Plant Exchange Day ...


எங்க Libraryயில் வருடவருடம், இந்த Plant exchange நடக்கும்…எப்பொழுதும் எதோ ஒரு காரணத்தினால் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்து இல்லை….

இந்த வருடம், அக்‌ஷதாவிற்காக கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினேன்… அவளுக்கு Dora’s Sharing Day என்று ஒரு புக்கினை படித்தில் இருந்து, அவளிற்காக, Plant Exchangeயினை, Plant Sharing Day என்று மாற்றிவிட்டேன்.. 

சரி, நம்மளும் எதாவது செடி எடுத்து சென்றால் நல்லா இருக்கும் என்பதால், என்னுடைய பெயரினையும் இதில் கலந்து கொள்வதற்காக பதிவு செய்தாகிவிட்டது…

பிறகு, சிறிய சிறிய தொட்டிகள் வாங்கி கொண்டேன்…ஒரு வாரத்திற்கு முன்பே, 3 தொட்டியில் புதினாவும், 3 தொட்டியில் வெந்தயத்தினை போட்டு கீரையினை வளர்த்தேன்…


நான் எதிர்பார்த்தினை விட நிறைய பேர் வந்து இருந்தாங்க…சுமார் 25 – 30 நபர்கள் வந்து இருப்பாங்க…இதுல வேறு Photographers எல்லாம் கூட வந்து இருந்தாங்க…Libraryயின் வெளியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது…


எனக்கு பெயரே தெரியாது செடிகள் நிறைய இருந்தது…..பெயர் பதிவு செய்தவர்களின் Orderயில் ஒவ்வொருத்தரும், அவர்கள் எடுத்து வந்துள்ள செடிகளை பற்றி சொல்ல வேண்டும்…நான் வெந்தயகீரையினை பற்றி சொல்ல அனைவருக்கும், அதனை exchange செய்து கொள்ள ரொம்ப ஆசைப்பாட்டாங்க….


ஒவ்வொரு சுற்றிலும், பெயர் பதிவு செய்த நபர்கள் அவர்களின் Orderயில், அவர்கள் விரும்பிய செடிகளினை எடுத்து கொண்டாங்க…முதல் சூற்றிலே வெந்தயகீரை தொட்டி எல்லாம் காலி…புதினா தொட்டி கடைசியில் ஒன்று மிச்சம் இருந்தது…அதனை பெயர்பதிவு செய்யாத ஒரு பெண்மணி கடைசியில் எடுத்து கொண்டாங்க..

அப்பாடா, அக்‌ஷதாவிற்கு எப்படியே Plant Sharing Day நல்லா போச்சு…அவளும் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தா…


நாங்க எடுத்து கொண்ட செடிகள், Chives, Cherry Tomatos மற்றும் Chocolate Mint (யாருக்காவது இந்த செடியினை பற்றி தெரியுமா…இதனை chocolate recipesயில் பயன்படுத்துவாங்க என்று சொன்னாங்க…சரி…ட்ரை செய்து பார்க்கலாம் என்று எடுத்து கொண்டு வந்தேன்…)

25 comments:

அமுதா கிருஷ்ணா said...

புதுமையான எக்சேஞ்ச் தான்.

எல் கே said...

வித்யாசமான நிகழ்ச்சியா இருக்கே

பனித்துளி சங்கர் said...

புகைப்படங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு பசுமையாக உள்ளது . அருமையான அனுபவப் பகிர்வு நன்றி

athira said...

செடிகளைப் பார்ப்பதே ஒரு அழகுதான். இங்கும் நிறைய வெரைட்டில புதினாச் செடிகள் கிடைக்குது.. எனக்கு சாதாரண புதினா பற்றியே தெரியாது, அதில சொக்கலேட் புதினாபற்றி என்னதான் சொல்ல முடியும் அவ்வ்வ்வ்வ்வ்:)).

Mahes said...

Awesome Geetha! I would love to participate in an event like this. Good luck on the plants you chose.

Unknown said...

what a very cool idea! Wish we had something like this going here!

KrithisKitchen said...

Looks like a great event for plant lovers!

http://krithiskitchen.blogspot.com

Chitra said...

great event! நிகழ்ச்சியை குறித்து படங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிங்க. அருமை.

நிரூபன் said...

இயந்திர உலகில் இயற்கையுடன் ஐக்கியமாவதற்கேற்ற புதுமையான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அதனை ரசித்து, ரசனையுடன் எமக்காய் பதிவிட்டுள்ளீர்கள்.
நன்றிகள் சகோ.

Jayanthy Kumaran said...

sounds interesting..sure u had a lovely time..


Tasty Appetite
Event: Letz Relishh Ice Creams

வெங்கட் நாகராஜ் said...

வித்தியாசமான நிகழ்ச்சி. நல்ல நிகழ்ச்சி பற்றி பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

Unknown said...

romba pudhusa irukku geetha.enjoy panreenga...romba interest ungalukku plant valakkarudhula.super ponga.

Lifewithspices said...

Thats a good note to know.. i love these cute plants..

Kanchana Radhakrishnan said...

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

சசிகுமார் said...

Thanks for sharing

Priya Suresh said...

Wow marvellous,would love to participate event like this..

Thenammai Lakshmanan said...

அட நல்ல பகிர்வு கீதா.. சூப்பர்ப்.. :))

Mahi said...

ப்ளான்ட் எக்ஸ்சேஞ்ச் புதுசா இருக்கு கீதா! குழந்தைகளுக்கு கார்டனிங்ல இன்ட்ரஸ்ட் கொண்டுவர நல்ல வழி! செடிகள் நல்லபடியா வளர வாழ்த்துக்கள்!

GEETHA ACHAL said...

நன்றி அமுதா..

நன்றி கார்த்திக்..

நன்றி சங்கர்..

நன்றி அதிரா..

நன்றி மகேஷ்..

நன்றி ப்ரியா..

GEETHA ACHAL said...

நன்றி கீர்த்தி..

நன்றி சித்ரா.,

நன்றி நிரூபன்..

நன்றி ஜெய்..

நன்றி நாகராஜ்..

நன்றி சவிதா..

GEETHA ACHAL said...

நன்றி கல்பனா..

நன்றி கஞ்சனா..

நன்றி சசி..

நன்றி ப்ரியா..

நன்றி தேன் அக்கா..

நன்றி மகி..

Sangeetha Nambi said...

Different day :) Thanks for sharing it...

ஹுஸைனம்மா said...

வித்தியாசமா இருக்கே!! இண்ட்ரெஸ்டிங்!!

நீங்க கொண்டுபோன செடிகளின் படங்களும் போட்டிருக்கலாம்.

GEETHA ACHAL said...

நன்றி ஹுஸைனம்மா..

இங்கே எடுத்த போட்டோ எல்லாம் அக்‌ஷதா தான் எடுத்தா...

நான் எடுத்து கொண்டு போன செடிகளை எல்லோரும் Exchange எடுத்து கொண்ட பிறகு தான், போட்டோ எடுக்கவில்லையே என்று நினைத்து கொண்டேன்...

Angel said...

இந்த மாதிரி events பிள்ளைகளுக்கு செடி வளர்க்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் .
இந்த சாக்லேட் மின்ட் என்பது after eight chocolate இல் மற்றும் herbal
peppermint detox tea ஆகியவற்றில் சேர்க்கப்படுவது என்று நினைக்கிறேன் .
ஏன் என்றால் அந்த மின்ட் ரொம்ப stronga இருக்காது

Related Posts Plugin for WordPress, Blogger...