டோஃபு மசாலா - Tofu Masalaஎளிதில் செய்ய கூடிய சத்தான க்ரேவி்..நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்…

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         டோஃபு – 1 பக்கட்
·         இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி
·         காய்ந்த வெந்தயகீரை – 1 மேஜை கரண்டி

வதக்கி ஒன்றும் பாதியுமாக அரைத்து கொள்ள :
·         வெங்காயம் – 2 பெரியது

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/4  தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·         தனியா தூள் – 1/2 தே.கரண்டி
·         சிக்கன் மசாலா – 1/2 தே.கரண்டி (விரும்பினால்)
·         உப்பு – தேவையான அளவு

முதலில் தாளிக்க :
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         பட்டை,கிராம்பு, ஏலக்காய்

கடைசியில் சேர்க்க:
·         எலுமிச்சை சாறு – 1 தே.கரண்டி
·         கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :
·         டோஃபுவினை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். நாண்-ஸ்டிக் பனில் 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி டோஃபுவினை போட்டு வறுத்து தனியாக வைத்து கொள்ளவும். (எண்ணெய் அதிகம் சேர்க்க தேவையில்லை.)


·         வெங்காயத்தினை சிறிய துண்டுகளாக வெட்டி கொண்டு, கடாயில் போட்டு வதக்கி கொள்ளவும். சிறிது நேரம் ஆறவைத்து மிக்ஸியில் போட்டு ஒன்றும் பாதியுமாக அரைத்து கொள்ளவும்.


·   கடாயில் மீதம் உள்ள எண்ணெயினை ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.


·         இத்துடன் அரைத்த வெங்காயம் விழுது + தூள் வகைகள் சேர்த்து கிளறவும்.


·         2 நிமிடங்கள் கழித்து கஸ்தூரி மேத்தியினை சேர்த்து வேகவிடவும்.


·         விரும்பினால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும். க்ரேவியாக வரும். தண்ணீர் சேர்க்காமல் இருந்தால் ட்ரையாக வறுவல் மாதிரி இருக்கும்.


·         இத்துடன் வறுத்து வைத்துள்ள டோஃபுவினை சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிடவும்.


·         கடைசியில் எலுமிச்சை சாறு + கொத்தமல்லி தூவவும். சுவையான சத்தான எளிதில் செய்ய கூடிய க்ரேவி ரெடி.


 இதனை சப்பாத்தி, நாண், இட்லி, தோசை, சாதம் போன்றவையுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.25 comments:

Unknown said...

romba nalla irukku geetha.healthy kooda.
Veg / Fruit a month - Orange

Priya said...

படங்களை பார்க்கும் போதே சாப்பிடனும் போலிருக்கு கீதா! ம்ம் விதவிதமா செய்து கலக்குங்க!

vanathy said...

looking yummy! Frying tofu is the hardest part.

Saraswathi Ganeshan said...

Irresistible masala..Healthy sidedish..bookmarked it..Thanks for leaving lovely comments dear..

எல் கே said...

thanks for sharing

Sensible Vegetarian said...

Lovely flavorful masala.

Shylaja said...

Delicious and yummy masala

South Indian Recipes

Raji said...

I would surely prefer this over paneer masala. Too healthy and delish.

Vimitha Durai said...

Looks so rich and delish dear... Perfect side dish for chapathis...

Vardhini said...

Came home after vacation with two packs of tofu .. lovely recipe Geetha.

Vardhini
Event: Dish it Out - Spinach and Garlic
Event: Healthy Lunchbox Ideas - Broccoli

Raks said...

ரொம்ப நல்ல ரெசிபி கீதா,பாகவும் ரொம்ப superba இருக்கு :)

Aruna Manikandan said...

looks delicious and tempting dear :)

Angel said...

YUMMY HEALTHY ,RECIPE .THANKS FOR SHARING.

நிரூபன் said...

உங்களின் ரெசிப்பியைப் பார்க்கும் போதே,
இப்பவே செய்து சாப்பிட வேண்டும் போல இருக்கிறது.

படங்களுடன் இணைந்த விளக்கப் பகிர்விற்கு நன்றி.

ஸாதிகா said...

அருமையாக செய்து காட்டி இருக்கீங்க கீதா.

Priya Suresh said...

Healthy tofu masala looks awesome,cant wait to try this..

ஸாதிகா said...

உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்.

Menaga Sathia said...

ரொம்ப நல்லாயிருக்கு கீதா!!

Jayanthy Kumaran said...

looks superb geetha...feel like having rite now with my rotis..:P
Tasty Appetite
Event: Letz Relishh Ice Creams

KrithisKitchen said...

Super tofu methi masala.. simply delishh..
http://krithiskitchen.blogspot.com
Event: Healing Foods - Banana

Vijiskitchencreations said...

கீதா சூப்பர் ரெசிப்பி. நானும் நிறய்ய டோபுவில் செய்வேன். டோபு ஸ்டப்ட் ரொட்டி, பராத்த, சப்ஜி. பிலாவ் போன்றவையும் செய்வேன் நிங்களும் செய்து பாருங்க. இதே போல் நானும் செய்வேன் இதில் நான் கோடா மசாலா சேர்த்து செய்வேன்.

GEETHA ACHAL said...

நன்றி சவிதா..

நன்றி ப்ரியா..

நன்றி வானதி...நாண்-ஸ்டிக் பானில் செய்து பாருங்க...எளிதில் டோஃபுவினை ப்ரை செய்து விடலாம்..

நன்றி சரஸ்..கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க...

GEETHA ACHAL said...

நன்றி கார்த்திக்..

நன்றி sensible...

நன்றி southindian

நன்றி ராஜி..

நன்றி விமிதா...

GEETHA ACHAL said...

நன்றி வர்தினி...

நன்றி ராஜி...

நன்றி அருணா..

நன்றி ஏஞ்சலின்..

நன்றி நிரூபன்...

நன்றி ஸாதிகா அக்கா..

GEETHA ACHAL said...

நன்றி ப்ரியா..

நன்றி மேனகா..

நன்றி ஜெய்..

நன்றி கீர்த்தி..

நன்றி விஜி.எப்படி இருக்கின்றிங்க...ரொம்ப நாளாக ப்ளாக் பக்கம் காணுமே..குழந்தைகள் எப்படி இருக்காங்க...

Related Posts Plugin for WordPress, Blogger...