தினமும் ஒரு ஹெல்தியா கலந்த சாதம் # 4 - கத்திரிக்காய் சாதம் - Healthy Variety Rice - Brinjal Riceகத்திரிக்காயில் மிகவும் குறைந்த அளவு கலோரிஸ் உள்ளது. இதில் அதிக அளவு தண்ணீர் இருக்கின்றது.

இந்த காயில் கல்சியம், நார்சத்து, Potassium மற்றும் விட்டமின்ஸ் இருக்கின்றது,

சக்கரை அதிகம் இருப்பவர்கள் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது.

கத்திரிக்காயினை எப்பொழுதுமே பொரிக்க கூடாது…பொரிப்பதால் அது எண்ணெயினை Sponge மாதிரி அதிக எண்ணெயினை உறிஞ்சிவிடும்..நிறைய கலோரிஸினை ஏற்படுத்துவிடும்.

அதே மாதிரி கத்திரிக்காயினை தோல் நீக்கி  சமைக்க கூடாது.

சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         கத்திரிக்காய் – 1/4  கிலோ
·         வேகவைத்த சாதம் – 3 கப்
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு
·         கொத்தமல்லி – சிறிதளவு

வறுத்து அரைத்து கொள்ள :
·         தனியா – 1 மேஜை கரண்டி
·         கடலைப்பருப்பு – 1 தே.கரண்டி
·         உளுத்தம்பருப்பு – 1 தே.கரண்டி
·         வேர்க்கடலை – 1 மேஜை கரண்டி
·         எள் – 1 தே.கரண்டி
·         தேங்காய் துறுவல் – 2 மேஜை கரண்டி
·         மிளகு – 10 (அ) காய்ந்த மிளகாய் – 3

முதலில் தாளிக்க :
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         கடுகு, உளுத்தம்பருப்பு – தாளிக்க
·         வெங்காயம் – 1
·         கருவேப்பில்லை – 5 இலை

செய்முறை :
·         கத்திரிக்காய் + வெங்காய் சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை தனி தனியாக வறுத்து பொடித்து கொள்ளவும்.


·         கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.


·         கத்திரிக்காய் + மஞ்சள் தூள் + உப்பு சேர்த்து வேகவிடவும்.


·         6 – 7 நிமிடங்கள் நன்றாக வேகவிடவும்.


·         இத்துடன் வறுத்து பொடித்த பொடியினை தூவி மேலும் 2 – 3 நிமிடங்கள் வதக்கவும்.


·         கடைசியில் கொத்தமல்லி + சாதம் சேர்த்து கிளறவும்.


·         சுவையான எளிதில் செய்ய கூடிய ரைஸ் ரெடி.

தினம் ஒரு ஹெல்தியான கலந்த சாதம் # 3 - ப்லக்ஸ் ஸுட் ரைஸ் - Lunch Box Healthy Varitey Rice # 3 - Flax Seeds RiceFlax Seedsயில் Omega-3 அதிகம் இருக்கின்றது. மீன் சாப்பிடாதவர்கள் இதனை அதற்கு பதிலாக சாப்பிடலாம்.

மற்றும் இதில், அதிக அளவு Magnesium, Phosphorous, Copper, Thiamine, Maganese and Dietary Fiber (நார் சத்து ) அதிக அளவில் இருக்கின்றது.

கொலஸ்டிரால், சக்கரையின் அளவினை அதிகம் குறைக்க உதவுக்கின்றது.

Flax Seedsயின எப்பொழுதும் அப்படியே சாப்பிட கூடாது. அதனை முழுவதாக அப்படியே சாப்பிட்டால், அது Digestஆகாமல் அப்படியே வெளியேறிவிடும். அதனை சாப்பிட பலனும் கிடையாது. அதனால், கண்டிப்பாக அதனை பொடித்து தான் சாப்பிடுவது நல்லது.

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்:
         வேகவைத்த சாதம் – 2 கப்

Flax Seeds பொடி செய்ய :
·         ப்ளாஸ் ஸுட்(Flax Seeds) – 2 மேஜை கரண்டி
·         கடலைப்பருப்பு – 1 மேஜை கரண்டி
·         உளுத்தம்பருப்பு – 1 மேஜை கரண்டி
·         தனியா – 2 மேஜை கரண்டி
·         காய்ந்த மிளகாய் - 3
·         கடுகு – 1/2 தே.கரண்டி
·         வெந்தயம் – 1/2 தே.கரண்டி
·         உப்பு – 1/2 தே.கரண்டி
·         பெருங்காயம் – சிறிதளவு
·         புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
·         பூண்டு – 3 பல் தோலுடன் (வறுக்க வேண்டாம்)

(குறிப்பு : இதில் காய்ந்த மிளகாயினை நீக்கி சிறிது மிளகினை சேர்த்து அரைத்து கொள்ளலாம்.)

தாளித்து கொள்ள :
·         நல்லெண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         கடுகு, கடலை பருப்பு, கருவேப்பில்லை - சிறிதளவு

செய்முறை :
பொடி செய்து கொள்ள :
·         முதலில் flax Seeds + தனியா + கடலைப்பருப்பு + உளுத்தம்பருப்பு என ஒவ்வொரு பொருட்களாக தனி தனியாக போட்டு வறுத்து கொள்ளவும்.


·         பிறகு காய்ந்த மிளகாய் + கடுகு, வெந்தயம் + புளி என்று ஒவ்வொன்றாக மற்ற பொருட்களையும் சேர்த்து வறுத்து வைத்து சிறிது நேரம் ஆறவிடவும்.

·         மிக்ஸியில் முதலில் தனியா போட்டு பொடிக்கவும். அதனுடன் காய்ந்த மிளகாயினை சேர்த்து பொடிக்கவும்.

·         அத்துடன் கடலைப்பருப்பு , உளுத்தம்பருப்பு + கடுகு, வெந்தயம் சேர்த்து பொடிக்கவும்.

·         பிறகு Flax Seeds + புளி + உப்பு + பெருங்காயம் சேர்த்து பொடித்து கொள்ளவும். கடைசியில் பூண்டினை சேர்த்து 1 – 2 முறை Pulse Modeயில் இத்துடன் சேர்த்து அரைத்து கொள்ளவும்,

·         தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சாதத்தில் சேர்க்கவும். அத்துடன் தேவையான அளவு பொடியினை சேர்த்து கிளறவும்.


·         சுவையான சத்தான சாதம் ரெடி. இதனை சிப்ஸ், வறுவலுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு :
·         புளியினை கடாயில் வறுப்பதால் சூட்டில் சிறிது இளகிவிடும். மிக்ஸியில் போட்டு அரைக்கும் பொழுது ஈஸியாக இருக்கும்.

·         ஒவ்வொரு பொருட்களையும் தனி தனியாக தான் வறுக்க வேண்டும். அதே மாதிரி அரைக்கும் பொழுதும் தனி தனியாக அரைத்தால் ரொம்ப சூப்பராக இருக்கும்.

·         இந்த பொடியினை இட்லி, தோசையுடன் சாப்பிடவும் சுவையாக இருக்கும்.

·         அதிகம் பொடி செய்து கொள்வதாக இருந்தால், இதே மாதிரி செய்து வைத்து கொள்ளலாம். அப்படி செய்யும் பொழுது புளியினை சேர்க்க வேண்டாம். 

தினம் ஒரு கலந்த சாதம் # 2 - மாங்காய் இஞ்சி சாதம் - Lunch Box Varitey Rice # 2 - Ma Inji Rice / Mango Ginger Riceமாங்காய் இஞ்சி – இதனை இஞ்சி என்றோ அல்லது மாங்காய் குடும்பத்தினை சேர்த்து என்றோ தான் நாம் நினைத்து கொண்டு இருப்போம்..

இதனை வெட்டும் பொழுது மாங்காய் போல வாசனையாக இருக்கும்…அதே போல பார்ப்பதற்கு இஞ்சி போல இருக்கும்.

ஆனால் உண்மையில் இது மஞ்சள் (Turmeric) குடும்பத்தினை சேர்ந்த்து.

இதனை சாப்பிடுவதால் அஜுரண கோளாறு, ஆஸ்துமா, அலர்ஜி, தோல் வியாதி போன்றவை குணமடையும்.


சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         வேகவைத்த சாதம் -  2 கப்
·         மாங்காய் இஞ்சி – 2 மேஜை கரண்டி துறுவியது
·         வேகவைத்த வேர்க்கடலை – சிறிதளவு (விரும்பினால்)
·         மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

அரிந்து கொள்ள :
·         வெங்காயம் – 1
·         கருவேப்பில்லை – 4 இலை
·         பச்சைமிளகாய் - 2
·         கொத்தமல்லி - சிறிதளவு

தாளித்து கொள்ள :
·         எண்ணெய்  - 1 மேஜை கரண்டி
·         கடுகு, உளுத்தம்பருப்பு – தாளிக்க

செய்முறை :
·         வெங்காயம் + கருவேப்பில்லையினை வெட்டி கொள்ளவும். பச்சைமிளகாயினை இரண்டாக வெட்டி கொள்ளவும்.

·         கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் போட்டு தாளித்து அத்துடன் வெங்காயம் + கருவேப்பில்லை + பச்சைமிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.


·         இத்துடன் துறுவிய மாங்காய் இஞ்சி + மஞ்சள் தூள் + உப்பு + வேர்க்கடலை சேர்த்து வதக்கவும்.


·         கடைசியில் வேகவைத்த சாதம் + கொத்தமல்லி சேர்த்து கிளறவும்.


·         சுவையான எளிதில் செய்ய கூடிய சாதம் ரெடி. இதனை உருளை வறுவல், சிப்ஸ் போன்றவையுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

தினம் ஒரு கலந்த சாதம் # 1 - சுண்டைக்காய் சாதம் - Lunch Box Varitey Rice # 1 - Sundakkai Rice / Turkey Berry Rice


சுண்டைக்காய் சாப்பிடுவதால் உடலிற்கு பல நன்மைகள் கிடைக்கின்றது.அவற்றில் சில,
         உணவினை எளிதில் ஜுரணம் செய்ய உதவுக்கின்றது.
·         இருமல், சளி போன்றவை எளிதில் குணம் அடைய செய்கின்றது.
·         அல்சர் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
·         அதிக நார்சத்து மற்றும் விட்டமின்ஸ் இருக்கின்றது.
·         BP, சக்கரை அதிகம் உள்ளவர்கள் இதனை சாப்பிடுவது மிகவும் நல்லது.
·         வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்க உதவும்.

எப்பொழுதுமே குழம்பு செய்து சாப்பிடாமல் சாதம் செய்து சாப்பிடலாம். இந்த சாதம் கசப்பாக இல்லாமல் இருப்பதால் அனைவரும் விரும்பி சாப்பிடலாம்.நன்றி புஷ்பா…

சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         வேகவைத்த சாதம் – 2 கப்
·         சுண்டைக்காய் வற்றல் – 20
·         வெங்காயம் – 1
·         கருவேப்பில்லை, கொத்தமல்லி – சிறிதளவு
·         மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·         எலுமிச்சை சாறு – 1 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு
·         நல்லெண்ணெய் – 1 மேஜை கரண்டி

செய்முறை :
·         சுண்டைக்காய் வற்றிலினை ஒன்றும் பாதியுமாக கையில் நசுக்கி வைக்கவும். வெங்காயம் + கருவேப்பில்லை + கொத்தமல்லியினை பொடியாக நறுக்கி வைக்கவும்.

·         கடாயில் எண்ணெய் ஊற்றி சுண்டைக்காய் வற்றிலினை போட்டு வறுத்து எடுத்து தனியாக வைத்து கொள்ளவும்.

·         பிறகு அதே கடாயில் வெங்காயம் + கருவேப்பில்லை போட்டு வதக்கி அத்துடன் மஞ்சள் தூள் + உப்பு + எலுமிச்சை சாறு 1 - 2 நிமிடங்கள் சேர்த்து வதக்கவும்.

·         இப்பொழுது சாதத்துடன், சுண்டைக்காய் வற்றல் + வதக்கிய பொருட்கள் + கொத்தமல்லி சேர்த்து நன்றாக கிளறவும்.

·         சுவையான எளிதில் செய்ய கூடிய சுண்டைக்காய் வற்றல் சாதம் ரெடி. இதனை வறுவல், சிப்ஸ் அல்லது அப்பளமுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு :
இதில் சுண்டைக்காயின் கசப்பே தெரியாது. எப்பொழுதும் குழம்பு செய்து சாப்பிடாமல் இப்படி கலந்த சாதமாக சாப்பிடும் பொழுது ரொம்ப சுவையாக இருக்கும்.

இதில் தனியாக காரம் சேர்க்க தேவையில்லை. விரும்பினால் காய்ந்த மிளகாயே அல்லது மிளகு சேர்த்து கொள்ளலாம். நல்லெண்ணெயில் செய்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

வெங்காயம் வதக்கும் பொழுது எண்ணெய் சேர்க்க தேவையில்லை(விரும்பினால் சேர்த்து கொள்ளவும்.).சுண்டைக்காய் வறுத்த பிறகு செய்வதால் கடாயில் சிறிது எண்ணெய் இருக்கும்.

Happy Easter ...........எங்க வீட்டில் அருகில் உள்ள Uncle Sams என்ற Homemade candy Shopயில் எப்பொழுதுமே கூட்டம் அதிகமாக இருக்கும். அந்த கடையில் Dora, Mickey Mouse, Minnie, cinderella, Cinderella Shoe, Curious George, Seaseme Characters, Areoplanes, Cars, Leaves, Bunnies , Butterflies, Balloons  என்று சொல்லி கொண்டே போகும் அளவிற்கு சக்லேடுகள் இருக்கின்றது….


அவரவர் விருப்பதிற்கு ஏற்றாற் போல White, Regular or dark choclates  விற்கப்படுக்கின்றது….

எப்பொழுது walkingபோனாலும் அக்‌ஷ்தாவினை அந்த கடையிக்கு அழைத்து போய் எதாவது வாங்கி கொடுப்பேன். ரொம்ப நாள் கழித்து இப்பொழுது தான் walking செல்வதால், கடைக்கு சென்றோம்…


Easter என்பதால் நிறைய சாக்லேட் Bunny, Easter Basket, Eggs போன்ற வடிவத்தில் செய்து வைத்து இருந்தாங்க…

எப்பொழுதும் போல அக்‌ஷ்தாவின் Favorite Doraவினை எடுத்து கொண்டாள்…


அப்பறம் அவளுக்காக நான் ஒரு Bunnyயினை வாங்கினேன்…ரொம்ப happyயாக இருந்தாள்…


Happy Easter…

கொத்தமல்லி சட்னி - Kothamali Chutney - Cilantro Chutney   
தேவையான பொருட்கள் :
         கொத்தமல்லி – 1 கட்டு
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

வறுத்து கொள்ள :
·         கடலைப்பருப்பு – 1 மேஜை கரண்டி
·         உளுத்தம்பருப்பு – 1 மேஜை கரண்டி
·         புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
·         காய்ந்த மிளகாய் - 3
·         கடுகு – 1 தே.கரண்டி
·         இஞ்சி – சிறிதளவு
·         பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை :
·         கொத்தமல்லியினை சுத்தம் செய்து அதனை நன்றாக தண்ணீரில் அலசி துணியில் போட்டு உலர்த்தவும்.


·         கடாயில் வறுக்க கொடுத்துள்ள ஒவ்வொரு பொருட்களாக போட்டு வறுத்து ஆறவிடவும்.


·         வறுத்த பொருட்கள் சிறிது ஆறியதும், மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

·         நன்றாக அரைத்தவுடன், உப்பு + கொத்தமல்லியினை நறுக்கி இதில் சேர்த்து அரைக்கவும்.

·         அரைக்கும் பொழுது தண்ணீர் ஊற்றாமல் சிறிது எண்ணெய் சேர்த்து அரைத்தால் நன்றாக இருக்கும்.

·         சுவையான கொத்தமல்லி சட்னி ரெடி. இதனை தோசை, இட்லி, சாதம் போன்றவையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


கவனிக்க:
·         கொத்தமல்லியினை வதக்க தேவையில்லை. அதனை அப்படியே சேர்த்து அரைக்கலாம்.

·         புளியினை சிறிது வறுத்து கொள்வதால், எளிதில் அரைப்படும்.
·         அரைக்கும் பொழுது, தண்ணீருக்கு பதிலாக எண்ணெய் சேர்ப்பதால் 2 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.

·         காய்ந்த மிளகாயிற்கு பதிலாக பச்சைமிளகாய் சேர்த்தால் கலர் நல்லா இருக்கும்.

அலிகார் பிரியாணி - Aligarh Biryaniஎளிதில் செய்ய கூடிய பிரியாணி… கண்டிப்பாக நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும். திருமதி.அன்னு அவர்களின் குறிப்பினை பார்த்து நான் செய்த அலிகார் பிரியாணி….நன்றி.

நெய், புதினா, கொத்தமல்லி அல்லது எந்த ஒரு தூள் வகைகளும் சேர்த்து கொள்ளாமல் செய்ய கூடியது இந்த பிரியாணி…ஆனால் சுவையில் எந்த வித்தியாசமும் இருக்காது…ரொம்ப சூப்பராக இருக்கும்.

இதில் நாமுமே வீட்டில் செய்யும் சிக்கன் ஸ்டாக் சேர்ப்பதால் ரொம்ப சுவையாக இருக்கும்.

கண்டிப்பாக குழந்தைகளை கவரும் விததில் இந்த பிரியாணி இருக்கும்..ரொம்ப ஸ்பைசியாக இல்லாமல் இருப்பதால் கூடுதல் சுவை..

இதனை தயிர் பச்சடியுடன் சாப்பிட சூப்பர்ப் காம்பினேஷன்..விரும்பினால் எதாவது க்ரேவியுடன் சேர்த்து சாப்பிடலாம்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         Chicken Breast with Skin & Bone  -  2 ( சுமார் 1 பவுண்ட்)

சிக்கன் ஸ்டாக் செய்ய தேவையானவை :
·         பூண்டு – 6 பல்
·         இஞ்சி – 1 துண்டு பெரியது
·         சோம்பு – 1 மேஜை கரண்டி
·         தனியா – 1 மேஜை கரண்டி
·         மிளகு – 1 மேஜை கரண்டி
·         ஏலக்காய் – 3 , கிராம்பு – 3
·         பிரியாணி இலை – 1 (விரும்பினால்)
·         பச்சைமிளகாய் – 5
·         வெங்காயம் – 1 பெரியது நறுக்கியது
·         உப்பு – 1 தே.கரண்டி
·         தண்ணீர் – 4 கப்
·         எண்ணெய் – 1 தே.கரண்டி

பிரியாணி செய்ய :
·         பாஸ்மதி அரிசி – 2 + 1/2 கப்
·         தயிர் – 1 கப்
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         மிளகு – 5
·         ஏலக்காய் - 2

பிரியாணிக்கு அரைத்து கொள்ள :
·         பூண்டு – 10
·         இஞ்சி – 1 பெரிய துண்டு
·         பட்டை – 2
·         ஜாதிக்காய் – சிறிதளவு (விரும்பினால்)

செய்முறை:
·         முதலில் சிக்கனை தோல், எலும்பு எல்லாம் நீக்கி தனியாக சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். தோல் + எலும்பினை தனியாக கழுவி வைத்து கொள்ளவும்.


·         அரிசியினை கழுவி தண்ணீரில் 10 – 15 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும். தயிரினை மிக்ஸியில் போட்டு மோராக அடித்து கொள்ளவும்.

சிக்கன் ஸ்டாக் செய்ய :
·         பிரஸர் குக்கரில், எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை + ஏலக்காய் + கிராம்பு போட்டு தாளித்து பின் வெங்காயம் +பச்சைமிளகாய் + இஞ்சி + பூண்டு + சிக்கன் தோல் , எலும்பு சேர்த்து கொள்ளவும்.


·         இத்துடன் மீதம் உள்ள் பொருட்கள்(மிளகு, சோம்பு, தனியா ) + தண்ணீர் + உப்பு எல்லாம் சேர்த்து கொள்ளவும்.


·         இதனை 6 – 7 விசில் வரும் வரை வேகவிடவும்.


·         கடைசியில் ஸ்டாகினை(சிக்கன் தண்ணீர்) வடிகட்டி கொள்ளவும்.   இப்பொழுது சிக்கன் ஸ்டாக் ரெடி.

கவனிக்க:
சிக்கன் தோலுடன் இருந்தால், தோல் மற்றும் தேவை இல்லாத எலும்புகளை சேர்த்து 6 விசில் வரும் வரை வேகவிடவும்.

சிக்கனில் தோல் இல்லை என்றால், சிக்கனை ஸ்டாக் செய்ய சேர்க்காமல் வெரும் தண்ணீர் மட்டும் சேர்த்து 2 – 3 விசில் வரும் வரை வேகவிடவும். பின் குக்கரினை திறந்து அதில் 4 – 5 சிக்கன் துண்டுகளை போட்டு மேலும் 5 நிமிடங்கள் வேகவிடவும். இதில் சேர்த்த சிக்கனை சாலடாக சாப்பிடலாம்.


பிரியாணி செய்ய :
·         இஞ்சி + பூண்டு + பட்டை + ஜாதிக்காய் + 2 மேஜை கரண்டி தண்ணீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

·         கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகு + ஏலக்காய் தாளித்து அத்துடன் அரைத்த விழுதினை போட்டு வதக்கவும். சிறிது வதங்கியவுடன், சிக்கனை சேர்த்து நன்றாக வதக்கவும்.


·         சிக்கன் வதங்கியவுடன் தயிர் + சிறிது உப்பு சேர்த்து நன்றாக 5 நிமிடங்கள் வேகவிடவும்.


·         இத்துடன் அரிசியினை சேர்த்து வதக்கவும்.


·         1 கப் அரிசிக்கு 2 கப் சிக்கன் ஸ்டாக் என்று விதம் சேர்த்து கொண்டு பிரியாணியினை வேகவிடவும். (குறிப்பு :நான் எப்பொழுதுமே எல்லாம் தாளித்த பிறகு அதனை மைரேவேவில் வேகவைத்து கொள்வேன்…அவரவர் விருப்பம் போல அதனை தம் போடாவே அல்லது பிரஸர் குக்கரிலே செய்து கொள்ளலாம்.)


·         சுவையான எளிதில் செய்ய கூடிய அலிகார் பிரியாணி ரெடி.

குறிப்பு :
இந்த பிரியாணியில் எந்த கலரும் சேர்க்காததால் வெள்ளை கலரில் இருக்கும். விரும்பினால் நீங்க கலர் சேர்த்து கொள்ளலாம். ஆனால் வெள்ளை கலர் தான் இதன் ஸ்பெஷாலிட்டி…

ஜாதிக்காய் இல்லை என்றால் ஜாதிக்காய் பொடியினை சேர்த்து கொள்ளலாம்.


இந்த சிக்கன் ஸ்டாகினை செய்து fridgeயில் 1 வாரம் வரை வைத்து கொள்ளலாம்.

சிக்கன் ஸ்டாகினை போலவே வெஜுடேபுள் ஸ்டாகினை காய்கறிகள் சேர்த்து செய்து கொள்ளலாம்.

தயிரினை அப்படியே சேர்க்காமல் அதனை மிக்ஸியில் மோராக அடித்து கொள்வதால் நன்றாக இருக்கும்.
Related Posts Plugin for WordPress, Blogger...