காளிப்ளவர் வடை - Cauliflower Vadai


எளிதில் செய்ய கூடிய சத்தான மாலை நேர ஸ்நாக்…
சமைக்க தேவைப்படும் நேரம் : 30 – 40 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         காளிப்ளவர் – 1
·         சோயா மாவு – 2 – 3 மேஜை கரண்டி
·         எண்ணெய் – 2 மேஜை கரண்டி

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         மிளகு தூள் – 1/2 தே.கரண்டி
·         சீரகதூள் – 1/2 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
·         காளிப்ளவரினை சிறிய சிறிய பூக்களாக வெட்டி கொண்டு அதனை கேரட் துறுவலில் துறுவி கொள்ளவும்.


·         கடாயில் துறுவிய காளிப்ளவர் + 1 தே.கரண்டி எண்ணெய் + தூள் வகைகள் சேர்த்து நன்றாக வேகவிடவும்.


·         காளிப்ளவர் நன்றாக வெந்த பிறகு சிறிது நேரம் ஆறவிடவும்.


·         காளிப்ளவர் + சோயா மாவு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். இதனை உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். விரும்பிய வடிவத்தில் தட்டி கொள்ளவும்.


·         தோசை கல்லினை சூடுபடுத்தி எண்ணெய் ஊற்றி அதில் காளிப்ளவர் உருண்டைகளை போட்டு நன்றாக் வேகவிடவும்.


·         ஒருபக்கம் நன்றாக வெந்தவுடன், திரும்பி மேலும் சிறிது நேரம் வேகவிடவும்.


·         சுவையான எளிதில் செய்ய கூடிய ஸ்நாக்….


கவனிக்க:
காளிப்ளவரினை பொடியாக துறுவி கொண்டால் சீக்கிரமாக வெந்துவிடும். துறுவ முடியவில்லை என்றால் அதனை பொடியாக நறுக்கி வேகவிடவும்…கடைசியில் மசித்து கொள்ளவும்.

 சோயா மாவிற்கு பதிலாக Corn Flour அல்லது அரிசி மாவினை உபயோகிக்கலாம்.

இந்த உருண்டைகளை எண்ணெயில் பொரித்து எடுத்து Cauliflower Koftaவாக பரிமாறலாம்.

அதே போல பொரித்த உருண்டைகளை கொண்டு கிரேவி செய்தால் அருமையாக இருக்கும்.

26 comments:

S.Menaga said...

வடை மிக அருமையாக இருக்கு...

Shama Nagarajan said...

yummy vadai..looks perfect

ஜெய்லானி said...

ஐ...வடை :-)

Kalpana Sareesh said...

without oil super snack item..enakku romba pidichirukku..konjam parcel annupunga pa pls..

நட்புடன் ஜமால் said...

ஆகா ஆகா ஆகா

Chitra said...

எப்படி இவ்வளவு பொறுமையாக துருவி எடுத்தீங்க.... சூப்பர்!

savitha ramesh said...

eppadi,ippadi.super.

asiya omar said...

புதுசாக இருக்கு.

சாருஸ்ரீராஜ் said...

so nice geetha

சாருஸ்ரீராஜ் said...

so nice geetha

சாருஸ்ரீராஜ் said...

so nice geetha

ஸாதிகா said...

வித்தியாசமாக இருக்கே.

athira said...

ஆஹா ஹொலிபிளவரில் வடையா? சூப்பர்.

Rajendran said...

Vadaila oota poda venama?

Krithi's Kitchen said...

Vadai romba arumaiya irukku.. soya maavu saerpadhaal koodudhal saththu thaan..

http://krithiskitchen.blogspot.com

Cool Lassi(e) said...

Vadai looks crispy!

GEETHA ACHAL said...

நன்றி மேனகா..

நன்றி ஷாமா..

நன்றி ஜெய்லானி...

நன்றி கல்பனா...

நன்றி ஜமால் அண்னா...

GEETHA ACHAL said...

நன்றி சித்ரா..ரொம்ப நேரம் எல்லாம் எடுக்கவில்லை...துறுவது சீக்கிரமாக இருந்து...நீங்களும் செய்து பாருங்க...1 பூ துறுவ 7 - 10 நிமிடங்கள் போதும்...

நன்றி சவிதா..

நன்றி ஆசியா அக்கா..


நன்றி சாரு அக்கா..

நன்றி ஸாதிகா அக்கா...

GEETHA ACHAL said...

நன்றி அதிரா..

நன்றி ராஜேந்திரன்...விரும்பினால் வடையில் நீங்க செய்யும் பொழுது ஒட்டை போட்டு கொள்ளுங்க..

நன்றி கீர்த்தி...

நன்றி கூல்..

Pavithra said...

Geetha this looks soooooooooo good love it a lot geetha.

Anonymous said...

Geetha,

I tried this recipe. It came out very well. Thanks a lot.

-Kokila

GEETHA ACHAL said...

நன்றி கோகிலா...செய்து பார்த்து பின்னுட்டம் அளித்ததில் மகிழ்ச்சி...

Anonymous said...

Geetha, can we make this in oven. Can you suggest temperature, time settings. Aparna

GEETHA ACHAL said...

நன்றி அபர்ணா...கண்டிப்பாக இதனை செய்து பாருங்க..

இதனை அவனில் 400 Fயில் 20 நிமிடங்கள் வேகவிடவும். கடைசி 5 நிமிடங்கள் Broil Modeயில் வேகவிடவும்.

R.Punitha said...

Hi Geetha ,

Your blog looks Great !!

I'm Punitha from www.southindiafoodrecipes.blogspot.in

Give a visit to my blog:);)

naga lakshmi said...

very nice taste akka..............10000times thanks akka

Related Posts Plugin for WordPress, Blogger...