கேபேஜ் கோப்தா (முட்டைகோஸ்) - Cabbage Kofta


நான் கலோரிஸ் குறைவாக இருக்க வேண்டும் என்பதால் எண்ணெயில் பொரிக்காமல் செய்து இருக்கின்றேன்…விரும்பினால் எண்ணெயில் பொரித்து கொள்ளலாம்.ஆனால் சுவையில் பெரிய வித்தியசாம் எல்லாம் இருக்காது….

இதனை குழிபாணியாரம் சட்டியில் செய்து இருப்பதால் உருண்டைகள் உடையாமல் கோப்தா மாதிரி இருக்கும்

எளிதில் செய்ய கூடிய கேபேஜ் கோப்தா….நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்…

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்:
         முட்டைகோஸ் துறுவியது – 3 கப்
·         கடலைமாவு – 1 கப்
·         எண்ணெய் - சிறிதளவு

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         கரம் மசாலா தூள் – 1/2 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
·         முட்டைகோஸினை காரட் துறுவது போல் துறுவி கொள்ளவும்.


·         துறுவிய கோஸ் + கடலைமாவு + தூள் வகைகள் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். (தண்ணீர் சேர்க்க வேண்டாம். கோஸ் துறுவலிலே தண்ணீர் நிறைய இருக்கும்.)


·         சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.


·         குழிபணியார கடாயில் சிறு துளி எண்ணெய் ஊற்றி இந்த உருண்டைகளை போட்டு வேகவிடவும்.


·         ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு அதனை திருப்பி போட்டு வேகவிடவும்.


·         ஒவ்வொரு பக்கமும் நன்றாக வேகவிடவும். சுவையான எளிதில் செய்ய கூடிய கோப்தா ரெடி. இதனை க்ரேவி செய்து கோப்தா க்ரேவில் சேர்த்து சாப்பிடலாம்…அல்லது அப்படியே கலந்த சாதமுடன் சாப்பிட அருமையான காம்பினேஷன்..


குறிப்பு :
முட்டைகோஸினை பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி கொண்டு துறுவினால் எளிதில் துறுவலாம். அல்லது ஒவ்வொரு இதழாக எடுத்து அதனை சூருட்டி வைத்து கொண்டு துறுவலாம்.

கண்டிப்பாக தண்ணீர் சேர்த்து பிசைய வேண்டாம். துறுவிய முட்டைகோஸிலேயே நிறைய தண்ணீர் இருக்கின்றது.

இதனை குழிபாணியாரம் சட்டியில் செய்து இருப்பதால் உருண்டைகள் உடையாமல் கோப்தா மாதிரி இருக்கும்…அதுவே தோசை கல்லில் செய்தால் கட்லட் மாதிரி ஆகிவிடும்.

கடலைமாவினை எப்பொழுதும் 3 – 4 நிமிடங்கள் மிதமான தீயில் வறுத்து கொள்ளவும். அப்பொழுது தான் மாவின் வாசனை நீக்கிவிடும். மைசூர்பாகு அல்லது எந்த ஒரு கடலைமாவு சேர்க்கும் உணவாக இருந்தாலும் கடலைமாவினை முதலில் கண்டிப்பாக வறுத்து கொண்டு சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

முட்டைகோஸினை துறுவிய பிறகு கடைசியில் கொஞ்சம் எளிதில் துறுவ முடியாது.. அதனை க்ரேவி செய்யும் பொழுது வெங்காயம் + தக்காளி சேர்த்து வதக்கி அரைக்கும் பொழுது அந்த முட்டைகோஸினையும் வதக்கி சேர்த்து அரைத்து கொண்டால் எதுவும் wasteஆக தூக்கிபோட வேண்டாம்.

29 comments:

சசிகுமார் said...

அக்கா பார்க்கவே சூப்பரா இருக்கு தேங்க்ஸ்

Lali said...

சுவையான கலோரிகள் குறைவான உணவு..
நன்றி! :)

http://karadipommai.blogspot.com/

Nandinis food said...

Healthy appetizer for kids and adults too! Very yummy!

ஸாதிகா said...

கோப்தாவை குழிப்பணியாரச்சட்டியில் செய்து இருக்கீங்க.சூப்பர் ஐடியா.

Unknown said...

முட்டைக்கோஸ் அதிகம் விரும்பாதவர்களை கூட உங்கள் மெனு அசத்தும் போலிருக்கே ...

Asiya Omar said...

very innovative,healthy and delicious..thanks for sharing.

Menaga Sathia said...

நல்லாயிருக்கு,இதே போல் சுரைக்காய்,சௌசௌ,வாழைக்காயில் செய்திருக்கேன்...

Jaleela Kamal said...

குழிபணியார சட்டியிலேயே செய்துட்டீங்கலா,ந்ல்ல ஐடியா
நல்ல இருக்கு,
கொப்தா கிரேவியும், இன்னும் வெஜிடேபுள்ஸ் சேர்த்து கொப்தாவும் செய்து இருக்கேன்

Mahi said...

டிப்ஸ் எல்லாம் யூஸ்புல்லா இருக்கு! கோஃப்தாவும் சூப்பர்!

Lifewithspices said...

superrr idea.. idho udaney try panrenn..

Priya Suresh said...

Inviting koftas, feel like munching some..

San said...

Cabbage koftas souns yummy n delicious ,loved the oats peda too (like to try it soon ) n let you know
.Thanks for the recipe dear .

Unknown said...

nalla irukku geetha.try pannitu solren.easy vum irukku.

தெய்வசுகந்தி said...

New idea! delicious kofta!!

GEETHA ACHAL said...

நன்றி சசி..

நன்றி லலி..

நன்றி நந்தினி..

நன்றி ஸாதிகா அக்கா..

நன்றி ஜமால் அண்ணா..

GEETHA ACHAL said...

நன்றி ஆசியா அக்கா..

நன்றி மேனகா..நான் வாழைக்காயில் செய்து இருக்கின்றேன்..ஆனால் சுரைக்காயில் செய்தது கிடையாது...அடுத்த முறை அந்த காயில் செய்து பார்க்கிறேன்..

நன்றி ஜலிலா அக்கா...சீக்கிரமாக உங்க குறிப்பினை போடுங்க..

நன்றி மகி..

நன்றி கல்பனா..

GEETHA ACHAL said...

நன்றி ப்ரியா...

நன்றி சன்..கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க..

நன்றி சவிதா..கண்டிப்பாக செய்து பார்த்து சொல்லுங்க..

நன்றி தெய்வசுகந்தி...

Aparna said...

Kalakkunga, kalakkunga !!

Shanavi said...

Hey super, I don have cabbage this time, will try this with zucchini..

Saravana Kumar K N said...

You blog is nice.my mom takes recipe notes from your blog.

போளூர் தயாநிதி said...

சுவையான கலோரிகள் குறைவான உணவு..
நன்றி! :)

மனோ சாமிநாதன் said...

கோப்தா அருமை கீதா! பார்ப்பதற்கு பணியாரம் போல இருக்கிறது! குறைந்த பொருள்களில் ஒரு சுலபமான சத்தான உண‌வு வகை! வாழ்த்துக்கள்!!

Jayanthy Kumaran said...

wat a fantastic recipe..mouthwatering n delicious..
Tasty Appetite

Pavithra Elangovan said...

I love this a lot geetha and used to do gravy with this.. But romba naal aachu.. ippo I am so tempted.

ஹுஸைனம்மா said...

கோஃப்தாவா, ரொம்ப சிரமமான வேலையாச்சேன்னு நினச்சுகிட்டே பாத்தேன். ரொம்ப ஈஸியா இருக்கு. அதுவும் குழிப்பணியாரச்சட்டின்னா இன்னும் ஈஸி. டிரை பண்ணனும்.

ராமலக்ஷ்மி said...

பணியாரச் சட்டியில் செய்யலாம் என்பது புதிய தகவல். செய்து பார்க்கிறேன்:)! நன்றி.

GEETHA ACHAL said...

நன்றி அபர்ணா..

நன்றி ஷானவி...கண்டிப்பாக செய்து பாருங்க...எந்த காயிலும் செய்யலாம்...சுக்கினியிலு நல்லா தான் இருக்கும்.

நன்றி சரவணகுமார்...உங்க அம்மாவிற்கு என்னுடைய நன்றியினை தெரிவிக்கவும்.

நன்றி போளூர் தயாநிதி..

நன்றி மனோ ஆன்டி.

நன்றி ஜெய்..

GEETHA ACHAL said...

நன்றி பவித்ரா...

நன்றி ஹுஸைனம்மா...கண்டிப்பாக செய்து பாருங்க...உங்க விருப்பத்திற்கு ஏற்றாற் போல மசாலா சேர்த்து கொள்ளலாம்...செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க..

நன்றி ராமலஷ்மி...

Rajeswari jeevanantham said...

aval vikatan shows me a nice blog. very useful to me.

Related Posts Plugin for WordPress, Blogger...