டயட் பட்டர் சிக்கன் - Diet Butter Chickenபட்டர் சிக்கனில் அதிக அளவு கலோரிஸ் இருப்பதால் அதன் கலோரிஸ் அளவினை சிறிது குறைந்து செய்துள்ள க்ரேவி இது….கண்டிப்பாக சுவையில் வித்தியசாம் தெரியாது…

நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 – 40 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         சிக்கன் (Boneless Skinless Chicken Breast) – 2
·         பட்டர் – 1 மேஜை கரண்டி

வேகவைத்து அரைத்து கொள்ள :
·         சீரகம் – 1 தே.கரண்டி
·         தனியா தூள் – 1 தே. கரண்டி
·         மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
·         வெங்காயம் – 1 பெரியது
·         தக்காளி – 2
·         இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி
·         Dried Methi Leaves – 1 மேஜை கரண்டி
·         உப்பு – சிறிதளவு

சிக்கனுடன் சேர்த்து கொள்ள :
·         இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜை கரண்டி
·         லெமன் ஜுஸ் – 1 மேஜை கரண்டி
·         மஞ்சள் தூள் – 1 தே.கரண்டி
·         சிக்கன் மசாலா தூள் – 1 மேஜை கரண்டி

(சிக்கன் மசாலா தூளிற்கு பதிலாக கரம் மசாலா தூள் அல்லது மிளகாய்தூள், தனியா தூள் என்று உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற் போல கலந்து கொள்ளவும்.)

கடைசியில் சேர்க்க :
·         ரெட் கலர் - சிறிதளவு(விரும்பினால் சேர்த்து கொள்ளுங்க)
·         கெட்சப் (Tomato Ketchup ) – 1 தே.கரண்டி
·         சக்கரை – 1/2 தே.கரண்டி
Whole Milk - 1/2 கப் (விரும்பினால் சேர்த்து கொள்ளவும். அல்லது க்ரீம் சேர்க்கலாம்)

செய்முறை :
சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டி அதில் கலந்து கொள்ள கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து கலந்துவைக்கவும்.


வெங்காயம் + தக்காளியினை வெட்டி வைத்து கொள்ளவும். கடாயில் சீரகம் + தூள் வகைகள் + வெங்காயம் + தக்காளி + இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.


இத்துடன் 1 கப் தண்ணீர் + காய்ந்த மேத்தி கீரையினை பொடித்து போட்டு 10 நிமிடங்கள் வேகவிடவும்.


இது வேகும் நேரத்தில், சிக்கனி 400Fயில் முற்சூடு செய்த அவனில் Broil Modeயில் வேகவிடவும்.


10 – 12 நிமிடங்கள் கழித்து அவனில் உள்ள சிக்கன் ட்ரேயினை வெளியில் எடுத்து சிக்கனை திருப்பிவிட்டு மேலும் 3 – 4 நிமிடங்கள் வேகவிடவும். (சிக்கனில் இருந்து வெளி வந்த  ட்ரேயில் உள்ள தண்ணீரினை தனியகா வைத்து கொள்ளவும்.)


வேக வைத்த வெங்காயம் +தக்காளியினை மிக்ஸியில் போட்டு வேகவைத்து கொள்ளவும்.
அரைத்த விழுதினை, கடாயில் ஊற்றி கொதிக்கவிடவும்.


இத்துடன், சிக்கன் தண்ணீர்(ட்ரேயில் இருந்து எடுத்தது) + விரும்பினால் சிறிது Whole Milk சேர்த்து கொள்ளுங்க. இத்துடன்  tomato ketchup + ரெட் கலர் + சக்கரை சேர்த்து கொள்ளவும்..(நான் ரெட் கலர் சேர்க்கவில்லை….)

கடைசியில் வேகவைத்த சிக்கன் +  பட்டர் சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிடவும்.

சுவையான எளிதில் செய்ய கூடிய பட்டர் சிக்கன் ரெடி. இதனை நாண்னுடம்  சாப்பிட சுவையாக இருக்கும்.


குறிப்பு :
·         நான் இதில் பட்டரினை கடைசியில் மட்டுமே சேர்த்து இருக்கின்றேன்..

·         ரிச்சாக இருக்க வேண்டும் என்றால் பட்டரினை அளவினை அதிகம் சேர்த்து கொள்ளுங்க…

·         வெங்காயம் வேகவைக்கும் பொழுதும் சரி…அல்லது அரைத்த விழுதினை கடாயில் சேர்க்கும் பொழுது பட்டரினை 1 மேஜை கரண்டி சேர்த்து கொண்டால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

·         கண்டிப்பாக சிக்கனை முதலில் வேகவைத்த பிறகு தான் சேர்க்க வேண்டும். அப்படியே சேர்த்தால் கண்டிப்பாக் சுவையில் வித்தியாசம் இருக்கும்.

·         அவனில் செய்ய முடியவில்லை என்றால், முதலில் கடாயில் போட்டு வேகவைத்து கொள்ளவும்.

·         சிக்கனை பொரித்தும் கூட சேர்க்கலாம். ஆனால் அவனில் செய்தால் இன்னும் டேஸ்டியாக சுவையாக இருக்கும்.

29 comments:

Jay said...

wow...fantabulous recipe Geetha...wonderful presentation...tempting clicks..:P
Tasty Appetite

S.Menaga said...

சூப்பரா இருக்கு..அப்படியே இந்த பக்கம் 1 வாரம் கழித்து அனுப்புங்க...

vanathy said...

நல்லா இருக்கு, கீதா. படங்கள் அழகு.

Shama Nagarajan said...

yummy chicken

Premalatha Aravindhan said...

Very healthy version,luks delicious...

Chitra said...

Cool recipe, Geetha..... Super!

Krithi's Kitchen said...

Wow... chapathiyum indha butter chickenum kuduthaal.. mmm... soopera irukku in the low fat version...

http://krithiskitchen.blogspot.com
Herbs & Flowers in my Platter - Coriander/Cilantro
Breakfast Club - Pancakes

எல் கே said...

hmm ellam non veg

Nandini said...

Wow, very healthy and nice recipe! Really yummy!

Priya said...

Mouthwatering here, wat a delicious and healthy butter chicken..superaa irruku Geetha..

asiya omar said...

arumai geetha.

Cool Lassi(e) said...

I can almost feel the aroma of this chicken from my screen. I love the fact that it is baked.

prabhadamu said...

எல்லாமே சூப்பரா தான் இருக்கு. இங்கையும் கொஞ்சம் பார்சல் அனுப்புனா நல்லா இருக்கும். வீட்டில் குழந்தை நலமா அக்கா?

USHA said...

Hmm...delicious and yummy.

Aparna said...

Excellent Geetha, your recipes are in close line with what i search for dieting/insulin resistance. Whole grains, proteins, low fat. But i dont see a lot of soy recipes in yours. Is soy not good for dieting / women/insulin resistance.

savitha ramesh said...

romba nalla irukku pa.kandippa seyyaren.thanks for the healthy version.

சசிகுமார் said...

எப்பவும் போல நல்ல டிப்ஸ், அக்கா உங்க வாண்டு எப்படி இருக்கா

Jaleela Kamal said...

nalla irukku, engka viidil ellorum pidiththathu

Aparna said...

Chicken breast oven-la seyyum pothu hard aagalaiya Geetha? Especially broil pannum pothu ? Thanks.

Geetha6 said...

அருமையான பகிர்வு !

Geetha6 said...

waav..

Mano Saminathan said...

வழக்கம்போல ஒரு நல்ல குறிப்பு! புகைப்படங்களும் அழகு!

GEETHA ACHAL said...

நன்றி ஜெய்..

நன்றி மேனகா..

நன்றி வானதி..

நன்றி ஷாமா..

நன்றி ப்ரேமலதா...

GEETHA ACHAL said...

நன்றி சித்ரா,,,

நன்றி கீர்த்தி...

நன்றி கார்த்திக்...

நன்றி நந்தினி..

நன்றி ப்ரியா..

நன்றி ஆசியா அக்கா...

GEETHA ACHAL said...

நன்றி கூல்..

நன்றி ப்ரபா...வீட்டில் அனைவரும் நலம்...நீங்க எப்படி இருக்கிங்க...

நன்றி உஷா..

நன்றி அபர்ணா...

// Aparna said...
Excellent Geetha, your recipes are in close line with what i search for dieting/insulin resistance. Whole grains, proteins, low fat. But i dont see a lot of soy recipes in yours. Is soy not good for dieting / women/insulin resistance.//
நன்றி...சோயா சாப்பிடுவது உடலிற்கு நல்லது...சோயாவினை வைத்து நீங்க எந்த ஒரு கிரேவியினையும் செய்யலாம்...அதே மாதிரி பொரியல் செய்யும் பொழுது கூட சேர்த்து கொள்ளலாம்.

GEETHA ACHAL said...

நன்றி சவிதா...கண்டிப்பாக செய்து பாருங்க..

நன்றி சசி..குட்டி பொண்ணு நல்லா இருக்கா..

நன்றி ஜலிலா அக்கா..

நன்றி அபர்ணா...//Chicken breast oven-la seyyum pothu hard aagalaiya Geetha? Especially broil pannum pothu ? //இந்த ரெஸிபிக்கு இந்த மாதிரி எலும்பு இல்லாத சிக்கன் இருந்தால் தான் நல்லா இருக்கும்...

பிராய்ல் செய்யும் பொழுது நிறைய தண்ணீர் வெளியில் வந்துவிடும்...அதனால் கொஞ்சம் Hardஆக இருப்பது மாதிரி இருக்கும்...ஆனால் சாப்பிட்டு பார்த்தால் Softஆக தான் தெரியும்..

கூடவே நாம் வைப்பது சிறிய நேரத்திற்கு என்பதால் சிக்கன் நல்லா இருக்கும்..Hardஆகாது...

இதனை அப்படி Ovenயில் வைப்பதே சிக்கனில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்காக தான்...சிக்கனை இப்படி வேகவைத்த பிறகு சமைத்தால் தான் இந்த க்ரேவி நல்லா இருக்கும்.

மிகவும் Hardஆக இருக்கும் என்று நினைத்தால், சிக்கனை க்ரேவியுடன் சேர்த்து மேலும் 3 - 5 நிமிடங்கள் வேகவிடவும்...

அப்படி இல்லை எனில் அவனிற்கு பதிலாக சிக்கனி எண்ணெயில் பொரித்து சேர்த்து கொள்ளவும்..

எண்ணெயில் பொரித்தால் நிறைய கலோரிஸ் என்பதால்...சிறிது எண்ணெய் ஊற்றி தனியாக வேகவைத்து கொண்டு பிறகு சமைக்கவும்.

GEETHA ACHAL said...

நன்றி கீதா...

ஹுஸைனம்மா said...

கீதா, நான் சிக்கனை எண்ணெயில் பொரிப்பதில்லை. ஒரு ஸ்பூன், ஒரே ஒரு ஸ்பூன் பட்டரில் சிக்கனைப் போட்டு மூடி, சிம்மில் வைத்தால், அதிலிருந்து வரும் தண்ணிரிலேயே அழகாய் வெந்துவிடும். பொரிட்ததுபோலவும் இருக்கும்.

எனினும், ஓவன் இருப்பவர்கள் அதில செய்தால் நல்லதுதான். ஆனால் அதிலும், ஒரு ஸ்பூனாவது எண்ணெய் தடவி வைத்தால்தான் சாஃப்டாக இருக்கிறது.

GEETHA ACHAL said...

நன்றி ஹுஸைனம்மா...

சிக்கனை மூடி போட்டு இப்படி செய்வதால் அது அந்த தண்ணீரிலே வேகும்...அந்த டேஸ்ட் எனக்கு வேற மாதிரி இருந்தது...அதனால் தான் இப்படி அவனில் செய்தேன்..

ஆனால் அவன் இருப்பவர்கள் இப்படி செய்யலாம்...

கண்டிப்பாக அடுந்த முறை சிறிது பட்டர் சேர்த்து செய்து பார்க்கிறேன்..

நான் ஒரு பக்கம் வெந்தபிறகு அதனை திருப்பி போடும் பொழுது அந்த ட்ரேயில் உள்ள அடியில் இருந்த தண்ணிரினை சிக்கன் மீது சிறிது ஊற்றினேன்...ரொம்ப dryஆகாமல் இருக்க..நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...