அவசர சிக்கன் குழம்பு - Fast & Easy Chicken Kuzhambuமிகவும் குறைவான நேரத்தில், எளிதில் செய்ய கூடிய குழம்பு… நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்…

சமைக்க தேவைப்படும் நேரம்: 12 - 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         சிக்கன் – 1/4 கிலோ
·         வெங்காயம் – 1
·         தக்காளி – 1
·         இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி

முதலில் தாளிக்க:
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         கிராம்பு, ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·         தனியா தூள் – 1/2 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

கடைசியில் தாளித்து சேர்க்க :
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         சோம்புதூள் – 1/2 தே.கரண்டி
·         கருவேப்பில்லை – 5 இலை

செய்முறை :
·         வெங்காயம் + தக்காளியினை வெட்டி கொள்ளவும். சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும்.

·         பிரஸர் குக்கரில் எண்ணெய் ஊற்றி முதலில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

·         இத்துடன் வெங்காயம் + தக்காளி சேர்த்து 1 நிமிடம் வதக்கி, சிக்கன் + தூள் வகைகள் + 1/2 கப் தண்ணீர் சேர்த்து பிரஸ்ர் குக்கரினை மூடி 3 விசில் வரும் வரை வேகவிடவும்.


·         பிரஸர் அடங்கியதும் குக்கரினை திறந்து, கடைசியில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து குழம்பில் சேர்க்கவும்.
·         சுவையான எளிதில் செய்ய கூடிய குழம்பு ரெடி. இதனை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு:
இதனை பிரஸர் குக்கரில் செய்வதால், எளிதில் குழம்பு ரெடியாகிவிடும்…குழம்பும் ரொம்ப டேஸ்டியாக இருக்கும்.

வெங்காயம், தக்காளியினை பொடியாக நறுக்க வேண்டியதில்லை… விரும்பினால், வெங்காயம் + தக்காளியினை மிக்ஸியில் ஒன்றும் பாதியுமாக அரைத்து சேர்த்தால், க்ரேவி நிறைய கிடைக்கும்.11 comments:

Unknown said...

ரொம்ப சிம்பிளான விளக்கம்..சிக்கன் சாப்பிடணும் போல இருக்கு

jay said...

nice...

எல் கே said...

present geetha

Chitra said...

yummy!

athira said...

சூப்பர் சிக்கின் குழம்பு. இந்த கிளாஸ் டிஷ் எம்மிடமும் இருக்கு, சரியான ஹெவியெல்லோ? மூடியும் இருக்குதானே?

சசிகுமார் said...

எளிமையா சொல்லி கொடுத்துடீங்க அக்கா அர்ஜன்ட் டைம்ல செய்து கொள்ளலாம்.

Menaga Sathia said...

சூப்பரா இருக்கு..நானும் சமைக்க மூட் இல்லாதபோது செய்வதுண்டு..

Reva said...

Super simple recipe.... looks yummy:)
Reva

நிரூபன் said...

எளிமையான, இலகுவான சமையற் குறிப்பிற்கு நன்றிகள் சகோ.

நிரூபன் said...

நாஞ்சிலாரின் காமெடி.......அவ்..............

Shanavi said...

geetha, Mudinja, apdiye konjam idhai parcel panreengala..Romba nall iruku pa

Related Posts Plugin for WordPress, Blogger...