பாசிப்பருப்பு இட்லி - Moongdal Idly / Pasiparuppu Idly - Idly Varietiesஎல்லோரும் ஸ்வீட் எடுத்து கொள்ளுங்க…என்னாடா எதுக்கு ஸ்வீட் என்று நினைக்கின்றிங்களா…பிரச்சனை தீர்ந்தது…

என்னுடைய ப்ளாகினை யாரோ ஒருவாரமாக hack செய்ய முயர்ச்சி செய்து இருக்காங்க…அதனால கடந்த வாரம் என்னால் என்னுடைய ப்ளாகில் நுழையமுடியாமல் போய்விட்டது…அப்பறம் என்னுடைய கணவர் தான் அதனை எல்லாம் சரி செய்து ப்ளாகினை காப்பாத்திட்டார்…அப்ப தான் நிம்மதி ஆச்சு…இப்ப  எந்த பிராபளமும் இல்லாமல் ப்ளாக் ஒழுங்காக இருக்கின்றது என்று நினைக்கிறேன்…


சரி…இட்லியினை செய்வது எப்படி என்று பார்ப்போம்….

ஊறவைக்க தேவைப்படும் நேரம் : 2 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         பாசிப்பருப்பு – 2 கப்
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
·         பாசிப்பருப்புபினை 2 மணிநேரம் ஊறவைத்து கொள்ளவும்.

·         பாசிப்பருப்பு , இட்லிமாவிற்கு அரைப்பது போல அரைத்து கொள்ளவும்.

·         மாவில் உப்பு சேர்த்து நன்றாக கலந்து 6 – 7 மணி நேரம் மாவினை புளிக்கவிடவும்.

·         மாவு புளித்தவுடன், இட்லி தட்டில் ஊற்றி 8 - 10 நிமிடங்கள் வேகவிடவும்.

·         சுவையான சத்தான இட்லி ரெடி.

கவனிக்க :
இந்த இட்லியில் நான் வெரும் பாசிப்பருப்பினை மட்டுமே சேர்த்து செய்தேன்...மிகவும் அருமையாக இட்லி புசுபூசு என்று இருந்தது…

விரும்பினால் இட்லி அரிசியினை 1 கப் ஊறவைத்து அரைத்து கொண்டு மாவுடன் சேர்த்து புளிக்கவிட்டு இட்லிகள் சுடவும்…அதுவும் அருமையாக இருக்கும்.

இந்த இட்லிற்கு காரமான சட்னி தான் அருமையான காம்பினேஷன்…

40 comments:

Priya Suresh said...

Super spongy idli,supera irruku geetha,Nalla vela unga H intha arumaiyana blogaa kaappathitaru...kudos to him..

Unknown said...

Happy to see u r back.Lovely idlies.

Mahi said...

புது ஷேப்ல இட்லி செய்திருக்காங்களேன்னு நினைச்சேன். என்ன ஸ்வீட் கீதா அது? :)
ப்ளாக் hack பண்ணறாங்களா?!!ஜாக்கிரதையா இருங்க.

பாசிப்பருப்பு தோசைதான் அம்மா செய்வாங்க.இட்லி செய்ததில்லை.நல்லா இருக்கு.

KrithisKitchen said...

Paasiparuppu idli sooper-a irukku... naan paasiparuppil upma senchirukaen..

http://krithiskitchen.blogspot.com

Chitra said...

உங்கள் ப்லாக் பத்திரமாக கிடைக்கப் பெற்றதற்கு, கடவுளுக்குத் தான் நன்றி சொல்லணும்.


இந்த ரெசிபி புதிய வகை. நிறைய புது புது ஐட்டம் கண்டுப் பிடித்து வருவதற்கு, பாராட்டுக்கள்! Patent வாங்கி வச்சுக்கோங்க... :-)

எல் கே said...

புதுசா இருக்கே

Asiya Omar said...

நிறைய புதுசாக முயற்சி செய்றீங்க.பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள்.ஸ்வீட் எடுத்து கொண்டேன்.அது என்ன ஸ்வீட்பா,எங்க ஊர் பணியாரம் போல் உள்ளது.

ஸாதிகா said...

பாசிப்பருப்பில் தோசைதான் சாப்பிட்டு இருக்கிறென்.இப்ப இட்லி..வித்தியாசமாக யோசிக்கறீங்க ரெஸிப்பியில்.சூப்பர்ப்.

Unknown said...

romba thanks geetha. naan irving texas la irukken.plz vaanga.

Lifewithspices said...

Super ahh irukku..

Valarmathi Sanjeev said...

Nice recipe, looks yummy...

Chitra said...

This recipe is new to me. heard moongdal dosa..will try sometime. Khusbhu idly maathiri bush bush nnu irukku ;)

Angel said...

ரெசிபி நல்லாருக்கு கீதா
செஞ்சுடறேன்

Jayanthy Kumaran said...

Mmmm...thats a healthy n tempting one..
Tasty appetite

சாருஸ்ரீராஜ் said...

new recepie athu enna sweet geetha.pasanga parthutu senju thara solranga

ஜெய்லானி said...

ஒவ்வொரு பதிவுக்கு முன்னும் பேக்கப் எடுத்து வையுங்க . அப்படி ஒரு வேளை பிளாக் போனாலும் திரும்ப ரீஸ்டோர் செய்ய உதவும் :-)

வித்தியாசமான இட்லிதான் :-)

Magia da Inês said...

Amiga,
Delicioso!
Um lindo dia!
Beijos.
Brasil
°º♫ ღ°º
♥°

Menaga Sathia said...

இட்லி நல்ல புஸ்புஸ்ன்னு இருக்கு..அது என்ன ஸ்வீட் கீதா??

GEETHA ACHAL said...

நன்றி ப்ரியா...

நன்றி சவிதா..

நன்றி மகி...இது மில்க் ஸ்வீட்...சீக்கிரமாக குறிப்பு போடுகிறேன்...

GEETHA ACHAL said...

நன்றி கீர்த்தி...பாசிப்பருப்பில் உப்புமாவினை வேள்விபட்டு இருக்கின்றேன்...கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்..

நன்றி சித்ரா...

நன்றி கார்த்திக்...

நன்றி ஆசியா அக்கா..இது மில்க் ஸ்வீட் அக்கா...

நன்றி கல்பனா..

GEETHA ACHAL said...

நன்றி வளர்மதி..

நன்றி சித்ரா...கண்டிப்பாக செய்து பாருங்க...

நன்றி ஏஞ்சலின்...கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க..

நன்றி ஜெய்..

நன்றி சாரு அக்கா..குட்டிஸுக்கு இப்ப exam நடந்து கொண்டு இருக்கின்றதா..இது மில்க் ஸ்வீட் அக்கா..கண்டிப்பாக சீக்கிரமாக பதிவு போடுகிறேன்...

மாதேவி said...

பாசிப்பருப்பு இட்லி நன்றாக இருக்கிறது.

மாதேவி said...

பாசிப்பருப்பு இட்லி நன்றாக இருக்கிறது.

vanathy said...

good recipe.

Unknown said...

Its Healthy and beautiful presentation

Unknown said...

Its Healthy and beautiful presentation

Kanchana Radhakrishnan said...

வித்தியாசமான இட்லி.super.

yuvana said...

idli looks yummy too

Mahes said...

Have tried only Dosa, will try this soon.

தெய்வசுகந்தி said...

பாசிப்பருப்பு இட்லி வித்தியாசமா இருக்குது கீதா!!

ஹுஸைனம்மா said...

கீதா, புதுப்புது ரெஸிப்பிகள், அதுவும் அவற்றின் சத்து குறித்த விவரங்களுடன்!! அழகாக, விளக்கமாக தெளிவாக செய்முறையும் கூட. ஒரு நியூட்ரிஷியனின் திறமையைவிட அதிகமாகப் பார்க்கிறேன் உக்களிடம். இதுகுறித்த படிப்பு படித்திருக்கிறீர்களா கீதா? அல்லது ஆர்வம்தானா?

நீங்கள் இந்தத் துறையில் ப்ரொஃபஷனலாக ஏன் ஈடுபடவில்லை?

அப்புறம், மறக்காமல், உங்கள் வலைப்பூவை எப்படி ஹேக் செய்ய முயற்சித்தார்கள், அதை நீங்கள் எப்படி கண்டுபிடித்தீர்கள், எப்படி உங்களவர் அதை மீட்டார் என்பதை விளக்கமாக ஒரு தனிப்பதிவாக எழுதினால், நாங்களும் கவனமாக இருக்க உதவுமே கீதா?

Geetha6 said...

வாழ்த்துக்கள் madam

Raks said...

Oh,hacking laam vera nadakkudha?!! Kadavula,thanks god,u sorted it out! Sure u need to celebrate with sweet :) Na didly sounds unique and tasty!

GEETHA ACHAL said...

நன்றி மாதேவி..

நன்றி ஷீனா பாபு...

நன்றி கஞ்சனா..

நன்றி யுவனா..

நன்றி மகேஷ்...கண்டிப்பாக செய்து பாருங்க..

GEETHA ACHAL said...

நன்றி தெய்வசுகந்தி...

நன்றி ஹுஸைனம்மா..எல்லாம் ஒரு ஆர்வம் காரணமாக தான் எழுதிகிறேன்..

இதற்கு என்று எதுவும் ஸ்பெஷலாக படிக்கவில்லை...இதனை ப்ரொஃப்ஷனலாக செய்யும் அளவிற்கு இன்னும் வளர நிறைய இருக்கின்றது...

கண்டிப்பாக கூடிய சீக்கிரத்தில் எழுதுகிறேன்...

GEETHA ACHAL said...

நன்றி கீதா..

நன்றி ராஜி...

Aparna said...

Hi Geetha, thanks for sharing all your healthy inventions ! One request! My aunt used to make a vegetable poha (red rice aval) with mixed vegetables and black channa. Do you have a recipe for this, can you post it. May be you can reinvent it in your healthy kitchen !! Thanks

GEETHA ACHAL said...

நன்றி அபர்ணா...கண்டிப்பாக கூடிய சீக்கிரத்தில் அந்த பதிவினை போடுகிறேன்...

apsara-illam said...

கீதா மிகவும் சத்தான இட்லி.செய்முறையும் சிம்பிளாக உள்ளது.செய்து பார்த்திட வேண்டியதுதான்.
அப்புறம் நான் ஒரு ஸ்வீட் பிரியை கீதா...இப்படி நா ஊறும் அளவிற்க்கு ஸ்வீட்டை கண் முன்னே வைத்து விட்டு குறிப்பு போடாமல் இருக்கலாமா...?சீக்கிரம் அந்த குறிப்பை போட்டுடுங்க...நானும் செய்து சப்பிட்டு பார்த்துவிடுகிறேன்.இல்லன்னா இதை நீங்க சாப்பிடும்போது வயிற்ரை வலிக்க போகுது.ஹீ...ஹி...
ச்சே...ஸாரி கீதா இந்த ஜெய் சகோவோட நக்கலை படிச்சி இந்த மாதிரி எல்லாம் பேச தோணுது.
பாராட்டுக்கள் கீதா...

அன்புடன்,
அப்சரா.

GEETHA ACHAL said...

தங்களுடைய அன்பான கருத்துக்கு மிகவும் நன்றி அப்சரா..சீக்கிரமாக பதிவு போடுகிறேன்...நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...