மீன் பிரியாணி - Fish Biryani
எப்பொழுதும் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி அல்லது முட்டை பிரியாணி என்று செய்யாமல் ஒரு மாறுதலுக்காக இந்த பிரியாணி செய்து பாருங்க…ரொம்ப நல்லா இருக்கும்.

மீன் பிரியாணி செய்ய எப்பொழுதும் முள் இல்லாத மீன் துண்டுகள் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கும் ரொம்பவும் பிடிக்கும்.

நான் Cod Fish Filletsயினை பயன்படுத்தி இருக்கின்றேன். அக்‌ஷதாவிற்கு ரொம்பவும் பிடித்து விட்டது…ஏற்கனவே ஒரு முறை செய்து இருக்கின்றேன்…ஆனால் இந்த முறை பிரியாணி ரொம்பவும் நன்றாக இருந்தது….நன்றி தோழி. சரஸ்வதி.

சரி, வாங்க….மீன் பிரியாணி செய்முறையினை பார்ப்போம்…நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்…

சமைக்க தேவைப்படும் நேரம் : 40 – 45 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         மீன் – 1/2 கிலோ( சுமார் 6 - 8 துண்டுகள்)
·         பஸ்மதி அரிசி – 2 கப்
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         தயிர் – 1 கப்
·         எலுமிச்சை சாறு – 1 மேஜை கரண்டி
·         எண்ணெய் – சிறிதளவு
·         உப்பு – தேவையான அளவு

இஞ்சி பூண்டு விழுது: (சுமார் 2 – 3 மேஜை கரண்டி)
·         இஞ்சி – 1 துண்டு
·         பூண்டு – 6 பெரிய பல்
·         பட்டை, கிராம்பு, ஏலக்காய் – 1

மீன் ஊறவைக்க :
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         மஞ்சள் தூள் – 1 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 2 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

நறுக்கி வைக்க :
·         வெங்காயம் – 2
·         தக்காளி – 1
·         பச்சைமிளகாய் – 4
·         புதினா, கொத்தமல்லி – சிறிதளவு

அரிசி வேகவைக்கும் பொழுது:
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         உப்பு – 1 தே.கரண்டி
·         பட்டை, கிராம்பு, ஏலக்காய் – 1
·         பிரியாணி இலை – 1
·         நெய் – 1 தே.கரண்டி

செய்முறை :
·         மீனை சுத்தம் செய்து மீனில் ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும். அரிசியினை நன்றாக கழுவி அதனையும் குறைந்தது 20 – 25 நிமிடங்கள் ஊறவிடவும்.


·         வெங்காயம் + தக்காளியினை நீட்டாக வெட்டி கொள்ளவும். புதினா + கொத்தமல்லியினை பொடியாக நறுக்கி வைக்கவும். பச்சைமிளகாயினை இரண்டாக கீறிவைக்கவும். இஞ்சி பூண்டு விழுதினை மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும்.


·         கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி ஊறவைத்துள்ள மீனை வறுத்து தனியாக ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். ( கவனிக்க: மீனை 70% வறுத்தால் போதும். மீன் வறுக்கும் பொழுது ஒவ்வொரு பக்கமும் சுமார் 1 நிமிடம் வறுத்தல் போதும். மீனை மொருமொருப்பாகும் வரை வறுக்க கூடாது)


·         மீன் துண்டுகள் அனைத்தும் வறுத்த பிறகு, அதே எண்ணெயில் வெட்டி வைத்துள்ள வெங்காயத்தினை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.


·         இஞ்சி பூண்டு விழுது வதங்கியவுடன், பச்சைமிளகாய் + தக்காளி + புதினா, கொத்தமல்லியினை சேர்த்து 2 – 3 நிமிடங்கள் வதக்கவும்.

·         இந்த சமயத்தில் ஒரு பாத்திரத்தில் முக்கால்வாசி தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். நன்றாக கொதிக்கும் பொழுது, அரிசி வேகக்கும் பொழுது கொடுத்துள்ள பொருட்களை + ஊறவைத்துள்ள பாஸ்மதி அரிசி சேர்த்து 5 – 6 நிமிடங்கள் வேகவிடவும். அரிசி வெந்தவுடன் அதனை தண்ணீர் இல்லாமல் வடித்து கொள்ளவும். (கவனிக்க :அரிசி சுமார் 80% வெந்தால் போதும். அதிகமாக வேகவிட வேண்டாம். அரிசி வேகவைத்த தண்ணீரை 1 கப் தனியாக எடுத்து கொள்ளவும்)


·         தக்காளி வதங்கியவுடன் அத்துடன் மஞ்சள் தூள் + தேவையான அளவு உப்பு + தயிர்,எலுமிச்சை சாறு  சேர்த்து மேலும் 2 – 3 நிமிடங்கள் வேகவிடவும்.


·         இந்த க்ரேவியினை சிறிது எடுத்து வறுத்து வைத்துள்ள மீன் துண்டுகள் மீது ஊற்றி கொள்ளவும்.


·         இப்பொழுது கடாயில் உள்ள க்ரேவியில்,  சாதம் வேகவைத்துள்ள  கஞ்சி தண்ணீர் 1 கப் சேர்த்து கொதிக்கவிடவும்.

·    தம்போடும் பாத்திரதில் முதலில் க்ரேவியினை ஊற்றவும். அதன் மீது முக்கால் வாசி வேகவைத்துள்ள சாதத்தினை போட்டு பரவிடவும். கடைசியில் சாதத்தின் மீது க்ரேவி ஊற்றி உள்ள மீன் துண்டுகளை உடையாமல் பத்திரமாக எடுத்து வைக்கவும். தட்டில் மீதும் உள்ள க்ரேவியினையும் சாதத்தின் மீது ஊற்றிவிடவும்.


·         இதனை சுமார் 20 நிமிடங்கள் தம்மீல் வேகவிடவும். தம் போட்டு முடிந்தவுடன் பாத்திரத்தினை உடனே திறக்காமல், சுமார் 10 நிமிடங்கள் அப்படியே விடவும்.


·         மீன் துண்டுகளை திரும்பவும் சாதத்தின் மீது இருந்து வெளியில் எடுத்து சாதத்தினை கலந்துவிடவும். பரிமாறும் பொழுது மீன் துண்டுகள் சேர்த்து பரிமாறவும். இப்பொழுது சுவையான மீன் பிரியாணி ரெடி.


கவனிக்க:
மீன்களை வேகவைக்கும் பொழுதும் சாதத்தினை வேகவைக்கும் பொழுது தனி தனியாக உப்பு சேர்த்து இருப்பதால், க்ரேவி செய்யும் பொழுது உப்பு அதிகமாக சேர்க்க வேண்டாம்.

முள் இல்லாத மீன் துண்டுகள் பயன்படுத்தினால் பிரியாணி நன்றாக இருக்கும். நான் Cod Fish யில் செய்து இருக்கின்றேன்.


21 comments:

சுபத்ரா said...

பொன்மலர் சொல்லி உங்க ப்ளாகிற்கு வந்தேன்.. சான்ஸே இல்ல. கலக்குறீங்க :) உங்கள் குடும்பத்தினர் ரொம்ப லக்கி..:)

தென், ஃபிஷ் பிரியாணி பார்க்கவே படுசூப்பர்!

வாழ்த்துகள். தொடர்ந்து கலக்குங்கள்..

Unknown said...

அக்கா உங்களை வாழ்த்த வார்த்தையே கிடைக்கிறதில்லை. அருமையான உணவுகளை அற்புதமான புகைப்படத்துடன் வெளியிடும் உங்களுக்கு நன்றிகள்.

ஆனந்த விகடன் வரவேற்பறையில் பொன்மலர் பக்கம்

பிஞ்சு ஞானவல்லி அதிரா:) said...

சுப்பர்ர்ர்ர்ர்ர்ர்.... சல்மன் மீனோ?.

Aparna said...

Evalavo cookbooks, cooking shows paathaachu. But idhu maadhithiri detailed, neat & clean description and pictures paathadhe illa. Hats off to your genuineness!!

Unknown said...

ஆகா! ஆகா!

நம்ம ஃபேவ-ரைட்

நோன்பு நேரமும் அதுவுமா ...

எச்சில் ஊறிங்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ...

Vimitha Durai said...

Super.. ipo daan chicken biryani saapten aana indula oru plate kudutheenga na ippave saaptiruven... Looks so yum.

Pushpa said...

Aromatic and yummy fish biryani very tempting Geetha.

Unknown said...

geetha achal,today i made prawn biryani..urs luks similar like mine...Keep rocking..

ஆமினா said...

நல்ல குறிப்பு

ஸாதிகா said...

வாவ்.மின் பிரியாணி இங்கு வரை மணக்கின்றதே!

Shama Nagarajan said...

delicious

Chitra said...

biriyani looks so delicious....love it ...have tried this long time back...but now u hav tempted me to try again...

Jaleela Kamal said...

மீன் பிரியாணி நல்ல இருக்கு

Aparna said...

Tried this for lunch today, Geetha. It was too good (Husb. gave a 9.5 out of 10 !!). Perfect measurements ! Thankyou !

GEETHA ACHAL said...

ரொம்ப மகிழ்ச்சி அபர்ணா...செய்து பார்த்து பின்னூட்டம் அளித்தில் சந்தோசம்...நன்றி..

Unknown said...

superbbbbbbbbbbbbbbbbb

sures said...

everything very nice sis...........

sures said...

verry nice sis............

subasai said...

உங்கள் அணைத்து குறிப்புகளும் செய்வதட்கு நன்றாக இருப்பதோடு

அளவும் சரியாக இருக்கிறது .உங்கள் பகிர்விட்டுக்கு என் நன்றிகள்.

மேலும் splenda போட்டு ஸ்வீட் பதிவுகள் போஸ்ட் செய்தாள் நன்றாக இருக்கும்.
subasai

Nanthini said...

Fish briyani veetle seyidhu parthen romba superrrra irundhadhu. Ivlo tastea briyani pannadhu ithan first time thank u soooo much

Anonymous said...

My husband found this site for making puli chutney then we started to make briyani varieties. No chance. It comes out super just like in hotels. Awesome and thanks a lot!

Related Posts Plugin for WordPress, Blogger...