கத்திரிக்காய் சாப்ஸ் - Brinjal Chopsசமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         கத்திரிக்காய் – 1/4 கிலோ
·         வெங்காயம் – 1
·         தேங்காய் துறுவல் – 2 மேஜை கரண்டி
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         கடுகு – தாளிக்க

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
·         சோம்பு தூள் – 1 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
·         கத்திரிக்காயினை நீட்டு நீட்டாக வெட்டி கொள்ளவும். வெங்காயத்தினை சிறிய துண்டுகளாக் நறுக்கி வைக்கவும். தேங்காய் துறுவலினை சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

·         கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.


·         வெங்காயம் வதங்கியவுடன், கத்திரிகாயினை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.


·         பிறகு, தூள் வகைகள் சேர்த்து மேலும் 2 – 3 நிமிடங்கள் வதக்கவும்.


·         கடைசியில் தேங்காய் விழுதினை சேர்த்து பிரட்டிவிட்டு சுமார் 6 – 7 நிமிடங்கள் நன்றாக வேகவிடவும்.
·         சுவையான எளிதில் செய்ய கூடிய கத்திரிக்காய் சாப்ஸ் ரெடி. இதனை சாதம், சாம்பார், ரசம், தயிர் உடன் சாப்பிட நல்லா இருக்கும்.


கவனிக்க:
நீட்டாக கத்திரிக்காயினை வெட்டினால் நன்றாக இருக்கும்.

கத்திரிக்காயினை அடிக்கடி கிளறிவிடாமல், 2 நிமிடங்களுக்கு ஒரு முறை கிளறிவிட்டால் காய் உடையாமல் இருக்கும்.

31 comments:

Mahi said...

நல்லா இருக்கு சாப்ஸ்!
பெரிய கத்தரிக்காய்ல செய்திருக்கீங்களா கீதா? சீக்கிரமா வெந்துடுமே, சூப்பர் பாஸ்ட் ரெசிப்பி! :)

Chitra said...

that's a very inviting fry....love it with some sambar and curd rice...

ஸாதிகா said...

கத்தரிக்காய் சாப்ஸ் பார்க்கவே நாவூரச்செய்கின்றது.

Chitra said...

எனக்கு கத்திரிக்காயை விட கோழி பிடிக்கும். இதே ரெசிபி , கோழி வச்சே செய்து பார்க்கிறேன். :-)

மாய உலகம் said...

பாக்கும்போதே பசி எடுத்துக்குச்சு.. வீட்ல செய்ய சொல்லி சாப்பிட்றவேண்டியதான்..

Pavithra Elangovan said...

This is toooooooooooo tempting.. love this sooooooo much geetha.

Nirosh said...

அக்கோ... எங்களுக்கு பெரிய உதவி... வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் நாங்கள்.... இனி இதையும் செய்து சாப்பிட்டு நேரத்தை மிச்ச படுத்துகின்றோம் நன்றிகள்....

Unknown said...

Too tempting chops. would love it with chapathi.

Lifewithspices said...

rasam ricekkum curd ricekkum superr side dish .. so so good..

சசிகுமார் said...

போட்டோக்களை நல்லா போக்கஸ் பண்ணி எடுத்திருக்கீங்க பார்க்கவே நாக்குல எச்சில் ஊருது

Unknown said...

wow very tempting recipe,yummy...

Menaga Sathia said...

ஆஹா என்ன ஒற்றுமை,இதே செய்முறையில் தான் இதனுடன் முருங்கைக்காய் சேர்த்து செய்தேன்,சாப்பிட்டு வந்து பார்த்தால் நீங்க கத்திரிக்காயில் செய்திருக்கீங்க....ரசம் சாதத்துக்கு சூப்பர்ர் ஜோடி!!

Sensible Vegetarian said...

Looks fantastic, one of my favorite curries.

Anonymous said...

கத்தரிக்காய் என் favorite இது different ஆ இருக்கு சீக்கிரம் செஞ்சு பார்க்கணும்.

Priya ram said...

கீதா உங்களோட சாப்ஸ் நல்லா இருக்கு. இதே முறையில கத்தரிக்காய், உருளைகிழங்கு, முருங்கைக்காய் போட்டு செய்தால் கூட நல்லா இருக்கும்.

Priya Suresh said...

Delicious and wonderful pair for briyanis or rotis, feel like finishing that whole plate..

அப்பாவி தங்கமணி said...

பாக்கவே அழகா இருக்கு சாப்ஸ்... :)

KrithisKitchen said...

Thaengai saerpadhu pudhusa iruku... kandippa try pannanum..

கோவை நேரம் said...

பார்க்கவே எச்சில் ஊறுது....சாப்பிடணும் போல இருக்கு ..எதாவது கொரியர்ல அனுப்பமுடியுமா..ஹி..ஹி..ஹி..

கோவை நேரம் said...

சோம்பு போட்டா வாசனை மாறிவிடாது ..?

Vardhini said...

Love brinjals and this is a new way. Thx for sharing Geetha.

Vardhini
Check out my 100th post giveaway

Jaleela Kamal said...

rompa nalla irukku

Padmajha said...

Nice way to prepare brinjal. Looks nice.

Valarmathi Sanjeev said...

Nice recipe...looks mouthwatering and fantastic.

GEETHA ACHAL said...

நன்றி மகி..ஆமாம்பா, பெரிய கத்திரிக்காயில் தான் செய்து இருக்கின்றேன்...

ஆமாம் சீக்கிரம் வெந்துவிடும்...சீக்கிரமாகவும் சுலபமாகவும் செய்துவிடலாம்.

நன்றி சித்ரா.

நன்றி ஸாதிகா அக்கா..

நன்றி சித்ரா...கண்டிப்பாக செய்து பாருங்க...நல்லா இருக்கும்...

GEETHA ACHAL said...

நன்றி மாய உலகம்..கண்டிப்பாக சாப்பிட்டு பார்த்துவிட்டு சொல்லுங்க..

நன்றி பவித்ரா..

நன்றி நிரோஷ்...ரொம்ப மகிழ்ச்சி...

நன்றி விமிதா..

நன்றி கல்பனா..

GEETHA ACHAL said...

நன்றி சசி...

நன்றி ப்ரேமா..

நன்றி மேனகா...சூப்பர்ப் போங்க..

நன்றி sensible..

நன்றி என் சமையல்...

நன்றி ப்ரியாராம்...

GEETHA ACHAL said...

நன்றி ப்ரியா..

நன்றி அப்பாவி தங்கமணி...

நன்றி கீர்த்தி..

நன்றி கோவை நேரம்...உங்களுக்கு இல்லாமலா..

சோம்பு சேர்த்தால் தான் நன்றாக இருக்கும்...செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க..

நன்றி வர்த்தினி..

நன்றி ஜலிலா அக்கா..

Kanchana Radhakrishnan said...

tempting.

prabhadamu said...

சூப்பர் அக்கா நல்லா இருக்கு இந்த சாப்ஸ்!


என் கணவர் நல்லா செய்து இருக்கே என்று சொன்னார்... நன்றி அக்கா ...

GEETHA ACHAL said...

நன்றி ப்ரபா....ரொம்ப மகிழ்ச்சி...செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததில் மகிழ்ச்சி...

Related Posts Plugin for WordPress, Blogger...