பிரவுன் ரைஸ் புளி சாதம் - Tamrind Brown Rice (Left Over Rice)


ஊறவைக்க தேவைப்படும் நேரம் : குறைந்தது 4 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 – 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         வேகவைத்த பிரவுன் ரைஸ் – 4 கப்
·         புளி – சிறிய எலுமிச்சை அளவு
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         காய்ந்த மிளகாய் – 2
·         உப்பு – தேவையான அளவு

தாளிக்க :
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         கடுகு – தாளிக்க
·         கடலைப்பருப்பு + உளுத்தம்பருப்பு – 1 மேஜை கரண்டி
·         கருவேப்பில்லை – சிறிதளவு

செய்முறை :
·         புளியினை 1/2 கப் தண்ணீர் ஊற்றி கெட்டியாக கரைத்து கொள்ளவும்.

·         சாதம் + புளி தண்ணீர் + மஞ்சள் தூள் + காய்ந்த மிளகாய் + உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.


·         இதனை முன் தினம் இரவே செய்து மறுநாள் காலையில் சாதத்தினை தாளித்து கொள்ளலாம். கலந்து வைத்துள்ள சாதத்தினை குறைந்தது 4 மணி நேரம் ஊறவிடவும்.


·         ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + பருப்பு + கருவேப்பில்லை தாளித்து பிறகு சாதத்தினை சேர்த்து கிளறவும்.


·         புளி வாசம் போகும் வரை அடிக்கடி கிளறிவிடவும். சுமார் 10 – 15 நிமிடங்களில் புளி சாதம் ரெடி. இதனை வறுவல், அப்பளம், சிப்ஸ் போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


குறிப்பு :
பச்சை அரிசி அல்லது புழுங்கல் அரிசியில் செய்வதினை விட பிரவுன் ரைஸில் செய்தால் ரொம்ப சுவையாக இருக்கும்.

நாண்-ஸ்டிக் கடாய் பயன்படுத்தினால் எண்ணெய் அதிக சேர்க்க தேவையில்லை.

கடாயில், சாதத்தினை அடிக்கடி கிளறாமல் 2 நிமிடத்திற்கு ஒரு முறை கிளறினால் நன்றாக இருக்கும்.

புளியினை கண்டிப்பாக கெட்டியாக கரைத்து கொள்ளுங்க..அப்பொழுது நன்றாக இருக்கும்.

புளி சேர்த்து சாதத்தினை கிளறிய பிறகு, fridgeயில் வைத்து கொள்ளலாம். 

19 comments:

Mahi said...

புளி பிரட்டி வச்சு அடுத்தநாள் தாளிச்சாலே தனி ருசிதான்.

ப்ரவுன் ரைஸ் வாங்கினாலும் சாதமா வைக்க எனக்கு தைரியம் வரமாட்டேன்னுது கீதா! :) ஒருமுறை வைத்தேன்,அந்த வாசம் பிடிக்கல,அதனால் இப்ப தோசைக்கு மட்டுமே ப்ரவுன் ரைஸ்.

Unknown said...

Nice flavorful rice... Perfect for travel...

Lifewithspices said...

My grandma makes this way i always love these rice..love it..

சசிகுமார் said...

Thanks for sharing

Priya Suresh said...

I do this quite often with leftover rice, delicious and healthy tamarind brown rice..

Reva said...

Suvaiyaana sathaana saadham.. arumai.. :)
Reva

குறையொன்றுமில்லை. said...

உங்களை வலைச்சரதில் அறிமுகபடுத்தியிருக்கேன்.
நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_6777.html

Aruna Manikandan said...

parkave supera irruku :)

Jeyashris Kitchen said...

thats a wonderful and healthy way of making puliyodarai with brown rice

Sensible Vegetarian said...

Looks superb. I love the chewy taste of brown rice better than regular one.

அப்பாவி தங்கமணி said...

புளினு பேப்பர்ல எழுதி குடுத்தா கூட சாப்டர கேஸ் நான்...ஹா ஹா ஹா... நல்ல ரெசிபி.. நன்றி...

Unknown said...

flavorful and delicious recipe with left over rice!!!

Aparna said...

Wow! Whole grain recipe after a long time. Thanks

ஸாதிகா said...

சத்துமிகு சாதம்.அழகா பறிமாறி இருக்கீங்க கீதா.

KrithisKitchen said...

We make like this at home with leftover rice.. perfect for the next day!
http://krithiskitchen.blogspot.com
Event: Healing Foods - Banana

GEETHA ACHAL said...

நன்றி மகி...

பிரவுன் ரைஸ் packet பிரித்தவுடன் சீக்கிரமாக பயன்படுத்தினால் ரொம்ப நல்லது...ஒரு வேளை பழைய அரிசியாக இருக்குமா என்று பாருங்க..

பிரவுன் ரைஸ் , மற்ற அரிசியினை போல ரொம்ப நாள் வைத்தால் நல்லா இருக்காது...Its has expiration.


நன்றி விமிதா...

GEETHA ACHAL said...

நன்றி கல்பனா..

நன்றி சசி..

நன்றி ப்ரியா..

நன்றி ரேவதி..

நன்றி லஷ்மி அம்மா...ரொம்ப நன்றி..

GEETHA ACHAL said...

நன்றி அருணா..

நன்றி ஜெயஸ்ரீ..

நன்றி sensible..

நன்றி அப்பாவி....

நன்றி ப்ரியா..

GEETHA ACHAL said...

நன்றி அபர்ணா..

நன்றி ஸாதிகா அக்கா..

நன்றி கீர்த்தி...

Related Posts Plugin for WordPress, Blogger...