ப்லக்ஸ் ஸீட் பொடி இட்லி - Flax Seed Podi Idlyஎங்க வீட்டில் அம்மா, வாரத்திற்கு ஒரு முறையாவது பொடி இட்லி கொடுத்துவிடுவாங்க….எனக்கு ரொம்ப பிடித்தது…

இப்ப அதனையே ப்லக்ஸ் ஸீட் சேர்த்து செய்தேன்…ரொம்பா நல்லா இருக்கும். நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்….

குழந்தைகளுக்கு இட்லி பொடி செய்யும் பொழுது, இத்துடன் பாதாம் பருப்பு, பிஸ்தா, முந்திரி போன்றவை சேர்த்து செய்தால் நல்லது.

சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         இட்லி – 4
·         ப்லக்ஸ் ஸீட் இட்லி பொடி – 2 மேஜை கரண்டி
·         நல்லெண்ணெய் – 1 மேஜை கரண்டி

பொடி செய்ய தேவையான பொருட்கள் :
·         ப்லக்ஸ் ஸீட் – 1/2 கப்
·         கடலைப்பருப்பு – 1/4 கப்
·         காய்ந்த மிளகாய் – 4
·         பெருங்காயம் – சிறிதளவு
·         உப்பு – தேவையான அளவு
·         பூண்டு – 3 பல் தோலுடன்

செய்முறை :
·         ப்லக்ஸ் ஸீட் + கடலைப்பருப்பு + காய்ந்தமிளகாயினை தனி தனியாக வறுத்து கொள்ளவும்.


·         இதனை சிறிது நேரம் ஆறவைத்த பிறகு, வறுத்த பொருட்கள் + பெருங்காயம் + உப்பு சேர்த்து கொரகொரவென மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

·         கடைசியில் தோலுடன் இருக்கும் பூண்டு சேர்த்து 2 – 3முறை Pulse Modeயில் பொடித்து கொள்ளவும். இப்பொழுது இட்லி பொடி ரெடி.


·         இட்லியினை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில், இட்லி பொடி + நல்லெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். இத்துடன் வெட்டி வைத்துள்ள இட்லியினை போட்டு பிரட்டவும்.

·         சுவையான பொடி இட்லி ரெடி. இதனை மாலை நேர ஸ்நாகாகவே அல்லது Lunch Boxயிற்கு குழந்தைகளுக்கு கொடுத்துவிடலாம்.

குறிப்பு :
இந்த பொடி குறைந்தது 2 – 3 வாரம் வரை நன்றாக இருக்கும்.

காய்ந்த மிளகாயிற்கு பதிலாக மிளகு சேர்த்து கொள்ளலாம். உடலிற்கு ரொம்ப நல்லது.

24 comments:

சாருஸ்ரீராஜ் said...

பார்கும் போதே வாய் ஊறுது கீதா, எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பொடி இட்லி.

தமிழ்த்தோட்டம் said...

இப்பவே நாக்குல தண்ணீ வருது

பகிர்வுக்கு நன்றி

Saran Jo said...

கீதா மேடம் பிளக்ஸ் சீட் என்றால் என்ன

Nandinis food said...

Very flavourful and aromatic podi idli! Really tempting!

Priya Suresh said...

Wow am speechless, kalakuring Geetha, wat a healthy idly dear..

சசிகுமார் said...

எல்லோரும் சொல்வதையே தான் நானும் சொல்ல முடியும் ஏனென்றால் அது தான் உண்மை பார்க்கும் போதே நாக்கில் ஊறுகிறது.

Kurinji said...

Puthusa irukkuthu. But healthy idly.
Kurinjikathambam, Event : HRH-Healthy Summer, Roundup : HRH-Puffed Rice

ADHI VENKAT said...

பார்க்கும் போதே ஆசையா இருக்குங்க. பகிர்வுக்கு நன்றி.

Asiya Omar said...

பார்க்கவே சூப்பர்.

Menaga Sathia said...

மிக அருமையாக இருக்கு கீதா!!

Reva said...

Romba nalla irukku:) Suvaiyaana idli... seithu paarka vendiya recipe:) superb
Reva

athira said...

சூப்பராக இருக்கு... இட்லியை நான் சும்மாவே சாப்பிடுவேன், அதில இப்படியும் செய்து தந்தால்....ஸ்ஸ்ஸ்ஸ்..சூப்பர்தான்.

Unknown said...

Healthy Podi,loved it with idly...luks very tempting.

vanathy said...

நல்ல ஹெல்தியான ரெசிப்பி.

Sensible Vegetarian said...

Romba Super. Very delicious and flavorful Idli.

KrithisKitchen said...

Aromatic and tasty podi idli... so inviting..
http://krithiskitchen.blogspot.com
Breakfast Club - Pancakes - Roundup

Unknown said...

Healthy idli podi... Yummy idlis...

ஸாதிகா said...

இட்லி துண்டங்களை பார்க்கும் பொழுதே எடுத்து சாப்பிடத்தூண்டுகின்றது.

GEETHA ACHAL said...

நன்றி சாரு அக்கா..

நன்றி தமிழ்தோட்டம்..

நன்றி சரண்...Flax Seed என்பது ஒரு வகை பருப்பு வகை...உடலிற்கு மிகவும் நல்லது...அதிக ஓமோகா fats இருக்கின்றது...

நன்றி நந்தினி..

நன்றி ப்ரியா..

GEETHA ACHAL said...

நன்றி சசி..

நன்ரி குறிஞ்சி..

நன்றி ஆதி..

நன்றி ஆசியா அக்கா..

நன்றி மேனகா.

நன்றி ரேவதி...

GEETHA ACHAL said...

நன்றி அதிரா..

நன்றி ப்ரேமா..

நன்றி வானதி..

நன்றி sensible..

நன்றி கீர்த்தி,,

நன்றி விமிதா..

நன்றி ஸாதிகா அக்கா..

Shanavi said...

Never made flax seed podi, but makes me crave for each n every of idli on that plate !!!

Vardhini said...

First time here. Lots of wonderful recipes .. Healthy and yummy idli. Will visit back often ..
Following you for more yummy stuff :)

hope you will do the same !!!!


Vardhini
Vardhiniskitchen

ushaprashanth said...

Hi!
I was looking for some good recipes to include flax seeds. flaxseed podi idli is a very good one. thanks!

Related Posts Plugin for WordPress, Blogger...