ஆரஞ்சு சுளை - How to Peel Orange Segmentsதேவையான பொருட்கள் :
         ஆரஞ்சு பழம் – 1
·         கத்தி

செய்முறை :
·         முதலில் ஆரஞ்சு பழத்தினை நன்றாக கழுவி கொள்ளவும். பழத்தின் இரண்டு பக்கத்தினையும்(மேல் பகுதி மற்றும் கீழ் பகுதி தோலினை) வெட்டி விடவும்.


·         பிறகு கத்தியினை வைத்து ஒவ்வொரு பக்கமாக சுளையில் படாமல், தோலினை நீக்கிவிடவும்.


·         இப்பொழுது பழத்தில் இருந்து சுத்தமாக தோல் நீக்கிவிட்டோம். கத்தியினை வைத்து இரண்டு வெள்ளை பகுதியிற்கு நடுவில் இருக்கும் சுளையினை வெட்டி எடுக்கவும்.


·         இப்படி ஒவ்வொரு சுளையினையும் வெட்டி எடுக்கவும்.

·         இந்த ஆரஞ்சு சுளைகளினை சாலடில் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.


குறிப்பு :
ஆரஞ்சு சுளைகளினை தனியாக நீக்கிவிட்ட பிறகு, பழத்தின் தோலில் இருந்து ஜுஸினை பிழிந்து சாலடிற்கு Vinegratte செய்து கொள்ளலாம்.

தனிதனியாக இப்படி சுளைகளினை எடுத்தால் சாலட் அருமையாக இருக்கும்.


ரோஜா தோட்டம் - Rose Gardenஇந்த வாரம் எங்களுடைய வீட்டிற்கு எங்களுடைய Family Friends, Virginiaவில் இருந்து வந்து இருக்காங்க….அக்‌ஷதாவிற்கு ரொம்ப சந்தோசம்…ஒரு வாரமாகவே “My Baby Sister Harshita and Your Sister Pratheepa Aunty is going to come to our Home” என்று சொல்லி கொண்டே இருந்தாள்…அவளுக்கு அவங்க வந்ததில் ரொம்ப மகிழ்ச்சி…


ஹர்ஷிதா பாப்பாவுக்கும், அக்‌ஷதாவிற்கும் Evening Walkயிற்காக இந்த Central Parkயிற்கு அழைத்து சென்றோம்…குட்டீஸ் இரண்டு பேரும் நல்லா Enjoy செய்தாங்க… அங்கே பெரிய குழந்தைகள், 2 – 4 வயது உள்ள குழந்தைகளுக்கு என்று தனி தனியாக விளையாடு Play Area இருக்கின்றது…


எங்கள் வீட்டிற்கு மிகவும் பக்கத்தில் பார்க்கவேண்டிய இடங்களில் ஒன்றான, இந்த Parkயில் அனைவரையும் கவரும் விதமாக அமைத்து இருக்கும் இந்த Rose Garden மிகவும் பிரபலம்….


இந்த தோட்டதில் நடுவில் உள்ள Fountain பக்கத்தில் உட்கார இடங்கள் இருப்பதால் நிறைய பேர் , மாலை நேரத்தில் உட்கார்த்து பொழுதினை சுகமாக கழிக்கின்றனர்…


இந்த பார்க், எங்க வீட்டில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் இருப்பதால் கண்டிப்பாக வாரத்திற்கு ஒரு முறையாவது அக்‌ஷதாவினை அழைத்து கொண்டு சொல்வதுண்டு… நமக்கும் இந்த ரோஜா பூக்களினை பார்க்கும் பொழுது ரொம்பவும் ஆசையாக இருக்கும்..
ஹர்ஷிதா பாப்பாவிற்கு கலர்கலரான பூக்கள் பார்த்தில் ரொம்ப சந்தோசம்..பூக்களை தொட்டு தொட்டு பார்த்தாள்…


பிரதீபாவும் அக்‌ஷதாவும் வெள்ளை ரோஜாவின் நடுவில்….


அங்கு உள்ள ரோஜா பூக்கள் ஒவ்வொன்றும் தனி அழகு…சொல்வதற்கு வார்த்தை இல்லை….எப்பொழுதுமே நாலு அஞ்சு கலரில் தான் ரோஸ் பார்த்த எனக்கு இந்த பார்கினை முதன்முதலில் பார்த்த பொழுது அவ்வளவு ஆசை….அதே மாதிரி தான் இப்பொழுதுமே…எத்தனை முறை பார்த்தால் ஆசையாக இருக்கும்…


இங்கே அனனைத்து விதமான நிறத்திலும் பூக்கள் இருக்கின்றது…..அதனை அனைவரும் நடந்து சென்று பார்க்கும் விதமாக வரிசை வரிசையாக அழகாக வைத்து இருக்கின்றனர்… இந்த Rose Gardenயிற்கு அனைவரும் வாங்க……
கோதுமை ரவை புட்டு - Wheat Rava Puttu / Gothumai Ravai Puttuமிகவும் குறைந்த நேரத்தில் எளிதில் செய்ய கூடிய புட்டு…நீங்களும் செய்து பார்த்து உங்க கருத்தினை தெரிவிக்கவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 6 – 8 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         கோதுமை ரவை – 1 கப்
·         சக்கரை – 2 மேஜை கரண்டி + 2 மேஜை கரண்டி
·         தேங்காய துறுவல் – 1/4 கப்
·         ஏலக்காய் – 1
·         நெய் – 1 மேஜை கரண்டி

செய்முறை :
·         கோதுமை ரவை + 1 ½ கப் தண்ணீர்  + 1 தே.கரண்டி நெய் சேர்த்து மைக்ரோவேவில் 5 – 6 நிமிடங்கள் வேகவிடவும்.

·         ஏலக்காய் + 2 மேஜை கரண்டி சக்கரை சேர்த்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.


·         கோதுமை ரவை வெந்த பிறகு அதனை Forkயினை வைத்து கிளறிவிடவும்.

·         இத்துடன் பொடித்த சக்கரை + சக்கரை + தேங்காய் துறுவல் + மீதும் உள்ள நெய் சேர்த்து நன்றாக கிளறவும்.


·         எளிதில் செய்ய கூடிய புட்டு ரெடி.

கவனிக்க :
கோதுமை ரவையினை வேகவைக்கும் பொழுது தண்ணீர் அளவினை சிறிது குறைத்து கொண்டால் புட்டு நன்றாக இருக்கும்.


மைக்ரேவேவில் செய்யாமல் இதனை கடாயில் போட்டும் வேகவைத்து கடைசியில் சக்கரை , தேங்காய் துறுவல் சேர்த்து கொள்ளலாம்.

கண்டிப்பாக Fresh தேங்காய் துறுவல் சேர்த்தால் சுவையாக இருக்கும். அதே மாதிரி Forkயினை கரண்டிக்கு பதிலாக பயன்படுத்தினால் பொலபொலவென புட்டு இருக்கும்.

சக்கரையினை அப்படியே சேர்த்தால் ரொம்ப நல்லா இருக்கும். ஏலக்காய் பொடிக்க மட்டும் சிறிது தனியாக எடுத்து கொள்ளவும்.

கோதுமை ரவையினை போல, சாதரண ரவை, Grits போன்றவையிலும் செய்யலாம்.

செட்டிநாடு மீன் வறுவல் - Chettinad Fish Fry

       print this page Print

ஒரே மாதிரி மீன் வறுவல் செய்து போர் அடித்துவிட்டால், இந்த முறையில் செய்து பாருங்க…ரொம்ப நல்லா இருக்கும்…இது எங்க பெரியம்மாவின் செய்முறை….சுவையான மீன் வறுவல்…நீங்கள் செய்து பார்த்து உங்க கருத்தினை தெரிவிக்கவும்.

குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது இது மாதிரி முள் இல்லாத Filletsயில் செய்தால் நமக்கும் பயம் அதிகம் இருக்காது…

ஊறவைக்க தேவைப்படும் நேரம் : குறைந்தது 30 நிமிடங்கள்
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :     
         மீன் – 1/2 கிலோ
·         புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
·         எண்ணெய் - சிறிதளவு

அரைத்து சேர்க்க வேண்டிய பொருட்கள் :
·         வெங்காயம் – 1 (நறுக்கியது 1/2 கப்)
·         பூண்டு – 5 பெரிய பல்
·         தேங்காய் – 2 பெரிய துண்டு (அ) துறுவியது 3 மேஜை கரண்டி
·         மிளகு – 1 தே.கரண்டி
·         சீரகம் – 1 தே.கரண்டி
·         சோம்பு – 1 தே.கரண்டி

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 3/4 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·         தனியா தூள் – 1 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு


செய்முறை :
·         புளியினை சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும். மிக்ஸியில் மிளகு + சீரகம் + சோம்பு சேர்த்து முதலில் நன்றாக பொடித்து கொள்ளவும். அத்துடன் வெங்காயம் + பூண்டு + தேங்காய் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

·         அரைத்த கலவை + தூள் வகைகள் + புளி தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து ஒவ்வொரு மீன் துண்டுகளிலும் தடவி குறைந்தது 30 நிமிடங்கள் ஊறவிடவும்.


·         கடாயினை காயவைத்து 1 மேஜை கரண்டி எண்ணெய் ஊற்றி ஊறவைத்த மீன்களை சேர்த்து வறுக்கவும்.


·         சுவையான எளிதில் செய்ய கூடிய மீன் வறுவல் ரெடி.


கவனிக்க :
சின்ன வெங்காயம் சேர்த்தால் நல்லா இருக்கும். வெங்காயம் + பூண்டினை அளவினை அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டாம்.

அவரவர் காரத்திற்கு ஏற்றாற் போல தூளினை சேர்த்து கொள்ளவும். அதே மாதிரி வெங்காயம் + பூண்டினை தவிர்த்து தேங்காயினை சிறிது அதிகம் சேர்த்து செய்தாலும் சூப்பராக் இருக்கும்.

கண்டிப்பாக புளி கரைசலினை சேர்த்து கொள்ள வேண்டும். புளி கரைசலிற்கு பதிலாக எலுமிச்சை சாறும் சேர்த்து கொள்ளலாம்…ஆனால் சுவையில் வித்தியாசம் இருக்கும். அதனால் புளி சேர்த்து கொண்டால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

மீனை குறைந்தது 30 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை ஊறவிடலாம். அதற்கு பிறகும் ஊறவைத்து என்றால், Fridgeயில் வைத்து விடுவது நல்லது.

ஆரஞ்ச் பழம் கேசரி - Orange Fruit Juice Kesari


எளிதில் செய்ய கூடிய சேகரி…நீங்களும் செய்து பார்த்து உங்க கருத்தினை தெரிவிக்கவும். நன்றி மேனகா…

சமைக்க தேவைப்படும் நேரம்: 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         ரவை – 1 கப்
·         ஆரஞ்ச் ஜுஸ் – 1 கப்
·         சக்கரை – 1/2 கப்
·         ஆரஞ்ச் / யெல்லோ கலர் – சிறிதளவு
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         நெய் – 1 தே.கரண்டி
·         ஏலக்காய் - 1

கடைசியில் வறுத்து கொள்ள :
·         நெய் – 1 தே.கரண்டி
·         முந்திரி, திராட்சை – சிறிதளவு

செய்முறை :
·         கடாயில் ரவை + எண்ணெய் சேர்த்து 1 – 2 நிமிடங்கள் வறுத்து கொள்ளவும்.


·         இத்துடன் ஆரஞ்ச் ஜுஸ் + 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவிடவும்.


·         ரவை முக்கால் பதம் வெந்தவுடன், சக்கரை + ஏலக்காய் + நெய் சேர்த்து மேலும் 3 - 4 நிமிடங்கள் வேகவிடவும்.


·         கடைசியில் முந்திரி, திராட்சையினை வறுத்து கேசரியில் சேர்த்து கொள்ளவும்.


·         சுவையான எளிதில் செய்ய கூடிய சேகரி ரெடி.

குறிப்பு :
விரும்பினால் ஆரஞ்ச் essence சேர்த்து கொள்ளலாம். நான் yellow color சேர்த்து இருக்கின்றேன்…

நான் கடைகளில் கிடைக்கும் ஆரஞ்ச் ஜுஸ் பயன்படுத்தி உள்ளென்..அதிலேயே சக்கரை இருப்பதால் சக்கரையின் அளவினை குறைத்து இருக்கின்றேன்.

Fresh ஆரஞ்ச் ஜுஸ் என்றால் புளிப்பு இல்லாத பழத்தின் சாறினை எடுத்து சேகரி செய்யவும்.

ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி செய்வாங்க..சிலர் முதலில் சக்கரை + தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு பிறகு அதில் ரவையினை போட்டு கிளறி கேசரி செய்வாங்க…எங்க வீட்டில் அம்மா முதலில் ரவையினை வேகவிட்ட பிறகு தான் சக்கரை சேர்ப்பாங்க…இதனால் கிளறுவது மிகவும் ஈஸி…


லெமனி தயிர் பச்சடி - Lemony Pachadi


எளிதில் செய்ய கூடிய சுவையான பச்சடி…நீங்களும் செய்து பார்த்து உங்க கருத்தினை தெரிவிக்கவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         தயிர் – 1 கப்
·         வெங்காயம் – 1
·         தக்காளி – 1
·         பச்சைமிளகாய் – 1
·         கொத்தமல்லி – சிறிதளவு
·         எலுமிச்சை பழம் – பாதி
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
·         வெங்காயம் + பச்சை மிளகாய் + கொத்தமல்லியினை நறுக்கி கொள்ளவும். தக்காளியின் விதைகளை நீக்கி வெட்டி கொள்ளவும்.

·         எலுமிச்சை பழத்தின் தோலினை (1 தே.கரண்டி அளவிற்கு), தேங்காய் துறுவலில் துறுவி கொள்ளவும். எலுமிச்சை தோல் துறுவிய பிறகு, எலுமிச்சை சாறு எடுத்து கொள்ளவும். (சுமார் 1 மேஜை கரண்டி)


·         வெங்காயம் + பச்சைமிளகாய் + கொத்தமல்லி + தக்காளி + உப்பு + எலுமிச்சை தோல் துறுவியது + எலுமிச்சை சாறு + தயிர் அனைத்தும் ஒன்றாக சேர்த்து கலக்கவும்.

·         சுவையான எளிதில் செய்ய கூடிய பச்சடி ரெடி.


குறிப்பு :
அவரவர் புளிப்புக்கு ஏற்றாற் போல எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளவும்.

எலுமிச்சை தோலினை துறுவும் பொழுது, மஞ்சள் பகுதியினை மட்டும் துறுவவும். வெள்ளை பகுதி வரும் பொழுது துறுவ வேண்டாம்.

அதே மாதிரி மஞ்சள் எலுமிச்சை பழத்தில் செய்தால் நன்றாக இருக்கும். பச்சை எலுமிச்சை பழம் (Limes)யில் செய்வதால் இருந்தால்,தோல் துறுவல் சேர்த்து கொள்ள வேண்டாம்.

வெள்ளை வெங்காயத்தினை விட Red Onions பயன்படுத்தினால் பச்சடி நன்றாக இருக்கும். 

International Boxing Hall of Fame - Canastota ,New Yorkஇங்கு Canastota, Upstate New Yorkயில் இன்று International Boxing Hall of Fameயில், Induction of Champions நான்கு நாட்களாக நடைப்பெற்றது… அதில் கடைசி நாளான இன்று championsகளிற்கு விருதுகள் வழங்கபட்டது…


இந்த வருடம் Hall of Fame Inducteesஆக , Mike Tyson , ” Rocky” Sylvester Stallone , Julio Cesar, Tszyu, Joe cortez மற்றும் “Nacho” Beristainயிற்கு வழங்கபட்டது.மேலும் அறிய இங்கே க்ளிக் செய்யவும்…

Mike Tyson மற்றும் Sylvester Stalloneயினை பார்க்க வேண்டும் என்பதாலேயே சென்றோம்…நாங்கள் எதிர்பார்த்தினைவிட பயங்கர கூட்டம்… நிறைய பேர் California, Texas, Arizona என்று இருந்து எல்லாம் வந்தது இருந்தாங்க…..


Parade of Champions நடந்தது….குழந்தகளை கவரும் வகையில் நிறைய நிகழ்ச்சிகள் இருந்தது…


ஒவ்வொரு குரூப்பும் இப்படி Band வாசிப்பதால், அக்‌ஷதாவிற்கும் Trumpet வாசிக்க ஆசை வந்துவிட்டது…அவளுக்கு Dressயிற்கு Matchingஆக ஒன்று வாங்கி தந்தாச்சு…


அப்பறம், Parade முடிந்தபிறகு, அங்கு இருந்தவர்களுடன் அவள் எடுத்து கொண்ட போட்டோ…

கோதுமை ரவை கொழுக்கட்டை - Wheat Rava Kozhukattai - Gothumai Rava


எளிதில் செய்ய கூடிய மாலை நேர ஸ்நாக்…நீங்களும் செய்து பார்த்து உங்க கருத்தினை தெரிவிக்கவும்..

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்:
         கோதுமை ரவை – 2 கப்
·         உப்பு – தேவையான அளவு

தாளித்து சேர்க்க :
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு – தாளிக்க
·         காய்ந்தமிளகாய் – 1 (அ) பச்சைமிளகாய் – 1
·         கருவேப்பில்லை – 5 இலை பொடியாக நறுக்கியது
·         தேங்காய் துறுவல் – 1 மேஜை கரண்டி (விரும்பினால்)

செய்முறை :
·         கோதுமை ரவை + உப்பு + 3 கப் தண்ணீர் சேர்த்து கலக்கி, மைக்ரோவேவில் வைத்து 10 நிமிடங்கள் வேகவைத்து கொள்ளவும்.


·         இப்பொழுது ரவை நன்றாக வெந்து இருக்கும்.

·         தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து வேகவைத்து உள்ள கோதுமைரவையில் சேர்த்து கிளறவும்.


·         இதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.


·         உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து 6 – 8 நிமிடங்கள் வேகவிடவும்.


·         சுவையான சத்தான கொழுக்கட்டை ரெடி. விரும்பினால் இதற்கு காரமான சட்னியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


குறிப்பு :
கோதுமை ரவையினை மைக்ரேவேவில் வேகவைக்காமல், கடாயிலும் வேகவைக்கலாம்.

நிறைய தண்ணீர் சேர்த்தால் கொழகொழப்பாக இருக்கும். அதனால் அளவாக தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.

அவரவர் விருப்பம் போல, இதில் வெஜிடேபுள்ஸ், வெங்காயம் போன்றவை சேர்த்து கொள்ளலாம்.

கோதுமை ரவையினை போல, சாதரண ரவை, க்ரிட்ஸ் , கார்ன்மீல் போன்றவையிலும் செய்யலாம்..ரொம்ப நல்லா இருக்கும்.

மினி இட்லி தட்டில் இப்படி உருண்டைகளை அடுக்கி வேகவைத்தால், ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் நன்றாக இருக்கும்.

டோஃபு மசாலா - Tofu Masalaஎளிதில் செய்ய கூடிய சத்தான க்ரேவி்..நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்…

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         டோஃபு – 1 பக்கட்
·         இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி
·         காய்ந்த வெந்தயகீரை – 1 மேஜை கரண்டி

வதக்கி ஒன்றும் பாதியுமாக அரைத்து கொள்ள :
·         வெங்காயம் – 2 பெரியது

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/4  தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·         தனியா தூள் – 1/2 தே.கரண்டி
·         சிக்கன் மசாலா – 1/2 தே.கரண்டி (விரும்பினால்)
·         உப்பு – தேவையான அளவு

முதலில் தாளிக்க :
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         பட்டை,கிராம்பு, ஏலக்காய்

கடைசியில் சேர்க்க:
·         எலுமிச்சை சாறு – 1 தே.கரண்டி
·         கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :
·         டோஃபுவினை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். நாண்-ஸ்டிக் பனில் 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி டோஃபுவினை போட்டு வறுத்து தனியாக வைத்து கொள்ளவும். (எண்ணெய் அதிகம் சேர்க்க தேவையில்லை.)


·         வெங்காயத்தினை சிறிய துண்டுகளாக வெட்டி கொண்டு, கடாயில் போட்டு வதக்கி கொள்ளவும். சிறிது நேரம் ஆறவைத்து மிக்ஸியில் போட்டு ஒன்றும் பாதியுமாக அரைத்து கொள்ளவும்.


·   கடாயில் மீதம் உள்ள எண்ணெயினை ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.


·         இத்துடன் அரைத்த வெங்காயம் விழுது + தூள் வகைகள் சேர்த்து கிளறவும்.


·         2 நிமிடங்கள் கழித்து கஸ்தூரி மேத்தியினை சேர்த்து வேகவிடவும்.


·         விரும்பினால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும். க்ரேவியாக வரும். தண்ணீர் சேர்க்காமல் இருந்தால் ட்ரையாக வறுவல் மாதிரி இருக்கும்.


·         இத்துடன் வறுத்து வைத்துள்ள டோஃபுவினை சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிடவும்.


·         கடைசியில் எலுமிச்சை சாறு + கொத்தமல்லி தூவவும். சுவையான சத்தான எளிதில் செய்ய கூடிய க்ரேவி ரெடி.


 இதனை சப்பாத்தி, நாண், இட்லி, தோசை, சாதம் போன்றவையுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.Related Posts Plugin for WordPress, Blogger...