பார்லி அவகோடா க்ரிஸ்ப் - Barley Avocado Crispsதக்காளி, மிளகாயினை பற்றி கருத்து தெரிவித்தற்கு அனைவருக்கும் மிகவும் நன்றி… தக்காளி + மிளகாயின் தனி தனி குணங்கள் தெரிந்து கொண்டேன்..

என்னுடைய கேள்வியே இந்த இரண்டும் சேரும் combinationயில் எதாவது பிரச்சனை ஏற்படும்…தெரிந்தவர்கள் கண்டிப்பாக தெளிவுபடுத்தவும்…

இந்த பார்லி க்ரிஸ்ப் சத்தான மாலை நேர ஸ்நாக்….இதனை 1 வாரம் வரை வைத்து சாப்பிடலாம்…நீங்கள் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         பார்லிமாவு – 1 கப்
·         அவகோடா – 1
·         சீரகதூள் – 1 தே.கரண்டி
·         மிளகுதூள் – 1/2 தே.கரண்டி
·         உப்பு – 1/2 தே.கரண்டி

செய்முறை :
·         பார்லி மாவு + அவகோடா + தூள் வகைகள் எல்லாம் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். ( தண்ணீர் சேர்க்க தேவையில்லை)


·         பிசைந்த மாவினை சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.


·         அவனினை 400Fயில் முற்சூடு செய்யவும். உருட்டிய உருண்டைகளை ஒவ்வொன்றாக தட்டி அவனில் வைக்கும் ட்ரேயில் அடுக்கி கொள்ளவும்.


·         அவனில் 400Fயில் 10 நிமிடங்கள் பேக் செய்யவும். பிறகு ட்ரேயினை வெளியில் எடுத்து  ஒவ்வொன்றாக திருப்பிவிட்டு மேலும் 6 – 8 நிமிடங்கள் வேகவிடவும்.


·         சுவையான சத்தான க்ரிஸ்ப்ஸ் ரெடி.

கவனிக்க :
·         மாவு பிசையும் பொழுது கண்டிப்பாக தண்ணீர் சேர்க்க தேவையில்லை.

·         அதே மாதிரி இந்த க்ரிஸ்புக்கு எண்ணெயும் சேர்க்க வேண்டாம்.

·         பார்லி மாவுக்கு பதிலாக ஒட்ஸில் செய்து பாருங்கள்…அதுவும் நன்றாக இருக்கும்.

·         அவன் இல்லாதவர்கள் இதனை சப்பாத்தி மாதிரி செய்து சாப்பிடலாம்…

25 comments:

Unknown said...

Super geetha,romba nalla irukku.

Raks said...

They look absolutely crispy Geetha!Nice recipe!

Reva said...

Super recipe... avacadovai vaithu arumaiya seithu irukeenga..
Reva

R.Gopi said...

கர கர.... மொறு மொறு....

பலே பார்லி அவகோடா க்ரிஸ்ப்...

Priya Suresh said...

Wow barley and avocado crips looks absolutely marvellous...

Kurinji said...

Innovative and healthy recipe...Room pottu yosipeengalo?
Kurinjikathambam
Event : HRH-Puffed Rice

Kurinji said...

Innovative and healthy recipe...Room pottu yosipeengalo?
Kurinjikathambam
Event : HRH-Puffed Rice

Menaga Sathia said...

ஆஹா.. அருமை கீதா,நல்லா க்ரிஸ்பியா இருக்கும் போல...

Kanchana Radhakrishnan said...

healthy recipe.

Malar Gandhi said...

Beautiful work, loved ur innovation and recipe

KrithisKitchen said...

Superb one geetha.. love the fact being eggless and oil-free.. Definitely a healthy guilt-free snack..

http://krithiskitchen.blogspot.com
Herbs & Flowers in my Platter - Coriander/Cilantro

Mahes said...

What a recipe! I have barley flour, only need avacados. Will try it for sure.

USHA said...

Wow!!!what a innovative as well healthy recipe..

சுவீட் 16 அதிரா:) said...

சூப்பர், முற்றிலும் புதிய குறிப்பு..

பிரதீபா said...

வித்தியாசமான ரெசிபி தருவதில் உங்களை அடிச்சுக்க ஆளே கெடையாதுங்க..

GEETHA ACHAL said...

நன்றி சவிதா..

நன்றி ராஜி..

நன்றி ரேவதி...

நன்றி கோபி அண்ணா..

நன்றி ப்ரியா..

GEETHA ACHAL said...

நன்றி ப்ரியா..

நன்றி குறிஞ்சி...

நன்றி மேனகா...

நன்றி கஞ்சனா..

நன்றி மலர்...

GEETHA ACHAL said...

நன்றி கீர்த்தி...

நன்றி மகேஷ்...கண்டிப்பாக செய்து பாருங்க..

நன்றி உஷா..

நன்றி அதிரா..

நன்றி பிரதீபா...

ஸாதிகா said...

மொறு மொறு அவகோடா கிரிஸ்ப்.

GEETHA ACHAL said...

நன்றி ஸாதிகா அக்கா..

பிரதீபா said...

அவகேடோ மொறுமொறுன்னு ஆனதால அவகோடா ன்னு பேரு வெச்சுட்டீங்க போல :)

Mahi said...

வித்யாசமா இருக்கு கீதா!

GEETHA ACHAL said...

ஆமாம் பிரதீபா ...இப்ப தான் நானுமெ பார்த்தேன்..மாற்றிவிடுகிறேன்...நன்றி..

நன்றி மகி..

பிரதீபா said...

விடுங்க விடுங்க.. அப்படியே இருக்கட்டும். புது ரெசிபியே கண்டுபுடிச்சுட்டீங்க, பேரு எப்படி வேணா வெக்கலாமே! பக்கோடா மாதிரி அவக்-கோடா :)

valaipathivu said...

நண்பரே! உங்கள் பிளாக்கில் கூகுள் விளம்பரம் இடம் பெற செய்து சம்பாதிக்கலாமே? மேலும் விவரங்களுக்கு இந்த பிளாக்கினை பார்வையிடவும் http://computernanban.blogspot.com/2011/05/blog-post.html

Related Posts Plugin for WordPress, Blogger...