பார்லி க்ரிட்ஸ் இட்லி - Barley Grits Idly - Barley Indian Recipe / Idly Varietiesகாலை நேரத்தில் எளிதில் செய்ய கூடிய சத்தான இட்லி…

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         பார்லி மாவு – 2 கப்
·         க்ரிட்ஸ் – 1 கப்
·         தயிர் – 2 கப்
·         உப்பு – தேவையான அளவு

தாளித்து சேர்க்க :
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு – தாளிக்க
·         கருவேப்பில்லை – 5 இலை
·         பெருங்காயம் – சிறிதளவு
·         காய்ந்தமிளகாய் – 2

செய்முறை :
·         தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கொள்ளவும்.

·         பார்லி மாவு + க்ரிட்ஸ் + தயிர் + தாளித்த பொருட்கள் எல்லாம் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும்.

·         இந்த மாவினை 10 நிமிடங்கள் ஊறவிட்டு, இட்லி தட்டில் ஊற்றவும்.


·         இட்லிகளினை வேகவிடவும்.


·         சுவையான சத்தான இட்லி ரெடி. இதனை சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.


கவனிக்க:
விரும்பினால் க்ரிட்ஸினை மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக பொடித்து சேர்த்து கொண்டால் 10 நிமிடங்கள் கூட ஊறவைக்க தேவையில்லை..உடனே இட்லிகள் செய்யலாம்.

தயிர் சேர்க்கவிரும்பம் இல்லை என்றால், இத்துடன் 2 கப் இட்லி மாவு சேர்த்து செய்து சாப்பிடலாம்.

க்ரிட்ஸுற்கு பதிலாக கோதுமை ரவை அல்லது ரவையினை பயன்படுத்தலாம்.29 comments:

சிந்தையின் சிதறல்கள் said...

நன்றிங்க நல்ல பதிவு

Bharathy said...

gohumai ravai upayogithu ithupondru idly seyven..
grits enral ennavendru puriyavillai :(..en kanavurukku ithuponda tiffin mikavum pidithamanavai..nammooril kidaikkum verentha porulkalil ippi thayiril oorvaithu idly seyyalam?(ravai godhumai kurunai thavirthu)sollungalen..

பிஞ்சுக் கவிஞர்:) அதிரா:) said...

சூப்பர். நீங்க இட்லி செய்யும்போது சூப்பரா வருது, உங்கட ஓட்ஸ் இட்லி செய்தேன் கழிபோலதான் எனக்கு வந்துது அதனால் இங்கு சொல்லவில்லை. எனக்கு எப்போதாவது அருமையாக ரவ்வை இட்லி மட்டுமே நன்றாக வரும். ஏனையவற்றையெல்லாம் உங்களைப் போன்றோரின் படம் பார்த்துத்தான் ஏப்பம் விடுவதுண்டு:).

ADHI VENKAT said...

Nice Recipie.

சாருஸ்ரீராஜ் said...

வித விதமான இட்லி வகைகள் கலக்குங்க கீதா

Raks said...

Nice and healthy break fast to kick start a day :)

Chitra said...

It looks like rava idlies. nice.

KrithisKitchen said...

Healthy recipe... Looks so inviting...

http://krithiskitchen.blogspot.com
Herbs & Flowers in my Platter - Coriander/Cilantro

Priya Suresh said...

Wat a healthy idly, superaa irruku Geetha...Spicy chutney naan kuda rendu idly saapiduven..

குறையொன்றுமில்லை. said...

அசத்தலான குறிப்பு. முதல்ல க்ரிட்ஸ்னா என்னான்னு புரியலை. நீங்க கொடுத்தலிங்க்ல போயி பாத்து சோள ரவைன்னு தெரிஞசு கிட்டேன். நன்றிம்மா.

Mahi said...

Superb Idli Geetha!

Menaga Sathia said...

ஆஹா..அசத்தல்!! இட்லி குறிப்பு நிறைய போட்டு அசத்துறீங்க..

USHA said...

Hmmm healthy and new recipe////

I'm getting many new ideas after reading your blog like usual menu using various combination.

Thanks.

சி.பி.செந்தில்குமார் said...

புதுசா இருக்கே

Unknown said...

You are very creative geetha,idly luks delicious and inviting...thanks for sharing healthy recipes...

உணவு உலகம் said...

Happy to see Nice receipies.

Unknown said...

Gritz,is omething very new to me.Will read about this from now.

GEETHA ACHAL said...

நன்றி ஹாசிம்..

நன்றி பாரதி...இதே மாதிரி ரவை,கோதுமை ரவை, ஒட்ஸ், கேழ்வரகு போன்றவையில் செய்யலாம்...இது எல்லாம் நம்மூரில் கிடைக்கும்...

நன்றி அதிரா...சில சமயம் மாவு தண்ணியாக இருந்தாலோ அல்லது தயிரின் அளவு குறைந்தாலே இப்படி இருக்கலாம்...அடுத்த முறை செய்து பாருங்க...நல்லா வரும்...

GEETHA ACHAL said...

நன்றி ஆதி..

நன்றி சாரு அக்கா..

நன்றி ராஜி..

நன்றி சித்ரா..

நன்றி கீர்த்தி..

GEETHA ACHAL said...

நன்றி ப்ரியா..

நன்றி லஷ்மி அம்மா...

நன்றி மகி..

நன்றி மேனகா..

நன்றி உஷா..

நன்றி செந்தில்குமார்...

GEETHA ACHAL said...

நன்றி ப்ரேமலதா..

நன்றி food...

நன்றி சவிதா..

vanathy said...

good one. Very healthy and looking delicious.

Jayanthy Kumaran said...

tempting presentation...healthy recipe again geetha..thanx for the recipe..:)
Tasty Appetite

சசிகுமார் said...

Idli super

Lifewithspices said...

very new one..superrr

Unknown said...

Rombavey nalla irrukku unga idlis - Naanum pala vidham idli panipathitu irruken - ithuvum oru kai pathidanum :)

Sensible Vegetarian said...

Looks so delicious, very innovative recipe.

Asiya Omar said...

எப்போ 25 வகை இட்லி போடப்போறீங்க? அருமை.

தெய்வசுகந்தி said...

எப்பவும் போல வித்தியாசமா இருக்கு!!!

Related Posts Plugin for WordPress, Blogger...