Vacation -Virginia, Atlantic City & Sesame Place - Part 2


Virginia Beach அருகில் இருக்கும் Naticus, Norfolk என்ற இடத்தில், US Naval இருக்கின்றது. அதனால் இதனை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று எண்ணம் இருந்தது….US Naval Cruiseயில் இரண்டு மணி நேரம் பயணம் தொடர்ந்தது…இந்த Cruiseயில் செல்லும் பொழுது Captain ஒவ்வொரு இடத்தினை பற்றியும், அங்கு நிற்க வைத்துள்ள கப்பலின் முழு விவரத்தினை பற்றியும் சொல்லி கொண்டே வந்தார்…


Hampton Roadயினை மையமாக கொண்டு அமைக்கபட்ட இந்த இடம் ஒரு வகையான Natural Harbour….இந்த Harbourயிற்கு வராத கப்பலே கிடையாதாம்…அவ்வளவு பெரியது…

நிறைய பெரிய பெரிய போர் கப்பல்கள், ஏற்றுமதி கப்பல்கள் என பல அணிவகுத்து நின்றன….பார்க்க பார்க்க ஆசையாக இருந்தது…ஒவ்வொரு கப்பலிலும் சுமார் 2000 பேர் வேலை செய்யும்  அளவிற்கு இருந்தன…


போன வருடம் கப்பலில் இருந்து Containerயினை ஏற்றவும் இறக்கும், புதிதாக Container Handling Crane, ஒன்றுக்கு இரண்டு மில்லியன் அமெரிக்கன் டாலிர் என்ற விலைக்கு வாங்கி இருக்கின்றாங்க…இதனால் 30% Handling Chargesயில் சேமிக்கின்றனர்..


இங்கே Naval Museum மற்றும் Warship Wisconsin - மிகவும் பெருமை வாய்ந்த போர்கப்பல் இருக்கின்றது…பல போர்களில் வெற்றியினை கண்டதால் அதனை Naval Museum அருகில் வைத்து இருக்கின்றாங்க….. Naval Museumமுடன் இதற்கும் Admission Ticket வாங்கி கொண்டால் உள்ளே சென்று பார்க்கலாம்….அக்‌ஷதாவிற்கு கப்பலின் உள்ளே செல்லும் பொழுது ரொம்ப சந்தோசம்…ஒவ்வொரு பகுதியாக பார்க்க மிகவும் பிரம்பிப்பாக இருந்தது…


மறுநாள் காலை Oceanic Drive செய்யலாம் என்பதால் Virginia Beach இருந்து Atlantic Cityயிற்கு கிளம்பினோம்…Virginiaவில் நிறைய Farms இருக்கின்றது…வழி எங்கும் மாக்காசோளம், பெர்ரிஸ், உருளை என்று நிறைய இருந்தன…அதே மாதிரி நிறைய இடங்களில் Farm Market இருந்தது….மிகவும் குறைந்த விலையில் காய்கறி மற்றும் பழங்கள் விற்கபட்டது…நாங்க ஒரு Potato Farmயில் நிறுத்தி உருளை செடிகளை பார்த்தோம்…அங்கேயே உருளை கிழங்குகளும் விற்பனை செய்யபட்டன்…10 பவுண்ட் உருளை கிழங்கு வெரும் 50 Cents தான்…


Delware – New Jersey Crossingயினை Cape Lewis – Cape Maye ,Oceanic Ferry Ride மூலமாக வந்தோம்….நாங்க New York – Vermontயிற்கு Fall சமயத்தில் Ferry Ride சென்று இருக்கின்றோம்…அக்‌ஷதாவிற்கு அது ரொம்ப பிடித்து இருந்து என்பதால் நேரம் ஆனாலும் சரி என்று இந்த Ferryயில் வந்தோம்….இந்த Ferryயில் சுமார் 100 கார்களினை ஏற்றி செல்லும் வசதி இருக்கின்றது…ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்திற்கு நம்முடைய காருடன் கப்பலில் சென்று அடுத்த ஊரில் இறங்கி, ஊரினை சுற்றி பார்த்துவிட்டு திரும்பவும் இதே Ferryயில் திரும்பி வந்துவிடலாம்…


அங்கு இருந்து Atlantic Cityயிற்கு சென்றோம்… இதனை Las Vegas of the East  என்று சொல்லுவாங்க… முதலில் Las Vegas  தான் போகலாம் என்று ப்ளான் இருந்தது…ஆனா ஏற்கனவே நாங்க Minneapolisயில் இருக்கும் பொழுது அங்கு போய் இருக்கின்றோம்…கூடவே Eastயில் இருந்து Westயிற்கு போக குறைந்தது Flying Timeயே 7 – 8 மணி நேரம் ஆகும் என்பதால் ப்ளானினை கன்சல் செய்துவிட்டாச்சு….


இங்கு Las Vegas அளவிற்கு இருக்காது என்றாலும் Ocean ஒட்டி இருப்பதால் நன்றாகவே இருக்கும். இங்கு நிறைய Casinoஸ் இருக்கின்றது எனக்கு Trump Taj Mahalயில் தங்க வேண்டும் என்று ஆசை என்பதால் அங்கேயே ஹோட்டல் புக் செய்து கொண்டோம்……குழந்தைகள் கண்டிப்பாக Casinoயிற்கு வரகூடாது….அதனால் அக்‌ஷதாவினை இவரிடம் விட்டுவிட்டு நான் மட்டும் Casinoவில் விளையாடினேன்…


இங்கு Boardwalk ரொம்ப நல்லா இருந்தது…இந்த இடம் Night Lifeயில் மட்டும் மிகவும் சூப்பராக எங்கும் விளக்குகளின் அணிவகுப்பால் வெளிச்சமாக இருக்கும்…காலையில் எழுந்து பார்க்கும் பொழுது நேற்று இரவு பார்த்த இடமா இது என்பது போல இருக்கும்….


இதற்கு மறுநாள் அக்‌ஷதாவிற்காக Seaseme Place சென்றோம்…அவளுக்கும் மிகவும் சந்தோசம்…


14 comments:

vanathy said...

படங்கள் எல்லாமே சூப்பர். நாங்கள் அந்தப் பக்கம் போனதில்லை. போய் பார்க்க வேணும்.
கஸினோவில் எவ்வளவு பணம் வின் பண்ணினீங்கள்!!!???

Shylaja said...

Nice pictures.Hope you had a great vacation
South Indian Recipes

Unknown said...

Nice pics dear...

Raks said...

Nice pics,thanks for sharing geetha :)

Priya said...

Beautiful pics!

ஸாதிகா said...

அழகான படங்கள்.

Mahi said...

சூப்பர் வெகேஷன் போல இருக்கே? போட்டோஸ் எல்லாம் நல்லா இருக்கு கீதா! நல்லா என்ஜாய் பண்ணினீங்களா?

நாங்க ஈஸ்ட்ல இருந்தப்ப அட்லாண்டிக் சிட்டி போயிருக்கோம்.பழைய நினைவெல்லாம் கிளறிவிட்டுடுச்சு உங்க போஸ்ட்! :)

ஸ்லாட் மெஷின்லதான் வெளாடினீங்களா..அதெல்லாம் அக்ஷதா வெளையாடறது! நீங்க டேபிள்கேம்ஸ்க்கு இல்ல போயிருக்கணும்?! ;)

Saraswathi Ganeshan said...

Beautiful clicks. hope you guys had great vacation.

Jayanthy Kumaran said...

thanks for the lively tour geetha..enjoyed the clicks..:)
no doubt u had a wonderful trip..
Tasty Appetite

Menaga Sathia said...

அழகான புகைப்படங்கள்,பகிர்வுக்கு நன்றி கீதா!!

Sensible Vegetarian said...

Superb clicks love the last one with Big Bird.

ஹுஸைனம்மா said...

படங்கள் நல்லா இர்க்கு. போர்க்கப்பலை இன்னும் விவரித்திருக்கலாம்.

கப்பலில், காரோடு போனது சுவாரஸ்யம்.

athira said...

படங்கள் கலக்கல்.... உருளைத்தோட்டம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)). கலக்கலாக இருக்கு.

Jaleela Kamal said...

ரொம்ப அருமையான இடங்கள் பார்க்கவே அருமையாக இருக்கு,
ஓசியில ஊர் சுத்திட்டோம்.

Related Posts Plugin for WordPress, Blogger...