாம்…ஆனா எனக்கு அந்த பொருமை எல்லாம் கிடையாது…
Related Posts Plugin for WordPress, Blogger...