ப்ரோக்கோலி சோயா கட்லட் - Broccoli Soya Cutletsப்ரோக்கோலியில் நிறைய விட்டமின்ஸ் ( Vitamins A , C & K) மற்றும் நார்சத்து( Dietary Fiber) இருக்கின்றது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.


சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         ப்ரோக்கோலி – 1 கப் (பொடியாக நறுக்கியது)
·         சோயா – 20
·         ஒட்ஸ் மாவு – 1 கப்
·         மிளகாய் தூள் – 1/4 தே.கரண்டி
·         உப்பு , எண்ணெய் – சிறிதளவு

செய்முறை :
·         ப்ரோக்கோலியினை பொடியாக நறுக்கி கொள்ளவும். சோயாவினை தண்ணீரி போட்டு வேகவிடவும். சோயா நன்றாக வெந்த பிறகு அதனை எடுத்து தண்ணீர் இல்லாமல் உதிர்த்து கொள்ளவும்.

·         ப்ரோக்கோலி + உதிர்த்த சோயா + ஒட்ஸ் மாவு + மிளகாய் தூள் + உப்பு + 1 தே.கரண்டி எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். சிறிய கட்லடுகளாக தட்டி கொள்ளவும்.


·         அவனை 400 F, Broil Modeயில் மூற்சூடு செய்து கொள்ளவும். அவனில் வைக்கும் ட்ரேயில் கட்லடுகளை அடுக்கி அவனில் 10 நிமிடங்கள் வேகவைக்கும்.


·         ட்ரேயினை வெளியில் எடுத்து கட்லடுகளை திருப்பி போட்டு மேலும் 10 நிமிடங்கள் வேகவிடவும்.


·         சுவையான சத்தான க்ரிஸ்பியான கட்லட் ரெடி.


குறிப்பு :
ஒட்ஸினை வறுத்து மிக்ஸியில் ஒன்றும் பாதியுமாக பொடித்து கொண்டால் ஒட்ஸ் மாவு ரெடி.

ஒட்ஸ் மாவிற்கு பதிலாக அரிசி மாவும் சேர்த்து கொள்ளலாம்.

22 comments:

Unknown said...

Yummy and healthy looking cutlets dear...

Menaga Sathia said...

சூப்பர்ர் போங்க...கட்லட் ரெசிபியா போட்டு அசத்துறீங்க...

KrithisKitchen said...

Super healthy cutlets.. love the oven method!!

Mrs.Mano Saminathan said...

புரோக்கலி கட்லட் மிக அருமை கீதா! புகைப்படங்களும் செய்முறையும் ரொம்ப அழகு! பார்க்கும்போதே உடனே செய்து பார்க்கத் தூண்டுகிறது!
எனக்கு புரோக்கலி ரொம்பவும் பிடிக்கும். இதை எண்ணெயில் ஃப்ரை செய்யலாமா? நன்றாக வ‌ருமா?

சுவீட் 16 அதிரா:) said...

வித்தியாசமாகவும் பார்க்கவே சுவையாகவும் இருக்கு. நீங்க எல்லாத்துக்கும் ஓட்ஸ் பாவிக்கிறீங்க, நல்ல விஷயம்.

நானும் இப்போ ஓட்ஸ் சீரியல்தான் சாப்பிடப் பழகியிருக்கிறேன்.

Sensible Vegetarian said...

Looks colorful and super delicious.

Shanavi said...

Naan udane unga veetuku varalama ? Romba pudhumai n arumai

Saraswathi Ganeshan said...

Healthy snack..innovative idea dear..

SIGNATURE RECIPES & A GIVEAWAY till july 31st 2011

இமா க்றிஸ் said...

வித்தியாசம் வித்தியாசமாகக் குறிப்புகள் கொடுத்து அசத்துறீங்க. பாராட்டுக்கள்.

நிரூபன் said...

சோயா கட்லெட் செய்வதற்கேற்ற சிம்பிளான ரெசிப்பியினைப் பகிர்ந்திருக்கிறீங்க. நன்றி சகோ.

Mahi said...

இப்பதான் க்ரிட்ஸ் கட்லட் பாத்தமாதிரி இருந்தது,அதுக்குள்ளே ப்ரோக்கலி கட்லட்டா? ஒரே கட்லட் மேளாவா இருக்கே? :)

ஹெல்த்தி ஸ்னாக் கீதா!

ஸாதிகா said...

அதிகம் சத்து மிகுந்த கட்லட்.

சசிகுமார் said...

ஆஹா சூப்பர் அக்கா

Vardhini said...

Healthy one Geetha .. love soya :)

Vardhini
Check out my 100th post giveaway

Lifewithspices said...

Loads n loads of health in these cutlets .. indha madhiri romba healthy versions unga kitta irundhu dhaan naan katrukolgiren..

Bharathy said...

பிரொக்கோலி சொய கம்பினதியன் செம்ம யாக உள்ளது . ஒஅத்ஸ் மாவு செர்க்குறது நல்ல ஐடியா . எண்ணையில் பொரிக்காமல் பேக் செய்யும் முரியா மிக மிக அருமை (ஹப்ப மூச்சு வாங்குது..ஹி ஹி :) பிரஸ்ட் டைம் தமிழ் ட்ய்பிங் .. பிழைகள் இருந்தால் மன்னிக்கவும் ;)

GEETHA ACHAL said...

நன்றி விமிதா..

நன்றி மேனகா..

நன்றி கீர்த்தி...

நன்றி மனோ ஆன்டி...கண்டிப்பாக செய்து பாருங்க...இதனை எண்ணெயிலும் போட்டு பொரித்தும் கொள்ளலாம்.

நன்றி அதிரா...ஆமாம் அதிரா அரிசி மாவிற்கு பதிலாக ஒட்ஸ் சேர்த்து கொள்வேன்...நன்றி..

நன்றி sensible...

GEETHA ACHAL said...

நன்றி ஷானவி...உங்களுக்கு இல்லாமலா..கண்டிப்பாக வீட்டிற்கு வாங்க..

நன்றி சரஸ்...


நன்றி இமா...

நன்றி நிரூபன்...

நன்றி மகி...எல்லாம் தினம் தினம் ஈவினிங் ஸ்நாகிற்காக செய்வது தான்...பார்த்தால் நிறைய விதமான கட்லட் போட்டோஸ் இருந்தன்...

சரி..இது கட்லட் வாரமாக இருக்கட்டும் என்று ஒரே கட்லட் குறிப்புகளாக போட்டு கொண்டு இருக்கின்றேன் மகி...

GEETHA ACHAL said...

நன்றி ஸாதிகா அக்கா..

நன்றி சசி...

நன்றி வர்தினி...

நன்றி கல்பனா...ரொம்ப சந்தோசம்..கண்டிப்பாக செய்து பாருங்க...

Unknown said...

You are on a cutlet roll Geetha - kalakal :) Love these broccoli and soy ones!!! I will try to bake this kind next time :)

Anonymous said...

Hello Geetha,

We are huge fans of your website. Thanks for the delicious healthy recipes.

I have a question though - What are you referring to as "soya"? Are these soya beans or the soya chunks? Please let us know. Thanks!

Anonymous said...

Hello Geetha,
I am big fan of your website. One of my best friend forwarded your blog to me.I am trying each and of your dish every day.Everything is very tasty.My family is enjoying all your receipes.
Thanks you and keep rocking.
-Geetha R

Related Posts Plugin for WordPress, Blogger...