சினமன் ஃப்ரெஞ்ச் டோஸ்ட் - Cinnamon French Toastஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இந்த டோஸ்டினை செய்வாங்க…எங்க வீட்டில் அக்‌ஷதாவிற்கு ரொம்பவும் பிடித்த டோஸ்ட்….குழந்தைகள் அனைவரும் கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவாங்க…

இதில் பட்டைதூள் சேர்ப்பதால் உடலிற்கும் ரொம்ப நல்லது… பட்டைதூளினை சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும்  நன்மைகள் சில,

         சக்கரையின் அளவினை குறைக்க உதவுக்கின்றது..
·         அதே மாதிரி உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை நீக்குகின்றது…
·         இதில் அதிக அளவு விட்டமின் K, Iron, நார்சத்து - Dietary Fiber, Calcium & Manganese இருக்கின்றது.
·         உடல் எடையினை குறைக்க விரும்புவோர் தினமும் பட்டை சாப்பிடுவது நல்லது.
·         நம்முடைய ஞாபகம் சக்தியினை அதிகரிக்க செய்கின்றது…அதனால் வளரும் குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் நல்லது.

சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்:
·         டோஸ்ட் ப்ரெட் – 3 துண்டுகள்
·         முட்டை – 1
·         பால் – 1 கப்
·         பட்டர் – சிறிதளவு

பொடித்து கொள்ள :
·         சக்கரை – 3 மேஜை கரண்டி
·         ஸினமன் (பட்டை) – 1 பெரிய துண்டு

செய்முறை :
·         சக்கரை + பட்டையினை மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.


·         பால் + முட்டையினை ஒரு பவுலில் போட்டு நன்றாக அடித்து கொள்ளவும். இத்துடன் பொடித்து வைத்துள்ள சக்கரையினை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.


·         ப்ரெடினை இந்த கலவையில் போட்டு தோய்த்து கொள்ளவும். கல்லினை காயவைத்து இந்த ப்ரெடினை போட்டு வேகவிடவும். இத்துடன் சிறிது பட்டர் சேர்க்கவும்.


·         ஒரு பக்கம் நன்றாக வெந்தபிறகு, அதனை திருப்பி போட்டு வேகவிடவும்.


·         சுவையான எளிதில் செய்ய கூடிய டோஸ்ட் ரெடி.

குறிப்பு :
இதனை சாதரண ப்ரெடினை விட டோஸ்ட் ப்ரெடில் செய்தால் ரொம்ப நல்லா இருக்கும்.கடையில் Toast Bread என்றே விற்கும்.

நான் பெரும்பாலும் முட்டை சேர்க்காமல் தான் செய்வேன்…முட்டை சேர்க்கவில்லை என்றால் கூடுதலாக 1/2 கப் பால் சேர்த்து கொள்ளவும்.

இதில் பட்டைதூள் சேர்ப்பதால் உடலிற்கு ரொம்ப நல்லது.
24 comments:

Mahi said...

நல்லா இருக்கு கீதா! இப்பதான் மெதுவா பட்டை தூளை பிரியாணி-குருமா தவிர மத்த ஐட்டங்களில் சேர்க்க ஆரம்பிச்சிருக்கேன். :)

Nandinis food said...

It's a lovely french toast! Great for breakfast!

Radhika said...

makes for a great breakfast.

Chitra said...

I love these toasts with eggs. yummy!!!!!!!!

சசிகுமார் said...

இது நம்ப அக்ஷதா குட்டி ஸ்பெசலா அப்பா டெஸ்ட் சூப்பரா தான் இருக்கும். நன்றி அக்கா

Raks said...

Cinnamon in french toast sounds amazing,loved it!

Priya Suresh said...

Love cinnamon flavour in anything, toast looks beautiful,makes me hungry..

GEETHA ACHAL said...

நன்றி மகி...

நன்றி நந்தினி..

நன்றி ராதிகா..

நன்றி சித்ரா..

நன்றி சசி...ஆமாம் இது அக்‌ஷதா ஸ்பெஷல்...

GEETHA ACHAL said...

நன்றி ராஜி..

நன்றி ப்ரியா..

Menaga Sathia said...

குழந்தைகளுக்கு பிடித்த காலை உனவு..எனக்கும் முட்டையில்லாமல் செய்வதுதான் பிடிக்கும்.பொண்ணுக்கு செய்யும்போது மட்டும் முட்டை சேர்த்து செய்வேன்..

Unknown said...

naanum ippadi dhan toast seyven.but pattai thool pottu seyradhu kidayadhu.try panren.lovely.

தெய்வசுகந்தி said...

நல்லா இருக்குது கீதா!! என் பொண்ணு, பையன் ரெண்டு பேருக்கும் பிடித்தது இது.

Lifewithspices said...

Superrr... my grand mom often prepare tis wen is was a kid..

Shanavi said...

Thanks for informing the tips.. Sure , a try for me dear..

Thanks for ur kind comments Geetha, sure that boosts me more..

வலையுகம் said...

சகோ அஸ்மா அவர்களின் பயணிக்கும் பாதை தளத்தின் வழியாக உங்கள் வலைப்பூவை பார்த்தேன்

பிரட்டுல இதுலாம் செய்யலாமா?

பகிர்வுக்கு நன்றி சகோ

Asiya Omar said...

looks yum yum..

Jaleela Kamal said...

பட்டை பொடி சேர்த்தாலே தனி மனம்
அருமையான டோஸ்ட் எங்கள் வீட்டில் பேவரிட் அயிட்டம் வாரத்தில் முதல் நாள் அடிக்கடி செய்வேன்

Saraswathi Ganeshan said...

First time here..YUMMY collection of recipes..Glad to follow you.....Toast megavum arumai..

GEETHA ACHAL said...

நன்றி மேனகா..

நன்றி சவிதா...கண்டிப்பாக செய்து பாருங்க..

நன்றி தெய்வசுகந்தி..குழந்தகளுக்கு மிகவும் பிடித்த டோஸ்ட்..

நன்றி கல்பனா..

நன்றி ஷானவி...கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க...

GEETHA ACHAL said...

நன்றி ஹைதர் அலி...ரொம்ப மகிழ்ச்சி...கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க..

நன்றி ஆசியா அக்கா..

நன்றி ஜலிலா அக்கா..

நன்றி சாரா..

Anonymous said...

Bakery-ya cross pannum poluthu cinnaman smell aalai ilukkum ! unga post paathum appadi dhaan irukku. Konjam karugirucho? Generella unga pictues romba attractive aaga irukkume ?

Anisha Yunus said...

intha vaaram ellaam enga veetula breakfast ithaan. sema taste!! thanks kka. :))

Mahi said...

டோஸ்ட் ப்ரெட் தேடிப் பார்த்தேன்,கிடைக்கல கீதா!நிறைய வெரைட்டி இருக்கு,ஆனா இது மட்டும் இல்ல.

GEETHA ACHAL said...

மகி...texas toast அல்லது french Toast ப்ரேட் என்று தேடி பாருங்க...

Related Posts Plugin for WordPress, Blogger...