பேக்ட் சீடை - Baked Seedaiஇந்த முறை கண்டிப்பாக கிருஷ்ண ஜெயந்தியிற்கு சீடை செய்ய வேண்டும் என்று ஆசை…ஆனாலும் போன முறை செய்யும் பொழுதும் சீடைகள் எண்ணெயில் போட்டதுமே வெடித்துவிட்டதால், அதன பக்கம் போயே இரண்டு வருடங்களிற்கும் மேலாகிவிட்டது…

அம்மா எப்பொழுதுமே கிருஷ்ண ஜெயந்தியிற்கு சீடை செய்யாமல் இருந்ததே கிடையாது…அதனை உருட்டி கொடுப்பது எல்லாம் நான் தான்…ஆனால் நான் இங்கே செய்யும் பொழுது மட்டும் அது சரியே வந்து இல்லை…சரி இந்த முறையாவது ஒழுங்காக செய்வோம் என்று அம்மாவிடம் செய்முறை + டிப்ஸினை கேட்டு கொண்டேன்..

செய்து பார்க்கலாம் என்று எல்லாம் ரெடி செய்தவுடன், திரும்பவும் பயமாக இருந்தது…அந்த சீடையினை அப்படியே எண்ணெயில் பொரிக்காமல் பேக் செய்துவிட்டேன்…ரொம்ப நல்லா இருந்தது…கண்டிப்பாக நாமாக சொன்னால் தான் யாருக்கும் இது பேக் செய்தது என்று தெரியும்…ரொம்ப நல்லா இருந்தது…

கண்டிப்பாக நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்…

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 – 40 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         அரிசி மாவு – 1 கப்
·         உளுத்தம்பருப்பு மாவு – 2 மேஜை கரண்டி
·         எள் – 1 மேஜை கரண்டி
·         காய்ந்த தேங்காய் துறுவல் – 1 மேஜை கரண்டி
·         வெண்ணெய் – 2 மேஜை கரண்டி
·         உப்பு – தேவையான அளவு
·         எண்ணெய் - சிறிதளவு

செய்முறை :
·         உளுத்தம்பருப்பினை வறுத்து கொண்டு மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.


·         அரிசி மாவினை கடாயில் போட்டு மிதமான தீயில் வைத்து, 2 நிமிடங்கள் வறுத்து கொள்ளவும்.


·         அரிசி மாவு + உளுத்தம்மாவினை நன்றாக சலித்து கொள்ளவும்.  அரிசி மாவு + உளுத்தமாவு + வெண்ணெய் + உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.


·         இத்துடன் எள் +தேங்காய துறுவல் + தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவினை கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.


·         மாவினை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும். இதனை 15 நிமிடங்கள் காயவிடவும்.


·         அவனை 325 Fயில் மூற்சூடு செய்து கொள்ளவும். சீடைகளை அவனில் வைக்கும் ட்ரேயில் வைத்து அதன் மீது சிறிது எண்ணெய் Spray செய்து கொள்ளவும்.


·         ட்ரேயினை அவனில் வைத்து 10 - 12 நிமிடங்கள் Bake செய்யவும். அதன் பிறகு 5 நிமிடங்கள் Broil Modeயில் வைத்து வேகவிடவும்.


·         ட்ரேயினை வெளியில் எடுத்து சீடைகளை திருப்பிவிடவும். (Shake செய்தால் போதும்). அதன் மீது மேலும் சிறிது எண்ணெய் Spray செய்து கொண்டு திரும்பவும் அவனில் 10 - 12 நிமிடங்கள் வேகவிட்டு, கடைசி 5 நிமிடங்கள் Broil Modeயில் வைத்து வேகவிடவும்.


·         சீடை நன்றாக வெந்து மொறு மொறுப்பாக இருக்கும். (கவனிக்க: அவனில் இருந்து எடுக்கும் பொழுது ரொம்ப மொறு மொறுப்பாக இல்லாமல் இருக்கலாம்…ஆனால் சிறிது நேரம் ஆறியபிறகு நன்றாக இருக்கும்).


·         சுவையான எளிதில் செய்ய கூடிய மாலை நேர ஸ்நாக்…

கவனிக்க:
கண்டிப்பாக 325 - 350Fயிற்குள் வைத்து பேக் செய்தால் தான் நன்றாக இருக்கும்...அதற்கு மேல் வைத்தால் வெளியில் நன்றாக வெந்து இருக்கும்...ஆனால் உள்ளே நன்றாக வெந்து இருக்காது...

நான் கடையில் வாங்கிய அரிசி மாவினை பயன்படுத்து இருக்கின்றேன். எப்பொழுதுமே முருக்கு, சீடை போன்றவை செய்யும் பொழுது ஒரு முறை மாவினை வறுத்து கொண்டால் நல்லது.

உளுத்தம்மாவிற்கு, உளுத்தம்பருப்பினை வறுத்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.

வெண்ணெய் எப்பொழுதும்  room temperatureயில் இருந்தால் சீடை , முருக்கு எல்லாம் நன்றாக இருக்கும்.

விரும்பினால் தேங்காய் துறுவலிற்கு பதிலாக 1 தே.கரண்டி தேங்காய் எண்ணெயும் கூட சேர்த்து கொள்ளலாம்.

அவனில் பேக் செய்வதற்கு பதிலாக, எண்ணெயில் போட்டும் பொரித்து எடுக்கலாம்.

சீடைகளை உருட்டும் பொழுது மிகவும் கரெக்ட் shapeயில் வரவேண்டும் என்பதற்காக tightஆக உருட்ட வேண்டாம்…அப்படி உருட்டினால் காற்று வெளியில் போக வாய்ப்பு இல்லாமல் சீடைகள் வெடிக்க ஆரம்பித்துவிடும்.

அதனால் சீடைகளை உருட்டும் பொழுது லேசாக உருட்ட வேண்டும்.22 comments:

Priya ram said...

கீதா, அதிக எண்ணெய் இல்லாமல் சீடை அருமையாக வந்து இருக்கு. சூப்பர்.

குறையொன்றுமில்லை. said...

இதெல்லாம் அவன் வைத்திருப்பவர்
களுக்குதானே செய்ய முடியும்.

Unknown said...

wow wonderful idea geetha,seedai porichi adukura varaikum romba tensiona ve irrukum...bake pannina healthy at the same time easy too...Thanks for sharing.

Unknown said...

Healthy and crunchy looking seedais. Loved the baked healthy version

KrithisKitchen said...

Thanks for the lovely tips!!

Pushpa said...

Seedai look tasty and perfect just like fried but lot safer.

வெங்கட் நாகராஜ் said...

அட வெடிக்காத சீடை... :) பார்க்க நல்லா இருக்கு சகோ. எங்க வீட்டுல செய்ய சொல்றேன்...

ஸாதிகா said...

சீடையைக்கூட பேக் பண்ணி விட்டீர்களே!!!!!!!சூப்பர்!

சசிகுமார் said...

அருமை

Lifewithspices said...

ah ah idhu enna porikkamalae seedai ..superb.. idhu dhaan best idea..

ChitraKrishna said...

ஓட்ஸ் லட்டு, பேக்ட் சீடை... டயட் வெர்சன்-ஆ குடுத்து கலக்குறீங்களே கீதா.

Priya Magesh said...

day b4 yesterday my husband said, why do u do it in oven? i said him we cant do it in oven. but u did it now. thank u for this recipe.

Vardhini said...

Wow .. baked .. superb. Tell me about bursting seedais .. went through that last week. :)

Vardhini
Check out my 100th post giveaway.
Current Event: Herbs and Flowers - Garlic

Raks said...

This is the safest way to make seedais :) Nice idea geetha!

Sensible Vegetarian said...

Looks superb, very innovative way to make seedai.

Unknown said...

Kalakkiteenga ponga.eppadi ippadi ellam idea varudhu.ungalala mattum dhan mudiyum.super recipe and hazard free too.

Priya dharshini said...

Geetha achal,Baked Seedai has come out well..

Saraswathi Ganeshan said...

Perfect & healthier version geetha..

Punitha said...

Hi Geetha Ur recepies r very nice & easy too.I don't have briol mode in my oven.Then what to do to make seedai in oven.

GEETHA ACHAL said...

நன்றி புனிதா...உங்களுடைய அவனில் Broil Mode இல்லை என்றால் Highயில் வைத்து செய்து பாருங்க... நன்றாக வரும்....

Abarna said...

hi geetha, I have found your blog only yesterday, I have read almost 20 to 30 recipes which I can try at my home. All your baked items are very good. Usually I dont make seedais for krishna jayanthi. This year, thanks to you i am gonna make it.

Vish said...

Hi.. I found ur blog through aval vikatan. So far i have tried baked Sendai, baked channadal vadai and fish biryani. All of them came good.. Thanks for the recipes.

Related Posts Plugin for WordPress, Blogger...