கொத்தமல்லி சட்னி - Kothamali Chutney - Cilantro Chutney   
தேவையான பொருட்கள் :
         கொத்தமல்லி – 1 கட்டு
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

வறுத்து கொள்ள :
·         கடலைப்பருப்பு – 1 மேஜை கரண்டி
·         உளுத்தம்பருப்பு – 1 மேஜை கரண்டி
·         புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
·         காய்ந்த மிளகாய் - 3
·         கடுகு – 1 தே.கரண்டி
·         இஞ்சி – சிறிதளவு
·         பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை :
·         கொத்தமல்லியினை சுத்தம் செய்து அதனை நன்றாக தண்ணீரில் அலசி துணியில் போட்டு உலர்த்தவும்.


·         கடாயில் வறுக்க கொடுத்துள்ள ஒவ்வொரு பொருட்களாக போட்டு வறுத்து ஆறவிடவும்.


·         வறுத்த பொருட்கள் சிறிது ஆறியதும், மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

·         நன்றாக அரைத்தவுடன், உப்பு + கொத்தமல்லியினை நறுக்கி இதில் சேர்த்து அரைக்கவும்.

·         அரைக்கும் பொழுது தண்ணீர் ஊற்றாமல் சிறிது எண்ணெய் சேர்த்து அரைத்தால் நன்றாக இருக்கும்.

·         சுவையான கொத்தமல்லி சட்னி ரெடி. இதனை தோசை, இட்லி, சாதம் போன்றவையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


கவனிக்க:
·         கொத்தமல்லியினை வதக்க தேவையில்லை. அதனை அப்படியே சேர்த்து அரைக்கலாம்.

·         புளியினை சிறிது வறுத்து கொள்வதால், எளிதில் அரைப்படும்.
·         அரைக்கும் பொழுது, தண்ணீருக்கு பதிலாக எண்ணெய் சேர்ப்பதால் 2 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.

·         காய்ந்த மிளகாயிற்கு பதிலாக பச்சைமிளகாய் சேர்த்தால் கலர் நல்லா இருக்கும்.

24 comments:

சசிகுமார் said...

டிப்ஸ்க்கு நன்றி

Priya Suresh said...

I can survive for many days with this chutney,my fav..

Priya said...

செய்முறை விளக்கத்தோடு கவனத்திற்கு அளித்த டிப்ஸும் அருமை, தேங்க்ஸ் கீதா!

MANO நாஞ்சில் மனோ said...

படிச்சாச்சு ஓட்டும் போட்டாச்சு....

Unknown said...

romba nalla irukku geetha.Dosai niraya irangum ippadi chutney senja.

vanathy said...

super & healthy chutney.

Anonymous said...

It would have been better if it is in english

Anonymous said...

It would have been better if it is in english

Sensible Vegetarian said...

Chutney super, lovely color and that dosai on the side looks fantastic too.

KrithisKitchen said...

Fresh kothamalli chutney sooper manathoda irukkum.. dosaiku perfect!

http://krithiskitchen.blogspot.com
Breakfast Club - Pancakes

Shanavi said...

Migavum arumai geetha, enaku indha madhiri chutney romba pidikum.. I'll make thokku with almost same set of ingredients for my H since he doesn't like chutney with coriander leaves ..:(

Suganya said...

Sounds to be a flavorful one... Nice color. YUM!

Nandinis food said...

I love this classic chutney...So refreshing...

athira said...

இதேமுறையில் நானும் செய்திருக்கிறேன், உ.பருப்பு சேர்க்காமல்.. சூப்பராக இருந்தது. இது இன்னும் சுவையாக இருக்கும் என நினைக்கிறேன்.

ஸாதிகா said...

வறுத்து அரைத்த மல்லி சட்னியா.நல்லா வாசனையாக,வித்தியாசமான சுவையில் இருக்கும்.

San said...

I love to eat it with rice n ghee ,aromatic chutney .Nice pics .

தெய்வசுகந்தி said...

பார்சல் ப்ளீஸ் கீதா!!

ஆனந்தி.. said...

வலைச்சரத்தில் தங்களின் உபயோகமான பதிவை பற்றி குறிப்பிட்டுள்ளேன்.
http://blogintamil.blogspot.com/2011/04/to-z-tips-pedia.html

GEETHA ACHAL said...

நன்றி சசி..

நன்றி ப்ரியா..

நன்றி ப்ரியா..

நன்றி மனோ..

நன்றி சவிதா..

GEETHA ACHAL said...

நன்றி வானதி..

நன்றி அனானி..

நன்றி sensible..

நன்றி கீர்த்தி..

நன்றி ஷானவி...உங்கள் செய்முறையும் சீக்கிரம் செய்து பார்க்க வேண்டும்...

GEETHA ACHAL said...

நன்றி சுகன்யா..

நன்றி நந்தினி..

நன்றி அதிரா...

நன்றி ஸாதிகா அக்கா..

நன்றி san...

GEETHA ACHAL said...

நன்றி தெய்வசுகந்தி..

நன்றி ஆனந்தி...ரொம்ப சந்தோசம்...

Asiya Omar said...

அருமையாக இருக்கு.பகிர்வுக்கு நன்றி.

Jaleela Kamal said...

நேற்று நானும் கொத்துமல்லி சட்னி தான்
வறுத்து அரைத்து இருப்பது நல்ல இருக்கு
காலையில் அவ்சர அடிசமையலில் வறுக்க எல்லாம் நேரம் இல்லை / அப்ப்டியே அரைத்து தோசையில் வைத்து எடுத்து வந்தேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...