தினம் ஒரு கலந்த சாதம் # 1 - சுண்டைக்காய் சாதம் - Lunch Box Varitey Rice # 1 - Sundakkai Rice / Turkey Berry Rice


சுண்டைக்காய் சாப்பிடுவதால் உடலிற்கு பல நன்மைகள் கிடைக்கின்றது.அவற்றில் சில,
         உணவினை எளிதில் ஜுரணம் செய்ய உதவுக்கின்றது.
·         இருமல், சளி போன்றவை எளிதில் குணம் அடைய செய்கின்றது.
·         அல்சர் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
·         அதிக நார்சத்து மற்றும் விட்டமின்ஸ் இருக்கின்றது.
·         BP, சக்கரை அதிகம் உள்ளவர்கள் இதனை சாப்பிடுவது மிகவும் நல்லது.
·         வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்க உதவும்.

எப்பொழுதுமே குழம்பு செய்து சாப்பிடாமல் சாதம் செய்து சாப்பிடலாம். இந்த சாதம் கசப்பாக இல்லாமல் இருப்பதால் அனைவரும் விரும்பி சாப்பிடலாம்.நன்றி புஷ்பா…

சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         வேகவைத்த சாதம் – 2 கப்
·         சுண்டைக்காய் வற்றல் – 20
·         வெங்காயம் – 1
·         கருவேப்பில்லை, கொத்தமல்லி – சிறிதளவு
·         மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·         எலுமிச்சை சாறு – 1 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு
·         நல்லெண்ணெய் – 1 மேஜை கரண்டி

செய்முறை :
·         சுண்டைக்காய் வற்றிலினை ஒன்றும் பாதியுமாக கையில் நசுக்கி வைக்கவும். வெங்காயம் + கருவேப்பில்லை + கொத்தமல்லியினை பொடியாக நறுக்கி வைக்கவும்.

·         கடாயில் எண்ணெய் ஊற்றி சுண்டைக்காய் வற்றிலினை போட்டு வறுத்து எடுத்து தனியாக வைத்து கொள்ளவும்.

·         பிறகு அதே கடாயில் வெங்காயம் + கருவேப்பில்லை போட்டு வதக்கி அத்துடன் மஞ்சள் தூள் + உப்பு + எலுமிச்சை சாறு 1 - 2 நிமிடங்கள் சேர்த்து வதக்கவும்.

·         இப்பொழுது சாதத்துடன், சுண்டைக்காய் வற்றல் + வதக்கிய பொருட்கள் + கொத்தமல்லி சேர்த்து நன்றாக கிளறவும்.

·         சுவையான எளிதில் செய்ய கூடிய சுண்டைக்காய் வற்றல் சாதம் ரெடி. இதனை வறுவல், சிப்ஸ் அல்லது அப்பளமுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு :
இதில் சுண்டைக்காயின் கசப்பே தெரியாது. எப்பொழுதும் குழம்பு செய்து சாப்பிடாமல் இப்படி கலந்த சாதமாக சாப்பிடும் பொழுது ரொம்ப சுவையாக இருக்கும்.

இதில் தனியாக காரம் சேர்க்க தேவையில்லை. விரும்பினால் காய்ந்த மிளகாயே அல்லது மிளகு சேர்த்து கொள்ளலாம். நல்லெண்ணெயில் செய்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

வெங்காயம் வதக்கும் பொழுது எண்ணெய் சேர்க்க தேவையில்லை(விரும்பினால் சேர்த்து கொள்ளவும்.).சுண்டைக்காய் வறுத்த பிறகு செய்வதால் கடாயில் சிறிது எண்ணெய் இருக்கும்.

23 comments:

எல் கே said...

thanks for sharing

Lifewithspices said...

Perfect header n very useful ...simple rice for weekday lunches...Perfect Initiative..

Nandinis food said...

Different and tasty rice. Thanks for the tips dear.

Kurinji said...

Healthy and innovative recipe Geetha. Thanks for sharing.Kurinjikathambam, Event : HRH-Healthy Summer

Aparna said...

once again, kalakkal ponga !!

Pushpa said...

Healthy and yummy,I make this quite often too.

சசிகுமார் said...

சாதம் பார்ப்பதற்கே சூப்பரா இருக்கு

Menaga Sathia said...

சூப்பரா இருக்கும் கீதா,மணத்தக்காளி வத்தலில்தான் செய்திருக்கேன்...ம்ம் தினம் ஒரு ஸ்பெஷலா ,அசத்துங்க..

Aruna Manikandan said...

looks simple and delicious dear :)
will give a try sometime.

ADHI VENKAT said...

என் மகளுக்கு சுண்டைக்காய் என்றால் மிகவும் பிடிக்கும். இந்த சாதம் செய்து தரப் போகிறேன்.நன்றிங்க.

ADHI VENKAT said...

என் மகளுக்கு சுண்டைக்காய் என்றால் மிகவும் பிடிக்கும். இந்த சாதம் செய்து தரப் போகிறேன்.நன்றிங்க.

Jaleela Kamal said...

mm நல்ல ஐடியாதான்.

தெய்வசுகந்தி said...

சுண்டைக்காய்ல குழம்புதான் செய்திருக்கிறேன். சாதம் அடுத்த முறை செஞ்சுடலாம்.

Unknown said...

wow ,super

Akila said...

vathakuzhambil than sundaikai serthu paathu iruken... ithu romba puthusa iruku....

DNSW: G Roundup
Event: Dish Name Starts with H

Mahes said...

Awesome! Looks yummy.

GEETHA ACHAL said...

நன்றி கார்த்திக்...

நன்றி கல்பனா..

நன்றி நந்தினி..

நன்றி குறிஞ்சி...

நன்றி அபர்ணா..

GEETHA ACHAL said...

நன்றி புஷ்பா..

நன்றி சசி...

நன்றி மேனகா...

நன்றி அருணா...கண்டிப்பாக செய்து பாருங்க..

நன்றி ஆதி...கண்டிப்பாக குட்டிமாவிற்கு செய்து கொடுங்க...

GEETHA ACHAL said...

நன்றி ஜலிலா அக்கா...

நன்றி தெய்வசுகந்தி...

நன்றி காயத்ரி..

நன்றி அகிலா..

நன்றி மகேஷ்...

Asiya Omar said...

புதுசாக இருக்கு கீதா...சுண்டைக்காய் வற்றல் எனக்கு எப்பவுமே பிடிக்கும்..

vanathy said...

சுண்டைக்காய் ஒரு முறை வாங்கினேன் ஆனால் சரியான உப்பாக இருந்தமையால் வாங்குவதில்லை. இது என்ன ப்ராண்ட்? உப்பு அதிகமில்லையா, கீதா?

Panimalar said...

Super idea...thanks for Sharing...

GEETHA ACHAL said...

நன்றி பனிமலர்...

Related Posts Plugin for WordPress, Blogger...