செட்டிநாடு மீன் வறுவல் - Chettinad Fish Fry

       print this page Print

ஒரே மாதிரி மீன் வறுவல் செய்து போர் அடித்துவிட்டால், இந்த முறையில் செய்து பாருங்க…ரொம்ப நல்லா இருக்கும்…இது எங்க பெரியம்மாவின் செய்முறை….சுவையான மீன் வறுவல்…நீங்கள் செய்து பார்த்து உங்க கருத்தினை தெரிவிக்கவும்.

குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது இது மாதிரி முள் இல்லாத Filletsயில் செய்தால் நமக்கும் பயம் அதிகம் இருக்காது…

ஊறவைக்க தேவைப்படும் நேரம் : குறைந்தது 30 நிமிடங்கள்
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :     
         மீன் – 1/2 கிலோ
·         புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
·         எண்ணெய் - சிறிதளவு

அரைத்து சேர்க்க வேண்டிய பொருட்கள் :
·         வெங்காயம் – 1 (நறுக்கியது 1/2 கப்)
·         பூண்டு – 5 பெரிய பல்
·         தேங்காய் – 2 பெரிய துண்டு (அ) துறுவியது 3 மேஜை கரண்டி
·         மிளகு – 1 தே.கரண்டி
·         சீரகம் – 1 தே.கரண்டி
·         சோம்பு – 1 தே.கரண்டி

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 3/4 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·         தனியா தூள் – 1 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு


செய்முறை :
·         புளியினை சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும். மிக்ஸியில் மிளகு + சீரகம் + சோம்பு சேர்த்து முதலில் நன்றாக பொடித்து கொள்ளவும். அத்துடன் வெங்காயம் + பூண்டு + தேங்காய் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

·         அரைத்த கலவை + தூள் வகைகள் + புளி தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து ஒவ்வொரு மீன் துண்டுகளிலும் தடவி குறைந்தது 30 நிமிடங்கள் ஊறவிடவும்.


·         கடாயினை காயவைத்து 1 மேஜை கரண்டி எண்ணெய் ஊற்றி ஊறவைத்த மீன்களை சேர்த்து வறுக்கவும்.


·         சுவையான எளிதில் செய்ய கூடிய மீன் வறுவல் ரெடி.


கவனிக்க :
சின்ன வெங்காயம் சேர்த்தால் நல்லா இருக்கும். வெங்காயம் + பூண்டினை அளவினை அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டாம்.

அவரவர் காரத்திற்கு ஏற்றாற் போல தூளினை சேர்த்து கொள்ளவும். அதே மாதிரி வெங்காயம் + பூண்டினை தவிர்த்து தேங்காயினை சிறிது அதிகம் சேர்த்து செய்தாலும் சூப்பராக் இருக்கும்.

கண்டிப்பாக புளி கரைசலினை சேர்த்து கொள்ள வேண்டும். புளி கரைசலிற்கு பதிலாக எலுமிச்சை சாறும் சேர்த்து கொள்ளலாம்…ஆனால் சுவையில் வித்தியாசம் இருக்கும். அதனால் புளி சேர்த்து கொண்டால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

மீனை குறைந்தது 30 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை ஊறவிடலாம். அதற்கு பிறகும் ஊறவைத்து என்றால், Fridgeயில் வைத்து விடுவது நல்லது.

20 comments:

Shanavi said...

My mom makes this the same style..But here I just simply the ingredients as everything s gotta b done in a jiffy.. Naa ooooruthu !!!!

Kousalya said...

ரொம்பவே வித்தியாசமான முறையாக இருக்கிறது...செய்து பார்க்கணும்...
நீங்க சொல்ற விதமே சுவை அதிகமாக இருக்கும் என்பது போல் இருக்கிறது.

செய்து பார்க்கணும்...

படங்கள் பசியை தூண்டுகிறது ! :))

Gita Jaishankar said...

Very different and interesting preparation da...looks very tasty :)

Chitra said...

love the ingredients that goes in the masala...end product would be very flavorfull..

நிரூபன் said...

ரெசிப்பியை பார்க்கவே வாய் ஊறுதுங்க..
செட்டி நாடு மீன் வறுவல் பற்றிய அருமையான பகிர்விற்கு நன்றி.

Pushpa said...

Spicy and yummy fish fry.

Geetha6 said...

அருமை சகோதரி ! வாழ்த்துக்கள்

Reva said...

Aaahhh.. Super meen varuval. Saapitu romba naal aachu..Paarkavae supera irrukku:)
Reva

சசிகுமார் said...

வித்தியாசமா இருக்குக்கா

ஹுஸைனம்மா said...

கீதா, இதை எலெக்ட்ரிக் அவனில் சுட்டு எடுக்கலாம்ல? (நீங்களும் வழக்கமா, எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்க, அவனில்தானே செய்வீங்க. இப்ப எண்ணெயில பொறிச்சிட்டீங்க. அதான் கேக்கிறேன்).

Aparna said...

Geetha, ingredients-a display pannurathu great idea !!! Future recipes-la idhe pattern follow pannungalen , please

ஸ்வர்ணரேக்கா said...

ஹாய் கீதா..

உங்க சமையல் பதிவு நல்லாயிருக்கு... அதை தமிழில் பதிகிறீர்களே... அது இன்னும் நல்லாயிருக்கு...

Shama Nagarajan said...

wow..yummy

S.Menaga said...

சூப்பர்ர்ர் கீதா!! மசாலா கலவையுடன் புளி கரைசல் சேர்த்ததில்லை..

GEETHA ACHAL said...

நன்றி ஷானவி...

நன்றி கௌசல்யா...கண்டிப்பாக செய்து பாருங்க...

நன்றி கீதா..

நன்றி சித்ரா...

நன்றி நிரூபன்..

நன்றி புஷ்பா..

GEETHA ACHAL said...

நன்றி கீதா..

நன்றி ரேவதி...

நன்றி சசி...

நன்றி ஹுஸைனம்மா..கண்டிப்பாக இதனை அவனில் செய்யலாம்..ரொம்ப நல்லா இருக்கும்...

இதனை உடனே சாப்பிட செய்ததால் இப்படி தோசை கல்லில் போட்டு செய்தேன்..இல்லை என்றால், கண்டிப்பாக அவனில் செய்து இருப்பேன்..

இதற்கு மிகவும் குறைந்த அளவு எண்ணெயே பயன்படுத்து இருக்கின்றேன்..கூடவே இப்படி செய்தால் அக்‌ஷ்தாவிற்கு ரொம்பவும் பிடிக்கும்..அவ சாப்பிடுவது இது மட்டுமே...

GEETHA ACHAL said...

நன்றி அபர்ணா..கண்டிப்பாக இனிமேல் எடுக்கும் படங்களில் Ingredientsயினையும் போட்டோ எடுக்க பார்க்கிறேன்...

நன்றி ஸ்வர்ணா..ரொம்ப நன்றிமா..

நன்றி ஷாமா..

நன்றி மேனகா..அடுத்த முறை புளி சேர்த்து செய்து பாருங்க...நல்லா இருக்கும்...

vanathy said...

super fish fry! Nice photo.

Jay said...

absolutely divine..:P
perfect version..

Tasty Appetite

Anonymous said...

idhil konjam vendhaya podiyum serkalaame?

Related Posts Plugin for WordPress, Blogger...