குண்டூர் சிக்கன் - Guntur Chickenஇந்த சிக்கன் க்ரேவியில் எந்த ஒரு தூள் வகைகளும் பயன்படுத்தாமல், நாமே மசாலாவினை தயாரிப்பதால் கூடுதல் சுவையுடன் அருமையாக இருக்கும்.

திருமதி. ஆசியாவின் குறிப்பில் இருந்து பார்த்து செய்தேன்…நீங்கள் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 - 25 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         சிக்கன் – 1/2 கிலோ
·         இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி
·         தயிர் – 2 மேஜை கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

முதலில் தாளிக்க :
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         பட்டை,கிராம்பு, ஏலக்காய்

பொடியாக நறுக்கி கொள்ள :
·         வெங்காயம் – 3
·         தக்காளி – 3
·         கொத்தமல்லி - சிறிதளவு

வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்:
·         காய்ந்த மிளகாய் – 5
·         தனியா – 1 மேஜை கரண்டி
·         மிளகு – 1 தே.கரண்டி
·         சீரகம் – 2 தே.கரண்டி
·         கடுகு – 1/2 தே.கரண்டி
·         வெந்தயம் – 1/2 தே.கரண்டி
·         காய்ந்த தேங்காய் துறுவல் – 2 மேஜை கரண்டி


செய்முறை :
·         சிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். வெங்காயம் + தக்காளி + கொத்தமல்லியினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

·         வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக தனி தனியாக வறுத்து சிறிய நேரம் ஆற வைத்து மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

·         குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து கொள்ளவும்.

·         இத்துடன், வெங்காயம் சேர்த்து 1 நிமிடம் நன்றாக வதக்கிய பிறகு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.


·         பிறகு, தக்காளியினை சேர்த்து நன்றாக வதக்கவும்.

·         தக்காளி நன்றாக வதங்கியவுடன், வறுத்து அரைத்த விழுது + தயிர் + தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக 2 – 3 நிமிடங்கள் வதக்கவும்.


·         கடைசியில் சிக்கன் + 1 கப் தண்ணீர் சேர்த்து பிரஸர் குக்கரில் 2 – 3 விசில் வரும் வரை வேகவிடவும்.


·         குக்கரில் பிரஸர் அடங்கியதும், குக்கரினை திறந்து கொத்தமல்லி சேர்க்கவும். சுவையான எளிதில் செய்ய கூடிய சிக்கன் க்ரேவி…இதனை சாதம், சப்பாத்தி, நாண், தோசை போன்றவைக்கு சூப்பர் காம்பினேஷன்…


குறிப்பு :
காய்ந்த தேங்காய் துறுவலுக்கு பதிலாக Fresh தேங்காயினை சேர்த்து கொள்ளலாம். அப்படி சேர்ப்பது என்றால், தேங்காயினை வறுக்க தேவையில்லை.

இதனை க்ரேவி மாதிரி செய்து இருக்கின்றேன்…. இத்துடன் 1 கப் தண்ணீர் சேர்க்காமல் செய்தால், கொஞ்சம் dryயாக இருக்கும்…சாதத்திற்கு Side Dishஆக இருக்கும்.


அவரவர் காரத்திற்கு ஏற்றாற் போல, காய்ந்த மிளகாயினை அதிகமாகவே அல்லது குறைத்தோ சேர்த்து கொள்ளவும்.
தயிர் சேர்க்க விரும்பாதவர்கள், அதற்கு பதிலாக எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளலாம்.

20 comments:

Vimitha Anand said...

What a yummy platter... Chicken curry looks so flavorful and tasty...

Anonymous said...

உள்ளேன்

Geetha6 said...

arumai geetha.

Anonymous said...

நன்றி

மகி said...

நான் மஷ்ரூம் குழம்பு கிட்டத்தட்ட இதே மாதிரி செய்வேன். :)

Kousalya said...

சுவையான விருந்தினை படைத்து அசத்தி விட்டீர்கள்...

அரைத்து செய்வதால் சுவை அதிகம் !

விளக்கமும், படங்களும் அருமை.

ஸாதிகா said...

அருமையான குண்டூர் சிக்கன் கூடவே சின்ன விருந்துடன்..கலர்ஃபுல் சாலட்??? ப்[ஆர்க்கவே அழகாக உள்ளது.விரைவில் கார்ன் சேர்த்து செய்த அந்த சாலட் ரெஸிப்பியையும் போடுங்கள்.

Priya said...

Mouthwatering here, yummy chicken curry..

angelin said...

wow !!!!my mouth is drooling !!!.
.நான் இதுவரை தண்ணி சேர்த்து அரைகாததால் துகள்கள் ஆக இருக்கும் .
உங்கள் செய்முறைப்படி செய்கிறேன் .பகிர்வுக்கு நன்றி.

athira said...

நல்லா இருக்கு.

Pushpa said...

Hi Geetha,How are you?Platter looks superb and very tempting.

Mahes said...

Very nice, Geetha! Tried your chettinadu chicken a couple of times, it was a big hit!

Shanavi said...

paarkave naavooruthu geetha,...tomorrow is saturday..I can't eat...Slurp ..

Krithi's Kitchen said...

Supera irukku geetha.. enna irundhaalum masala araichi seyyara samayalukku rusiyae thani thaan..
http://krithiskitchen.blogspot.com
Event: Healing Foods - Banana

GEETHA ACHAL said...

நன்றி விமிதா..

நன்றி அனானி..

நன்றி கீதா..

நன்றி மகி...ஆமாம் மஷ்ரூமில் சூப்பராக இருக்கும்..

நன்றி கௌசல்யா...

நன்றி ஸாதிகா அக்கா...ரொம்ப நன்றி...இது Mixed vegetables பொரியல்...இங்கு இது தனியாக பக்கடில் கிடைக்கும்..அதனால் எளிதில் செய்ய கூடியது..

GEETHA ACHAL said...

நன்றி ப்ரியா..

நன்றி ஏஞ்சலின்..கண்டிப்பாக செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

நன்றி அதிரா..

நன்றி புஷ்பா...நாங்கள் அனைவரும் நலம்...

GEETHA ACHAL said...

நன்றி மகேஷ்..ரொம்ப சந்தோசம்..

நன்றி ஷானவி..

நன்றி கீர்த்தி...

asiya omar said...

பகிர்வுக்கும் செய்து அசத்தியமைக்கும் மிக்க நன்றி.கீதா ஆச்சல்.

Mahes said...

Made this today, Geetha, came out very yummy. The whole family loved it. Thanks!

Selvi Jagadeesan said...

its really mouth watering dish and presentation

Related Posts Plugin for WordPress, Blogger...