சிக்கன் கோலா உருண்டை குழம்பு - Chicken Kolla Urundai Kuzhambuசமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்:
         சிக்கன்(Skinless, Boneless Chicken)  – 1/4 கிலோ
·         வெங்காயம் – 1 பெரியது
·         தக்காளி – 1
·         புளி – சிறிய நெல்லிக்காய் அளவு

இஞ்சி பூண்டு விழுது :
·         இஞ்சி – 1 பெரிய துண்டு
·         பூண்டு – 10 பல்
·         கிராம்பு – 2
·         ஏலக்காய் – 1
·         பட்டை – 1

சிக்கன் உருண்டைகள் செய்ய:
·         வெங்காயம் – 1
·         அரைத்தவைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி
·         பொட்டுகடலை – 1/2 கப்
·         எண்ணெய் - சிறிதளவு
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·         சோம்பு தூள் – 1 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

குழம்பு தாளிக்க :
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         பட்டை, கிராம்பு – 1
·         சோம்பு தூள் – 1 தே.கரண்டி

குழம்பில் சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

அரைத்து கொள்ள : (விரும்பினால் சேர்த்து கொள்ளவும்)
·         தேங்காய் – 1 சிறிய துண்டு
·         கசகசா – 1 மேஜை கரண்டி

கடைசியில் சேர்க்க:
·         கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :
·         வெங்காயம் + தக்காளியினை பொடியாக நறுக்கி கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுதினை அரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி குழம்பிற்கு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை + இஞ்சி பூண்டு விழுதினை பாதி + வெங்காயம் என்று ஒன்றின்பின் ஒன்றாக  சேர்த்து வதக்கி கொள்ளவும்.


·         வெங்காயம் சிறிது வதங்கியவுடன் தக்காளியினை சேர்த்து வதக்கி கொள்ளவும்.


·         புளியினை 2 – 3 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும். புளி தண்ணீருடன் குழம்பிற்கு சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து கலந்து கொண்டு கடாயில் ஊற்றி கொதிக்கவிடவும்.


·         சிக்கனை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். வெங்காயத்தினை பொடியாக நறுக்கி கொள்ளவும். பொட்டுகடலையினை மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

·         சிக்கன் + வெங்காயம் + தூள் வகைகள் + அரைத்த பொட்டுகடலை + இஞ்சிபூண்டு விழுது என அனைத்து பொருட்களையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.


·         சிக்கன் கலவையினை சிறிது எண்ணெய் தொட்டு சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.


·         தேங்காய் + கசகசா + சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்து கொள்ளவும்.புளிகரைசல் நன்றாக கொதித்த பிறகு, தேங்காய விழுதினை சேர்த்து3 – 4 நிமிடங்கள் வேகவிடவும்.


·         கொதிக்கும் பொழுது, உருட்டி வைத்துள்ள சிக்கன் உருண்டைகளை குழம்பில் ஒவ்வொன்றாக் மெதுவாக போடவும்.


·         சுமார் 15 நிமிடங்களில் சிக்கன் உருண்டைகள் அனைத்தும் குழம்பில் வெந்து மேலே மிதக்கும்.

·         கடைசியில் கொத்தமல்லி தூவி பறிமாறவும். சுவையான எளிதில் செய்ய கூடிய குழம்பு ரெடி.

கவனிக்க:
புளியினை அதிகம் சேர்க்க வேண்டாம். புளியிற்கு பதிலாக எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளலாம்.

சிக்கன் உருண்டைகள் மிகவும் தண்ணியாக பிடிக்கவரவில்லை என்றால் சிறிது பொட்டுகடலை மாவு சேர்த்து கொள்ளவும்.

சிக்கன் உருண்டைகளை உருட்டும் பொழுது எண்ணெய் சிறிது தொட்டு கொண்டு உருட்டினால் எளிதில் உருண்டை வரும்.

குழம்பில் சிக்கன் உருண்டைகளை போடும் பொழுது ஒவ்வொன்றாக எடுத்து போடவும். (பயம் வேண்டாம்…கண்டிப்பாக உருண்டைகள் உடையாது. )

விரும்பினால் எண்ணெயில் பொரித்தும் உருண்டைகளை குழம்பில் சேர்க்கலாம்.


10 comments:

Unknown said...

I always wanted to make this.. Looks so yummy

San said...

Wow early morning iam looking at this wonderful chicken gravy. My stomach is growling now on seeing the pics. Excellent, nice recipe.

http://sanscurryhouse.blogspot.com

Shanavi said...

The second pic from d last truly tempts me a lotttt..super a seidhu irukeenga Geetha..One of my mom's specialty..

Anonymous said...

சிக்கன் கோலா நல்லா இருக்கு கீதா ..நான் சிக்கன் சாப்பிடுறது கெடையாது ஆனா என் பையனுக்கும் வீட்டுக்காரருக்கும் சிக்கன் தான் favourite .. நான் ட்ரை பண்ணிட்டு சொல்லுறேன்

பிஞ்சுக் கவிஞர்:) அதிரா:) said...

சூப்பர்....

ஸாதிகா said...

சிக்கன் கோலா பார்க்கவே நன்றாக உள்ளது

கோவை நேரம் said...

இந்த சண்டே உங்களோட மெனு தான் .பார்க்கும் போதே சுவை தெரிகிறது

Unknown said...

wow each n every clicks make me hungry,really delicious kuzhambu...

aotspr said...

நல்லா இருக்கு.
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com

vanathy said...

looking yummy! Will try soon.

Related Posts Plugin for WordPress, Blogger...