லெமனி தயிர் பச்சடி - Lemony Pachadi


எளிதில் செய்ய கூடிய சுவையான பச்சடி…நீங்களும் செய்து பார்த்து உங்க கருத்தினை தெரிவிக்கவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         தயிர் – 1 கப்
·         வெங்காயம் – 1
·         தக்காளி – 1
·         பச்சைமிளகாய் – 1
·         கொத்தமல்லி – சிறிதளவு
·         எலுமிச்சை பழம் – பாதி
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
·         வெங்காயம் + பச்சை மிளகாய் + கொத்தமல்லியினை நறுக்கி கொள்ளவும். தக்காளியின் விதைகளை நீக்கி வெட்டி கொள்ளவும்.

·         எலுமிச்சை பழத்தின் தோலினை (1 தே.கரண்டி அளவிற்கு), தேங்காய் துறுவலில் துறுவி கொள்ளவும். எலுமிச்சை தோல் துறுவிய பிறகு, எலுமிச்சை சாறு எடுத்து கொள்ளவும். (சுமார் 1 மேஜை கரண்டி)


·         வெங்காயம் + பச்சைமிளகாய் + கொத்தமல்லி + தக்காளி + உப்பு + எலுமிச்சை தோல் துறுவியது + எலுமிச்சை சாறு + தயிர் அனைத்தும் ஒன்றாக சேர்த்து கலக்கவும்.

·         சுவையான எளிதில் செய்ய கூடிய பச்சடி ரெடி.


குறிப்பு :
அவரவர் புளிப்புக்கு ஏற்றாற் போல எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளவும்.

எலுமிச்சை தோலினை துறுவும் பொழுது, மஞ்சள் பகுதியினை மட்டும் துறுவவும். வெள்ளை பகுதி வரும் பொழுது துறுவ வேண்டாம்.

அதே மாதிரி மஞ்சள் எலுமிச்சை பழத்தில் செய்தால் நன்றாக இருக்கும். பச்சை எலுமிச்சை பழம் (Limes)யில் செய்வதால் இருந்தால்,தோல் துறுவல் சேர்த்து கொள்ள வேண்டாம்.

வெள்ளை வெங்காயத்தினை விட Red Onions பயன்படுத்தினால் பச்சடி நன்றாக இருக்கும். 

20 comments:

Gayathri Kumar said...

Tangy and delicious...

Angel said...

எல்லா பொருளும் கைவசம் இருக்கு .இப்பவே செஞ்சுடறேன் .thanks

Raks said...

Will sure try this,I love all lemony things :)

ஸாதிகா said...

நல்ல மணமாக இருக்கும் இந்த ரைத்தா

Lifewithspices said...

idhu super.. sure try..

Unknown said...

ஆஹா! லெமன் சேர்த்தவை எனக்கும் பிடிக்கும்.

குக்கும்பரும் சேர்க்கலாம் தானே ...

vanathy said...

super recipe!

KrithisKitchen said...

Great idea of adding lemon zest in too..

http://krithiskitchen.blogspot.com
Event: Healing Foods - Banana

Sensible Vegetarian said...

Super colorful and delicious.

Menaga Sathia said...

புளிப்பு சுவையுடன் சூப்பர்ர் பச்சடி!!

பிஞ்சு ஞானி அதிரா:) said...

அருமையாக இருக்கு கீதா. இதன் தலைப்பு சரியா? செக் பண்ணுங்க.. லெமன் எனத்தானே வரும்.

Shanavi said...

Need briyani / pulao to go with this awesome pachadi Geetha..Romba Romba super

ஸ்ரீ.கிருஷ்ணா said...

படங்களுடன் அருமை அக்கா என்ன கேமரா ல எடுக்குறீங்க ?

Vimitha Durai said...

Tangy and creamy pachadi...

Priya Suresh said...

Wow delicious and tongue tickling pachadi,cant wait to try..

உலக சினிமா ரசிகன் said...

எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.
மேலும் விபரம் அறியவும்....
இந்த மோசடியை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்தவும்.....
எனது வலைப்பக்கம் வாருங்கள்.ப்ளீஸ்...

GEETHA ACHAL said...

நன்றி காயத்ரி...

நன்றி ஏஞ்சலின்..கண்டிப்பாக செய்து பாருங்க..

நன்றி ராஜி..கண்டிப்பாக செய்து பாருங்க..

நன்றி ஸாதிகா அக்கா..

நன்றி கல்பனா..

GEETHA ACHAL said...

நன்றி ஜமால் அண்ணா..எந்த விதமான காய்கள் சேர்த்தும் செய்யலாம்...ரொம்ப நல்லா இருக்கும்..

நன்றி வானதி..

நன்றி கீர்த்தி...

நன்றி sensible...

நன்றி மேனகா...

GEETHA ACHAL said...

நன்றி அதிரா...நான் தான் லெமன் பச்சடி என்பதற்கு பதிலாக லெமனி என்று வைத்தேன்..பெயர் நல்லா இருக்கா...

நன்றி ஷானவி..

நன்றி கிருஷ்ணா..நான் பயன்படுத்துவது canon power shot SD900 கேமரா...

நன்றி விமிதா..

நன்றி ப்ரியா...

Priya ram said...

கேரட் துருவி போட்டு நீங்க சொல்லி இருப்பது அனைத்தும் சேர்த்து பச்சடி செய்து இருக்கேன். லெமன் சேர்த்ததில்லை. அடுத்த தடவை சேர்த்து பார்க்கறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...