தயிர் சிக்கன் - Curd chicken / Yogurt chickenஎளிதில் செய்ய கூடிய தயிர் சிக்கன்…வாங்க…நீங்கள் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்…..
          
சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         சிக்கன் – 1/4 கிலோ
·         தயிர் – 1/2 கப்
·         எலுமிச்சை சாறு – 1 மேஜை கரண்டி
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி

அரைத்து கொள்ள :
·         பூண்டு – 6 பெரிய பல்
·         இஞ்சி – 1 துண்டு
·         மிளகு – 10
·         சோம்பு – 1 மேஜை கரண்டி

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
·         சிக்கனை  சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து கொள்ளவும்.

·         சிக்கனுடன் அரைத்த விழுது + தயிர் + தூள் வகைகள் சேர்த்து நன்றாக கலக்கி 5 நிமிடங்கள் ஊறவிடவும்.


·         கடாயில் எண்ணெய் ஊற்றி ஊறவைத்த சிக்கனை சேர்க்கவும்.

·         சுமார் 10 – 15 நிமிடங்கள் சிக்கன் நன்றாக வெந்து தண்ணீர் வற்றும் வரை வேகவிடவும்.


·         கடைசியில் எலுமிச்சை சாறு சேர்த்து மேலும் 1 – 2 நிமிடங்கள் வேகவிடவும். சுவையான எளிதில் செய்ய கூடிய சிக்கன். இதனை சாலடுடன், சாதம் , சப்பாத்தியுடன் சாப்பிட சுவையாக இருக்கும் . குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க…


குறிப்பு :
மிளகுக்கு பதிலாக மிளகாய் தூள் சேர்த்து கொள்ளலாம்.

தயிரினை இஞ்சி பூண்டு விழுது அரைத்த பிறகு, அத்துடன் சேர்த்து 10 sec தயிரினையும் அரைத்தால் நன்றாக இருக்கும்.

தயிரின் புளிப்பின் அளவினை பொருத்து எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளவும். புளிப்பான தயிர் என்றால் எலுமிச்சை சாறு தேவையில்லை.

இந்த சிக்கனை saladயுடன் சேர்த்து சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும்….

20 comments:

ChitraKrishna said...

நான் தான் பஸ்ட் :). ரெசிபி ரொம்ப சிம்பிள்-ஆ இருக்கு கீதா.

Shanavi said...

I've never tried this Geetha, sure it's healthy too..TRy pannalam

KrithisKitchen said...

Simple and tasty... love the tanginess from the curd!!
http://krithiskitchen.blogspot.com
Breakfast Club - Pancakes - Roundup

எல் கே said...

பிரசண்ட் கீதா

Srividhya Ravikumar said...

kalakkal as always... lovely..

Unknown said...

The flavor would have been yum dear... Will surely try this next time

Jayanthy Kumaran said...

wow...yummy ..yummy...sounds divine..
Tasty Appetite

Chitra said...

Thank you for this healthy recipe. :-)

Unknown said...

Different a ,romba nalla irukku.try pannitu solren.

Pushpa said...

Superb chicken fry Geetha.

சசிகுமார் said...

சூப்பர் வித்தியாசமான டிப்ஸ்

Jaleela Kamal said...

ரொமப் நல்ல இருக்கு
இப்ப இருக்க வெயிலுக்கு சிக்கன் சூடுக்கு தயிர் சேர்த்த்டு செயதா ல் ஒன்றும் செய்யாது, நான் சோம்பு சேர்க்கமால் செய்வேன்

Priya Suresh said...

Attakasama irruku inthe yogurt chicken...delicious..

Kurinji said...

easyavum arumaiyavum irukke.
kurinjikathambam, Event: HRH-Healthy Summer, Roundup: HRH-Puffed Rice

Asiya Omar said...

பார்க்கவே சாஃப்டாக ருசியாக தெரிகிறது..

Menaga Sathia said...

அன்னையர் தின வாழ்த்துக்கள்!! புளிப்பு சுவையுடன் சூப்பர்ர் சிக்கன் ரெசிபி...

Unknown said...

Unique chicken dish...Looks so good... YUM!

GEETHA ACHAL said...

அனைவருக்கும் நன்றி...

Unknown said...

Arumaiyana chikken dish...........

Unknown said...

Arumaiyana chikken dish..........

Related Posts Plugin for WordPress, Blogger...