டோஃபு கட்லட் - Tofu Cutletsஎளிதில் செய்ய கூடிய கட்லட்…நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்:
         டோஃபு (Tofu) – 1 Packet
·         வெங்காயம் – 1
·         பச்சைமிளகாய் – 2
·         இஞ்சி – சிறிய துண்டு
·         கருவேப்பில்லை,கொத்தமல்லி – சிறிதளவு
·         எண்ணெய் – சிறிதளவு

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை:
வெங்காயம் + பச்சைமிளகாய் + கருவேப்பில்லை, கொத்தமல்லி + இஞ்சியினை மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும். நறுக்கிய பொருட்களை 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி கடாயில் போட்டு வதக்கி வைக்கவும்.

டோஃபுவினை உதிரித்து கொள்ளவும். அத்துடன் வதக்கி வைத்து உள்ள பொருட்கள் + தூள் வகைகள் சேர்த்து நன்றாக பிசைந்து சிறிய சிறிய உருண்டகளாக உருட்டி விரும்பிய வடிவத்தில் செய்து கொள்ளவும்.


கடாயினை காயவத்து, சிறிது எண்ணெய் ஊற்றி கட்லடினை போட்டு வேகவிடவும்.


ஒரு பக்கம் நன்றாக வெந்தபிறகு அதனை திருப்பி போட்டு மேலும் சிறிது நேரம் வேகவிடவும். சுவையான எளிதில் செய்ய கூடிய கட்லட் ரெடி.


குறிப்பு :
கலவை மிகவும் தண்ணீயாக இருப்பது மாதிரி இருந்தால் சோயா மாவே அல்லது அரிசி மாவு , ஒட்ஸ் மாவு என்று எதாவது ஒரு மாவினை சேர்த்து கொண்டு கட்லட் செய்யவும்.

டோஃபுவுடன் எதாவது காய்களினை பொடியாக நறுக்கி கட்லட் செய்யலாம்.

எந்த வகை டோஃபுவாக இருந்தாலும் முதலில் நன்றாக உதிர்த்து கொள்ளவும். இதற்கு மிகவும் குறைந்த அளவு எண்ணெய் தேவைப்படும்.

அவனில் செய்ய விரும்பினால் 400Fயில் 20 நிமிடம் வேகவிடவும்.

26 comments:

Nandinis food said...

Slurp! This looks great and nice! Yummy snack!

Nithu Bala said...

Healthy and yummy cutlet..

Chitra said...

Yet to like Tofu..... Will come back later. :-)))

Aruna Manikandan said...

sounds very simple dear...
looks healthy and delicious :)

Unknown said...

பார்க்கும் பொழுதே கட்லெட் சூப்பராக இருக்கே

Unknown said...

பார்க்கும் பொழுதே கட்லெட் சூப்பராக இருக்கே

Unknown said...

பார்க்கும் பொழுதே கட்லெட் சூப்பராக இருக்கே

Asiya Omar said...

கீதா ஆச்சல்,மகி நீங்க இருவரும் இப்படி சமையல் செய்து ஏங்க வைக்கிறீங்களே! நியாயமா?முதலில் எனக்கு ஒரு பார்சல்..சூப்பர்..

Jayanthy Kumaran said...

this is wonderful dear...keep the posts coming..:)
Tasty Appetite

Priya Suresh said...

Tofu cutlets looks wonderful and delicious..

vanathy said...

I do not like tofu that much. Looking very healthy though.

Menaga Sathia said...

சத்தான மற்றும் சிம்பிளான கட்லட்,சூப்பராக இருக்கு...

Thenammai Lakshmanan said...

பார்க்கவே சூப்பரா இருக்கு எனக்கு 4 அனுப்புங்க கீதா...:)

Lifewithspices said...

superaana easy snack...yummm

Aparna said...

Super ! Viraivil 25 vagai diet cutlets post varum endru ninaikkiren ! Soya payarinai vega vaithum indha maadhiri seyyalaama ?

Pavithra Elangovan said...

Tofu cutlet yennukku romba piditha ondru geetha.. looks yummy :)

Sowmya said...

Arumaiyana snack! Sathana, suvaiyana unavu :)


Vegetarian Cultural Creatives

Gita Jaishankar said...

Hi dear, How are you? Thank you very much for the warm wishes. Take care :)

GEETHA ACHAL said...

நன்றி நந்தினி..

நன்றி நிது..

நன்றி சித்ரா..ஒரு முறை சாப்பிட்டு பாருங்க..நல்லா தான் இருக்கும்...

நன்றி அருணா..

நன்றி ஆசியா அக்கா..உங்களுக்கு இல்லாமலா...

நன்றி ஜெய்..

GEETHA ACHAL said...

நன்றி ப்ரியா..

நன்றி வானதி..

நன்றி மேனகா.

நன்றி தேன் அக்கா..

நன்றி கல்பனா..

நன்றி அபர்ணா...சோயாவினை தண்ணீரி நன்றாக ஊறவைத்து பிறகு அப்படியே வேகவைத்து இது மாதிரி செய்யலாம்...

GEETHA ACHAL said...

நன்றி பவித்ரா..

நன்றி சௌமியா..

நன்றி கீதா...

Kanchana Radhakrishnan said...

சூப்பரா இருக்கு.

Unknown said...

how to prepare tofu

அதையும் போடுங்களேன் ...

GEETHA ACHAL said...

நன்றி ஜமால் அண்ணா...கண்டிப்பாக சீக்கிரமாக டோபு செய்முறையினை பதிவாக போடுகிறேன்...

Aparna said...

Geetha weekend-la try panna poren. Tofu packet ethhanai grams endru solla mudiyuma ? Thanks.

GEETHA ACHAL said...

நன்றி அபர்ணா..

எத்தனை கிராம்ஸ் என்று கரக்டாக தெரியவில்லை...அடுத்த முறை வாங்கும் பொழுது கண்டிப்பாக பார்த்து சொல்கிறேன்.

ஒரு பக்கட் டோஃபுவில் தான் இதனை செய்தது...

கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க..

Related Posts Plugin for WordPress, Blogger...