ஆரஞ்ச் பழம் கேசரி - Orange Fruit Juice Kesari


எளிதில் செய்ய கூடிய சேகரி…நீங்களும் செய்து பார்த்து உங்க கருத்தினை தெரிவிக்கவும். நன்றி மேனகா…

சமைக்க தேவைப்படும் நேரம்: 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         ரவை – 1 கப்
·         ஆரஞ்ச் ஜுஸ் – 1 கப்
·         சக்கரை – 1/2 கப்
·         ஆரஞ்ச் / யெல்லோ கலர் – சிறிதளவு
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         நெய் – 1 தே.கரண்டி
·         ஏலக்காய் - 1

கடைசியில் வறுத்து கொள்ள :
·         நெய் – 1 தே.கரண்டி
·         முந்திரி, திராட்சை – சிறிதளவு

செய்முறை :
·         கடாயில் ரவை + எண்ணெய் சேர்த்து 1 – 2 நிமிடங்கள் வறுத்து கொள்ளவும்.


·         இத்துடன் ஆரஞ்ச் ஜுஸ் + 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவிடவும்.


·         ரவை முக்கால் பதம் வெந்தவுடன், சக்கரை + ஏலக்காய் + நெய் சேர்த்து மேலும் 3 - 4 நிமிடங்கள் வேகவிடவும்.


·         கடைசியில் முந்திரி, திராட்சையினை வறுத்து கேசரியில் சேர்த்து கொள்ளவும்.


·         சுவையான எளிதில் செய்ய கூடிய சேகரி ரெடி.

குறிப்பு :
விரும்பினால் ஆரஞ்ச் essence சேர்த்து கொள்ளலாம். நான் yellow color சேர்த்து இருக்கின்றேன்…

நான் கடைகளில் கிடைக்கும் ஆரஞ்ச் ஜுஸ் பயன்படுத்தி உள்ளென்..அதிலேயே சக்கரை இருப்பதால் சக்கரையின் அளவினை குறைத்து இருக்கின்றேன்.

Fresh ஆரஞ்ச் ஜுஸ் என்றால் புளிப்பு இல்லாத பழத்தின் சாறினை எடுத்து சேகரி செய்யவும்.

ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி செய்வாங்க..சிலர் முதலில் சக்கரை + தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு பிறகு அதில் ரவையினை போட்டு கிளறி கேசரி செய்வாங்க…எங்க வீட்டில் அம்மா முதலில் ரவையினை வேகவிட்ட பிறகு தான் சக்கரை சேர்ப்பாங்க…இதனால் கிளறுவது மிகவும் ஈஸி…


31 comments:

Pushpa said...

Looks creamy and delicious.

Unknown said...

Ennada geetha innum entry anuppalaye n ninaichen.kalakkala entry kuduthu asathiteenga.super.

Lifewithspices said...

Absolutely delicious n mouth watering..

Mahi said...

Colourful kesari geetha!

Unknown said...

Love kesari anytime... Nice flavorful recipe...

(Mis)Chief Editor said...

Madam,

Kalakkarel pongo!

Talked about you in my blog...please visit

http://apdipodu.blogspot.com/2011/06/4.html

Regards,
MCE

Shylaja said...

Looks yummy and delicious.Orange kesari romba puthusa iruku. Try panni paarkiren
South Indian Recipes

Unknown said...

வித்தியாசமா உருவாக்குறதல நீங்க சமையல் ராணி தான்.

Vardhini said...

Lovely Geetha. I have made kesari only with rava.

Vardhini
Event: Dish it Out - Spinach and Garlic
Event: Healthy Lunchbox Ideas - Broccoli

சசிகுமார் said...

Thanks for sharing

Raji said...

Lovely kesari...totally delicious looking.

Priya ram said...

நானும் இப்படி தான் செய்வேன். ஆனால் எண்ணெய் சேர்க்க மாட்டேன்.

Priya Suresh said...

Appadiye intha pakkama konjam anupi vidunga Geetha, superaa irruku kesari..

Priya said...

Looks delicious!

Jayanthy Kumaran said...

wow...sounds real wonderful n tasty..:P

Tasty Appetite

ADHI VENKAT said...

நல்ல பகிர்வுங்க. நானும் ரவை முக்கால் பதம் வெந்த பின் தான் சர்க்கரை சேர்ப்பேன்.

Menaga Sathia said...

மறுபடியும் செய்து சாப்பிட தோனுது..நன்றி கீதா!!

ஸாதிகா said...

வாவ..கவர்ச்சிகரமான கேசரி கீதா,

Raks said...

மிகவும் புது வகை கேசரி இது. சூப்பர் கீதா !!

Sensible Vegetarian said...

Delicious one, lovely color.

ஹுஸைனம்மா said...

பைனாப்பிள் துண்டுகள் அல்லது மிக்ஸட் ஃப்ரூட் துண்டுகள் சேர்த்து கேசரி செய்வதுண்டு. ஆரஞ்சு ஜூஸ் சேர்ப்பது புதிது எனக்கு. செஞ்சு பார்க்கணும்.

KrithisKitchen said...

Orange kesari is an excellent idea!!

http://krithiskitchen.blogspot.com
Event: Healing Foods - Banana

பிஞ்சுக் கவிஞர்:) அதிரா:) said...

Nice colour and yummm Geetha.

நிரூபன் said...

சமையலுக்கான ஆவலைத் தூண்டும் வகையில் ஆரேஞ் பழக் கேசரி பற்றிய செய்முறையினைப் பகிர்ந்துள்ளீர்கள்.

நன்றி.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

படங்களுடன் அருமை ...

Shanavi said...

pneapple kesari, ippo orange kesari..romba super Geeths..Asathunga

GEETHA ACHAL said...

நன்றி புஷ்பா..

நன்றி சவிதா..

நன்றி கல்பனா..

நன்றி மகி..

நன்றி விமிதா..

நன்றி MCE..

நன்றி SouthIndain..கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க...

GEETHA ACHAL said...

நன்றி பொன்மலர்...

நன்றி வர்தினி..

நன்றி சசி,,

நன்றி ராஜி..

நன்றி ப்ரியாராம்...

நன்றி ப்ரியா..

நன்றி ப்ரியா...

GEETHA ACHAL said...

நன்றி ஜெய்..

நன்றி ஆதி...

நன்றி மேனகா..

நன்றி ஸாதிகா அக்கா..

நன்றி ராஜி..

நன்றி Sensible...

GEETHA ACHAL said...

நன்றி ஹுஸைனம்மா...நானும் பைனாப்பிள் சேர்த்து தான் செய்வேன்...மேனகாவின் குறிப்பில் பார்த்தில் இருந்து செய்ய வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது...செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க..

நன்றி கீர்த்தி..

நன்றி அதிரா..

நன்றி நீருபன்..

நன்றி கிருஷ்ணா..

நன்றி ஷானவி..

Kanchana Radhakrishnan said...

நல்ல பகிர்வு.

Related Posts Plugin for WordPress, Blogger...