அலிகார் பிரியாணி - Aligarh Biryaniஎளிதில் செய்ய கூடிய பிரியாணி… கண்டிப்பாக நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும். திருமதி.அன்னு அவர்களின் குறிப்பினை பார்த்து நான் செய்த அலிகார் பிரியாணி….நன்றி.

நெய், புதினா, கொத்தமல்லி அல்லது எந்த ஒரு தூள் வகைகளும் சேர்த்து கொள்ளாமல் செய்ய கூடியது இந்த பிரியாணி…ஆனால் சுவையில் எந்த வித்தியாசமும் இருக்காது…ரொம்ப சூப்பராக இருக்கும்.

இதில் நாமுமே வீட்டில் செய்யும் சிக்கன் ஸ்டாக் சேர்ப்பதால் ரொம்ப சுவையாக இருக்கும்.

கண்டிப்பாக குழந்தைகளை கவரும் விததில் இந்த பிரியாணி இருக்கும்..ரொம்ப ஸ்பைசியாக இல்லாமல் இருப்பதால் கூடுதல் சுவை..

இதனை தயிர் பச்சடியுடன் சாப்பிட சூப்பர்ப் காம்பினேஷன்..விரும்பினால் எதாவது க்ரேவியுடன் சேர்த்து சாப்பிடலாம்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         Chicken Breast with Skin & Bone  -  2 ( சுமார் 1 பவுண்ட்)

சிக்கன் ஸ்டாக் செய்ய தேவையானவை :
·         பூண்டு – 6 பல்
·         இஞ்சி – 1 துண்டு பெரியது
·         சோம்பு – 1 மேஜை கரண்டி
·         தனியா – 1 மேஜை கரண்டி
·         மிளகு – 1 மேஜை கரண்டி
·         ஏலக்காய் – 3 , கிராம்பு – 3
·         பிரியாணி இலை – 1 (விரும்பினால்)
·         பச்சைமிளகாய் – 5
·         வெங்காயம் – 1 பெரியது நறுக்கியது
·         உப்பு – 1 தே.கரண்டி
·         தண்ணீர் – 4 கப்
·         எண்ணெய் – 1 தே.கரண்டி

பிரியாணி செய்ய :
·         பாஸ்மதி அரிசி – 2 + 1/2 கப்
·         தயிர் – 1 கப்
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         மிளகு – 5
·         ஏலக்காய் - 2

பிரியாணிக்கு அரைத்து கொள்ள :
·         பூண்டு – 10
·         இஞ்சி – 1 பெரிய துண்டு
·         பட்டை – 2
·         ஜாதிக்காய் – சிறிதளவு (விரும்பினால்)

செய்முறை:
·         முதலில் சிக்கனை தோல், எலும்பு எல்லாம் நீக்கி தனியாக சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். தோல் + எலும்பினை தனியாக கழுவி வைத்து கொள்ளவும்.


·         அரிசியினை கழுவி தண்ணீரில் 10 – 15 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும். தயிரினை மிக்ஸியில் போட்டு மோராக அடித்து கொள்ளவும்.

சிக்கன் ஸ்டாக் செய்ய :
·         பிரஸர் குக்கரில், எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை + ஏலக்காய் + கிராம்பு போட்டு தாளித்து பின் வெங்காயம் +பச்சைமிளகாய் + இஞ்சி + பூண்டு + சிக்கன் தோல் , எலும்பு சேர்த்து கொள்ளவும்.


·         இத்துடன் மீதம் உள்ள் பொருட்கள்(மிளகு, சோம்பு, தனியா ) + தண்ணீர் + உப்பு எல்லாம் சேர்த்து கொள்ளவும்.


·         இதனை 6 – 7 விசில் வரும் வரை வேகவிடவும்.


·         கடைசியில் ஸ்டாகினை(சிக்கன் தண்ணீர்) வடிகட்டி கொள்ளவும்.   இப்பொழுது சிக்கன் ஸ்டாக் ரெடி.

கவனிக்க:
சிக்கன் தோலுடன் இருந்தால், தோல் மற்றும் தேவை இல்லாத எலும்புகளை சேர்த்து 6 விசில் வரும் வரை வேகவிடவும்.

சிக்கனில் தோல் இல்லை என்றால், சிக்கனை ஸ்டாக் செய்ய சேர்க்காமல் வெரும் தண்ணீர் மட்டும் சேர்த்து 2 – 3 விசில் வரும் வரை வேகவிடவும். பின் குக்கரினை திறந்து அதில் 4 – 5 சிக்கன் துண்டுகளை போட்டு மேலும் 5 நிமிடங்கள் வேகவிடவும். இதில் சேர்த்த சிக்கனை சாலடாக சாப்பிடலாம்.


பிரியாணி செய்ய :
·         இஞ்சி + பூண்டு + பட்டை + ஜாதிக்காய் + 2 மேஜை கரண்டி தண்ணீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

·         கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகு + ஏலக்காய் தாளித்து அத்துடன் அரைத்த விழுதினை போட்டு வதக்கவும். சிறிது வதங்கியவுடன், சிக்கனை சேர்த்து நன்றாக வதக்கவும்.


·         சிக்கன் வதங்கியவுடன் தயிர் + சிறிது உப்பு சேர்த்து நன்றாக 5 நிமிடங்கள் வேகவிடவும்.


·         இத்துடன் அரிசியினை சேர்த்து வதக்கவும்.


·         1 கப் அரிசிக்கு 2 கப் சிக்கன் ஸ்டாக் என்று விதம் சேர்த்து கொண்டு பிரியாணியினை வேகவிடவும். (குறிப்பு :நான் எப்பொழுதுமே எல்லாம் தாளித்த பிறகு அதனை மைரேவேவில் வேகவைத்து கொள்வேன்…அவரவர் விருப்பம் போல அதனை தம் போடாவே அல்லது பிரஸர் குக்கரிலே செய்து கொள்ளலாம்.)


·         சுவையான எளிதில் செய்ய கூடிய அலிகார் பிரியாணி ரெடி.

குறிப்பு :
இந்த பிரியாணியில் எந்த கலரும் சேர்க்காததால் வெள்ளை கலரில் இருக்கும். விரும்பினால் நீங்க கலர் சேர்த்து கொள்ளலாம். ஆனால் வெள்ளை கலர் தான் இதன் ஸ்பெஷாலிட்டி…

ஜாதிக்காய் இல்லை என்றால் ஜாதிக்காய் பொடியினை சேர்த்து கொள்ளலாம்.


இந்த சிக்கன் ஸ்டாகினை செய்து fridgeயில் 1 வாரம் வரை வைத்து கொள்ளலாம்.

சிக்கன் ஸ்டாகினை போலவே வெஜுடேபுள் ஸ்டாகினை காய்கறிகள் சேர்த்து செய்து கொள்ளலாம்.

தயிரினை அப்படியே சேர்க்காமல் அதனை மிக்ஸியில் மோராக அடித்து கொள்வதால் நன்றாக இருக்கும்.

36 comments:

Shanavi said...

Romba healthy version Geetha..Paarkave arumaiya iruku.

Shama Nagarajan said...

delicious biriyani

Chitra said...

looks very good... :-)
Microwave biriyani - இப்போதான் பார்க்கிறேன்.

ஸாதிகா said...

ஆம்பூர் பிரியாணி,வாணியம்பாடி பிரியாணி,ஹைதராபாத் பிரியாணி இப்படி கேளிவிப்பட்டுள்ளேன்.அலிகார் பிரியாணி இப்போழுதுதான் கேளிவிப்படுகின்றேன்.வித்தியாசமான செய்முறை.கண்டிப்பா வித்தியாசமான டேஸ்ட்டுடன் இருக்கும்.

Pushpa said...

My mouth is watering reading this post biryani looks healthy and delish.

Asiya Omar said...

அருமையாக செய்திருக்கீங்க.நானும் செய்யனும் என்று எடுத்து வைத்திருக்கிறேன்...கிட்டதட்ட அரபிய பிரியாணி மாதிரிதான்.அன்னுவிற்கு மெசேஜ் அனுப்பிட்டீங்களா?ரொம்ப சந்தோஷப்படுவாங்க..

Nandinis food said...

That's a yummy and droolworthy biryani there! Slurp!

சசிகுமார் said...

தேங்க்ஸ் அக்கா இது புது மாதிரி பிரியாணியா இருக்கு

ஹுஸைனம்மா said...

ம்.. கீதாவே செஞ்சு, பதிவும் போட்டுட்டாங்கன்னு, இனி அனிஷாவுக்கு சந்தோஷம் தாங்காது போங்க. கையில பிடிக்க முடியாது!!;-))))

ஆனா, நீங்களே செஞ்சு பதிவும் போட்டு சூப்பராயிருக்கும்னு கன்ஃபர்ம் பண்ணினதால, நானும் கண்டிப்பா செஞ்சு பாக்கப் போறேன். (இல்லன்னாலும் செஞ்சு பாக்கிறதாத்தான் இருந்தேன்; இப்ப கொஞ்சம் கூடுதல் நம்பிக்கை, அவ்வளவுதான்!!)

ஆண்டவா, இந்த பின்னூட்டத்த அனிஷா பாக்காம இருக்கணுமே!! பாத்தாலும் கோவிக்காம இருக்கணுமே!! ;-)))))))

Jaleela Kamal said...

அன்னு பிரியாணிய பார்த்த தில் இருந்து செய்யனும் என்று பையன் வருவதற்காக வெயிட்டிங்,அவனுக்கு தான் மசாலா தக்காளி இல்லாம பிடிக்கும். இது கப்ஸா, ஷாகி , போல வேறு முறை, அடுதத மாதம் தான் செய்யனும் என்று இருக்கேன்.

மைக்றோ வேவில் தம் எவ்வள்வு நேரம்
போடனும்

Priya Suresh said...

YUmm, briyani makes me hungry,superaa irruku Geetha..

Unknown said...

அன்னு பிரியாணியினை பார்த்து நீங்கள் செய்த பிரியாணி சூப்பர்... நாக்கை சப்பு கொட்ட வைக்குது போட்டோக்கள்

Menaga Sathia said...

நல்லாயிருக்கு கீதா..பிரியாணி வெள்ளை கலரா இருக்குமேன்னு தான் இன்னும் செய்யாமல் இருக்கேன்.

பிஞ்சுக் கவிஞர்:) அதிரா:) said...

வாவ்... கீதா உண்மையிலயே சூப்பர் பிரியாணிதான்... அன்னுவுக்கும் நன்றி.

சிறியவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களும் பிடிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

Unknown said...

Very tempting briyani geetha,Wonderful version...luks delicious.

Unknown said...

Wow.super.try pannitu solren.stock dhan highlight e.

Porkodi (பொற்கொடி) said...

unga porumaiyum aarvamum thaan enaku aacharyama irukku! :-)

எல் கே said...

most of you changed to NV hmm ok

sudha said...

hai geetha,

pls don't mistake me,but i saw the same recipe(aligar biriyani) 10 days back in another blog .honestly i don't remember the blog's name.

sudha said...

my bad.sorry geetha i didn't go through this recipe from the beginning.indeed,you had given the blogger's name.pls forgive me for my "mundhirikottaithanam".

Cool Lassi(e) said...

Biryani looks fabulous! The name is totally new!

vanathy said...

சூப்பரா இருக்கு. நானும் செய்து பார்க்க வேண்டும். அன்னுக்கா ரெசிப்பி சூப்பர் ஹிட் என்பதில் சந்தேகமே இல்லை.

Saraswathi Ganeshan said...

Simply irresistible, you dont believe Savitha & me were talking about the same & you have given a visual treat dear..

GEETHA ACHAL said...

நன்றி ஷானவி..

நன்றி ஷாமா..

நன்றி சித்ரா...

நன்றி ஸாதிகா அக்கா...

நன்றி புஷபா..

நன்றி ஆசியா அக்கா...ஆமா கண்டிப்பாக அன்னு ரொம்ப சந்தோச படுவாங்க...இந்த பிரியாணி ரொம்ப சூப்பராக இருந்தது...

GEETHA ACHAL said...

நன்றி நந்தினி..

நன்றி சசி..

நன்றி ஹுஸைனம்மா...கண்டிப்பாக செய்து பாருங்க...சூப்பராக இருந்தது..அடுத்த வாரம் திரும்பவும் செய்யனும்..என் பொன்னுக்கு ரொம்ப பிடித்துவிட்டது..

GEETHA ACHAL said...

நன்றி ஜலிலா அக்கா...ஆமாம் கண்டிப்பாக அனைவருக்கும் இந்த பிரியாணி ரொம்ப பிடிக்கும்...ரொம்ப ஸ்பைசியாக இல்லாமல் இருந்தது...

நான் மைக்ரோவேவில் தம் போடவில்லை...அதில் குறிப்பிட்டு உள்ளது தனியாக அடுப்பில் தம் போடாவே அல்லது பிரஸர் குக்கரில் செய்து கொள்ளலாம் என்று தான் குறிப்பிட்டு உள்ளேன்...

GEETHA ACHAL said...

நன்றி ப்ரியா..

நன்றி சிநேகிதி...

நன்றி மேனகா..கண்டிப்பாக செய்து பாருங்க...ஷிவானி குட்டிக்கு ரொம்ப பிடிக்கும்...

நன்றி அதிரா..ஆமாம் பிரியாணி நல்லா இருந்தது..சிம்பிளான ஈஸியான பிரியாணி..

நன்றி ப்ரேமா..

நன்றி சவிதா...ஆமா, சவி இந்த ஸ்டாக் தான் தனி சுவையினை தருகின்றது..

GEETHA ACHAL said...

நன்றி பொற்கொடி..எப்படி இருக்கின்றிங்க...

நன்றி கார்த்திக்...அப்படியா....சரி...இன்னும் ஒரு வாரத்திற்கு NV குறிப்புகள் எல்லாம் போடாமல் இருக்கேன்...

GEETHA ACHAL said...

நன்றி சுதா...பராவயில்லை...சில சமயம் இப்படி தான் ஆகும்..

நீங்க இது மாதிரி சொல்வது நல்லது தான்..யாரும் யாருடைய பதிவினையும் காப்பி செய்ய கூடாது..

அப்படியே செய்தாலும் atleast they should mention their name and the link to it...

GEETHA ACHAL said...

நன்றி கூல்..

நன்றி வானதி...நீங்களும் செய்து பாருங்க..

நன்றி சாரஸ்...ரொம்ப சந்தோசம் பா...

Priya said...

சூப்பரா இருக்கு. நானும் செய்து பார்க்க வேண்டும்!!!

MANO நாஞ்சில் மனோ said...

அசத்தல் சமையல் குறிப்புகள்....

Mahi said...

நான் எப்பவுமே குக்கர் பிரியாணிதான் செய்வேன்,மைக்ரோவேவ்ல செய்ததில்ல.நல்ல ஐடியாவா இருக்கு கீதா! :)

அவசர சமையல்லதான் பிரியாணி செய்வேன்,ஆனா இது வேலை கொஞ்சம் அதிகமா இருக்கும் போலவே?!;)

Anisha Yunus said...

geetha akka,

senchu paarthu ezuthiyatharku romba thanks. naan hib visa vanthathil konjam busy. sila kurippu:

antha stockai suthama vadikatta thevai illai, saunf, dhania thavira mathathellaam vechukkalaam (elumbu, thol use panna athu vendam)

chicken stock nalla filter senju freezerla oru vaaram vaikkalaam. not in fridge.

thayir lighta kaila kilarinaalum pothum

enjoy pannunga

Anisha Yunus said...

//ம்.. கீதாவே செஞ்சு, பதிவும் போட்டுட்டாங்கன்னு, இனி அனிஷாவுக்கு சந்தோஷம் தாங்காது போங்க. கையில பிடிக்க முடியாது!!;-))))//

husainammaa, een een intha poraamai???? namakku seymurai simple aayitaa annanaiyum pasangalaiyum velai vaanga mudiyaathunuthaane?? grrrrrr

//ஆனா, நீங்களே செஞ்சு பதிவும் போட்டு சூப்பராயிருக்கும்னு கன்ஃபர்ம் பண்ணினதால, நானும் கண்டிப்பா செஞ்சு பாக்கப் போறேன். (இல்லன்னாலும் செஞ்சு பாக்கிறதாத்தான் இருந்தேன்; இப்ப கொஞ்சம் கூடுதல் நம்பிக்கை, அவ்வளவுதான்!!)//

aahaa. en biriyani mela ivvalavu ava nambikkaiyaa? enakkuthanppa sariyaa varaathu. seyyara matha ellaarukkum nallave varum... neenga biriyani senchuttu maille pinnoottam pottaalum naan pathivula ethidaren...a aang..!!

//ஆண்டவா, இந்த பின்னூட்டத்த அனிஷா பாக்காம இருக்கணுமே!! பாத்தாலும் கோவிக்காம இருக்கணுமே!! ;-))))))//
ezutha vendiyathaiyum ezuthittu ippa ithu verayaa? enakku kannaa pinnaannu kobam(nalla paarunga smiley kooda engayume podalai!!)

grrrrrrrrrrrrrrrrrr!!!!

Anisha Yunus said...

asiya akka, geethaakka enakku phonelayum pathivilum message thanthaanga. unmailaye santhosham, vip ellaam ennoda recipeyai test seyraanganna summaavaa??? :))))

jaleela akkaa... naanum waiting.. biriyaniyoda enna side dishnu paakkatthan. naanga thayir pachadiyum puthina chutneyum vechikittom. seekiram paiyan vanthavudan seynga :)

menaga akka... payappadaama seynga. venumna color podi kadaisila kalanthu color ful aakidunga. aanaa vaasathulaye ellaarum color note seyya amranthuduvaanga. !!

athira akka, nanri (ennathu naan inga vanthu ellaarukkum comment pottuttu irukken. he he he :)

vanathykka. dangs dangs dangs :))

geetha akka, innorumurai thanks thanks. unga blog moolamaa innum athigam peridam kondu senratharku. :))

Related Posts Plugin for WordPress, Blogger...