தக்காளி , மிளகாயின் விதைகளை சாப்பிடலாமா…எங்க வீட்டில் அம்மா எப்பொழுதுமே தக்காளி, பச்சைமிளகாயினை விதைகள் நீக்கியே சமைப்பாங்க…கேட்டால் அது சக்கரையின் அளவினை அதிகம் செய்யும் என்று சொல்லிவிடுவாங்க….

ஒ.கே…தக்காளியின் விதைகளை சாப்பிட்டால் வயிற்றில் கல் வரும் என்று சொல்வதால் அதனை சாப்பிடாமல் இருப்பது நல்லது தான்…ஆனால் ஏன் இந்த மிளகாயிற்கு இப்படி சொல்ல வேண்டும்…

எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு டவுட்…தக்காளி + பச்சைமிளகாயின் விதைகளினை சாப்பிட கூடாதா…உடம்பிற்கு நல்லது இல்லையா…அதுவும் சக்கரை அதிகம் உள்ளவர்கள் அதனை சாப்பிடவே கூடாது என்று எல்லாம் சொல்கின்றாங்க…அது உண்மையா…


ஆனால் நெட்டில் தேடி பார்த்தால் தக்காளியினை சாப்பிடாலாம் என்று போட்டு இருக்கின்றது…ஆனால் அதில் அதனுடைய விதைகளை பற்றி ஒன்னுமே சொல்லவில்லை…

அதே மாதிரி மிளகாயும் சக்கரையினை அளவினை குறைக்கவே உதவுக்கின்றது….அதனையும் குடைமிளகாயினை( Capsicum) குறிப்பிட்டு இருக்காங்க…மற்றத்தினை பற்றி ஒன்றும் தெளிவாக போடவில்லை…


இந்த விதைகள் சாப்பிடுவதால் Insulin Resistance ஏற்படுமா..

எப்பொழுதும் புளி + தக்காளி + மிளகாய்தூள் சேர்த்து செய்யும் சமையலினை சாப்பிடும் பொழுது உடலில் உள்ள சக்கரையின் அளவினை அதிகம்படுத்துமா..இந்த காம்பினேஷனில் எதாவது இருக்கின்றதா..

ஆனால் அதே புளி + தக்காளி சேர்த்து வெரும் ரசம் சாப்பிட்டால் கூட ஒன்றுமே ஆகமாட்டுதே…இதற்கும் Insulin resistanceயிற்கும் , உடலில் இருக்கும் சக்கரையின் அளவிற்க்கும் சம்மந்தம் இல்லையா

தக்காளி + மிளக்காய்தூள் சேர்த்து செய்யும் எந்த ஒரு சமையலிலும் ஏன் இப்படி ஆகின்றது…எங்க வீட்டில் அம்மா எப்பொழுதுமே உப்பு , எண்ணெய் எல்லாமே மிக மிக குறைவாக தான் சேர்ப்பாங்க…அப்படியே பழகிவிட்டது…

ஆனால் மிளகாய்தூள் சேர்க்காமல் நம்மூர் சமையல் செய்யமுடியாது என்று சொல்றாங்க…உண்மை தானே…ஆனால் எந்த காம்பினேஷனில் தவறு இருக்கு என்று தெரியவில்லை…

கண்டிப்பாக தெரிந்தவர்கள் யாரவது பதில் சொல்லுங்க…

26 comments:

சாருஸ்ரீராஜ் said...

பதில் தெரிஞ்சிக்க வரேன்.

vanathy said...

கீதா, உங்களுக்கு டவுட்டா? விடை தெரியலைப்பா. வாழும் நாட்கள் வரை நல்லா சாப்பிட்டு, உடற்பயிற்சிகள் செய்து, ஆரோக்கியமாக இருப்பது தான் என் பாலிஸி. இதையே எல்லோரும் பின்பற்றினால் நலம்.
தல ஜெய்லானி, எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்.

Akila said...

good one...

DNSW: F Roundup
Dish Name Starts with G
Learning-to-cook
Regards,
Akila

ஜெய்லானி said...

ஆஹா...சந்தேகம் எபப்வும் நான் தான் கேப்பேன் இப்போ உங்களுக்கா.. ஹா..ஹா..

எப்பவுமே ஏன்..இந்த கேள்வி இருக்கனும் . அதுதான் மனித இனம் முன்னேற அடிப்படை அறிவே..!! :-))

ஜெய்லானி said...

//தக்காளியின் விதைகளை சாப்பிட்டால் வயிற்றில் கல் வரும் என்று சொல்வதால் அதனை சாப்பிடாமல் இருப்பது நல்லது தான்//

கல் வரும்-ன்னு சொல்றது ஏன்னு சொன்னா பொதுவாவே தக்காளியில இருக்கில அமினோ அமிலம் ரத்தத்துல இருக்கிற யூரியாவை கண்ட்ரோல் செய்யும் பகுதியை குறைச்சிடும் .இதனால ஆட்டோமேடிக்கா கல் உருவாகிற வாய்ப்பு அதிகமாகிடும் .தண்ணீரே (அதிகம்) குடிக்கும் பழக்கம் இல்லாதவருக்கு இது ரெம்பவும் டேஞ்சர்
எது எப்படி இருந்தாலும் தண்ணீர் அதிகம் ( ஒவ்வொரு அரை மணிக்கு ஒரு முறை ) குடிக்கும் ஒருவருக்கு வாழ்க்கையில் கிட்னி பிராப்ளமே வராது .

//பச்சைமிளகாயின் விதைகளினை சாப்பிட கூடாதா…உடம்பிற்கு நல்லது இல்லையா…அதுவும் சக்கரை அதிகம் உள்ளவர்கள் அதனை சாப்பிடவே கூடாது என்று எல்லாம் சொல்கின்றாங்க…அது உண்மையா…//


ப .மிளகாயா இருந்தாலும் காய்ந்த மிளகாயா இருந்தாலும் அதுக்கும் சர்க்கரைக்கும் சம்பந்தமே இல்லை

மிளகாய் உடலுக்கு சூட்டைதரும் . குளிர்காலத்துல உடலுக்கு சூட்டைதரத்தான் மிளகாயை தயிரில் (மோரில்) ஊரவைத்து காயவைத்து வற்றலாக ஃபிரை செய்து சாப்பிடுவது தமிழரின் பழக்கம் .((ஆனா கேரளாவில இது அதிகம் ))

ஜெய்லானி said...

//எப்பொழுதும் புளி + தக்காளி + மிளகாய்தூள் சேர்த்து செய்யும் சமையலினை சாப்பிடும் பொழுது உடலில் உள்ள சக்கரையின் அளவினை அதிகம்படுத்துமா..இந்த காம்பினேஷனில் எதாவது இருக்கின்றதா..//

புளிக்கு பதில் தக்காளி அல்லது எலுமிச்சை மூனுமே டேஸ்டில ஒன்னுதான் ஆனா வித்தியாசம் நிறைய இருக்கு .

மூன்றிலும் இருக்கும் ஆசிட் வேற வேற வேலையை செய்யும் .
புளி அதிகம் சாப்பிட்டா ரத்தத்தை சுண்ட வச்சிடும் ((ஓவர் சூடு ))
தக்காளி அதிக சாப்பிட்டாலே கிட்னியில கல் வரும் வாய்ப்பு அதிகம்
எலுமிச்சம் அதிகமானா பித்தம் கூடிடும்

எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் .... கதைதான் .

நம் வீட்டு ரசத்தை பத்தி எழுதினால் முழு பதிவே போடனும் ..அவ்வளவு பெரிய கதை இருக்கு அதுக்குள்ளே :-))

ஸாதிகா said...

நல்ல பகிர்வு.விடை தெரிந்தவர்கள்: பகிர்ந்தா;ல் உபயோகமாக இருக்கும்.

Asiya Omar said...

நல்ல பகிர்வு,சகோ ஜெய்லானி விபரம் அருமை.இன்னும் யாராவது தெரிந்தால் சொல்லுங்க,எல்லாத்தையும் அளவாய்ப்போட்டு சமைத்து பழக்கமாயிட்டுது.

Unknown said...

Romba nlla kelvi.Nam nanmbargal sariyana reply vandhirukku.BTw,I have tried ur smoked brinjal chutney.it came out really good.Will post it tomo.

Unknown said...

Romba nlla kelvi.Nam nanmbargal sariyana reply vandhirukku.BTw,I have tried ur smoked brinjal chutney.it came out really good.Will post it tomo.

Jayanthy Kumaran said...

very interesting...let me google tooooo...
Tasty appetite

பிரதீபா said...

அதே அதே..இந்தக் கேள்வியோடு நான் இத்தனை வருடங்கள் (கிழிஞ்சுது, ரெண்டு வருஷத்துக்கே இந்த பில்டப்பு)சமைத்திருக்கிறேன். ஆனால் பச்சைமிளகாய் விதை கணக்கில்லை. காய்ந்த மிளகாய் விதையை தான் எடுத்து விடுவேன்.அதே போல் தக்காளி விதையும் முடிந்த வரை எடுத்து விடுவேன்.

ப.கந்தசாமி said...

எனக்குத் தெரிந்தது ஒன்றுதான். காய்ந்த மிளகாய் விதைகள் நம் வயிற்றில் ஜீரணமாவதில்லை. அதனால் சமையலில் அதை நீக்குவது தப்பில்லை. நீக்காவிட்டால் என்ன ஆகும்? தெரியவில்லை.

Raks said...

I am waiting for the comments to clear the doubts too... :)

Anonymous said...

If we drink more water it also creates some kidney problems..
http://www.wisegeek.com/can-drinking-too-much-water-be-unhealthy-or-even-dangerous.htm

Mrs.Mano Saminathan said...

பொதுவாய் தண்ணீர் குறைவாக குடிப்பவர்கள், அதிகம் வெய்யிலில் அலைபவர்கள், அடிக்கடி தண்ணீர் மாற்றி மாற்றி குடிப்பவர்கள் இவர்களெல்லாம் சிறுநீரக விஷயத்தில் கவனமாக இருப்பத் நல்லது. இந்த மாதிரி பழக்கங்கள் சிறுநீரகத்தில் கல் ஏற்பட வழி வகுக்கும். இவர்கள் தக்காளியை விதை நீக்கி உண்பதும் ஆட்டுக்கறி, அதிகம் பால், ப்ள‌ம்ஸ் சாப்பிடுவதைத் தவிர்ப்பதும் நல்லது.
பச்சை மிள‌காய், சிகப்பு மிளகாய் இவற்றின் விதைகள் அதிக காரம் என்பதால் அவற்றை எடுத்து விட்டேதான் சமைக்க வேன்டும். இது ஒரு மருத்துவர் எனக்கு சொல்லிக் கொடுத்தது. அன்றிலிருந்து விதைகளை நீக்கித்தான் சமைக்கிறேன். அதுவும் மிளகாய் வற்றலை விடவும் பச்சை மிள‌காயின் காரம் ஆபத்தானது. அதை எவ்வளவுக்கெவ்வளவு குறைத்து சமைக்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு நல்லது.

Priya Suresh said...

Sariya santhegam, naan ithu varaikum thakkali vithaiya yeduthu samachathu romba romba rare, pacha milagai vithaiya yeduthuven,karam kuraiva irrukurathu..mathapadi yennaku intha santhegam ippolernthu vanthu vidathu..yarachum pathil sollunga pa..

apsara-illam said...

ஆஹா...,என்ங்க கீதா இப்படியொரு பெரிய சந்தேகத்தை ஏற்படுத்திட்டீங்க..?
இப்ப மண்டையை குழப்பிக்க வேண்டியிருக்கே?
சகோ// ஜெய் அவர்களின் விளக்கம் அருமை.இதில் ஒரு சில விஷயங்கள் நன்கு புரிந்து கொள்ள முடிகின்றது.சிகப்பு மிளகாயின் விதையை இனி ஒதுக்கி விட வேண்டியதுதான்....
எங்கள் வீட்டில் காரம்,புளி இவற்றிற்க்கெல்லாம் அதிக இடம் கிடையாது.இருப்பினும் இந்த சந்தேகங்களுக்கு விடை தெரிந்து கொள்வது முக்கியமாச்சே....
நல்ல ஆராய்ச்சி கீதா....அதை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி....

அன்புடன்,
அப்சரா.

Menaga Sathia said...

நானும் பதிலுக்காக வெயிட்டிங்...சீக்கிரம் பதில் போடுங்க..

Sensible Vegetarian said...

Geetha very good write up, I am also waiting for some one to reply. Not sure about tomato and green chili seeds. But there are lots of major factors which cause insulin resistance grains(even whole grains like whole wheat, oats, barley, rice), sugar(even fruits if they exceed 15gm of fructose). These are the major key players in insulin resistance.

Chitra said...

Nice informative post. waiting for the result. gone thro the comments too. Got to know something useful:)

தெய்வசுகந்தி said...

சீக்கிரம் பதில் போடுங்க கீதா!!! மிளகாயை விதையோட சேத்தாதானே காரம் இருக்கும்? (டவுட்டு:-)))

USHA said...

Geetha,

You have posted nice questions, which is surely gonna be nice good for our knowledge./

I'm gr8 fan of your native writing, its really giving close touch and comfortness while reading...thanks pa.

Kamakshi Prasanna said...

I don't add tomato seeds as it might cause stones in kidney...I heard it from my sister long time back..following it. not sure about bell pepper.

ஹுஸைனம்மா said...

நானும் பெரும்பாலும் மிளகாயின் விதைகளை நீக்கிவிட்டுத்தான் பயன்படுத்துவேன், காரம் காரணமாக.

தக்காளியைக் குறித்தும் கேள்விப்பட்டிருக்க்றேன். மனோக்கா, ஜெய்லானி விளக்கங்கள் நல்லாருக்கு.

உங்க விளக்கத்தையும் அடுத்த பதிவுல சொல்லுங்க.

Anonymous said...

என் பாட்டியும் மிளகாயில் இருந்து விதையை நீக்கி விட்டுவார். முக்கியமாக ஊறுகாய்க்கு பொடிக்கும் பொழுது விதையை நீக்கி விடுவார்கள். ஏனென்றால் விதையுடன் மிளகாயை பொடித்தால் ஊறுகாய் சீக்கிரம் பூசனம் பூத்து விடும் என்று கூறுவார்கள். ஆனால் அவ்வாறு தனியாக எடுத்த விதையை எங்கள் வீட்டில் பாட்டி சாம்பார் பொடி செய்வார். இல்லை ஏதாவது dry powder செய்து வைப்பார்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...