தினம் ஒரு ஹெல்தியான கலந்த சாதம் # 3 - ப்லக்ஸ் ஸுட் ரைஸ் - Lunch Box Healthy Varitey Rice # 3 - Flax Seeds RiceFlax Seedsயில் Omega-3 அதிகம் இருக்கின்றது. மீன் சாப்பிடாதவர்கள் இதனை அதற்கு பதிலாக சாப்பிடலாம்.

மற்றும் இதில், அதிக அளவு Magnesium, Phosphorous, Copper, Thiamine, Maganese and Dietary Fiber (நார் சத்து ) அதிக அளவில் இருக்கின்றது.

கொலஸ்டிரால், சக்கரையின் அளவினை அதிகம் குறைக்க உதவுக்கின்றது.

Flax Seedsயின எப்பொழுதும் அப்படியே சாப்பிட கூடாது. அதனை முழுவதாக அப்படியே சாப்பிட்டால், அது Digestஆகாமல் அப்படியே வெளியேறிவிடும். அதனை சாப்பிட பலனும் கிடையாது. அதனால், கண்டிப்பாக அதனை பொடித்து தான் சாப்பிடுவது நல்லது.

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்:
         வேகவைத்த சாதம் – 2 கப்

Flax Seeds பொடி செய்ய :
·         ப்ளாஸ் ஸுட்(Flax Seeds) – 2 மேஜை கரண்டி
·         கடலைப்பருப்பு – 1 மேஜை கரண்டி
·         உளுத்தம்பருப்பு – 1 மேஜை கரண்டி
·         தனியா – 2 மேஜை கரண்டி
·         காய்ந்த மிளகாய் - 3
·         கடுகு – 1/2 தே.கரண்டி
·         வெந்தயம் – 1/2 தே.கரண்டி
·         உப்பு – 1/2 தே.கரண்டி
·         பெருங்காயம் – சிறிதளவு
·         புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
·         பூண்டு – 3 பல் தோலுடன் (வறுக்க வேண்டாம்)

(குறிப்பு : இதில் காய்ந்த மிளகாயினை நீக்கி சிறிது மிளகினை சேர்த்து அரைத்து கொள்ளலாம்.)

தாளித்து கொள்ள :
·         நல்லெண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         கடுகு, கடலை பருப்பு, கருவேப்பில்லை - சிறிதளவு

செய்முறை :
பொடி செய்து கொள்ள :
·         முதலில் flax Seeds + தனியா + கடலைப்பருப்பு + உளுத்தம்பருப்பு என ஒவ்வொரு பொருட்களாக தனி தனியாக போட்டு வறுத்து கொள்ளவும்.


·         பிறகு காய்ந்த மிளகாய் + கடுகு, வெந்தயம் + புளி என்று ஒவ்வொன்றாக மற்ற பொருட்களையும் சேர்த்து வறுத்து வைத்து சிறிது நேரம் ஆறவிடவும்.

·         மிக்ஸியில் முதலில் தனியா போட்டு பொடிக்கவும். அதனுடன் காய்ந்த மிளகாயினை சேர்த்து பொடிக்கவும்.

·         அத்துடன் கடலைப்பருப்பு , உளுத்தம்பருப்பு + கடுகு, வெந்தயம் சேர்த்து பொடிக்கவும்.

·         பிறகு Flax Seeds + புளி + உப்பு + பெருங்காயம் சேர்த்து பொடித்து கொள்ளவும். கடைசியில் பூண்டினை சேர்த்து 1 – 2 முறை Pulse Modeயில் இத்துடன் சேர்த்து அரைத்து கொள்ளவும்,

·         தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சாதத்தில் சேர்க்கவும். அத்துடன் தேவையான அளவு பொடியினை சேர்த்து கிளறவும்.


·         சுவையான சத்தான சாதம் ரெடி. இதனை சிப்ஸ், வறுவலுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு :
·         புளியினை கடாயில் வறுப்பதால் சூட்டில் சிறிது இளகிவிடும். மிக்ஸியில் போட்டு அரைக்கும் பொழுது ஈஸியாக இருக்கும்.

·         ஒவ்வொரு பொருட்களையும் தனி தனியாக தான் வறுக்க வேண்டும். அதே மாதிரி அரைக்கும் பொழுதும் தனி தனியாக அரைத்தால் ரொம்ப சூப்பராக இருக்கும்.

·         இந்த பொடியினை இட்லி, தோசையுடன் சாப்பிடவும் சுவையாக இருக்கும்.

·         அதிகம் பொடி செய்து கொள்வதாக இருந்தால், இதே மாதிரி செய்து வைத்து கொள்ளலாம். அப்படி செய்யும் பொழுது புளியினை சேர்க்க வேண்டாம். 

25 comments:

Kalpana Sareesh said...

Sure try for vegetarians like me..

Nandini said...

Great rice! It looks tempting and very healthy!

சசிகுமார் said...

நல்ல சத்தான சமையல். போட்டோ சூப்பரா எடுக்குறீங்க அக்கா

தெய்வசுகந்தி said...

பார்த்தாலே சாப்பிடனும் போல இருக்குது கீதா!!

savitha ramesh said...

Tamizh la enna peru geetha,engeyo paartha madhiri oru nyabagam.super a irukku pa.

vanathy said...

super & healthy recipe.

veena krishnakumar said...

wow!!!!!!!!never knew that flax seed can be used this way too. thanks for all the info

S.Menaga said...

சூப்பர்ர் சாதம் கீதா,இதற்காகவே இந்த ஆளிவிதையை வாங்கி சமைக்க‌ போறேன்...

Shanavi said...

Geetha, Super Ponga, Looks inviting and at the same time, very healthy too.. A must try

asiya omar said...

ஃபலக்ஸ் விதை சேர்த்து செய்திருப்பது புதுசாக இருக்கு,கலக்குறீங்க...

angelin said...

are flax seed and linseed same geetha?

Priya said...

WOw attasagama iruku flax seed rice...super..

Krithi's Kitchen said...

Love the addition of flax seeds to a rice... perfect!

http://krithiskitchen.blogspot.com
Breakfast Club - Pancakes

Sensible Vegetarian said...

Super recipe, nice one.

GEETHA ACHAL said...

நன்றி கல்பனா..

நன்றி நந்தினி...

நன்றி சசி...

நன்றி தெய்வசுகந்தி...

நன்றி சவிதா...இதன் பெயர் தமிழில் ஆளி விதை...

GEETHA ACHAL said...

நன்றி வானதி..

நன்றி வீனா..

நன்றி மேனகா...கண்டிப்பாக செய்து பாருங்க..

நன்றி ஷானவி...

நன்றி ஆசியா...

GEETHA ACHAL said...

நன்றி ஆசியா அக்கா...

நன்றி ஏஞ்சலின்....ஆமாம் flax seed and linseed இரண்டுமே ஒன்று தான்..

நன்றி ப்ரியா..

நன்றி கீர்த்தி...

நன்றி sensible...

Pushpa said...

Delicious and healthy flax seed rice.

Kanchana Radhakrishnan said...

புதுசாக இருக்கு.photo super.

Shama Nagarajan said...

nice one..good

Gayathri said...

மிக்க நன்றி, இத வாங்கிவச்சுண்டு எப்படி உபாயோகிக்கலாமுன்னு யோசிக்கர்த்தே அற்புதமான ஐடியா ரொம்ப நன்றி

Jay said...

wow...this makes me droooooool Geetha...reminds me of my mom's taste..
Tasty Appetite

Now Serving said...

Thamizh yezhuthu kooti padika vendirrukku :( Aanaal, rice rombavey super ah irruku! Ennoda thamizh padika oru vaipu idhu - dhool :)

சிநேகிதி said...

உங்களுக்கு எனது இனிய இல்லத்தில் அவார்டு கொடுத்திருக்கேன்.. பெற்றுக்கொள்ள வாருங்கள்

என்றும் நட்புடன் உங்கள் சிநேகிதி

http://en-iniyaillam.blogspot.com/2011/04/blog-post_22.html

subha said...

Very useful blog.Thanks geetha:-)

Related Posts Plugin for WordPress, Blogger...